வெற்றி பெற 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுபெடுத்தடிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே ஜெயசூரிய எந்த பந்தையும் எதிர் கொள்ளாமலேயே RUN OUT முறையில் ஆட்டம் இழந்தார்,தொடர்ந்து வந்த வீரர்களும் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்,ஒரு கட்டத்தில் 8ஓவர்களில் 6ஓட்டங்களுக்கு ஜந்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது,பின்னர் வந்த முபாரக்,சங்கக்கராவுடன் இணைந்து 51ஓட்டங்கள் வரை பெற்றனர்,இந்த நிலையில் முபாரக் ஆட்டமிழந்தார்,பின்னர் வந்த பெர்வீஸ் சங்கக்கராவுடன் 7ஆவது விக்கெட்டுக்காக 63ஓட்டங்களை பெற்றவேளை(மொத்தம் 114)சங்கக்கரா 59ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், அதனைத் தொடர்ந்து வந்த குலசேகரவும் ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டம் இழந்த பின் பங்களாதேஷ் அணியே வெற்றி பெறுமென்று எதிர்பார்க்கப்பட்டது,ஆனால் ஒன்பதாவது விக்கெட்டுக்காக பெர்வீஸ் உடன் சேர்ந்த முரளிதரன் வெறும் பதினாறு பந்துகளை மட்டுமே எதிர் கொண்டு 33 ஓட்டங்களை பெற்று (நான்கு நான்கு ஓட்டங்களையும் இரண்டு ஆறு ஓட்டங்களையும்)48.1ஓவர்களில் 153ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு வெற்றியினை உறிதி செய்தார். போட்டியின் ஆட்டநாயகனாக குமார் சங்கக்கராவும் ,போட்டி தொடர் நாயகனாக சாகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக