Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

07 மார்ச் 2009

ஓய்வு பெறுகிறார் இசைப் புயல் மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்ஸன்... எப்போது கேட்டாலும் நரம்புகளை முறுக்கேற்றும் அற்புத இசைக்குச் சொந்தக்காரர், பாப் இசையின் மன்னன். இசைப்புயல் என்ற பட்டம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... ஜாக்சனுக்கு முழுமையாகப் பொருந்தும். இன்றுவரை வேறு யாரும் அருகில்கூட வர முடியாத அதிரடி சாதனைகளைச் செய்தவை இவரது இசைத் தட்டுகளும் ஒலிப்பேழைகளும். கால தேச வர்த்தமானங்களையெல்லாம் கடந்து கண்ணீர் வழிய இவரது 'ஹீல் த வேர்ல்ட்...' பாடலை இன்றும் கோடிக்கணக்கான இசை விரும்பிகளும் மனிதாபிமானிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், இசையுலகின் உச்சத்தைத் தொட்ட இந்த மகா கலைஞனின் வாழ்க்கை பல புயல்களில் சிக்கியதில் இசை வாழ்க்கை பாதித்தது. அவரிடமிருந்து நல்ல இசை வருவது அடியோடு நின்றே போனது. இப்போது மிக மீண்ட இடைவெளிக்கு்ப் பிறகு லண்டனில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த முறை அவர் நடத்தப் போவது சாதாரண இசை நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு இசை ரசிகனும் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு அமையும் சிறப்பு இசை நிகழ்ச்சி அது. தொடர்ந்து 10 லைவ் இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார் லண்டனில் மட்டும். நேரடி ஒளிபரப்பாக ஜாக்ஸனின் இசை நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஒரு இசை நிகழ்ச்சியில் இந்த மகா கலைஞனைப் பார்ப்போமா என்பதே சந்தேகம்தான். 'உண்மைதான் நண்பர்களே, இந்த நிகழ்ச்சியோடு என் இசைப் பயணத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். வருகிற மே மாதம் எனது கடைசி இசைப் பயணத்தைத் துவங்குகிறேன். அப்போது நேரில் சந்திக்கிறேன், அனைவரையும்' என்று நேற்று அறிவித்துள்ளார் மைக்கேல் ஜாக்ஸன்.

சச்சின், கங்குலியை கடத்த திட்டமிட்டவர்களுக்கு பொடா விசாரணை

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மற்றும் கங்குலியை கடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் மீது பொடா மற்றும் வெடிகுண்டுகள் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவுள்ளது. கடந்த 2002ல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சச்சினையும், அப்போதைய கேப்டன் கங்குலியையும் கடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி போலீசார் 6 ஹிஜிபுல் முகாஜிதீன் தீவிரவாதிகளை கைது செய்தனர். த‌ற்போது திஹார் ‌சிறை‌யி‌ல் அடைக்கப்ப‌ட்டு‌ள்ள அவர்களிடம் டெல்லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் விசாரணை நடந்து வருகிறது. அதில் அர்ஷத்கான் என்ற தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தில், சிறையில் இருக்கும் ஹிஜிபுல் முகாஜிதீன் இயக்கத்தின் முக்கிய தலைவரான நஸ்ருல்லா லாங்ரியால் மற்றும் சில மூத்த உறுப்பினர்களை காப்பாற்ற நினைத்தோம். சச்சின், கங்குலி ஆகியோர்களை கடத்தி பணயக் கைதிகளாக வைத்து கொண்டு, அவர்களை விடுவிக்க திட்டமிட்டோம். மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தையும் தகர்க்க திட்டமிட்டோம் என்றார். இதையடுத்து அவர்கள் மீதான வழக்கு பொடா சட்டம் மற்றும் வெடிபொருள் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 13‌ம் தேதி நடக்கிறது.

06 மார்ச் 2009

கூகுள்: 4 நிர்வாகிகளுக்கு தலா 1.2 மில்லியன் டாலர் போனஸ்!

ஒருபக்கம் பொருளாதார மந்தம், வேலையின்மை எனப் புலம்பல் பெரிதாகிக்கொண்டே போனாலும், இந்த நிலையிலும் பெரும் லாபம் ஈட்டி வரும் கூகுள் நிறுவனம் தனது 4 உயர் நிர்வாகிகளுக்கு போனஸை அள்ளிக் கொடுத்துள்ளது.கூகுள் நிறுவனத்தின் 4 உயர் நிர்வாகிகளுக்கு 2008ம் ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள போனஸ் எவ்வளவு தெரியுமா? தலைக்கு 1.2 மில்லியன் டாலர்கள் மற்றும் அதற்கும் மேல். இந்த மோசமான கால கட்டத்திலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியமைக்காக இவ்வளவு பெரிய தொகையை கூகுள் அள்ளி வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் குறைவே.2007ம் ஆண்டு கூகுளின் லாபம் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 37 சதவிகிதம் அதிகமாக இருந்தது. 2008ல் லாபம் குறைந்த போதிலும் நஷ்டம் ஏற்படாதவாறு காத்துக் கொள்ள இந்த நிர்வாகிகள் உதவி மிகப் பெரிய அளவில் இருந்ததாம்.இந்த நால்வரில் ஜோனதன் ரோஸன்பெர்க்குக்கு (கூகுள் தயாரிப்புகளை வெளிநாடுகளில் மார்க்கெட்டிங் செய்பவர்) 1.64 மில்லியன் டாலரும், விற்பனை அதிகாரி ஓமிட் கோர்டஸ்டணி மற்றும் பொறியாளர் ஆலன் யூஸ்டாஸுக்கு தலா 1.38 மில்லியன் டாலர்களும் போனஸாகக் கிடைத்துள்ளது.கூகுள் சிஎப்ஓ ஜார்ஜ் ரெயெஸ் 6,75,000 டாலர்கள் போனஸாகப் பெறுகிறார். கூகுளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு 6 மில்லியன் டாலர் போனஸ் தர நிர்வாக விதிகள் இடமளிக்கின்றன. மேலும் 2010 வரை பொருளாதார சரிவு நிலையில் பெரிய முன்னேற்றம் இருக்காது என்றும் அதுவரை தாக்குப் பிடிக்க செலவுக் குறைப்புகளில் கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் கூகுள் தலைமை நிர்வாகி எரிக் ஷ்சும்மிட் தெரிவித்துள்ளார்.கூகுள் ஆன்லைன் விளம்பர வருமானம் குறைந்தாலும், இப்போதைக்கு சமாளிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கூகுள் நிறுவனப் பங்குகள் மதிப்பு 3.3 சதவிகிதம் குறைந்து 10 டாலர்கள் என்ற விலையில் செவ்வாய்க்கிழமை கைமாறின.

கிளாமரில் தாராளமயமாக்கல்:நயன்தாரா பேட்டி

நயன்தாரா தமிழ், தெலுங்கில் 22 படங்களை தாண்டி விட்டார். ஐதராபாத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். கிசுகிசுக்களில் அதிகம் சிக்குகிறீர்களே? நான் அதுபற்றி கவலைப்படுவதே இல்லை. ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் என் மனதை காயப்படுத்தின. இப்போது பக்குவப்பட்டு விட்டேன். வேலையற்றவர்கள் தான் கிசு கிசுக்களை பரப்பி வீண் வேலையில் ஈடுபடுகிறார்கள், எனக்கு நிறைய வேலை இருக்கிறது. எனவே அதை பொருட்டாக நினைப்பதில்லை. நான் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருகிறேன். அதுவும் இது போன்ற கிசுகிசுக்களுக்கு காரணமாக இருக்கலாம். நீங்க அதிர்ஷ்டக்காரியா? அதிர்ஷ்டக்காரிதான். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் சந்திரமுகியில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் தமிழ் படங்களில் பிசியாக நடிக்கிறேன். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடிக்கிறேன். கிளாமரில் ஏன் இத்தனை தாராளமயமாக்கல்? இது கிளாமர் உலகம். சினிமா தொழில் என்பதும் கிளாமர்தான். நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இயக்குனர்கள் முடிவு செய்கிறார்கள். கேரக்டருக்கு ஏற்ற மாதிரி நடிக்கிறேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற கட்டுப்பாடு என்னிடம் இல்லை. தயாரிப்பாளர், இயக்குனர், என் கேரக்டர் போன்றவற்றை பார்த்து படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்கிறேன்.
கதைகளில் ஹீரோக்களுக்குத்தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? உண்மைதான். கதாநாயகர்களுக்குதான் முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. அதுமாதிரி கதைகளைத்தான் படமாக்குகிறார்கள். பாடுவது ஆடுவது மட்டுமே இருக்கும் கேரக்டர்களை நான் ஏற்பது இல்லை. எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பும் முக்கியத்துவமும் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடனும் மலையாளத்தில் பாடிகாட் படத்திலும் நடிக்கிறேன். ஏற்கனவே நான் நடித்த டொவன்டி டொவன்டி மலையாள படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக அப்படத்தை எடுத்தனர். அந்த படம் வெற்றி பெற்றது சந்தோஷம். என்ன சாதித்துவிட்டீர்கள்? அப்படி வருத்தம் எனக்கு இருக்கு. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் இயக்குனர்களுக்கு தொந்தரவு கொடுக்காத நடிகை என்ற பெயர் வாங்கி இருக்கிறேன். அது நல்ல விஷயம்.

05 மார்ச் 2009

'கிரிக்கெட் அழிந்தால் பாக்.கில் பயங்கரவாதம் அதிகரிக்கும்'

பாகிஸ்தானில் கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டும் இல்லையென்றால் எதிர்கால சந்ததியினர் பயங்கரவாத சக்திகளின் பிடியில் சிக்கி விடுவார்கள் என்று பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ் கான் கிரிக்கெட் நிர்வாகிகளை எச்சரிக்கை செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தபட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்ற அச்சம் வெளியிட்டுள்ள யூனிஸ் கான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். விளையாட்டு என்பது நல்ல மனிதர்களை உருவாக்கவல்லது, விளையாட்டு என்ற ஒன்று இல்லையெனில் வருங்கால சந்ததியினர் தவறான பாதைகளுக்கு சென்று விடுவார்கள், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அனைத்து விதத்திலும் தனிமைப்பட்டு விடும் என்று அவர் மேலும் கூறினார். சிறு வயதில் தான் இம்ரான் கான், வாசிம் அக்ரம், ஜாவேத் மியாண்டட் ஆகியோர் அயல் நாட்டு அணிக்கு எதிராக விளையாடியதைப்பார்த்துத்தான் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறிய யூனிஸ் கான், தற்போது எந்த அணியும் பாகிஸ்தான் வர முடியாத நிலை தோன்றிவிட்டால், தற்போதைய இளைய சமுதாயம் என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் யூனிஸ்கான். எனவே கிரிக்கெட்டை கொல்ல வேண்டாம் என்று கிரிக்கெட் ஆட்ட நிர்வாகத்தின் அனைத்துத் தலைமைகளிடத்தும் தான் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார். இப்போதைய நிலையில் ஐ.சி.சி.யும் அதன் உறுப்பு நாடுகளும் பாகிஸ்தானில் கிரிக்கெட் கிடையாது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் இந்த முடிவால் பாகிஸ்தானில் பாதிக்கப்படும் எதிர்கால சந்ததியினர் பற்றி இவர்கள் யோசிக்கக் கடமைப்பட்டவர்களாவர்.பாகிஸ்தானிலிருந்து கிரிக்கெட்டை அகற்றி விட்டால் இந்த நாட்டின் எதிர் காலம் இருண்டு போகும் என்று கூறியுள்ளார் யூனிஸ் கான். தாக்குதலுக்கு பிறகு இலங்கை அணியினரை சந்தித்து தான் ஆறுதல் கூறியதாகவும் அவர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் என்றும் கூறிய யூனிஸ் கான், விளையாட்டு என்பதுதான் நாடுகளை நெருக்கமாக இணைக்கும் பாலமாகும்.சில முட்டாள்கள் குண்டுகளையும், துப்பாக்கிகளையும் பயன்படுத்துவதால் அவர்களை மனிதர்கள் என்று அழைக்கலாகாது.இவர்கள் செய்யும் செயல்களால் அயல் நாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்கு வர மறுக்கிறார்கள்.இதனால் பாகிஸ்தான் தனிமைப்பட்டு விடும் என்பது உறுதி என்று கூறினார் யூனிஸ்கான். ஆஸ்திரேலிய அணியுடன் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது தனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றாலும் இப்போதைக்கு இதனை ஏற்றுக்கொள்வதுதான் ஒரே வழி என்று அவர் மேலும் கூறினார்.

சுப்ரமணியபுரம் படத்துக்கு விருது:மம்முட்டி,மோகன்லால் பாராட்டு

கடந்த ஆண்டு வெளியான படங்களில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த படம் சுப்ரமணியபுரம்.

இப்படத்தின் திரைக்கதை மலையாளத்தில் நூல் வடிவமாகி இரண்டு பதிப்புகள் கண்டிருப்பது கூடுதல் சிறப்பு.

கேரளாவில் மாத்ருபூமி பத்திரிக்கை சுப்ரமணியபுரம் படத்தை கடந்த ஆண்டில் வெளியான படங்களில் இந்திய அளவில் வழக்கமான தடத்தை உடைத்து புதுத்தடம் பதித்த படம் என்று தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

திருவனந்தபுரத்தில் கேரள திரையுலகமே திரணடிருந்த ஒரு விழாவில் இவ்விருது சுப்ரமணியபுரம் இயக்குநரும் தயாரிப்பாளருமான எம்.சசிகுமாருக்கு வழங்கப்பட்டது.

மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சசிகுமாரையும், மலையாளத்தில் 100 நாட்களை தாண்டி ஓடிய சுப்ரமணீயபுரம் படத்தையும் பாராட்டி பேசினர்.

04 மார்ச் 2009

இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று நாடு திரும்பினர்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களைக் குடும்பத்தினர் விமான நிலையம் சென்று அழைத்துவந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பாகிஸ்தான் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய சம்பவத்தின் போது காயமடைந்த திலான் சமரவீர சத்திரசிகிச்சைகளுக்காக நவலோக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருந்த போதிலும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இசையுடன் டைப் அடிக்க.....!

நாம் டைப் செய்யும் வார்த்தைகள் இசையுடனும் கேட்க அருமையான சாப்ட்வேர் இது. 4 எம்.பி . கொள்ளலவு கொண்ட இது ஒரு சின்ன சாப்ட்வேர் ஆகும். இந்த சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தவுடன் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு எழுத்துக்கும் பின்னணி ஒலிக்கும். அதுபோல் மவுஸ் நகர்த்தும்போதும் ஒலி கேட்கும்.
முகவரி தளம்: - http://funnytyping.com

03 மார்ச் 2009

இலங்கை கிரிக்கெட் வீரர்களை குறி வைத்து தாக்குதல். (பட இணைப்பு)

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிலாகூரில் நடந்து வந்தது.முதலில் ஆடிய இலங்கை அணி 606-ரன் குவித்தது.சமர வீராரன் குவித்து சாதனை படைத்தார்.அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி நேற்று ஆட்ட நேரமுடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 110-ரன் குவித்திருந்தது. இன்று(செவ்வாய்க்கிழமை)காலை 10-மணிக்கு இரு அணிகளுக்கும் இடையே 3-வது நாள்ஆட்டம் நடக்க இருந்தது. அவர்களுடன் இலங்கை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் போனில் தொடர்பு கொண்டு தாக்குதல்பற்றி முழுவிவரத்தையும் கேட்டு அறிந்தனர்.தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அடையாளம்தெரிந்து விட்டதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான்அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்போவதாக நேற்றுபோலீசாருக்கு ஒரு மிரட்டல் வந்தது.இதையடுத்து இலங்கை வீரர்களுக்கு கூடுதல் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

lankasri.com

லிபர்ட்டி சவுக் பகுதியை கடந்து பஸ் வந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீரெனதுப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.பஸ்சின் நாலா புறத்தில் இருந்தும் மர்மமனிதர்கள் சில நிமிடங்களுக்கு இடை விடாமல் சுட்டனர்.

lankasri.com

கையெறி குண்டுகளும் வீசப்பட்டன.கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த தாக்குதல்நடந்தது.தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலால் பாதுகாப்புக்கு வந்த போலீசார் நிலை குலைந்துபோனார்கள்.சுதாரித்துக் கொண்டு பதிலடி தாக்குதலை தொடங்குவதற்குள்,அவர்கள் மீதும்தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.இதில் 5-போலீஸ் காரர்கள் குண்டு பாய்ந்து சம்பவஇடத்திலேயே பிணமானார்கள்.10-போலீசார் படுகாயம் அடைந்து சரிந்தனர்.

lankasri.com

எதிர் தாக்குதல் இல்லாததைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை குறி வைத்து தீவிரவாதிகள்சரமாரியாக சுட்டனர்.அதிர்ச்சியில் உறைந்து போன இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பஸ்சுக்குள்இருக்கைகளுக்கிடையே படுத்து பதுங்கினார்கள் என்றாலும் பஸ்சை துளைத்துக் கொண்டுவந்த குண்டுகள் வீரர்கள் மீது பாய்ந்தது.

lankasri.com

இலங்கை அணி வீரர்கள் தாங்கள் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் இருந்து கடாபிஸ்டேடியத்துக்கு ஒரு பஸ்சில் புறப்பட்டனர்.அந்த பஸ் 9.30-மணியளவில் ஸ்டேடியத்தில்இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த லிபர்ட்டி சவுக்பகுதியில் வந்து கொண்டிருந்தது.இலங்கை வீரர்களின் பாதுகாப்புக்காக அந்த பஸ்முன்பும்,பின்பும் ஆயுதம் ஏந்திய போலீசார் வந்தனர்.

lankasri.com

சமரவீராவுக்கு காலில் ஆழமாக குண்டுகள் பாய்ந்தது.சங்கக ராவுக்கு தோள் பட்டையில்குண்டு பாய்ந்தது.இந்த சம்பவத்தால் கடாபி ஸ்டேடியம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அந்தபகுதிக்கு ராணுவம் விரைந்தது. இலங்கை வீரர்களை மொத்தமாக தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் வந்தபஸ்சை சூழ்ந்து கொண்டு தீவிரவாதிகள் 12-பேர் இந்த தாக்குதலை நடத்தினார்கள்.அவர்கள்கடாபி ஸ்டே டியத்துக்குள் நுழைய முயன்றனர்.அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

lankasri.com

இலங்கை கிரிக்கெட் வீரர்களில் கேப்டன் ஜெய வர்த்தனே,சங்ககரா,சமர வீரா,தரங்கா,மெண்டீஸ்சமீந்தா வாஸ் ஆகிய 6-வீரர்கள் காயம் அடைந்தனர்.சமரவீரா,தரங்கா இருவருக்கும் உடலின்பல பகுதிகளில் குண்டுகள் பாய்ந்துள்ளது.இலங்கை கிரிக்கெட் அணி மானேஜர் பிரெண்டன்குரூப்-ம் காயம் அடைந்தார். இதையடுத்து 12-தீவிரவாதிகளும் தனித் தனியாகப்பிரிந்தனர்.ஆளுக்கு ஒரு திசையாக ஓடியஅவர்கள் தப்பி சென்று விட்டனர்.லாகூர் போலீசாரால் அவர்களை பின் தொடர்ந்து சென்றுபிடிக்க இயலவில்லை.

lankasri.com

lankasri.com

பாதுகாப்பு கருதி இலங்கை கிரிக்கெட் வீரர்களை வேறு ஒரு பஸ்சில் ஏற்றி,வேறு ஒரு பாதைவழியாக கடாபி ஸ்டேடியத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.என்றாலும்,தீவிரவாதிகள்திட்டமிட்டு இன்று தாக்குதலை நடத்தி விட்டனர்.

lankasri.com

தீவிரவாதிகள் தாக்குதலில் காயம் அடைந்த இலங்கை வீரர்கள் 6-பேரும் பஸ்சிலேயே கடாபிஸ்டேடியம் கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது.பிறகு அவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

lankasri.com

அங்கு அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.சமர வீராவுக்குமட்டும் காலில் சிறு ஆபரேஷன் நடந்தது.இலங்கை வீரர்கள் யார்-யாருக்கு எத்தகைய குண்டுகாயம் ஏற்பட்டுள்ளது என்ற முழு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.முத்தையாமுரளீதரன்,உள்பட 6-வீரர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

02 மார்ச் 2009

விஜயகுமார்-மஞ்சுளா மகள் நடிகை ஸ்ரீதேவி திருமணம்

நட்சத்திர ஜோடி விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள் ஸ்ரீதேவி. இவர் ரிக்சாமாமா, டேவிட் அங்கிள், தெய்வ குழந்தை படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், காதல் வைரஸ், பிரியமான தோழி, தித்திக்குதே , தேவதையை கண்டேன் படங்களில் காதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஸ்ரீதேவிக்கு திருமண நிச்சயக்கப்பட்டுள்ளது. மணமகன் பெயர் ராகுல், ஐதராபாத்தில் சொந்தமாக சாப்ட்வேர் கம்பெனி வைத்துள்ளார். ஸ்ரீதேவி-ராகுல் திருமணம் நிச்சயதார்த்தம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. முகூர்த்தம் ஜுன் 18-ந் தேதி நடைபெற உள்ளது.

யாரையும் திட்டாதீர்கள்:ஆஸ்கரை விட பெரிய மரியாதை இருக்கு இளையராஜாவுக்கு:ஏ.ஆர்.ரகுமான் பேச்சு

ஸ்லம் டாக் மில்லினர் என்ற ஆங்கில படத்திற்கு இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. இதையொட்டி சென்னையில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், டைரக்டர் கே.பாலசந்தர், இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், தேவி ஸ்ரீபிரசாத், சங்கர் கணேஷ், யுவன்சங்கர் ராஜா, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தராஜன், மனோ, பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி ஆகியோரும் பேசினார்கள். நிகழ்ச்சியின் போது இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானுக்கு தங்கசங்கிலி அணிவித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் மோதிரம் அணிவித்தார். சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரகுமானை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். விழா குழு சார்பில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன உலக உருண்டை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரகுமான் பேசினார். அப்போது, ’’எல்லா புகழும் இறைவனுக்கே. எங்கப்பா ஆசியால் தான் எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அது உண்மை தான். அவர் பட்ட கஷ்டத்திற்கு நான் அறுவடை செய்திருக்கிறேன். கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு முறை ஆஸ்கார் விருது வழங்கப்படும் போதும் சீனா, ஐப்பான், இத்தாலி ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கே விருதுகள் கிடைத்து வந்தது. அந்த விருதை இந்தியா வாங்க முடியாதா என்று பல முறை நினைத்து இருக்கிறேன். இங்கே இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், நவுசாத் போன்ற மேதைகள் எல்லாம் இருக்கிறார்கள். இளையராஜா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறீர்கள் என்பதை இங்கு நான் நேரில் பார்த்தேன். இது ஆஸ்காரை விட பெரிய மரியாதை. எனக்கு `டைம்' கிடைக்காத நேரத்தில் தான் ஸ்லாம்டாக் மில்லினர் படத்திற்கு இசையமைத்தேன். அந்த படத்திற்கு நான் இசையமைக்க எடுத்துக்கொண்ட காலம் 3 வாரங்கள்தான். அந்த இசையை நான் சமர்ப்பித்த போது அமெரிக்கர்கள் எல்லாம் என்னை பார்த்து புன்னகைத்தார்கள். ரோஜா படத்திற்கு இசையமைத்த போது அதன் பாடல்களை கேட்டு மற்றவர்கள் எல்லாம் எப்படி புன்னகைத்தார்களோ அதே போன்று புன்னகையை அந்த அமெரிக்கர்களின் முகத்தில் பார்த்தேன். ஆஸ்கார் விருதுகளை எனக்கு கிடைத்ததாக நான் நினைக்கவில்லை. இங்கிருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற மேதைகளுக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன். பாலமுரளி கிருஷ்ணா பேசும்போது, இசையின் ஆழத்தை உணர முடிந்தது. இசையமைப்பாளர்கள் அனைவரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதற்கு நன்றி. ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இணையதளம் மூலம் என்னை வாழ்த்துவதற்காக இன்னொருவரை தூற்ற வேண்டாம். என் ரசிகர்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம்... யாரையும் திட்டாதீர்கள்’’ என்று தெரிவித்தார்.

01 மார்ச் 2009

லேப்டாப் கம்ப்யூட்டர்கள் - சில யோசனைகள்

நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப்கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.
டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சூழ்நிலைக்கும் லேப்டாப் பயன்படும் சூழ்நிலைக்கும் பலத்த வித்தியாசம் உள்ளது. பயன்படுத்தப்படும் வகையிலும் வேறுபாடான நிலைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.
1. எந்த அளவிற்கு வெப்பம் வெளிவருகிறதோ அந்த அளவிற்கு லேப்டாப்பின் ஏதேனும் ஒரு பகுதி பிரச்னை கொடுக்கலாம். லேப்டாப்பை தொடர்ந்து மெத்தையில் வைத்தோ அல்லது தலையணையை சப்போர்ட்டாக வைத்தோ பயன்படுத்தி வந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியாவதற்குத் தரப்பட்டிருக்கும் துளைகளை மூடிவிடுகிறோம். இதனால் வெப்பம் வெளியேறும் வாய்ப்பின்றி உள்ளே இயங்கும் உறுப்புகளைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளது போல கேபின் உள்ளே பேன்களைச் சுழலவிட்டு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே வெளியே இருந்தவாறே இயங்கும் சிறிய பேன்கள் லேப் டாப் கம்ப்யூட்டருக் கென்றே கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைத்துப் பயன் படுத்தலாம். இவை பெரு ம்பாலும் யு.எஸ்.பி. யில் இணைத்து இயக்கலாம். லேப்டாப்பில் எங்கெல் லாம் வெப்பம் வெளிவரத் துளைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அதிக வேகமாக காற்று பீய்ச்சி அடிக்கும் சாதனம் மூலம் தூசியை வெளி யேற்ற வேண்டும்.
2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம்.இதன் இயக்கத்தில் ஏற்படும் வெப்பமும் வெளி யேற்றப்பட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அண்மைக் காலத்தில் சாலிட் ஸ்டேட் எனப்படும் ஹார் ட் டிஸ்க்குகள் வெளிவந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரைவ்களில் நகரும் உறுப்புகள் இல்லை. பிளாஷ் மெமரி பயன்படுகிறது. எனவே மிக மிகக் குறைந்த அளவிலே தான் வெப்பம் வெளிப்படுகிறது. மேலும் இவை அதிர்ச்சி, அதிக பட்ச சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. தற்போது இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். அப்போது இவற்றையே ஹார்ட் டிரைவாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
3. வேலை பார்த்தபின் அலுவலகத்திலிருந்து லேப் டாப்புடன் வருகிறீர்கள். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பொத்தென்று அதனை வைக்கிறீர்கள். அது சிறிது மேலே எழும்பி கீழே விழுகிறது. அதன் பின் அய்யோ அம்மா என்று கத்தி என்ன பிரயோஜனம். லேப்டாப் கம்ப்யூட்டரை எப்போதும் முட்டைகள் அடங்கிய பையைக் கொண்டு வருவது போல் கொண்டு வர வேண்டும். எனவே லேப்டாப் நிறுவனம் தந்துள்ள பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் கவனமாக மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு தரும் பை ஒன்றைப் பயன்படுத்தலாம்.பை இல்லாமல் லேப் டாப்பைத் தூக்கிக் கொண்டு வருகையில் அதன் மீது அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு சிலர் பையின் உள்ளே உள்ள சிறிய அறைகளில் பைல்கள், தாள்கள், பேனாக்கள், மொபைல் போன் சார்ஜர்கள் என இன்றைய காலத்தில் எப்போதும் தேவைப்படும் சில சாதனங்களை திணித்து எடுத்து வருவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4. எப்படி மரணமும் அரசு விதிக்கும் வரிகளும் உறுதியானவையோ அதே போல பேட்டரிகள் ஒரு காலத்தில் தன் பவரை இழந்துவிடும் என்பதுவும் உறுதியே. எனவே பயன்படுத்த பயன்படுத்த இவை ஒரு காலத்தில் மொத்தமாகத் தன் திறனை இழக்கும். பல்வேறு கணக்கீடுகளின்படி சராசரியாக ஒரு பேட்டரி அதிக பட்சம் 500 முறை சார்ஜ் செய்திடும் வரையே சரியாகச் செயல்படுகிறது. 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வரலாம். அதன்பின் வேறு பேட்டரிதான் போட வேண்டும். பேட்டரி பவரில் லேப் டாப்பினைப் பயன்படுத்துகையில் லோ பேட்டரி சிக்னல் வரை பயன்படுத்தி பின்னர் சார்ஜ் செய்திடவும். எப்போதும் பேட்டரியிலிருந்து இது போன்ற சிக்னல் வருகையில் சார்ஜ் செய்வதே நல்லது.
5. லேப் டாப்பினை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க வேண்டாம். இந்த நிலையிலும் பேட்டரி திறன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பதிலாக லேப்டாப்பினை ஷட் டவுண் செய்து பின் மீண்டும் இயக்கலாம்.

ஆந்திரா தர்காவில் ஏ.ஆர்.ரகுமான் வழிபாடு

ஸ்லம்டாக் மில்லியனார் படத்துக்காக இரட்டை ஆஸ்கார் விருது பெற்று திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நேற்று முன்தினம் சென்னையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று ஏ.ஆர்.ரகுமான், ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். தென் இந்தியாவின் அஜ்மீர் என்று அழைக்கப்படும் இந்த தர்காவுக்கு, ஏ.ஆர்.ரகுமான் அடிக்கடி வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமணம் முடிந்ததும் இந்த தர்காவுக்கு வந்து வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு

சினிமா பத்திரிக்கையான பிலிம்பேர் ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி வருகிறது. 2008ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹிருத்திக்ரோஷன், ஐஸ்வர்யாராய் நடித்த வரலாற்று சம்பந்தமான ஜோதா அக்பர்' படத்துக்கு 5 விருது கிடைத்து உள்ளது.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த பாடல், சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 5 விருதை அந்த படம் தட்டிச் சென்றது. சிறந்த நடிகருக்கான விருது ஹிருத்திக்ரோசனுக்கு (ஜோதா அக்பர்) கிடைத்தது. பிரியங்கா சோப்ராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது (பேஷன்) கிடைத்தது. சிறந்த டைரக்டராக அசு தோஸ் கவுரிகா(ஜோதா அக்பர்) தேர்வு பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த பின்னணி இசைக்கு விருது (ஜோதாஅக்பர்)கிடைத்தது. ஜோதா அக்பர், தோஸ்ட் னா, கஜினி, ஜானே துயா ஜானே நா, ராக் ஆன் ஆகிய படங்கள் சிறந்த படத்துக்காக போட்டியிட்டன. இதில் ஜோதா அக்பர் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ஹிருத்திக் ரோசன் மொக லாய மன்னன் அக்பர் வேடத்தில் நடித்திருந்தார். ஜோதா அக்பர் படத்தில் இடம் பெற்ற ஜாஸ்ன்ட் இ பகர பாடலுக்கு விருது கிடைத்தது. இந்த பாடலை எழுதிய ஜாவித் அக்தருக்கும் சிறந்த பாடலாசிரியர் விருது கிடைத்தது. சிறந்த புதுமுக நடிகைக்காக அசின் (கஜினி) தேர்வு பெற்றார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com