01 மார்ச் 2009
ஆந்திரா தர்காவில் ஏ.ஆர்.ரகுமான் வழிபாடு
ஸ்லம்டாக் மில்லியனார் படத்துக்காக இரட்டை ஆஸ்கார் விருது பெற்று திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நேற்று முன்தினம் சென்னையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று ஏ.ஆர்.ரகுமான், ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். தென் இந்தியாவின் அஜ்மீர் என்று அழைக்கப்படும் இந்த தர்காவுக்கு, ஏ.ஆர்.ரகுமான் அடிக்கடி வந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமணம் முடிந்ததும் இந்த தர்காவுக்கு வந்து வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.