Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

02 மார்ச் 2009

யாரையும் திட்டாதீர்கள்:ஆஸ்கரை விட பெரிய மரியாதை இருக்கு இளையராஜாவுக்கு:ஏ.ஆர்.ரகுமான் பேச்சு

ஸ்லம் டாக் மில்லினர் என்ற ஆங்கில படத்திற்கு இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. இதையொட்டி சென்னையில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், டைரக்டர் கே.பாலசந்தர், இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், தேவி ஸ்ரீபிரசாத், சங்கர் கணேஷ், யுவன்சங்கர் ராஜா, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தராஜன், மனோ, பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி ஆகியோரும் பேசினார்கள். நிகழ்ச்சியின் போது இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானுக்கு தங்கசங்கிலி அணிவித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் மோதிரம் அணிவித்தார். சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரகுமானை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். விழா குழு சார்பில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன உலக உருண்டை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரகுமான் பேசினார். அப்போது, ’’எல்லா புகழும் இறைவனுக்கே. எங்கப்பா ஆசியால் தான் எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அது உண்மை தான். அவர் பட்ட கஷ்டத்திற்கு நான் அறுவடை செய்திருக்கிறேன். கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு முறை ஆஸ்கார் விருது வழங்கப்படும் போதும் சீனா, ஐப்பான், இத்தாலி ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கே விருதுகள் கிடைத்து வந்தது. அந்த விருதை இந்தியா வாங்க முடியாதா என்று பல முறை நினைத்து இருக்கிறேன். இங்கே இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், நவுசாத் போன்ற மேதைகள் எல்லாம் இருக்கிறார்கள். இளையராஜா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறீர்கள் என்பதை இங்கு நான் நேரில் பார்த்தேன். இது ஆஸ்காரை விட பெரிய மரியாதை. எனக்கு `டைம்' கிடைக்காத நேரத்தில் தான் ஸ்லாம்டாக் மில்லினர் படத்திற்கு இசையமைத்தேன். அந்த படத்திற்கு நான் இசையமைக்க எடுத்துக்கொண்ட காலம் 3 வாரங்கள்தான். அந்த இசையை நான் சமர்ப்பித்த போது அமெரிக்கர்கள் எல்லாம் என்னை பார்த்து புன்னகைத்தார்கள். ரோஜா படத்திற்கு இசையமைத்த போது அதன் பாடல்களை கேட்டு மற்றவர்கள் எல்லாம் எப்படி புன்னகைத்தார்களோ அதே போன்று புன்னகையை அந்த அமெரிக்கர்களின் முகத்தில் பார்த்தேன். ஆஸ்கார் விருதுகளை எனக்கு கிடைத்ததாக நான் நினைக்கவில்லை. இங்கிருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற மேதைகளுக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன். பாலமுரளி கிருஷ்ணா பேசும்போது, இசையின் ஆழத்தை உணர முடிந்தது. இசையமைப்பாளர்கள் அனைவரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதற்கு நன்றி. ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இணையதளம் மூலம் என்னை வாழ்த்துவதற்காக இன்னொருவரை தூற்ற வேண்டாம். என் ரசிகர்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம்... யாரையும் திட்டாதீர்கள்’’ என்று தெரிவித்தார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com