என்னிடம் ஆங்கில மொழி திறமை இருக்கிறது அல்லது என்னிடம் கணிதத்திறமை இருக்கிறதுவ்அல்லது அறிவியல் , விஞ்ஞானம் போன்ற பல திறமைகள் இருக்கிறது இப்படி இருக்கும் அறிவை வைத்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாமா என்று பலர் இமெயில் மூலம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் வரும் விளம்பரங்களை சொடுக்கினால் போதும் என்று யாராவது கூறினால் கண்டிப்பாக நம்பாதீர்கள் அது போலியாகத்தான் இருக்கும், நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.wiziq.com/teaching-online/
ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி நமக்கென்று திறமையான மொழி அல்லது நம் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தே மாதம் ஒரு பெரியத் தொகை சம்பளமாக பெறலாம். பாடம் நடத்துவதற்கு நமக்கு உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது, அடிப்படை கணினி அறிவு இருந்தால் மட்டும் போதும், இங்கு மேலே குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Start your 30 day free trial என்ற பொத்தனை சொடுக்கி நம் தகவல்களை கொடுத்து உள்நுழையலாம் 1 மாதம் இலவசமாக தங்களின் சேவையை கொடுக்கின்றனர், விர்ச்சுவல் கிளாஸ் ரூம் மூலம் வெப் கேமிரா மூலம் ஆசிரியர் நேரடியாக தங்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கலாம், மாணவர் தங்கள் கேள்விகளை மைக் மூலமாக பேசியும் அல்லது வார்த்தையாக தட்டச்சு செய்து ஆசிரியரிடம் கேட்கலாம் , ஒரே வரைபலகையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தனை அத்தனை மாணவர்களுக்கும் தங்கள் கணினித்திரையில் நேரடியாக பார்க்கலாம், பொறியியல் மாணவர்கள் தங்கள் கேள்விகளுக்கு , பிராஜெக்ட்களுக்கு இன்றும் விளக்கம் தேடி ஒவ்வொரு இடமாக செல்கின்றனர் ஆன்லைன் மூலம் பிராஜெக்ட்களுக்கு முழுமையான விளக்கம் அளித்து நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம், நமக்கு தமிழ் மட்டும் நன்றாக தெரியும் என்றால் அதை வைத்து ஆன்லைன் மூலம் தமிழ் சொல்லி கொடுக்க ரெடி என்று ஒரு வகுப்பை தொடங்கி பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும் , எந்த பணமும் செலுத்தமாலே நம் திறமையை வைத்து ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம் என்ற இந்தப்பதிவு நம் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.