27 பிப்ரவரி 2009
Calm McCullum seals series victory
Brendon McCullum gave yet another masterclass in Twenty20 batting, keeping his nerve to shepherd New Zealand to a last-ball win. The match followed a similar script to the Christchurch game for 37 overs, with New Zealand completely in control, before Irfan Pathan's double-strike in the 18th over of the chase sparked India to life.
From 28 off the last three overs with eight wickets in hand, it boiled down to nine runs off three balls. A calm Brendon McCullum slapped a couple of powerful boundaries, before a top-edge off the final delivery sailed agonisingly beyond the grasp of Rohit Sharma at mid-off to seal the victory.
New Zealand's batsmen had a fairly simple task ahead of them at the halfway stage after their disciplined bowlers derailed India's big hitters for the second game in a row. Iain O'Brien and Ian Butler sliced through the top order, Daniel Vettori was at his Scrooge-like best, and Jesse Ryder continued New Zealand's long tradition of effective dibbly-dobbly bowlers to keep India down to 149.
Full report to follow
India 149 for 6 (Yuvraj 50, O'Brien 2-30) v New Zealand
| ||
For the second match in a row, New Zealand's disciplined bowlers derailed India's big hitters. Iain O'Brien and Ian Butler sliced through the top order, Daniel Vettori was at his Scrooge-like best, and Jesse Ryder continued New Zealand's long tradition of effective dibbly-dobbly bowlers to keep India down to 149.
India didn't try to hit every ball for six as in the previous game, but their shot selection still left a lot to be desired. Yuvraj Singh top scored with a half-century but just as he was threatening to take the visitors to a big total, he holed out. Mahendra Singh Dhoni remained unbeaten till the end, but his timing was awry and he could only manage a subdued 28, with only two boundaries.
Virender Sehwag had provided a typically belligerent start, but the runs dried up after his dismissal and New Zealand's bowlers never let the initiative slip. Suresh Raina fell attempting his favourite pull, and Gautam Gambhir was caught behind attempting the steer to third man.
Yuvraj and Dhoni decided to play responsibly, as Dhoni had demanded after the defeat in the first match, and the runs were coming only in singles. New Zealand's bowlers and fielders kept it tight, just nine runs were scored in one three-over spell. The running also showed hints of desperation, with both batsmen surviving several close calls.
India were struggling at 64 for 3 after 10, when Yuvraj decided to cut loose. One wild swipe resulted in an inside-edge for four, but there was nothing streaky about the three sixes that followed after that. After a massive hit over wide long-on off O'Brien, Yuvraj's scoop over extra cover ended in a simple catch for Jacob Oram.
Yusuf was bowled attempting a dab to a full ball from Vettori and Ravindra Jadeja had trouble finding the gap early in his innings. At the other end, Dhoni couldn't force the pace, most of his runs coming only in singles. Jadeja and Irfan Pathan were left to play the big hits, and their efforts lifted India towards 150, still someway short of the total they would have been looking for at the start.
It didn't look like India would end at such a low score after the start Sehwag provided. He was his usual carefree self, hitting boundaries at will. There were no sixes, and no runs in his favourite backward-point region, but that didn't prevent him from motoring along at better than two runs a ball. A tennis forehand had barely cleared mid-off in the third over, which was where he spliced a catch off O'Brien.
Their bowler's tidy show has left New Zealand primed for a sweep of the series, and India questioning their Twenty20 world champion credentials.
26 பிப்ரவரி 2009
ரஹ்மான் முதல் தேசிய விருது பெற்ற கதை! பாலுமகேந்திரா வெளியிட்ட ரகசியம்!
எப்பேற்பட்ட சிறந்த இயக்குநர் அல்லது படைப்பாளியாக இருந்தாலும் அவர்களின் கயமைத் தனத்தை ஒரு அளவுக்கு மேல் மறைக்கவே முடியாமல் போகிறது. சமயத்தில் அவர்களாகவே உளறிக் கொட்டி மாட்டிக் கொள்வதும் உண்டு. அதில் லேட்டஸ்ட் வரவு பாலு மகேந்திரா.
ரஹ்மான் தனது முதல் தேசிய விருதினைப் பெற்றதன் பின்னணிக் கதை ஒன்றை, நேற்று ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னார் பாலு மகேந்திரா.
17 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அதை வெளிப்படுத்தினார். ஆனால் அதைக் கேட்ட பிறகு அந்த மனிதர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயே போய்விட்டது.
இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிட முடியுமா என்பது தெரியவில்லை.
இந்தச் சம்பவம் நடந்த போது பாலுமகேந்திராதான் தேசிய விருதுக் குழு தலைவரும் கூட. அப்போது சிறந்த இசைக்குரிய பிரிவில் இளையராஜா இசையில் கமல் நடித்த தேவர் மகனும், ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ரோஜாவும் போட்டியிட்டன.
இதில் ரோஜாவின் இசைக்கு விருது கொடுத்தார்கள். ஆனால் அப்படி விருது தரும்முன் நடந்த அரசியலை நேற்றுதான் பாலுமகேந்திரா வெளிப்படுத்தினார். அதாவது ரஹ்மான் உயர்வுக்கு நானும் முக்கியக் காரணமாக இருந்தேன் என்பதை நிலை நிறுத்த அப்படிச்சொன்னாரோ என்னமோ… ஆனால் அதைக் கேட்ட பிறகு… சீ என்றாகிவிட்டது.
சிறந்த இசைக்கான விருது பெற இசையைத் தாண்டி வேறு என்னவெல்லாம் தகுதியாக உள்ளன பாருங்கள்!
எது சிறந்த இசை?
ஒரு சமூகத்தின், பிராந்தியத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பலிப்பதே நல்ல இசை. அது எந்த வயதுக்காரனிடமிருந்து வந்திருந்தால் என்ன?
அந்த வகையில் தேவர் மகன் இசை, வேறு யாருடைய அல்லது எந்தப் படத்தினுடைய இசையுடனும் ஒப்பிட முடியாதது. அத்தனைச் சிறப்பு அந்தப் படத்தின் பின்னணி இசைக்கு உண்டு. தேவர் மகனில் ராஜாவின் பின்னணி இசையை இப்போது கேட்டாலும் கண்முன் படக் காட்சிகள் அப்படியே அழகழகாக விரியும்.
ஆனால் ரோஜாவைப் பொறுத்தவரை, பின்னணி இசை அத்தனைப் பிரமாதமில்லை. பாடல்களுக்குத்தான் பெரிய வரவேற்பு.
ஆனால் அந்தப் படத்துக்குத்தான் விருது கொடுக்க சிபாரிசு செய்துள்ளார் பாலுமகேந்திரா. காரணம், ‘சின்ன பையன் என்பதால் பரிந்துரைத்தேன்’ என்று இப்போது கூறியுள்ளார்.
இசையின் ஜீவன், ஒரு படத்துக்கு எப்படியெல்லாம் அந்த இசை உயிரூட்டுகிறது? அந்த இசை படம் பார்ப்பவருக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் என்ன… என்பதைப் பார்த்துதான் ஒரு படத்துக்கு விருது தரப்பட வேண்டுமே தவிர, இவர் இளைஞர், அவருக்கு விருது கொடுத்துவிடலாம் என்று கொடுப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? அதுவும் விருதுக் குழுவின் தலைவரே இதைச் செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியைத் தந்தது.
இந்த தேசிய விருதினை தவற விட்டதால் ராஜாவின் மதிப்போ தரமோ குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் பெற்ற விருதுகள் மற்றும் வாங்கும் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு இசைக் கலைஞரை மதிப்பிடுபவர்கள்தானே இங்கு அதிகம்? ரஹ்மான் பெற்ற இரண்டு ஆஸ்கர்கள்தானே அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வைத்துள்ளது நம்மையெலலாம்.
அப்புறம் எதற்கு போட்டி, ஓட்டு? இசையமைப்பாளர்களின் வயதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விருதுகளை வழங்கிவிடலாமே! அப்படியெனில் இத்தனை ஆண்டுகளாக திறமைகள் ஓரங்கட்டப்பட்டு, லாபி அல்லது தனி நபர்களது விருப்பத்தின் அடிப்படையில்தான் விருதுகளை வழங்குகிறார்களா?
தேவர் மகன் என்ற அந்த நல்ல படத்துக்கு, பல புதிய பரிமாணங்களைத் தந்தது ராஜாவின் இசை. தென் மாவட்ட மக்களின் ஆன்மாவை அப்படியெ வெளிக்கொணர்ந்த காட்சியமைப்புகள் நிறைந்த அந்தப்படத்தை, ராஜாவின் இசை தவிர்த்துப் பார்த்தால் ரசிக்க முடியாது. தேவர் மகனோடு ஒப்பிடுகையில் ரோஜாவின் இசை மிகச் சாதாரணமான ஒன்று (அந்த விருது தனக்கு மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையுமே ஏற்படுத்தியது என ரஹ்மான் கூறியுள்ளதை நினைவுகூரத்தக்கது. )
ஆனால் அந்தப் படம் சிறந்த இசைக்கான தேசிய விருது பெறுவதை, ரஹ்மானுக்காக தடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா.
என்னதான் செய்தார் அப்படி?
இதோ அவரே நேற்று வெளியிட்ட ரகசியம்!
இந்திரவிழா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.
பாலுமகேந்திரா மைக்கப் பிடித்தார்.
“நானும் ரஹ்மானும் இணைந்து பணியாற்றாவிட்டாலும், ரஹ்மானின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு என்னாலான உதவியைச் செய்திருக்கிறேன் என்ற உரிமையில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இதுவரை எங்கும் இது பற்றி நான் சொன்னதில்லை.
ரஹ்மான் இசையமைத்த ரோஜா படமும், இளையராஜா இசையமைத்த தேவர் மகனும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருதுக் கமிட்டிக்கு வந்தன. நான்தான் விருதுக் குழுவின் தலைவர் அப்போது. இரண்டு படங்களும் சிறந்த இசைக்கான பிரிவில் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம் நிலையில் இருந்தன. நான் என்னுடைய ஓட்டைப் போடாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் கடைசியில் நான் ஓட்டுப் போட்டே தீர வேண்டிய நிர்ப்பந்தம்.
ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன்.
தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன். அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்…”, என்றார் பாலு மகேந்திரா.
இதை என்னவென்று சொல்வது?
ரஹ்மானுக்கு முதல்முறையாக இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்த போதே இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாமே…!
நிச்சயம் ஆஸ்கர் வென்ற ரஹ்மானை விமர்சிக்கும் நோக்கத்திலல்ல இதைக் குறிப்பிடுவது. அவர் ஆஸ்கர் வெல்ல வேண்டும் என்றே நாமும் பிரார்த்தித்தோம்.
ஆனால் அவர் முதல் தேசிய விருது பெறுவதற்காக, தமிழகத்தின் இன்னொரு மகத்தான கலைஞனை பாலுமகேந்திரா போன்றவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடவே இதை எழுதுகிறோம்.
நன்றி -என்வழி .காம்
25 பிப்ரவரி 2009
நடிகை மதுமிதாவுக்கு மார்ச் 1ஆம் தேதி திருமணம்
நடிகை மதுமிதா, தெலுங்கு கதாநாயகன் சிவபாலாஜியின் காதல் திருமணம் மார்ச் 1 ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.
பார்த்திபன் ஜோடியாக ‘குடைக்குள் மழை’ படத்தில் அறிமுகமானவர், மதுமிதா. ஐதராபாத்தை சேர்ந்தவர். தொடர்ந்து ‘அமுதே’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘நாளை’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அமீர் ஜோடியாக ‘யோகி’, ‘சொல்ல சொல்ல இனிக்கும்’ படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் ‘ஆர்யா’, ‘சங்கராந்தி’, ‘அன்னாவரம்’, ‘சந்தமாமா’ ஆகிய படங்களில் சிவபாலாஜி நடித்துள்ளார். இவர் தொழிலதிபரும் கூட. தமிழில் சத்யராஜ் நடித்த ‘இங்கிலீஷ்காரன்’ படத்தில் இரண்டாவது ஹீரோவாக அவர் நடித்தபோது, அப்படத்தில் ஜோடியாக நடித்த மதுமிதாவுடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. பிறகு இருவரும் தங்கள் பெற்றோரிடம் காதல் விஷயத்தைச் சொல்லி, அவர்களின் சம்மதத்தைப் பெற்றனர்.
இதையடுத்து மதுமிதா, சிவபாலாஜியின் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் இயக்குனர்கள் அமீர், சுப்ரமணியம் சிவா உள்பட தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இப்போது மதுமிதா, சிவபாலாஜியின் திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 1 மஙிதேதி அவர்கள் திருமணம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
எம்.பி.ஏ படித்து வரும் மதுமிதா, திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு முழுக்குப் போட மாட்டேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
2 ம் வகுப்பு படிக்கும் 48 வயது பெண்!
சீனாவை சேர்ந்தவர் ஷி சூ ஜின். அவர் தன் சொந்த ஊரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார்.
இவர் படிக்காதவர் என்பதால் வியாபாரம் செய்வதில் கஷ்டப்பட்டார். படிக்காததால் அவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பது என்று அவர் முடிவு எடுத்தார்.
அவர் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்காக அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்றபோது, அவரை பார்த்து பள்ளிக்கூட நிர்வாக ஊழியர்கள் அவரை அதிசயமாக பார்த்தனர்.
அவரை வீட்டில் இருந்து படிக்கும்படியும், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் எப்போதாவது ஒரு முறை அல்லது இரு முறை ஆசிரியரை அனுப்பி வைக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். படிப்பதற்கு பள்ளிக்கூடம் தான் சிறந்த இடம் என்று அவர் கூறிவிட்டார். கடைசியில் அவரை சேர்த்துக்கொள்வது என்று பள்ளிக்கூட நிர்வாகம் தீர்மானித்தது.
அவர் 2-ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
’என் கூட படிக்கும் பிள்ளைகள் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். ஆசிரியர் சொல்வதை எப்படி குறிப்பு எடுப்பது என்பதை எல்லாம் அவர்கள் சொல்லித்தருகிறார்கள்’ என்றும் ஷி சூ ஜின் தெரிவித்துள்ளார்.
24 பிப்ரவரி 2009
யு -எஸ்- பி டிரைவ் பாதுகாப்பு
தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு
இயல், இசை, நாடகம் மற்றும் கலைத் துறையைச் சேர்ந்த 70 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1. அ.மாதவன் இயற்றமிழ்க் கலைஞர், 2. கவிஞர் சிற்பி - இயற்றமிழ்க் கவிஞர், 3. சரளா ராஜகோபாலன் - இயற்றமிழ் ஆராய்ச்சியாளர், 4. குருசாமி தேசிகர் - இயற்கலை பண்பாட்டு கலைஞர், 5. அவ்வை நடராஜன் - இலக்கியப் பேச்சாளர், 6. மாசிலாமணி, கன்னியாகுமரி - இலக்கியப் போச்சாளர், 7. சீர்காழி எஸ்.ஜெயராமன் - இசை ஆசிரியர், 8. எம்.எஸ்.முத்தப்பா, நாகர்கோவில் - இசை ஆசிரியர், 9. மகாராஜபுரம் சீனிவாசன் - குரலிசைக் கலைஞர், 10. ஏ.வி.எஸ். சிவக்குமார் - குரலிசைக் கலைஞர்.
11. எம்பார் கண்ணன் - வயலின் கலைஞர், 12. வழுவூர் ரவி, சென்னை - மிருதங்கக் கலைஞர், 13. டிரம்ஸ் சிவமணி சென்னை - டிரம்ஸ் கலைஞர், 14. சுகி சிவம் சென்னை - சமய சொற்பொழிவாளர், 15. எஸ்.சதாசிவன், நாகர்கோவில் -இறையருட் பாடகர், 16. வீரமணி ராஜூ - இறையருட் பாடகர், 17. டி.வி.ராஜகோபால் பிள்ளை திருவாரூர் - நாதசுரக் கலைஞர், 18. எஸ்.வி.மீனாட்சிசுந்தரம் லால்குடி - நாதசுரக் கலைஞர், 19. தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் - தவில் கலைஞர், 20. ஏ.மணிகண்டன் சேந்தமங்கலம் - தவில் கலைஞர்.
21. செல்வி ஷைலஜா - பரத நாட்டிய ஆசிரியர், 22. செல்வி ஸ்வேதா கோபாலன் - பரத நாட்டியக் கலைஞர், 23. செல்வி சங்கீதா கபிலன் - பரத நாட்டியக் கலைஞர், 24. செல்வி கயல்விழி கபிலன் - பரத நாட்டியக் கலைஞர், 25. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - பரத நாட்டியக் கலைஞர்.
26. வசந்தா வைகுந்த் - நாட்டிய நாடகக் கலைஞர், 27. மு.ராமசாமி - நாடக ஆசிரியர், 28. கூத்துப்பட்டறை ந.முத்துசாமி - நாடகத் தயாரிப்பாளர், 29. ஆர்.ராஜாமணி - நாடக நடிகை, 30. சி.டேவிட் இசை நாடக மிருதங்கக் கலைஞர்.
31. புதுக்கோட்டை ச. அர்ச்சுனன் - இசை நாடக ஆர்மோனியக் கலைஞர், 32. விழுப்புரம் விசுவநாதன் தெருக்கூத்துக் கலைஞர், 33. சங்கரபாண்டியன் - காவடியாட்டக் கலைஞர், 34. வேலவன் சங்கீதா - வில்லுப்பாட்டுக் கலைஞர், 35. கைலாசமூர்த்தி தூத்துக்குடி - ஒயிலாட்டக் கலைஞர்,
36. துறையூர் முத்துக்குமார் - காளியாட்டக் கலைஞர், 37. அபிராமி ராமநாதன் - திரைப்படத் தயாரிப்பாளர், 38. சேரன் - திரைப்பட இயக்குனர்.
நடிகர்கள்: சுந்தர் சி, பரத், பசுபதி, வையாபுரி
நடிகைகள்: நயன்தாரா, அசின், மீரா ஜாஸ்மீன், ஷோபனா, சரோஜா தேவி,
47. வேதம் புதிது கண்ணன் - திரைப்பட வசனகர்த்தா, 48. ஹாரிஸ் ஜெயராஜ் - திரைப்பட இசையமைப்பாளர், 49. ராஜசேகர் - திரைப்பட ஒளிப்பதிவாளர், 50. கிருஷ்ணமூர்த்தி - திரைப்பட புகைப்பட கலைஞர்,
51. சித்ரா சுவாமிநாதன் - திரைப்பட புகைப்பட கலைஞர், 52. நவீணன் - திரைப்படப் பத்திரிகையாளர், 53. சீனிவாசன் - ஓவியக் கலைஞர், 54. சுந்தர் கே.விஜயன், 55. திருச்செல்வன் - சின்னத்திரை இயக்குநர்,
சின்னத்திரை நடிகர்-நடிகைகள்: அபிஷேக், அணுஹாசன், அமர சிகாமணி, தேவிப்பிரியா.
61. எம்.எம்.ரெங்கசாமி - சின்னத்திரை ஒளிப்பதிவாளர், 62. ரமேஷ் பிரபா - சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர், 63. தயான்பன் - இசைக் கலைஞர். 64. ஜாகிர் உசேன் - பரத நாட்டிய கலைஞர்.
இயற்றமிழ்க் கலைஞர் விருது: அ. மறைமலையான், சரோஜ் நாராயணசுவாமி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, கோ.மணிலால், முனைவர் பெரு மதியழகன்.
70. ஒய் ஜான்சன் - நாடக் கலைஞர்
பொற்கிழி பெறுவோர்
வரதராஜன் மதுரை - இசை நாடக பாடலாசிரியர், டி.சி. சுந்தரமூர்த்தி சென்னை - புரவியாட்டக் கலைஞர், டி.என். கிருஷ்ணன் சென்னை - நாடக நடிகர்
சிறந்த நாடகக் குழு: கலைச் செல்வம் திரு. சாம்புவின் ''ஸ்ரீ சங்கர நாராயண சபா'' ஆடுதுறை.
23 பிப்ரவரி 2009
AR Rahman: Global tunesmith
The curiously named Panchathan Record Inn is a nondescript building tucked away in the thriving film district of the southern Indian city of Madras (Chennai). The backyard music studio is also AR Rahman's atelier.
"We make a lot of noise here," one of Rahman's assistants told me wryly when I paid a visit a few years ago. It was late in the evening, and trombone loops floated down the stairs from the state-of-the art studio above.
The "noise" has now conquered the world.
Seventeen years after he began writing music and songs for films, the jingle maker-turned-musician has finally got recognition as India's first truly global film music composer with his score for Danny Boyle's sleeper hit Slumdog Millionaire.
The score is an untidy smorgasbord of hip hop, Bollywood remix and signature pop anthem. But it works because it follows the film's giddy pace, the darkness of its characters, its portrayal of lives on the edge.
ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன..........
ஏ.ஆர்.ரகுமானுக்கு தலைவர்கள் வாழ்த்து
ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலுக்கான இரண்டு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சிறந்த மிக்சிங் சவுண்டு அமைத்த ரசல் பூகுட்டிக்கு ஜனாதிபதி பிரதிபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பெறுமை சேர்த்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தமிழக முதல்வர் கருணாநிதி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன்: கலைஞர்
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இசை என்றாலே தமிழி:ல புகழ் என்று தான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.
சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதின் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார். குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.
தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.
ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தமிழன் இந்தியாவுக்கு ஈட்டித்தந்திருக்கும் மிகப்பெரிய பெருமை. இது ஏ.ஆர்.ரகுமானின் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
அவர் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பொதுவாக மூன்றாம் உலக நாடுகள் ஆஸ்கர் விருதுகளால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. அந்த பழியை இந்த விருது துடைத்திருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த விருதால், தமிழகத்தின் பெருமை, இந்தியாவின் பெருமை, உலக கலையுலகில் வெளிச்சத்தை காட்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜெயலலிதா வாழ்த்து
ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலுக்கான இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது: உலகெங்கும் ரசிகர்கள் கொண்டாட்டம்
உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்படுகின்றன. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இந்த மகிழ்ச்சியை இந்தியர்கள் அனைவரும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ,
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் இருந்து சிறந்த இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரைப்படங்கள் சிறந்து விளங்கினாலும் ஆஸ்கார் விருதை இதுவரை பெற்றது கிடையாது.
இந்த சூழ்நிலையில், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றிய ஸ்லம்டாக் மில்லினர்' என்ற திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் என்ற இரண்டு பிரிவுகளில் ஏ.ஆர்.ரகுமான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
படத்தின் இசை மற்றும் 3 பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதால் அவருக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்று இந்தியா முழுவதும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாழ்த்தினர்.
இந்த சூழ்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்ற கோலாகல விழாவில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதை காண்பதற்கு உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் என இரண்டு விருதுகள் ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டது.
விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் உலகெங்கும் உள்ள ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். சென்னையில் திரையுலகைச் சேர்ந்த அனைவரும், ஏ.ஆர்.ரகுமானிடமும், அவரது குடும்பத்தாரிடமும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு திரும்பும் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க திரையுலகமும், அவரது ரசிகர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ஸ்லம் டாக் மில்லினர்' படத்துக்கு 8 ஆஸ்கார் விருது
உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டன. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றிய ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் சிறந்த இயக்குனருக்கான விருது டேனி பாய்லே பெற்றார். திரைக்கதைக்கான விருது சிமோன் பியுபோய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ஆன்டணி டாட் மந்லே பெற்றார். சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் என இரண்டு விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்தது. சிறந்த எடிட்டிங்கிற்கான விருதை கிறிஸ் டிக்கேன், சிறந்த சவுண்ட் மிக்சிங்கிற்கான விருதை பூக்குட்டி பெற்றார். சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருதை ஸ்லம்டாக் மில்லினர்' படம் பெற்றுள்ளது.
ஆஸ்கார் விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்: ஏ.ஆர்.ரகுமான்
அப்போது பெருமிதம் பொங்க அவர் கூறியதாவது: நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்தோடும், மகிழ்ச்சியோடும் இருந்தேன். ஏதோ திருமணத்திற்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்கு காரணம் என் அம்மாவின் ஆசீர்வாதம். அவருக்கும், விருது வழங்கிய அகாடமிக்கும் எனது நன்றிகள்.
எனது இசைக் கலைஞர்கள், இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன. நான் அன்பையே தேர்வு செய்தேன்.
கடவுள் நம்மோடு இருக்கையில் எல்லாம் கிடைக்கும். இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.
ஆஸ்கர் விருது வென்ற தங்க மகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்திப் படப் பாடல்களுக்கு தலையாட்டி ரசித்து கொண்டிருந்த தமிழர்களை தமிழ்பாட்டு பக்கம் இழுத்து வந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்றால் அந்த இந்திக்காரர்களையே தமிழ்பாட்டுக்கு தலையாட்ட வைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இவர் சங்கீதப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ராஜகோபால் பாகவதர் அந்தக்கால கதாகாலட்சேபம் நடத்தியவர். அவரது மகனான ஆர்.குணசேகர் என்கிற ஆர்.கே.சேகர் மலையாள திரையுலகின் மிகப்பெரிய இசை வல்லுநர். 22 படங்களுக்கு இசையமைத்தவர் அவரது வழிதோன்றல்தான் திலீப்குமார் என்கிற ஏ.ஆர்.ரஹ்மான். 1966 ஜனவரி 6ஆம் நாள் ஆர்.கே.சேகர் கஸ்தூரி தம்பதிகளின் மூத்த பிள்ளையாக பிறந்த திலீப் இன்று ஏ.ஆர்.ரஸ்மான் என்ற பெயரில் உலகப் பெற்றிருக்கிறார். 1977இல் கேன்சர் நோய்க்கு தந்தையே பறிக் கொடுத்தபோது அந்த இசை இளவலுக்கு வயது பதினொன்று.
தந்தையின் இழப்புக்கு பின் குடும்பத்தில் வறுமை புகுந்து கொள்ள குடும்பத்தின் ஒரே ஆண் மகனான அந்த சின்ன வயதிலே இசைக்குழுக்களில் சேர்ந்து உழைக்க ஆரம்பித்தார். ரஹ்மான் முதன்முதலாக வாசிக்கக் கற்றுக் கொண்டது பியானோ, தமது பதினொரு வயதில் கிடார் மற்றும் 'கீ போர்டு' இசைக்க கற்றுக்கொண்டார். இளம் வயதிலேயே ரஹ்மான் இசையின் ஆரம்ப கட்டப் பயிற்சியை தந்தையிடம் பெற்றிருக்கிறார். வீடெங்கும் இசைக்கருவிகள் இருந்த சூழல் வளர்ந்தார். நான்கு வயதான திலீப் (ரஹ்மான்) ஹார்மோனியத்தில் ஒரு பாடலை வாசிக்கக் கேட்ட சுதர்சனம் மாஸ்டர் அதன் கட்டைகளை ஒரு துணியால் மறைந்தாராம். குழந்தை தன்னம்பிக்கையுடன் அதே மெட்டை மறுபடியும் வாசித்துக் காண்பித்ததாம்.
மகனின் ஆபூர்வமான திறமையைக் கண்ட சேகர் அப்போது சொன்னாராம் ''என் வாழ் நாளெல்லாம் நான் இரண்டாம் இடத்திலேயே இருந்துவிட்டேன். என் மகன் வழியாக ஒரு நாள் நான் வெற்றிபெறுவேன் என்று! அவர் வாக்கு பலித்து விட்டது மகனின் வழியாக! தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்திய அளவில் ஏன் உலக அளவில் வெற்றி பெற்றுவிட்டார் ரஹ்மான்.
தமது தந்தையுடன் பாடல் பதிவுக் கூடங்களுக்குக் சென்றது தான் ரஹ்மானின் இளமைப் பருவத்தின் பொக்கிஷமான முக்கிய நினைவுகள்:
''எனக்கு ஊக்கமூட்டும் நினைவாக இருப்பது என் தந்தையின் நினைவுதான். எங்கள் வீட்டு வரந்தாவில் அன்றைய புகழ்பெற்ற இயக்குநனர்கள் வந்து காத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரே சமயத்தில் எட்டு ஒன்பது படங்களக்கு என் தந்தை உழைப்பார். ஒன்றுக்கு இசையமைப்பார் மற்றொன்றுக்கு இசை கோர்ப்பு செய்து கொடுப்பார். இன்னொரு புறம் இசை நடத்துவார். இப்படி நேரம் காலம் பாராமல் உழைத்து கொண்டே இருந்ததால் தான் அவர் உயில் துறந்தார் என்று நான் நினைக்கிறேன் என்கிறார் ரஹ்மான்.
1987 முதல் அவர் விளம்பர படங்களுக்கு இசையமைத்தார் சுமார் 300க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் சின்னத்திரை வழியாக அவரது இசை வலம் வந்தது. ரஹ்மானின் விளம்பர இசையை பார்த்துதான் மணிரத்னம் அவரை தமது படத்திற்கு இசையமைப்பாளராக நியமித்தார். 1992ஆம் சுதந்திர தினத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்பார் ரஹ்மான். காரணம் 'ரோஜா படம் வெளியாகி தென்னிந்தியா திரும்பி பார்த்த நாள் அதுதான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார் ரஹ்மான். இந்திய இசைமைப்பாளர்களிலேயே அதிக தடவை தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஹ்மான் தான்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், ராஜீவ்காந்தி விருது, தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது, பிரபல இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன் நினைவாக வழங்கப்படும் ஆர்.டி.பர்மன் விருது. எம்.டி.வி.யின் வாழ்நாள் சாதனை விருது. 18 முறைகளுக்கு மேல் பி ம்ஃபேர் விருது என ரஹ்மானை பெருமைப்படுத்திய விருதுகளின் எண்ணிக்கை அதிகம். உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்டடது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக சிறந்த இசைக்காகவும், சிறந்த பாடலுக்காகவும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். ஆஸ்கார் விருதை பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, பிரபல இயக்குனர் சத்ய ஜித்ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற பெயரில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு விருதுகள்.. ஆஸ்கார் மேடையில் தமிழ் மொழியில் பேசிய ரஹ்மான்
ஸ்லம்டாக் மில்லியனர் படத்துகக்கு சிறந்த இசைக்காகவும், சிறந்த பாடலுக்காகவும் விருது அளிக்கப்பட்டுள்ளது.இங்கு தனது விருது பெற்ற பின் இறுதியில்தமிழ் மொழியில்பேசியரஹ்மான்"எல்லாப் புகழும் இறைவனுக்கே "என்று கூறி ஆஸ்கார் மேடையில் தமிழ் மொழி பேசி உலக தமிழர்களின் பேரன்பையும் பெற்றுள்ளார் ..........ஆஸ்கார் மேடையில் ஒலித்த முதல் தமிழ் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.
ஸ்லம் டாக் மில்லினர்' படத்துக்கு 2 ஆவது ஆஸ்கார் விருது
ஸ்லம்டாக்... சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது!
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 81-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணி யளவில் தொடங்கியது.
இதில், ஸ்லம்டாக் மில்லியனர் சிறந்த அடாப்டட் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டு, அவ்விருது சைமன் பியூஃபாய்க்கு வழங்கப்பட்டது.
இவ்விருதைப் பெற்று கொண்ட சைமன், "நான் இந்த விருதைப் பெறுவதற்கு நாவலாசிரியர் (கியூ அண்ட் ஏ) விகாஸ் மிக முக்கியக் காரணம்," என்றார்.
மும்பையை சேர்ந்த குடிசைவாழ் 18 வயது இளைஞன் ஒருவன் 'கோடீஸ்வரன்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 2 கோடி ரூபாய் பரிசை வெல்வது, அந்தக் கதையில் குடிசைவாசிகளின் வாழ்க்கையையும், மனதை வருடும் காதல் கதையையும் சொல்வதே 'ஸ்லம்டாக் மில்லியனர்' கதை!
ஒஸ்கார் பற்றிய மேலதிக தகவல்கள் உடனுக்குடன் எதிர் பாருங்கள் ......
22 பிப்ரவரி 2009
ஒஸ்கார் விருது 2009 இன்று ....
- Alexandre Desplat - “The Curious Case of Benjamin Button”
- James Newton Howard - “Defiance”
- Danny Elfman - “Milk”
- Thomas Newman - “WALL-E”
- “Down to Earth” from “WALL-E” Music by Peter Gabriel and Thomas Newman, Lyric by Peter Gabriel
- “Jai Ho” from “Slumdog Millionaire” , Music by A.R. Rahman, Lyric by Gulzar
- “O Saya” from “Slumdog Millionaire” , Music and Lyric by A.R. Rahman and Maya Arulpragasam
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாழ்த்துவோம்.....
'கழற்றிவிட்ட' கணவரை பழிவாங்க முயன்ற ஐந்தாவது மனைவி பலி
சீனாவின் கடற்கரை நகரமான கிங்டாவில் உள்ள ஒரு உணவு விடுதியில் பணிப்பெண்ணாக பணியாற்றியவர் யு லியு. 2000வது ஆண்டில், தொழிலதிபர் பன் என்பவரை சந்தித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. தொழிலதிபர் பன், ஏற்கனவே நான்கு பேரை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஐந்தாவதாக உணவு விடுதி பணிப் பெண் யு லியுவையும் திருமணம் செய்து கொண்டார். பின்னர், அவரை, தனது மூத்த மனைவிகள் நான்கு பேர், தனது ஊழியர்கள் இருவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மனைவிகள் அனைவருக்கும் தனித்தனியே மாதம் 35 ஆயிரம் ரூபாய் பணமும், இலவச அடுக்கு மாடி குடியிருப்பும் வழங்கி இருந்தார்.
ஆனால், சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, பன்னின் தொழில் நசிவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஐந்து மனைவிகளை பராமரிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டார் பன். அவர்களில் ஒருவரை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டு, மற்றவர்களை கழற்றி விட முடிவு செய்தார். கழற்றிவிடப்பட்டவர்களின், அடுக்கு மாடி குடியிருப்புகளையும், நல்ல விலைக்கு விற்பனை செய்து, தொழிலில் மறு முதலீடு செய்ய திட்டமிட்டார். இதற்காக, ஐந்து மனைவிகளில் யார் அழகானவர், நன்றாக மது அருந்துபவர் என்பதன் அடிப்படையில், ஒரே மனைவியை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தார். அப்படிப்பட்ட ஒருவரை தேர்வு செய்ய மாடலிங் ஏஜென்சியில் இருந்து ஒரு நடுவரை பணியமர்த்தினார்.
ஒரு ஓட்டலில் அழகிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதல் சுற்றிலேயே தோற்றப் பொலிவு போட்டியில் இருந்து யு லியு விலக்கப்பட்டார். இத்தனைக்கும் மது குடிக்கும் போட்டியில் அவர் தான் முதலிடத்தை பிடித்தார். இருப்பினும், யு லியுவை முதலாவதாக கழற்றிவிட பன் முடிவு செய்து விட்டார். இதை யு லியுவிடம் தெரிவித்த பன், அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பையும் விற்பனை செய்ய முடிவு செய்துவிட்டதாக தெரிவித்தார். இதனால், கடும் கோபமடைந்தார் யு லியு. தனது மாஜி கணவரையும், அவரது மற்ற நான்கு மனைவிகளையும் பழிவாங்க முடிவு செய்தார். விருந் துக்கு போகலாம் என்று கூறி அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு தானே ஓட்டிக்கொண்டு போனார். பள்ளத்தில் காருடன் பாய்ந்தால் எல்லாரும் இறந்து விடுவர் என்பது தான் அவர் எண்ணம்.
ஆனால், கார் நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் யு லியு மட்டும் இறந்து போனார். பன் மற்றும் நான்கு மனைவிகளும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆரம்பத்தில், இது ஒரு சாதாரண விபத்து என்று தான் கருதப்பட்டது. பின்னர் தான் இது பழிவாங்க நடத்தப்பட்ட சம்பவம் என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பன், இறந்து போன யு லியு குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ.40 லட்சம் அளித்துள்ளார். மற்ற மனைவிகளும், பன்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இப்போது பன் தனி மரமாக நிற்கிறார். சீன பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. பன் குறித்து, அவரது வயது, தொழில் போன்ற விவரங்கள் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை.
எல்லா மொபைல் போனுக்கும் இனி ஒரே சார்ஜர் போதும்
அனைத்து வகை மொபைல் போன்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சார்ஜர் உற்பத்தி செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. மொபைல் போன்களை மாற்றும் போது, தனியாக அதற்கு சார்ஜர்கள் வாங்க வேண்டியுள்ளது. ஒவ் வொரு நிறுவனத்தின், ஒவ் வொரு மாடல் மொபைல் போனுக்கும், அதற்கென மட்டும் பொருந்தும் வகையில் சார்ஜர்கள் இணைத்து வழங்கப்பட்டன. அதற்கு முன்னர் பயன்படுத்திய சார்ஜர், பயன்படுத்த தேவையின்றி, வீணாகிறது.
இந்நிலையை மாற்றி, அனைத்து மொபைல் போன்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சார்ஜர்கள் கொண்டு வர ஜி.எஸ்.எம்.ஏ., மொபைல் போன் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த துறையினர் நடத்திய கூட்டத்தில் 17 மொபைல் போன் ஆபரேட்டர்கள், மொபைல் போன் தயாரிக்கும் முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. வரும் 2012ம் ஆண்டு முதல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் அனைத்து மொபைல் போன்களுக்கும், இனி சார்ஜர்கள் ஒரே மாதிரியாக இருக்கும். எந்த நிறுவனத்தின், எந்த மாடலுக்கும் இந்த சார்ஜர் பொருந்தும் வகையில் இருக்கும்.
இந்த சார்ஜர்கள், அதற்கு பின்னர் விற்பனைக்கு வரும் மற்ற மாடல் மொபைல் போன்களுக்கும் பொருந்துவதாக இருக்கும். தற்போது, பயன்படுத்த முடியாத பழைய சார்ஜர்களால் உலகம் முழுவதும், ஆண்டுக்கு 51 ஆயிரம் டன் கழிவுகள் ஏற்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது. இதையும் மனதில் கொண்டு தான், இனி ஒரே மாதிரி சார்ஜர்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஏடி அண்டு டி, கே.டி.எப்., - எல்.ஜி., - மொபைல்கோம் ஆஸ்டிரியா, மோட்டரோலா, நோக்கியா, ஆரஞ்சு, குவால் காம், சாம்சங், சோனி எரிக்சன், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. புதிதாக வெளிவர இருக்கும் சார்ஜர்கள், மின் சிக்கனத்துக்கும் வழி வகுப்பதாக இருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் சார்ஜர்களில் இருந்து 50 சதவீதம் மின் சிக்கனம் கொண்டவையாக இவை இருக்கும்.