இவர்களுக்கு என்ன செய்திருக்கிறார் டி.ஆர்? கொஞ்சம் அக்கறையோடு கேட்டுப்பார்த்தால் உதட்டை பிதுக்குவார்கள். ஆனாலும், இவர்களின் சந்தோஷமும் துக்கமும் டி.ராஜேந்தர்தான். இவர்களையும், ராஜேந்தரையும் இறுக்கமாக முடுக்கி வைத்திருக்கிற ஸ்பானர் எது? அவர் கொடுக்கிற சின்ன சின்ன அன்புதான்! (நன்றாக கவனிக்கவும், அன்புதானே தவிர அன்பளிப்பு அல்ல)
அப்போதுதான் தனியார் தொலைக்காட்சிகள் உருவாகி வந்த நேரம். தனது படங்களின் தொலைக்காட்சி உரிமையை எந்த டி.வி க்கும் வழங்கியிருக்கவில்லை இவர். அதனால் வாரத்திற்கு ஒருமுறை இவரது அலுவலகத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஏதாவது இரண்டு படப்பெட்டிகளாவது தியேட்டர்களுக்கு போகும். அந்த பெட்டிகள் திரும்பி வரும்போது கூடவே கலெக்ஷனும் வரும். எல்லா செலவுகளும் போக குறைந்தது பத்தாயிரமோ இருபதாயிரமோ தருவார்கள். திருமதி. உஷா இருந்தால் "அவங்ககிட்டே கொடுங்க" என்று அந்தப்பக்கம் கை நீட்டி விடுவார். அவர் இல்லையென்றால், அந்த பணத்தை அப்படியே இவர்களுக்கு (இன்னும் சிலரும் அப்போது கூட இருந்தார்கள்) பிரித்துக் கொடுத்துவிடுவார். "யேய், அக்கா வர்றதுக்குள்ளே வந்து வாங்கிக்கோங்கப்பா" என்று இவர் அவசரம் காட்டுவது ஆச்சர்யமாக இருக்கும்! இன்றைய நிலையில் இந்த வருமானத்திற்கும் வாய்ப்புகள் இருக்கப் போவதில்லை. ஆனாலும் தொட்டு தொடர்கிறது இவர்களின் பாச பந்தம்!
செங்கல்பட்டிலிருந்து தினமும் உஷா அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் முருகன். உஷா இதழுக்கு இயக்குனர் ஒருவர் ஆவேச பேட்டியளித்திருந்தார். 'அர்ஜுன் ஒரு வளர்த்த கடா' -இதுதான் அந்த கட்டுரையின் தலைப்பு. நம்ம முருகன் அதை எப்படி எழுதியிருந்தார் தெரியுமா? 'அர்ஜுன் வளர்த்த, ஒரு கடா!' யாரும் கவனிக்காமல் அப்படியே பிரசுரமானது. கட்டுரையை வாசித்த வாசகர்கள் ஒரு இடத்திலும், அர்ஜுன் கடா வளர்த்தார் என்ற விபரமே வரவில்லையே என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி சுதந்திரமாக செயல்படக் கூடியவர் முருகன். இந்த விஷயத்தை அறிந்த பிறகும், "பரவாயில்லைப்பா... ஒரு வார்த்தையை மாத்தி போட்டுட்டான்(?) விடுங்க" என்று மன்னித்துவிட்டார் டி.ஆர்.
இந்த முருகனுக்கு டி.ஆர்.அன்பு காட்டிய விஷயத்தைதான் இப்போது சொல்லப்போகிறேன். இவர் திமுக வில் எம்.எல்.ஏ வாக இருந்த நேரம் அது. செங்கல்பட்டில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள் டி.ராஜேந்தரை. வழக்கமாக மாலை நேரத்தில் ரயில் பிடித்து செங்கல்பட்டு போய் இறங்கும் முருகன் அன்று, "அண்ணே... ஒங்களோட வேன்ல வந்து இறங்கிக்கிறேன்" என்று கூறியிருந்தார். "அதுக்கென்னடா சரி" என்று கூறிவிட்டார் இவரும்.
இவரது பிரச்சார வேனில் மேற்படி கோஷ்டிகள் ஏறிக்கொள்ள வண்டி கிளம்பியது. பயணத்தின்போது முருகனிடம், வீடு எங்கேயிருக்கு? செங்கல்பட்டிலிருந்து வீட்டுக்கு போக எவ்வளவு து£ரம்? எப்படி போவே? என்றெல்லாம் விசாரித்தபடியே சென்றார் டி.ஆர். வேன் செங்கல்பட்டை அடைந்தபோது இவருக்காக காத்திருந்த தொண்டர்கள் பெருத்த கோஷத்தை எழுப்பினார்கள். கூச்சல்களுக்கிடையே இவரிடம் சொல்லிவிட்டு போக கூட அவகாசம் இல்லாமல் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிவிட்டார் முருகன்.
ஆனால் முருகன் இறங்கும்போது பஸ்சில் போக சொல்லி இருபது ரூபாயை அவரது கையில் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராஜேந்தர் இந்த அமர்க்களத்தில் கொஞ்சம் தாமதிக்க, அதற்குள் சில அடி து£ரம் போய்விட்டார் முருகன். வெளியே வாழ்க கூச்சல் கேட்டுக் கொண்டிருக்க, வேனின் ஜன்னல் இடுக்கு வழியாக ஒரு இருபது ரூபாய் தாளை நீட்டியபடி, "யேய்... முருகா. இந்தா பணம். பஸ்சிலே போ. நடந்து போகாதே" என்று ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் டி.ஆர். பிறகு அந்த கூட்டத்தில் முண்டியடித்து பணத்தை வாங்கிக் கொண்டார் முருகன்.
இப்போது சொந்த ஊரில் கவுன்சிலராக இருக்கிறார் நம்ம முருகன். சென்னைக்கு ஏதாவது வேலையாக வந்தால் கூட, "அண்ணனை ஒரு எட்டு பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்" என்று நமக்கும் ஒரு போன் அடிப்பார்.
03 ஏப்ரல் 2009
பாசம் வச்ச பச்சக்கிளிதான்....

ஜீமெயில் இப்போ 5 வயசு பாப்பா!
அந்த சமயத்தில் ஒவ்வொரு கிளிக்குக்கும், முழு பக்கத்தையும் லோட் செய்த ஈமெயில் சர்வீஸுகளுக்கு நடுவில், முன்னோடியாக AJAX தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு பக்கத்தையும் லோட் செய்யாமல், தேவையான இடத்தை மட்டும் நொடியில் அப்டேட் செய்யும் சித்து விளையாட்டு செய்து, மக்களை வளைத்துப் போட்டது.
invite-டோட வந்தாதான் ஜீமெயில் ஐடி என்று கறாரா சொல்லி, உன்கிட்டே ஜீமெயில் invite இருக்கான்னு, invite இருக்கான்னு பார்க்கிரவன் ஒருத்தனைகூட விடாமல் நம்மளை கேட்க வைத்து, இலவச word of mouth ஜெனரேட் செய்த மார்கெடிங் ராஜதந்திரம்.
புதுசா கொண்டு வந்த வசதியின் பிரமிப்பு அடங்குவதற்கும், Gmail Labs-ல் இருந்து அடுக்கடுக்காக வசதிகள் அறிமுகம்.
Spam-ஆ! கிலோ எவ்வளவு என்று கேட்கக்கூடிய அளவிற்கு திறமையாக செயல்படும் ஸ்பாம் ஃபில்டர்.
இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.
ஒரே ஒரு குறை சொல்லலாம்னா, அது ஜீமெயில் இன்னும் beta-வில்தான் இருக்கு.
கூடிய சீக்கிரம் வயசுக்கு வந்துடும்னு நம்புவோம்.
02 ஏப்ரல் 2009
ஈ-மெயில் இணைப்பை (Attach File) இலகுவாக தரவேற்றுவது எப்படி..?
மெயில்களில் பைல்களை அட்டாச் செய்கையில் அனைத்து பிரவுசர்களும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் பிரவுஸ் செய்து பின் எக்ஸ்புளோரர் போல விண்டோவினைத் திறந்து பைல்களைக் காட்டி அதிலிருந்து அட்டாச் செய்திட வேண்டிய பைல்களை ஒவ்வொன்றாக இணைக்கச் செய்கின்றன.
வழக்கமாக இமெயில் ஒன்றுடன் பைலை அட்டாச் செய்திட "Attach a file"கிளிக் செய்து பின் அந்த பைல் உள்ள டைரக்டரியில் அத்தனை பைல்களையும் பார்த்து நீங்கள் இணைக்க வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்கிறீர்கள் இல்லையா? அதற்குப் பதிலாக இந்த ஆட் ஆன் தொகுப்பை இறக்கிப் பதிந்து கொண்டால் எத்தனை பைல்களை வேண்டுமானாலும் இறக்கி அட்டாச் விண்டோவில் இழுத்துப் போட்டுவிட்டு பின்னர் செய்தியைத் தயார் செய்து அனுப்பலாம்.
இந்த ஆட் ஆன் தொகுப்பை addons.mozilla.org என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.ஷில்பா ஷெட்டியின் 5 மில்லியன் பவுண்ட்ஸ் லண்டன் மாளிகை
லண்டனின் பிரபல வாரப் பத்திரிகை ஹலோ வுக்காக தனது 5 மில்லியன் பவுண்ட்ஸ் லண்டன் மாளிகையின் கதவுகளை திறந்து விட்டிருக்கிறார் ஷில்பா ஷெட்டி
தனது காதல் கணவர் ராஜ் குன்ராவுடன் சேர்ந்து வாழ போகும் வீட்டில் எடுத்த புகைபடங்க்களை இங்கே தருகின்றோம். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்ற ராஜ் குன்ரா ஒரு பெரும் கோடிஸ்வரர் ஆவார்
ஏழு படுக்கை அறைகளை கொண்ட இந்த மாளிகை வேர்ப்ரிட்ச் ஸரே என்ற இடத்தில் உள்ளது

01 ஏப்ரல் 2009
பத்மஸ்ரீ விழா-அமர்சிங்கை ஓரம் கட்டிய ஐஸ்வர்யா
நீங்கள் யார்...? முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?
கூகிள் மெயில் இனி தமிழ் மெயில்?
31 மார்ச் 2009
புது மண தம்பதியர்களுக்கு மட்டும்
- கல்யாணம் அனா முதல் இருபது நாட்கள் அல்லது முதல் மாசத்துக்குள் தேன் நிலவு செல்லுங்கள். ( வேலை வேலை என்று தள்ளி போட வேண்டாம் அது ஒரு கல்லூரி பருவ நினைவுகளை போல நல்ல நினைவுகளை தரும் உங்கள் அன்பை மேலும் பலப்படும் நல்லா புரிதல் கொடுக்கும் )
 - சில பேரு கும்பல பிசினிக் போல கிளம்புவாங்க .. அப்படி ஏதும் காமெடி பண்ணாதிங்க ..
 - உங்க நண்பர்களை ஒரு தேன் நிலவு டூர் பாக்கேஜ கிபிட்ட கொடுக்க சொல்லுங்க ( எங்க பிரிஎண்ட்ஸ் எல்லாரும் அப்படி தான் கொடுத்தோம் )
 - இருவரும் ஒரு குழந்தையை போல் இருங்க ..
 - அப்போ அப்போ சண்டை வரணும் வந்த தான் அழகு (அதுக்கு வேணும்னே நம்ம WWF wrestler மாதிரி சண்டை போட்டு காமெடி பண்ணாதிங்க )ஆனா சண்டை வந்த உடனே சமாதனம் அயுடனும் ... சும்மா ஈகோ வச்சிக்கிட்டு நீ பெருசா நான் பெருசா நான் யாரு தெரியுமுல ( நீ யார இருந்தா தான் என்ன ? அம்பானியா இருந்தாலும் மகனே நீ காமப்றோமிஸ் அகனும் இல்லை என்றால் ஆப்பு தான்) ஈகோவோட இருந்து வாழ்க்கைய காலி பண்ணிடாதிங்க
 - இது உங்க குடும்பம் உங்க மனைவி ... சோ உங்க அன்பை எப்படி வேணும் நாளும் நாலு செவுதுக்குள்ள அதுவும் உங்க வீட்டு குள்ள காட்டுங்க ..
 - தினம் ஒரு ஐ லவ் யு சொல்லுங்க.... (ஆனா ஒரே பொண்ணுக்கிட்ட சொல்லுங்க அதாங்க உங்க மனைவிக்கிட்ட மட்டும் சொல்லுங்க)
 - தினம் ஒரு முத்தம் மினிமம் ( அதுக்கு மேல அவன் அவன் சாமர்த்தியம் )
 - உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷியத்தை கூட நகைச்சுவையை சொல்லணும்.எடுத்துக்காட்டு சொல்லியே அகனும் நிறைய தட்திகளுக்கு புரியாது ஹி ஹி ... அன்றைக்கு உங்க மனைவி சாம்பார் வச்சி ரொம்ப மோசமா இருக்கும். சாப்பிடும் பொது சூப்பர் என்று சொல்லி முழசா சாப்டுறது பயங்கர முட்டாள் தனம் ஹி ஹி. சாப்பிடும் பொது உனக்கு ஒரு வாய் ஊட்டி விடனும் இங்க வா என்று சொல்லி உட்டி பாருங்க எவ்வளவு சூப்பர் சாம்பார் என்று அவர்களே தெரியும் ... அப்படியும் தெரியனால் உங்க விதி அவ்வளவு தான்
 - அடிக்கடி ஒரு குழந்தையை போல் கொஞ்சுங்க ...
 - கல்யாணத்துக்கு முன்னாடி நிறய பேசுவோம் அப்புறம் கண்டுக்க மாட்டோம் என்று ஒரு புகார் வரும் முன்னாடியே .. உனக்கு நம்ம எதிர்காலத்துக்கு நிறைய உழைக்கிறேன் என்று பிட் போடுங்க ...
 - முன்னாடி மட்டும் போன்ல பேச டைம் கெடச்சுது எப்போ அதே ஆபீஸ் அதே வேலை ஆனா டைம் கெடைக்காது என்று சொல்வது எப்படி நினையம் என்று கேள்வி வரும் ... அதுக்கு முன்னாடி நீ எங்கோ இருந்தாய் உன்னிடம் பேசாமல் இருக்கா முடியாது ... ஆனா எப்போ நீ என்னுள் இருக்காய் .. என்னோடு இருக்காய் ... வேணும் நான் எனோட கண்ணா உத்து பாரு என்று கண்ணா கட்டுங்க .. நீங்க சொல்றது பொய் என்று அவர்களுக்கே தெரிஞ்சாலும் அதை ரசிப்பார்கள்
 - நிறையா அவங்க பேசுறத கேளுங்க ... அப்பரும் நீங்க பேசுங்க ...
 - ரொம்ப சுதந்திரம் கொடுங்க .. எத பத்தி வேண்டுமானாலும் அவங்க உங்க கிட்ட சொல்லும்படி வைத்துக் கொள்ளுங்கள்
 - சந்தேகம் வேண்டாம் ... நம்பிக்கை தான் மிக பெரிய சொத்து நீங்களே உங்க மனைவி புருசன நம்பாமல் யாரு தான் நம்புவாங்க
 - அந்த நம்பிக்கைக்கு உரியவர நடந்துக்கோங்க
 - நிறையா விட்டுகொடுங்க ..
 - உங்க அம்மா அப்பா உங்க பார்ட்நர் கவனிக்கணும் என்றால் உங்க மாமனார் மாமியார் அப்பா அம்மா மாதிரி பாத்துக்கோங்க ... அப்போ அப்போ ஒரு டிரஸ் எடுத்து கொடுப்பது ஒரு நலம் விசாரிப்பது என்று இருந்தால் .. சூப்பர்
 - எதையும் நகைச்சுவையை சொல்லுங்க ... சீரியஸ் மேட்டர் கூட எப்படி சொன்ன அடையும் ( அதுக்கு உங்க அப்பாக்கு நெஞ்சு வலியமே என்று காமெடியை சொல்லி அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல )
 - நீ தான் இந்த உலகத்திலயே அழகு :-) என்று சொலுங்க ( அது மிக பெரிய பொய் என்றாலும் ரசிப்பார்கள் )
 - மத்தவங்க முன்னாடி உங்க மனைவியை வீட்டு கொடுக்கதிங்க ..
 - அப்போ அப்போ ஹெல்ப் பன்னுங்க
 - அப்போ அப்போ ஒரு அச்சிரயம் கொடுங்க ... ( கிபிட் பிலோவேர்ஸ் ...)
 - முக்கியமான தினங்களை மறந்து காமெடி பண்ணிடாதிங்க ..
 - கல்யாணத்துக்கு முன்னாடி உங்க மனவியோ புருஷன எப்படி இருந்து இருந்தாலும் பரவா இல்லை எத்துனை பாய் பிரிஎண்ட்ஸ் கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்து இருந்தாலும் ஓகே ஆனா அதுக்கு அப்புறம் ஏமாத்தக்கூடாது உனக்கு நான் .. எனக்கு நீ என்று தெளிவா இருங்க ( எப்படி இருந்தா பயம் இல்லை யாரும் ஒன்னு பண்ண முடியாது டிரன்ப்பறேன்சி வேணும் )..
 
எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா பேட்டி
இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா 34 அனாதை குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரிஷிகேஷிப் உள்ள மிராக்கிள் அனாதை ஆசிரமத்தில் இருந்து இக்குழந்தைகளை அவர் தத்து எடுத்துள்ளார். இது பற்றி பிரீத்தி ஜிந்தா, ’’நான் தத்தெடுத்துள்ள 34 குழந்தைகளும் அனாதைகள் அல்ல. என் குழந்தைகள். அவர்களை என் சொந்தங்களாக்கி கொண்டதில் சந்தோஷமடைகிறேன்.
அவர்களுக்காக நான் இருக்கிறேன்  என்ற மகிழ்ச்சியையும் ஒவ்வொருவர் முகத்திலும் பார்த்தேன்.
தினமும்  அவர்களோடு டெலிபோனில் பேசி நலம் விசாரிக்கிறேன். ஆண்டுக்கு இரண்டு தடவை நேரில் போய்  பார்த்து பேசுகிறேன்.
அந்த ஆசிரமத்துக்கு சென்றபோது சில அதிர்ச்சி தகவல்களை கேள்விப்பட்டேன். பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது, அரசு தொட்டிலில் போடுவது போன்ற தகவல்களை என்னிடம் சொன்னார்கள். பெண் சிசுக்களை கருவில் அழிப்பது கொடூரம். அரசு தொட்டிலில் பெண் குழந்தைகளை போடுவதும் கொடூரமானது. இது போன்ற சமூக அவலங்கள் மாறவேண்டும். நான் தத்தெடுத்த 34 குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கான செலவுகள் முழுவதையும் ஏற்பேன்’’ என்று தெரிவித்தார்.
தமிழ் வலை தளங்களில் கூகுளின் பொது விளம்பரங்களை நிறுத்துவது எப்படி
பதிவுலகத்தில் உள்ளவர்களுக்கு கூகிள் ஆட்சென்ஸ் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும்.பலரும் தங்கள் வலைத்தளங்களில் ஆட்சென்ஸை இணைத்துள்ளனர். ஆனால் தமிழ் வலைத்தளங்களில் உள்ள பெரும் பிரச்சனை என்னவென்றால் 99% தமிழ்தளங்களில் பொது விளம்பரங்களே தோன்றுகிறது. இதன் மூலம் நமக்கு ஒரு ரூபாய் கூட உபயோகமில்லை இதனைத்தவிர்ப்பது எப்படி?google psa adds in tamil blogs
1- முதலில் நீங்கள் அட்சென்சை எவ்வாறு இன்னைத்துள்ளீர்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.how to remove psa adds in tamil websites
2- நீங்கள் அட்சென்சை நேரடியாக உங்கள் bloger மூலம் ( blogspot->layout->add widget->adsense) பதிந்திருந்தீர்கள் என்றால் அது தவறான முறை அதனை நீக்கி விடவும்.Google adsensehas become a very popular tool for making money from your site by showing advertisements. But sometimes you see psa adds
 
3- இப்போது adsense தளத்திற்கு நேரடியாக நுளையுங்கள் .(நீங்கள் இதுவரை அட்சென்சில் சேரவில்லை என்றால் உங்கள் வலைத்தளத்தின் username மற்றும் password உடன் இணைந்துகொள்ளுங்கள்.)
4- இங்கு சென்று adsense setup இற்கு சென்று adsense for content என்ற மெனுவை சொடுக்குங்கள். உங்களுக்கு தேவையான விளம்பரத்தின் அளவு மற்றும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். channel என்ற பகுதியில் உங்கள் வலைத்தளத்தின் முகவரியை இடுங்கள். Although most of the times the ads show immediately, at times it takes upto 48-72 hours for google to assess the content of newly created webpage
5- ஏறக்குறைய முடிந்துவிட்டது இப்போது இருக்கும் பகுதியில் (படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்) அதில் Show public service ads எனும் option ஐ நீக்கி Show non-Google ads from another URL எனும் option ஐ தேர்வு செய்து அங்கே உங்கள் மற்ற வலைத்தளத்தின் முகவரியை இட்டு விடுங்கள். இல்லையெனில் ஏதாவது ஒரு படத்தை html code ஆக இணைத்து விடுங்கள். அவ்வளவு தான் இப்போது continue option ஐ தேர்வு செய்து அது தரும் ஆட்சென்ஸ் code ஐ உங்கள் வலைத்தளத்தில் இணைத்துவிடுங்கள் ஆரம்பத்தில் நீங்கள் இணைத்த படங்களே விளம்பரமாகத் தோன்றும். அனால் சில நாட்களிலேயே (உங்கள் ஹிட்சை பொறுத்து ) உங்கள் தளத்தில் google adsense விளம்பரம் தோன்ற ஆரம்பித்துவிடும். அட்சென்ஸ் தெரியாத ரகசியங்கள் எனும் நூலை எழிதி வருகிறேன் tamil.com தளம் இயங்க ஆரம்பித்தவுடன் இந்நூலை வெளியிடுகிறேன். இது பற்றி மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேட்கவும்.