Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

11 ஜனவரி 2009

இதுதான் வில்லு கதை...(யா)?இணையதளங்களில் வில்லு திரைப்படம்.?

இன்று இந்தியாவில் ரிலீஸ் ஆகியிருக்கும் (இலங்கையில் நாளை-12/01/2009)வில்லு திரைப்படத்தின் கதை இதுதான்விஜயின் அப்பாவை வில்லன் கொன்று விடுகிறான் அந்த சண்டையில் விஜயின்அம்மாக்கும் பயங்கரமான அடிபட்டு வழக்கம் போல டாக்டர்சும் ஆபரேஷன்பண்ணனும் இவ்ளோ காசு வேணும் எண்டு ஒரு அமௌண்ட சொல்லுறாங்க,விஜயும் எவ்ளோ ட்ரை பண்ணிப்பார்த்தும் காசு கிடைக்கல , கடைசில அவங்கபூர்வீக நிலைத்த வித்து அம்மாவ காப்பாத்துறார் . அதே நேரம் பழிக்குப்பழிவாங்குறதுக்கு வில்லன தேடுனா அவன் அமெரிக்கா போய்ட்டான் எண்டு தெரியவருது .அமேரிக்கா போக காசும் இல்லை, விசா,பாஸ்போர்ட் ஒண்ணுமே இல்ல விஜைகிட்ட . அப்போதான் அவருக்கு ஒரு ஐடியா வருது.உடனே கிளம்பி சென்னைக்கு வாரார் வந்து சென்னையில இருக்கும் லிக் கட்டடத்துக்கு மேல ஏறி , கடவுள வணங்கிட்டு குதிக்கிறார் .........ஆனா அங்கதான்டைரக்டர் டச் ......விஜய் கீழ விழாம அப்படியே அந்தரத்தில நிக்கிறார் ... நிக்கிறார்நிக்கிறார் ....(அதையே அப்பிடியே ஐம்பது கேமரா வச்சு ஷங்கரின் பேவரிட்ஷாட்டான Time Slicing ஷாட் மூலமா சுத்தி சுத்தி காட்டுறாங்களாம்.) பூமியும்சுத்துகிறது அப்போதான் விஜய் கீழ விழுறாரு ஆனா விழுந்தது அமெரிக்காலரோட்டால போன நயன்தாரா காரு மேல . அங்க ரெண்டு பேருக்கும் ஆரம்பத்துலசண்ட வருது .....அதில்தான் மாப்பு அந்த Are you crazy......? சாங்குவச்சிருக்காங்களாம் . (நம்மள பாத்துதான் கேக்குறாங்க போல )அப்புறம் சண்ட காதலா மாறி அவங்க சுத்திக்கிட்டு இருக்காங்க அதுக்கிடையிலவிஜய் வில்லன தேடுற வேலையையும் பாக்கிறாரு.ஒருவழியா வில்லன தேடி கண்டு பிடிச்சா........ வில்லன் நயன்தாராவின்அண்ணன் ......ஆனா விஜய் அத பற்றியெல்லாம் கவலைபடாம வில்லனகொன்று பழி வாங்குகிறார்.கொலகேசில அமெரிக்கா போலிஸ் விஜய தேட ........விஜயும் ஓடி ஓடி ஒருஉயரமான கட்டடத்து மேல ஏறிடுறார்.......கூடவே நயன்தாராவும் .....அப்பிடியே சென்னையில செஞ்சமாதிரி பாஞ்சு அந்தரத்தில நிக்கிறார் நயனையும்தூக்கிட்டு ......அப்போ அமெரிக்கா போலிஸ் Helicopter எல்லாம் வந்து சுட்டுபாக்கிறாங்க ஆனா விஜய் அதெல்லாம் தன்கிட்ட இருந்த ஒரு வில்லு மூலமாமுறயடிச்சுகிட்டிருக்கார் ......பூமியும் சுத்தி சென்னை வந்தது விஜயும் நயனும் கீழவிழுறாங்க.அங்க ஒரு லாரி நிறைய வைக்கோல் போட்டு நிக்குது....... அது மேல விழுறாங்கலாரி டிரைவர் யாருன்னு பார்த்தா பிரபுதேவா . அங்கயே ஒரு குத்துப்பாட்டுரெண்டுபேரும் போடுறாங்க .படமும் முடியுது . ஒரு நிறைவான Adventure படம் பார்த்த திருப்தி இருக்கும்னுபேசிக்கிறாய்ங்க.........ஆமா இதில வடிவேலு எங்க வாரார் எண்டு கேக்குறேங்களா ? ஹையோ.................. ஹையோபடத்த பாருங்கப்பு ..
இது இப்படியிருக்க இன்னுமொரு செய்தி வெளியாகியிருக்கிறது .
வில்லு படம் 'ஃபுல்லா' லீக்! இந்தியாவின் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் (இந்த விஷயம் ஜேம்ஸ்பாண்டுக்கு தெரிமாங்ணா!!) என பிரபுதேவா பெருமையுடன் குறிப்பிட்டுள்ள வில்லு திரைப்படம், நேற்று மாலை முதல் பெரும்பாலான சினிமா தளங்களில் வெளியாகி 'வெற்றிகரமாக' ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்படம் நாளைதான் முறையாக உலகமெங்கும் வெளியாகிறது. பொங்கலுக்கு விஜய் தரும் ட்ரீட் என வர்ணிக்கப்பட்ட வில்லு திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் ரிலீசாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தப் படம் இணையதளங்களில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரு பகுதிகளாக முழுப் படமும் வெளியாகியுள்ளது. படம் தவிர 6 பாடல்கள் தனித் தனியாகவும் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே படத்தின் 45 நிமிடக் காட்சிகள் இணைய தளத்தில் ரிலீசாகி பரபரப்பேற்படுத்தியது நினைவிருக்கலாம்.வில்லு பவர்ஃபுல்லு என்று படத்தில் வசனம் பேசுகிறார் விஜய். ஆனால் படத்தை நெட்டில் விட்டவர்கள் அதை விட தாங்கள் பவர்ஃபுல் என்பதை நிரூபித்து விட்டார்கள்.
(வலையில் ரசித்தவை உங்களுக்காக )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com