நெருக்கடியில் இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு மூன்று பிரபல வர்த்தக முகங்களை நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இந்திய அரசு அமர்த்தியுள்ளது.
மாபெரும் நிறுவனமான சத்யமில் பண கையிருப்பு தொடர்பாக பொய்கணக்கு காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னர் இருந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாகக் குழுவினர் நீக்கப்பட்டனர்.
கிட்டதட்ட ஐம்பதாயிரம் பேர் பணிபுரியும் சத்யத்திற்கு ஸ்திரத்தன்மை கொண்டு வருவது தான் புதிய நிர்வாகக்குழுவின் பிரதான குறிக்கோளாக இருக்கும் என்று கம்பெனி நிர்வாக விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவனத்தின் தலைவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக