சீனாவை சேர்ந்தவர் ஷி சூ ஜின். அவர் தன் சொந்த ஊரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார்.
இவர் படிக்காதவர் என்பதால் வியாபாரம் செய்வதில் கஷ்டப்பட்டார். படிக்காததால் அவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பது என்று அவர் முடிவு எடுத்தார்.
அவர் பள்ளிக்கூடத்தில் சேர்வதற்காக அந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்றபோது, அவரை பார்த்து பள்ளிக்கூட நிர்வாக ஊழியர்கள் அவரை அதிசயமாக பார்த்தனர்.
அவரை வீட்டில் இருந்து படிக்கும்படியும், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் எப்போதாவது ஒரு முறை அல்லது இரு முறை ஆசிரியரை அனுப்பி வைக்கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். படிப்பதற்கு பள்ளிக்கூடம் தான் சிறந்த இடம் என்று அவர் கூறிவிட்டார். கடைசியில் அவரை சேர்த்துக்கொள்வது என்று பள்ளிக்கூட நிர்வாகம் தீர்மானித்தது.
அவர் 2-ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
’என் கூட படிக்கும் பிள்ளைகள் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். ஆசிரியர் சொல்வதை எப்படி குறிப்பு எடுப்பது என்பதை எல்லாம் அவர்கள் சொல்லித்தருகிறார்கள்’ என்றும் ஷி சூ ஜின் தெரிவித்துள்ளார்.