Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

07 மார்ச் 2009

ஓய்வு பெறுகிறார் இசைப் புயல் மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்ஸன்... எப்போது கேட்டாலும் நரம்புகளை முறுக்கேற்றும் அற்புத இசைக்குச் சொந்தக்காரர், பாப் இசையின் மன்னன். இசைப்புயல் என்ற பட்டம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... ஜாக்சனுக்கு முழுமையாகப் பொருந்தும். இன்றுவரை வேறு யாரும் அருகில்கூட வர முடியாத அதிரடி சாதனைகளைச் செய்தவை இவரது இசைத் தட்டுகளும் ஒலிப்பேழைகளும். கால தேச வர்த்தமானங்களையெல்லாம் கடந்து கண்ணீர் வழிய இவரது 'ஹீல் த வேர்ல்ட்...' பாடலை இன்றும் கோடிக்கணக்கான இசை விரும்பிகளும் மனிதாபிமானிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், இசையுலகின் உச்சத்தைத் தொட்ட இந்த மகா கலைஞனின் வாழ்க்கை பல புயல்களில் சிக்கியதில் இசை வாழ்க்கை பாதித்தது. அவரிடமிருந்து நல்ல இசை வருவது அடியோடு நின்றே போனது. இப்போது மிக மீண்ட இடைவெளிக்கு்ப் பிறகு லண்டனில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த முறை அவர் நடத்தப் போவது சாதாரண இசை நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு இசை ரசிகனும் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு அமையும் சிறப்பு இசை நிகழ்ச்சி அது. தொடர்ந்து 10 லைவ் இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார் லண்டனில் மட்டும். நேரடி ஒளிபரப்பாக ஜாக்ஸனின் இசை நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஒரு இசை நிகழ்ச்சியில் இந்த மகா கலைஞனைப் பார்ப்போமா என்பதே சந்தேகம்தான். 'உண்மைதான் நண்பர்களே, இந்த நிகழ்ச்சியோடு என் இசைப் பயணத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். வருகிற மே மாதம் எனது கடைசி இசைப் பயணத்தைத் துவங்குகிறேன். அப்போது நேரில் சந்திக்கிறேன், அனைவரையும்' என்று நேற்று அறிவித்துள்ளார் மைக்கேல் ஜாக்ஸன்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com