Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

29 மார்ச் 2009

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் காதலில் சார்மி?

Charmi
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன், சார்மி தீவிர காதலில் விழுந்துள்ளதாக டோலிவுட்டில் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். நடிகைகள் குறித்த கிசுகிசுக்கள் சகஜமானது. இதில் பல புருடாக்களாக இருக்கும், சில உண்மையாக இருக்கும். சில வதந்திகளுக்கு முடிவே இருக்காமல் நீண்டு கொண்டே இருக்கும். உண்மை என்ன என்றே தெரியாது. இந்த வகையில், சார்மி குறித்து புது வதந்தி ஒன்று உலா வர ஆரம்பித்துள்ளது. அவருக்கும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்கும் இடையே காதல் என்பதுதான் அந்த வதந்தி. இருவருக்கும் காதல் தீ பற்றி, முற்றி, கொழுந்து விட்டு எரிகிறதாம். ஈருடல், ஓருயிராகி விட்டனராம். விரைவில் கல்யாணத்தில் போய் இது முடியும் என்று அந்த வதந்தி கூறுகிறது. இது உண்மையா அல்லது உண்மையிலேயே வதந்தியா என்பதை சம்பந்தப்பட்ட இருவரும்தான் உறுதிப்படுத்த முடியும். ஆனால் இருவருமே இதுகுறித்து எதுவும் பேசாமல் மெளனம் சாதிக்கின்றனர். கொஞ்ச காலத்திற்கு முன்பு நடிகை மம்தா மோகன்தாஸையும், தேவி ஸ்ரீபிரசாத்தையும் இணைந்து செய்திகள் கசிந்தன. காரணம், தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் மம்தா பாடியதுதான். வில்லு படத்தில் கூட மம்தா ஒரு பாடலுக்கு பாடியிருந்தார். இந்த நிலையில் சார்மியுடன், தேவி ஸ்ரீபிரசாத்தை இணைத்து புது செய்தி கிளம்பியுள்ளதால், எது உண்மை என்று தெரியவில்லை.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com