Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

23 ஜூன் 2012

கணினியின் அனைத்து மென்பொருள்களையும் பாதுகாப்பாக update செய்ய,,

விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, மைக்ரோசாப்ட்நிறுவனம் அளிக்கும் பேட்ச் பைல்களைக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வதுதான். அது மட்டுமின்றி இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம் களும் அவ்வப்போது பேட்ச் பைல் மூலம் அப்டேட் செய்திட வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எத்தனை பைல்களுக்கான அப்டேட் பைல்களைக் கண்காணிக்க முடியும்.


எம்பி3, வீடியோ, தொலைபேசி, டிவி ட்யூனர், கேமரா மற்றும் மொபைல் இணைப்பிற்கான அப்ளிகேஷன் கள் என அனைத்தையும் நாம் கண்காணித்து அப்டேட் செய்வது எளிதா என்ன? சில வேளைகளில் இது போன்ற புரோகிராம்களுக்கு அப்டேட் இருப்பதாகச் சொல்லி, நம்மை ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு அழைத்துச் சென்று வைரஸ்களை நம் கம்ப்யூட்டருக்குள் தள்ளிவிடும் போலி புரோகிராம்களும் நிறைய உண்டு. இதற்கெல்லாம் விடிவாக நமக்கு ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் Secunia PSI. (PSI Personal Software Inspector) இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

software update for your computersoftware update for your computerஇந்த புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் உள்ள பழைய புரோகிராம்களுக்கு அவற்றின் நிறுவனங்கள் அப்டேட் தந்தாலும் தரவிட்டாலும், செகுனியா அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. ஸ்கேன் செய்த பின் பாதுகாப்பற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் என ஒரு பட்டியலை நமக்கு அளிக்கிறது. எந்த புரோகிராம்களுக்கெல்லாம் அப்டேட்டட் பைல்கள் உள்ளனவோ அவற்றின் லிங்க்குகளைப் பட்டியலிட்டு தருகிறது. இந்த லிங்க்குகளில் கிளிக் செய்து நம் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களை அப்டேட் செய்து கொள்ளலாம்.

software update for your computersoftware update for your computerஇவற்றுடன் எந்த புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்களை அவற்றைத் தயாரித்து அளித்த நிறுவனங்கள் தரவில்லையோ அவற்றையும் சுட்டிக் காட்டுகிறது. செகுனியா சிஸ்டம் தொடங்கும்போதே இயங்கி, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்களையும் ஸ்கேன் செய்கிறது. புதிய புரோகிராம்கள் இருந்தால் அவற்றிற்கான அப்டேட் பைல்களை ஆய்வு செய்கிறது. புரோகிராம்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் கோட் இருந்தால் அதனையும் சுட்டிக் காட்டுகிறது. செகுனியா பி.எஸ்.ஐ. கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் அல்லது பயர்வால் புரோகிராம்களுக்குப் பதிலியாகக் கொள்ள முடியாது. ஆனால் இவை மேற்கொள்ளாத ஒரு முக்கிய வேலையை மேற்கொண்டு நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது.

சென்ற October  மாதம் இதன் அண்மைக் காலத்திய பதிப்பு வெளியானது(18th October 2011). பதிப்பு எண் 2.0.0.4003 இதன் பைல் சைஸ் 1.739,728 bytes ஆகும். 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளில் சராசரியாக இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2,396.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

சகுனி - சலிப்பூட்டும் சூதாட்டம் ...




தொடர்ந்து தன்னுடைய படங்கள் வெற்றி பெற்று விட்டாலே படம் எப்படி இருந்தாலும் ஓடி விடும் என்ற நினைப்பு நடிகர்களுக்கு வந்து விடும் ... ஐந்தாவது படத்திற்கே ஆயிரம் ஸ்க்ரீன்களுக்கு மேல் ரிலீசாகியிருக்கும்சகுனியை பார்த்தால் கார்த்திக்கு அந்த நினைப்பு வந்து விட்டது போல தெரிகிறது ...

காரைக்குடியில் ஊருக்கே படியளக்கும் வீடு கமல் ( எ ) கமலக்கண்ணனின்
கார்த்தி ) வீடு ... சப்வே கட்டுவதற்காக அந்த வீட்டை இடிக்க ஆணையிடுகிறது ரயில்வே நிர்வாகம் , அதை எதிர்த்து ரயில்வே மந்திரியிடம் மனு கொடுக்க சென்னை வருகிறார் கார்த்தி ... மனு கொடுத்த கையோடு கார்த்தி ஆட்டோ டிரைவர் ரஜினி ஏகாம்பரத்திடம் ( சந்தானம் ) தன் அத்தை பெண் ஸ்ரீதேவியை ( ப்ரனிதா ) டாவடித்த கதையை சொல்கிறார், இட்லிக்கடை ஆச்சியை ( ராதிகா ) கவுன்சிலராக்குகிறார் , பிறகு போனால் போகிறதென்று அவரை மேயராகவும் ஆக்குகிறார் , சும்மா கிடந்த பீடி சாமியாரை ( நாசர் ) சர்வதேச லெவலுக்கு உயர்த்துகிறார் , அவ்வப்போது வீட்டை காக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று முதலமைச்சர் பூபதியிடம் ( பிரகாஷ்ராஜ் ) சவால் விடுகிறார் , எதிர்க்கட்சி தலைவர் பெருமாளை ( கோட்டா ஸ்ரீனிவாசராவ் ) தேர்தலில் ஜெயிக்க வைத்து முதல்வராக்குகிறார் ...

படம் முடியும் போது ஏதோ நியாபகம் வந்தது போல ஹீரோயினும் , வீட்டை இடிப்பதற்கு எதிரான ஆர்டரும் கார்த்தியின் கைகளுக்கு வந்து சேர்கின்றன. அப்பாடா ஒரு வழியாக படம் முடிந்தது என்று எந்திரித்தால் டில்லி அரசியலை சீர்படுத்த கார்த்திக்கு அழைப்பு வருகிறது ... பிரசிடன்ட்தேர்தலை போல  தலை சுற்றுகிறதா ? அதுவே சகுனியின் தூளான கதை ...

என்ன பாஸ் மத்திய அமைச்சரிடம் மனுவை கொடுத்து விட்டு எதற்கு கார்த்தி தேவையில்லாமல் ஸ்டேட் பால்டிக்சுக்குள் நுழைகிறார் என்றோ , ஒரு தனியாளாக கார்த்தியால் எப்படி ஒரு மாநிலத்தின் அரசியலையே புரட்டிப் போட முடியுமென்றோ நீங்கள் கேள்வி கேட்பவராக இருந்தால் சகுனி இஸ் நாட் யுவர் கப் ஆப் டீ ... அதே சமயம் லாஜிக்கெல்லாம் பாக்காம படத்துக்கு போனோமா , ஜாலியா என்ஜாய் பண்ணோமா என்று நினைப்பவர்களுக்கும் சகுனி இஸ் நாட் பிட் பார் தி பில் ஆக இருப்பதே படத்தின் பெரிய குறை ...


மாஸ் ஹீரோவிற்குரிய கரிஸ்மா கார்த்தியிடம் இருக்கிறது ... ஆனால் அது மட்டும் போதுமென அவர் நினைத்து விட்டதே துரதிருஷ்டம் ... படத்தில் நடிப்பிற்கு பெரிய ஸ்கோப் இல்லை , எனவே கார்த்தி படம் நெடுக சிரிக்கிறார் , சிரிக்கிறார் , சிரித்துக் கொண்டேயிருக்கிறார் ...ப்ரனிதாபடத்தில் இருக்கிறார் அவ்வளவே ... குட்டைப் பாவாடையுடன் ஒரு பாடலுக்கு நடனமாடுவதோடு அவருடைய பணி முடிந்து விடுகிறது ... மாமா என்று அவர் கார்த்திக்கை பார்த்து குழட்டும் போது நமக்கு குமட்டுகிறது ...

சந்தானம் கார்த்தியுடன் சேர்ந்து நன்றாகவே காமெடி ஆட்டோ ஓட்டுகிறார் ... இருவரின் காம்பினேஷனும் மீண்டும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது , ஆனால் இவர்களின் கமல் - ரஜினி காம்பினேஷன் ஒரு லெவலுக்கு மேல் எரிச்சலை தருகிறது ... இன்னும் எத்தனை படங்களுக்கு தான் சந்தானம் ஆபத்பாந்தவனாக இருப்பாரோ தெரியவில்லை ...

ராதிகா , நாசர் , ரோஜா இவர்களுள் ராதிகா மட்டும் கவனிக்க வைக்கிறார் ...கோ பாணியில் அரசியல் படம் என்று பார்த்தால் , அந்த படத்தை போலவே முதலமைச்சராக பிரகாஷ்ராஜ் , எதிர்க்கட்சி தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என காஸ்டிங்கும் அதைப் போலவே செய்திருக்கிறார்கள் , இதில் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை ...


மனசெல்லாம் நல்ல மெலடி , மற்றபடி இந்த படத்திற்கு இந்த இசை போதுமென்று ஜி.வி.பிரகாஷ்குமார் நினைத்து விட்டாரோ என்னவோ ... சந்தானத்திடம் சொல்வதன் வாயிலாக கார்த்தி தன் பிளாஸ்பேக்கை சுவாரசியமாக சொல்வது , சந்தானத்தின் காமெடி , சீனியர் நடிகர்களின் பங்களிப்பு , தூள் கதையை தூசி தட்டி எடுத்திருந்தாலும் இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் அதை சொன்ன இயக்குனரின் தைரியம் இவைகளையெல்லாம் சகுனியின் ப்ளஸ்களாக சொல்லலாம் ...

தொடர்ந்து சக்சஸ் கொடுக்கும் ஹீரோவின் கால்ஷீட் இருந்தாலே போதும் வேறொன்றும் தேவையில்லையென நினைத்து விட்ட அறிமுக இயக்குனர் சங்கர் தயாளின் எண்ணம் , வசனத்தில் மட்டும் அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை போடுவதே சுவாரசியம் என்று சொல்லிவிட்டு எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் அமைக்கப்பட்ட திரைக்கதை , கதை மட்டும் தான் சுட்டது என்று பார்த்தால் கோ , சிவகாசி , மக்கள் ஆட்சி உட்பட பல படங்களில் பார்த்து பழகிப் போன காட்சிகள் , படம் பார்க்க வருகிறவர்கள் எல்லாம் மங்குணிகள் என்ற நினைப்பில் பசிக்கு ஹோட்டலில் புகுந்து ஏதோ நாலு இட்லி , வடை சாப்பிடுவது போல ஹீரோ அவ்வளவு ஈசியாக கவுன்சிலர் , மேயர் , முதல்வர் என அவ்வளவு பேரையும் உருவாக்கிக் கொண்டே போவது இவைகளெல்லாம் ரசித்திருக்க வேண்டிய சகுனியின் சூதாட்டத்தை சலிப்படைய வைக்கின்றன ...

19 ஜூன் 2012

ஹோண்டா' பெயரை நீக்கி வரும் "ஹீரோ

இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் புரட்சியை ஏற்படுத்தியது, ஹீரோ ஹோண்டா. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனமும், இந்தியாவை சேர்ந்த ஹீரோ குழுமமும் இணைந்து தான், ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வந்தன. 25 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த கூட்டணி, கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதன் பிறகு, ஹீரோ ஹோண்டா நிறுவனம், " ஹீரோ மோட்டோ கார்ப்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஹோண்டா நிறுவனம் தனியாக இந்தியாவில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.




தற்சமயம் வரை, ஹீரோ ஹோண்டா என்ற பெயரிலேயே இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இம்பல்ஸ், மேஸ்ட்ரோ மற்றும் இக்னிடர்125 சிசி ஆகிய வாகனங்களில் தான், "ஹீரோ' என்ற தனி பெயர் இடம் பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மற்ற வாகனங்களிலும், ஹோண்டா பெயரை நீக்கி, "ஹீரோ' என்ற பெயர் மட்டும் இடம் பெற செய்யும் பணியை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள இந்த நிறுவனத்தின் அனைத்து டீலர்களிடமும் இந்த பணி நடந்து வருகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் இப்பணி முடிவுக்கு வர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
வரும் 2014ம் ஆண்டு வரை தான், ஹோண்டா தொழில்நுட்பத்தை, ஹீரோ குழுமம் பயன்படுத்த முடியும். எனவே, புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ரூ.400 கோடி செலவில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், இந்த நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் ஆஸ்திரியாவை சேர்ந்த ஏ.வி.எல்., என்ற நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. 

சச்சினை முந்தினார் தோனி


லண்டன்: உலகின் பணக்கார விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, சச்சின், <உசைன் போல்ட், ஜோகோவிச் ஆகியோரை பின்தள்ளி 31வது இடம் பிடித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியாகும் பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் பணக்கார விளையாட்டு நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு 31வது இடம் கிடைத்துள்ளது. இவரது வருமானம் ரூ. 148 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு 78வது இடம் (ரூ. 104 கோடி) கிடைத்துள்ளது. இங்கிலாந்து கால்பந்து வீரர் ரூனே (37வது இடம், ரூ. 135 கோடி), செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (62வது இடம், ரூ. 115 கோடி), ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் (63வது இடம், ரூ. 113 கோடி) ஆகியோர் "டாப்-100' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளாய்டு மேவெதர் (ரூ. 475 கோடி), பிலிப்பினோ குத்துச்சண்டை வீரர் மான்னி பாக்குயோ (ரூ. 346 கோடி), அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் (ரூ. 332 கோடி) ஆகியோர் "டாப்-3' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.
 சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (5வது இடம், ரூ. 320 கோடி), இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் (8வது இடம், ரூ. 257 கோடி), போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (9வது இடம், ரூ. 237 கோடி) ஆகியோர் "டாப்-10' வரிசையில் இடம் பிடித்தனர்.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி (11வது இடம், ரூ. 218 கோடி), ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா (26வது இடம், ரூ. 156 கோடி) ஆகியோர் "டாப்-50' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com