இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிலாகூரில் நடந்து வந்தது.முதலில் ஆடிய இலங்கை அணி 606-ரன் குவித்தது.சமர வீராரன் குவித்து சாதனை படைத்தார்.அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி நேற்று ஆட்ட நேரமுடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 110-ரன் குவித்திருந்தது.
இன்று(செவ்வாய்க்கிழமை)காலை 10-மணிக்கு இரு அணிகளுக்கும் இடையே 3-வது நாள்ஆட்டம் நடக்க இருந்தது.
அவர்களுடன் இலங்கை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் போனில் தொடர்பு கொண்டு தாக்குதல்பற்றி முழுவிவரத்தையும் கேட்டு அறிந்தனர்.தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அடையாளம்தெரிந்து விட்டதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான்அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்போவதாக நேற்றுபோலீசாருக்கு ஒரு மிரட்டல் வந்தது.இதையடுத்து இலங்கை வீரர்களுக்கு கூடுதல் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

லிபர்ட்டி சவுக் பகுதியை கடந்து பஸ் வந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீரெனதுப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.பஸ்சின் நாலா புறத்தில் இருந்தும் மர்மமனிதர்கள் சில நிமிடங்களுக்கு இடை விடாமல் சுட்டனர்.

கையெறி குண்டுகளும் வீசப்பட்டன.கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த தாக்குதல்நடந்தது.தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலால் பாதுகாப்புக்கு வந்த போலீசார் நிலை குலைந்துபோனார்கள்.சுதாரித்துக் கொண்டு பதிலடி தாக்குதலை தொடங்குவதற்குள்,அவர்கள் மீதும்தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.இதில் 5-போலீஸ் காரர்கள் குண்டு பாய்ந்து சம்பவஇடத்திலேயே பிணமானார்கள்.10-போலீசார் படுகாயம் அடைந்து சரிந்தனர்.

எதிர் தாக்குதல் இல்லாததைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை குறி வைத்து தீவிரவாதிகள்சரமாரியாக சுட்டனர்.அதிர்ச்சியில் உறைந்து போன இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பஸ்சுக்குள்இருக்கைகளுக்கிடையே படுத்து பதுங்கினார்கள் என்றாலும் பஸ்சை துளைத்துக் கொண்டுவந்த குண்டுகள் வீரர்கள் மீது பாய்ந்தது.

இலங்கை அணி வீரர்கள் தாங்கள் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் இருந்து கடாபிஸ்டேடியத்துக்கு ஒரு பஸ்சில் புறப்பட்டனர்.அந்த பஸ் 9.30-மணியளவில் ஸ்டேடியத்தில்இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த லிபர்ட்டி சவுக்பகுதியில் வந்து கொண்டிருந்தது.இலங்கை வீரர்களின் பாதுகாப்புக்காக அந்த பஸ்முன்பும்,பின்பும் ஆயுதம் ஏந்திய போலீசார் வந்தனர்.

சமரவீராவுக்கு காலில் ஆழமாக குண்டுகள் பாய்ந்தது.சங்கக ராவுக்கு தோள் பட்டையில்குண்டு பாய்ந்தது.இந்த சம்பவத்தால் கடாபி ஸ்டேடியம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அந்தபகுதிக்கு ராணுவம் விரைந்தது.
இலங்கை வீரர்களை மொத்தமாக தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் அவர்கள் வந்தபஸ்சை சூழ்ந்து கொண்டு தீவிரவாதிகள் 12-பேர் இந்த தாக்குதலை நடத்தினார்கள்.அவர்கள்கடாபி ஸ்டே டியத்துக்குள் நுழைய முயன்றனர்.அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

இலங்கை கிரிக்கெட் வீரர்களில் கேப்டன் ஜெய வர்த்தனே,சங்ககரா,சமர வீரா,தரங்கா,மெண்டீஸ்சமீந்தா வாஸ் ஆகிய 6-வீரர்கள் காயம் அடைந்தனர்.சமரவீரா,தரங்கா இருவருக்கும் உடலின்பல பகுதிகளில் குண்டுகள் பாய்ந்துள்ளது.இலங்கை கிரிக்கெட் அணி மானேஜர் பிரெண்டன்குரூப்-ம் காயம் அடைந்தார்.
இதையடுத்து 12-தீவிரவாதிகளும் தனித் தனியாகப்பிரிந்தனர்.ஆளுக்கு ஒரு திசையாக ஓடியஅவர்கள் தப்பி சென்று விட்டனர்.லாகூர் போலீசாரால் அவர்களை பின் தொடர்ந்து சென்றுபிடிக்க இயலவில்லை.


பாதுகாப்பு கருதி இலங்கை கிரிக்கெட் வீரர்களை வேறு ஒரு பஸ்சில் ஏற்றி,வேறு ஒரு பாதைவழியாக கடாபி ஸ்டேடியத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.என்றாலும்,தீவிரவாதிகள்திட்டமிட்டு இன்று தாக்குதலை நடத்தி விட்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதலில் காயம் அடைந்த இலங்கை வீரர்கள் 6-பேரும் பஸ்சிலேயே கடாபிஸ்டேடியம் கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது.பிறகு அவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.சமர வீராவுக்குமட்டும் காலில் சிறு ஆபரேஷன் நடந்தது.இலங்கை வீரர்கள் யார்-யாருக்கு எத்தகைய குண்டுகாயம் ஏற்பட்டுள்ளது என்ற முழு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.முத்தையாமுரளீதரன்,உள்பட 6-வீரர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.