கிரிக்கெட் பைத்தியமாகி (டோணி பைத்தியம் இல்லையாம்) விட்ட லஷ்மி ராய்,
ஐபிஎல் 2வது சீசன் போட்டிகளைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவுக்குப் போகப் போறாராம்.
சென்னையில் நடந்த ஐபிஎல்
கிரிக்கெட் போட்டிகளின்போது டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வமற்ற சியர் லீடராக கலக்கினார் லஷ்மி ராய்.
அவருக்கும், டோணிக்கும் இடையே டீல் ஏற்பட்டு விட்டதாக கூட செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்
ஐபிஎல் 2வது சீசன் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றி விட்டதால் சோகமாகியுள்ளார் லஷ்மி ராய். இருந்தாலும் சில போட்டிகளைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவுக்குப் போகப் போகிறாராம் லஷ்மி.
நான் அவனில்லை படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவிருக்கும் லஷ்மி ராய், அதற்கான போட்டோ ஷூட்டுக்காக சென்னை வந்திருந்தார்.
அப்போது அவரிடம், டோணியிடமிருந்து ஏதாவது சிறப்பு அழைப்பு வந்ததா மேடம் என்று கேட்டபோது, அய்யா, அப்படியெல்லாம் பேசாதீங்கள். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். வேறு எதுவும் இல்லை. இருவருமே எல்லையைத் தாண்டியதில்லை.
இந்த மீடியாக்கள் ரொம்ப மோசம். அவர்கள்தான் என்னையும், டோணியையும் இணைத்து வைத்துப் பேசி வருகின்றனர். அதை பலமுறை நான் தெளிவாக்கி விட்டேன். எனக்கு விளையாட்டு மீது ஆரவம் உண்டு. அதிலும்
ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு
கிரிக்கெட் பைத்தியமாகி விட்டேன்.
ஐபிஎல் வரும் வரை நான் எந்த ஸ்டேடியத்திற்கும் போய் போட்டிகளைப் பார்த்ததே இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளைப் பார்க்க வர வேண்டும் என போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால்தான் வந்தேன். ஆனால் அதை தேவையில்லாமல் மீடியாக்கள் பெரிதாக்கி விட்டன என்று அலுத்துக் கொண்டார் லஷ்மி ராய்.
சரி உங்களது ஜோடியை முடிவு செய்து விட்டீர்களா என்று கேட்டபோது, நான் விதியை நம்புபவள். எனது லைப் பார்ட்னர் யார் என்பது எனக்குத் தெரியாது என்றார் விச்ராந்தியாக.
தற்போது தமிழில் நான்கு படங்கள் இருக்கிறதாம் லஷ்மி ராய்க்கு. அதில் சிம்புதேவனின் எரும்புக் கோட்டையில் முரட்டு சிங்கம் படமும் ஒன்று. இதில் கெளபாய் டைப் வேடத்தில் வருகிறாராம். இரண்டு மலையாளப் படங்களும் இருக்கிறதாம்.