Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

14 ஜூலை 2012

தல அஜித் ரசிகர்கள் சார்பில் “பில்லா -2” சிறப்புக் காட்சி: திரண்ட திரையுலகினர்


அஜீத் ரசிகர்களுக்காக இயக்கும் அஜீத் பேன்ஸ் இணையதளம் (www.ajithfans.com) சார்பில் பில்லா 2 சிறப்புக் காட்சி ஃபேம் நேஷனல் மல்டிப்ளெக்ஸில் திரையிடப்பட்டது.
தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் என்று திரையுலகினர் பலரும் திரண்டு வந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.


















































மங்காத்தாவுக்குப் பின்பு அஜீத் நடித்துள்ள படம் “பில்லா 2”. பார்வதி ஓமணக்குட்டன், புருனா அப்துல்லா, வித்யூத் ஜம்வால், சுதன்ஷு ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 2500 அரங்குகளில் நேற்று வெளியானது.



















































அஜீத் ரசிகர்களுக்காகவே இயங்கும் இணைய தளமான “ajithfans.com” சார்பில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஃபேம் மல்டிப்ளெக்ஸில் திரையிடப்பட்டது.








இந்தக் காட்சிக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் திரண்டு வந்தனர்.
அஜீத்தின் அடுத்த படத் தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம், இயக்குநர்கள் சற்குணம், மவுனகுரு புகழ் சாந்தகுமார், எங்கேயும் எப்போதும் சரவணன், மெரினா பாண்டிராஜ், தூங்காநகரம் கௌரவ், நடிகர்கள் பிடிச்சிருக்கு அசோக், ரியாஸ்கான், பாண்டு உட்பட பலரும் வந்திருந்தனர்.
படம் சிறப்பாக இருந்ததாகவும், அஜீத் மிகவும் அற்புதமாக நடித்திருப்பதாகவும் அனைவரும் பாராட்டிச் சென்றனர்.

மானாட மயிலாட நிகழ்ச்சியால் திருப்தி! - நமீதா


தமிழ் சினிமாவில் தன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கி அதனால் எக்கச்சக்க ரசிகர்களை தக்க வைத்திருக்கும் நடிகை நமீதா, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக வந்து பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

I happy about maanada mayilada says namitha


இந்நிலையில் மானாட மயிலாட அனுபவம் குறித்து நமீதா அளித்துள்ள பேட்டியில், மானாட மயி​லாட நிகழ்ச்சி மூல​மாக பாராட்​டு​கிற வேலையை நான் செய்து வருகி​றேன். இதை யார் வேண்டுமானா​லும் செய்ய​லாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்களுக்​கும், அந்த நிகழ்ச்​சியை பார்க்கும் ரசிகர்க​ளுக்​கும் இன்​னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது. தென்​னிந்தியா​வில் இந்த வேலையை முத​லில் நான் இறங்கி செய்​த​தால் எனக்கு நடிப்ப​தில் கிடைக்​கிற திருப்​தியை விட​வும் அதி​க​மாக மானாட மயி​லாட மூலம் கிடைக்கிறது. சின்னத்​திரை நிகழ்ச்சிக​ளில் கலந்து கொள்வ​தால் நடிகைகளுக்கு மார்க்​கெட் போய்வி​டும் என்பதை நான் உடைத்தி​ருக்கி​றேன். மானாட மயிலாட நிகழ்ச்சி என்னு​டைய மன​திற்கு நிறை​வை​யும், குதூகலத்தை​யும் கொடுக்கிறது, என்று கூறியுள்ளார்.

எவராலும் டிராவிட்டின் இடத்தை நிரப்ப இயலாது: சச்சின்


இந்திய டெஸ்ட் அணியில் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று சதநாயகன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டிராவிட்டுடன் அணியில் நீண்ட காலமாக விளையாடியவர் சச்சின்.
டிராவிட்டின் பிரிவு தன்னை மிகவும் வருத்தமளிப்பதாக சச்சின் தெரிவித்தார்.
இது குறித்து சச்சின் நேற்று கூறியதாவது, இந்திய அணிக்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த வீரராக ராகுல் டிராவிட் விளங்கினார். அவரது ஓய்வால், டெஸ்ட் அணியில் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது.


அவரது இடத்தை நிரப்ப வேண்டும் என்றால், மிகவும் ஒழுக்கமான அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய திறமையான வீரரால் மட்டுமே அது முடியும் என்றார்.
டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 3வது வீரராக களமிறங்குவது மிகவும் கடினமான காரியம் எனவும் சச்சின் கூறியுள்ளார்.

13 ஜூலை 2012

ஆயிரம் கைகளுடன் சுவாரஸ்யமான நடனங்கள்



இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டில் கலக்கும் தமிழ்ச் சிறுவன்!

உலகின் பெரும்பாலான மக்களை கவர்ந்த விளையாட்டுக்கள் வரிசையில் கிரிக்கெட்டும் ஒன்று. 

இலங்கையை சேர்ந்த ஐந்து வயது தமிழ் சிறுவன் ஒருவர் கிறிக்கெற் விளையாட்டில் பால மேதையாக விளங்கி வருகின்றார்.

இவரின் பெயரில் சண்முகநாதன் சாருஜன். 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பிறந்தவர். இவர் 11 மாத குழந்தையாக இருந்தபோதே கிறிக்கெற் ஆட தொடங்கி விட்டார்.

கிறிக்கெற் ஆட்டம் மீதான ஆர்வம், திறமை ஓவ்வோர் ஆண்டிலும் இவர் மத்தியில் பிரமாதமாக வளர்ந்து கொண்டே செல்கின்றது.

இவரது திறமையை அடையாளம் கண்டு கிறிக்கெற் ஜாம்பவான்கள் பலரும் பெரிதும் அதிசயிக்கின்றனர்.

இவரின் திறமையை மழுங்கடிக்காமல் தட்டிக் கொடுத்து வருகின்ற பெற்றோர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவர். சாருஜனுக்கு உத்தியோகபூர்வ இணையத் தளம் ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.










12 ஜூலை 2012

கோப்பை வென்றது இங்கிலாந்து * ஆஸி., மீண்டும் சொதப்பல்

மான்செஸ்டர்:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பை வென்றது.
இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், "பீல்டிங்' தேர்வு செய்தார்.




மழை காரணமாக தாமதமாக துவங்கிய இப்போட்டியில், இரு அணிக்கும் தலா 32 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பெய்லி ஆறுதல்:
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (32) நல்ல துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த பீட்டர் பாரஸ்ட் (3), கேப்டன் மைக்கேல் கிளார்க் (1) சொற்ப ரன்களில் வெளியேறினர். மற்றொரு துவக்க வீரர் மாத்யூ வேட் (12) ஏமாற்றினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஸ்டீவன் ஸ்மித் (21) நிலைக்கவில்லை. டேவிட் ஹசி (9)சொதப்பினார். பொறுப்பாக ஆடிய ஜார்ஜ் பெய்லி (46*) ஆறுதல் தந்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 32 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. 
போபரா அசத்தல்:
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு இயான் பெல் (4), டிராட்(10) ஏமாற்றினர். பின் அலெஸ்டர் குக், ரவி போபரா ஜோடி அசத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்த போது குக் (58) அவுட்டானார்.
இங்கிலாந்து அணி 27.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போபரா (52) அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 4-0 என தொடரை வென்றது. ஆட்டநாயகனாக இங்கிலாந்தின் போபரா, தொடர் நாயகனாக இயான் பெல் தேர்வு செய்யப்பட்டனர்.
---
மோசமான தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய (0-4) அணி, கடந்த 40 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தோல்வியை பெற்றது. கடந்த 1997ல் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 0-3 என இழந்தது. அதன்பின் 2008ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 1-4 என கோட்டைவிட்டது. ஆனால் தொடர்ச்சியாக நான்கு போட்டியில் தோல்வி அடைந்து தொடரை இழப்பது இதுவே முதன்முறை.
---
தொடர்ந்து முதலிடம்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி மோசமாக இழந்த போதிலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் 119 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் தலா 118 புள்ளிகளுடன் முறையே 2வது, 3வது இடத்தில் உள்ளன. மூன்றாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், இங்கிலாந்து அணியின் "நம்பர்-1' வாய்ப்பு பறிபோனது.
---
பத்தாவது வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி, ஒருநாள் அரங்கில் தொடர்ந்து 10வது வெற்றியை பதிவு செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக 4 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் (2), ஆஸ்திரேலியா (4) அணிகளை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
---
தோல்விக்கு என்ன காரணம்
"நம்பர்-1' அந்தஸ்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியின் மோசமான தோல்விக்கு அனுபவ வீரர்கள் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் கேப்டன் மைக்கேல் கிளார்க் 217, டேவிட் ஹசி 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர். மற்ற அனைத்து வீரர்களும் 36 போட்டிகளுக்கு குறைவாகவே ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளனர்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஆண்டர்சன் (159 போட்டி), இயான் பெல் (119), ஸ்டூவர்ட் பிராட் (93), இயான் மார்கன் (81), ரவி போபரா (78), அலெஸ்டர் குக் (51), டிராட் (50) என அனுபவ வீரர்கள் அதிகம் உள்ளனர். தவிர சொந்த மண்ணில் விளையாடியது இங்கிலாந்துக்கு கூடுதல் பலம் அளித்திருக்கும்.

வாலுவில் சந்தானத்தின் சம்பளம் ரூ.1 1/2 கோடி



வாலு படத்தில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் சந்தானம் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றார்.
கொலிவுட்டில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வாலு.
இப்படத்தை புதுமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகின்றார். தமன் இசையமைக்கிறார்.














































படத்தில் நடிப்பதற்காக ஐம்பது நாள்கள் கால்ஷீட் ஒதுக்கித் தந்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இதற்காக அவருக்கு மொத்தமாக ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
இதனிடையே சந்தானத்தை அணுகிய தயாரிப்பு நிறுவனம், சம்பளத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறது. அதற்கு சினிமாவில் வாய்ப்பளித்த சிம்புக்காகதான் இவ்வளவு குறைவான சம்பளம் என பதிலளித்திருக்கிறார் சந்தானம்.
தற்போதைய நிலவரப்படி ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ.10 லட்சத்திருந்து ரூ.12 லட்சம் வரை பெறுகிறார் சந்தானம்.

09 ஜூலை 2012

கணணியில் இழந்த தரவுகளை மீட்பதற்கு



கணணியில் ஏற்படும் தவிர்க்க முடியாத கோளாறுகள் காரணமாகவும், தற்செயலாகவும் மிக முக்கியமான கோப்புக்களை இழக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இழந்த தரவுகளை மீட்பதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அதேபோன்று Remo Recover எனும் மென்பொருளும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளானது மிக விரைவான தரவு மீட்பு பணியைச் செய்வதுடன், வெற்று நிலையில் காணப்படும் Recyclebin இலிருந்தும் தரவுகளை மீட்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

கூகுள் குரோமில் ஒன்றிற்கு மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளில் உள்நுளைவதற்​கு


பொதுவாக ஒரே உலாவியலில் வெவ்வேறுபட்ட கணக்குகளைப் பயன்படுத்தி குறித்த ஒரு இணையத்தளத்தினுள் லாக்கின் ஆவது முடியாத காரியம் ஆகும். இதற்கு முதலில் லாக்கின் செய்யப்பட்ட கணக்கின் குக்கீஸ், பின்பு லாக்கின் செய்யப்படும் குக்கீஸ் என்பனவற்றிற்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளே காரணம் ஆகும். 
எனினும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே உலாவியில் திறக்கமுடியும். அதன் அடிப்படையில் கூகுள் குரோம் உலாவியில் ஒன்றிற்கு மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளில் உள்நுளைய பின்வரும் படிமுறைகளைக் கையாளவும்.
முதலில் ஒரு பேஸ்புக் கணக்கினைப் பயன்படுத்தி லாக்கின் செய்யவும். தொடர்ந்து குரோம் உலாவியின் வலது மேல் மூலையில் காணப்படும் சாவி போன்ற உருவத்தின் மீது கிளிக் செய்து New incognito window என்பதை தெரிவு செய்யவும்.


அப்போது பிரத்தியேகமான கூகுள் குரோம் விண்டோ ஒன்று தோன்றும். அதில் புதிதாக Facebook.com என்ற முகவரியை டைப் செய்து புதிய கணக்கு ஒன்றினைப் பயன்படுத்தி லாக்கின் ஆகவும்.
இதேபோன்று ஜி மெயில், யாகூ, காட்மெயில் போன்ற மின்னஞ்சல் சேவைகளிலும், டுவிட்டர் சமூகத்தளத்திலும் பல கணக்குகளைப் பயன்படுத்தி உள்நுளைய முடியும்.

மென்பந்தாட்ட செய்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற வில்லிம்ஸ் சகோதரிகள்


விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று தனது 5வது விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், அதன் பின்னர் நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் தனது மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து விளையாடினார்.
இந்த ஜோடி, செக் குடியரைச் சேர்ந்த அன்ட்ரே லவக்கோவா, லூசி ரடெக்கா ஜோடியை சந்தித்தனர்.
வில்லியம்ஸ் சகோதரிகள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 7-5, 6-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
இது இவர்கள் இருவரும் இணைந்து பெற்றுக் கொள்ளும் 5வது விம்பிள்டன் இரட்டையர் பட்டம் என்பதோடு, இருவருமிணைந்து கைப்பற்றிக் கொள்ளும் 13வது கிராண்ட் ஸ்லாம் பட்டமுமாகும்.



இருவரும் ஏற்கனவே தலா 5 விம்பிள்டன் தனிநபர் பட்டங்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2000, 2002,, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தைக் கைப்பற்றிய இருவரும் தற்போது இவ்வாண்டும் கைப்பற்றியுள்ளனர்.
தவிர, 2000, 2001, 2005, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் வீனஸ் வில்லியம்ஸ் மகளிர் தனிநபர் விம்பிள்டன் பட்டத்தை வெல்ல, 2002, 2003, 2009, 2010 2012 ஆகிய ஆண்டுகளில் செரினா வில்லியம்ஸ் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.

08 ஜூலை 2012

59வது பிலிம்பேர் விருதுகள்: தனுஷ், விக்ரம், அஞ்சலி, ஸ்ருதிஹாசனுக்கு விருது!!


59th Filmfare Awards : Dhanush, Anjali, vikram, shruthihassan got awardஇந்திய சினிமாவில் கொடுக்கப்படும் முக்கிய விருதுகளில் பிலிம்பேர் விருதும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 59வது பிலிம்பேர் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்றனர். இதில் தமிழில் நடிகர் தனுஷூக்கு ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. எங்கேயும் எப்போதும் படத்திற்காக நடிகை அஞ்சலிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் சிறந்த அறிமுக நடிகைக்கான சிறப்புவிருது 7ம் அறிவு படத்திற்காக ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்தது. இவ்விருதை நடிகர் கமல்ஹாச‌னே,  ஸ்ருதிக்கு வழங்கினார். 

தமிழ்‌ மொழிக்கான விருது பெற்றவர்கள் விபரம் : 

சிறந்த நடிகர் - தனுஷ் (ஆடுகளம்)

சிறந்த நடிகை - அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)

சிறந்த டைரக்டர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)

சிறந்த டைரக்டர் - ஜீ.வி.பிரகாஷ்குமார் (ஆடுகளம்)

சிறந்த துணை நடிகர் - அஜ்மல் (கோ)

சிறந்த துணை நடிகை - அனன்யா (எங்கேயும் எப்போதும்)

சிறந்த பின்னணி பாடகர் - அலாப் ராஜூ (கோ, என்னமோ ஏதோ...)

சிறந்த பின்னணி பாடகி - சின்மயி (வாகைசூட வா, சர சர சாரகாத்து...)


சிறப்பு விருதுகள்

வாழ்நாள் சாதனையாளர் விருது - டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் நடிகர் சீமா சாய்

விமர்சகர்கள் விருது - விக்ரம்(தெய்வத்திருமகள்)

சிறந்த புதுமுக நடிகர் - ஆதி (பிரேம காவலி)

சிறந்த புதுமுக நடிகை - ஸ்ருதிஹாசன் (7ம் அறிவு)

சிறந்த ஒளிப்பதிவு - வேல்ராஜ் (ஆடுகளம்)



பிற மாநில விருதுகள் : 


தெலுங்கு 

சிறந்த படம் - துக்குடு

சிறந்த டைரக்டர் - ஸ்ரீனு வைத்யலா (துக்குடு)

சிறந்த நடிகர் - மகேஷ் பாபு (துக்குடு)

சிறந்த நடிகை - நயன்தாரா (ஸ்ரீராம ராஜ்யம்)

சிறந்த இசை - தமன் (துக்குடு)


மலையாளம்

சிறந்த படம் - டிராபிக்

சிறந்த டைரக்டர் - பிளசி (பிரணயம்)

சிறந்த நடிகர் - சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)

சிறந்த நடிகை - காவ்யாமாதவன் (கதாமா)

சிறந்த இசை - ஜெயச்சந்திரன் (பிரணயம்)


கன்னடம்

சிறந்த படம் - ஒலவே மந்த்ரா

சிறந்த டைரக்டர் - ஜெயதீர்தா (ஒலவே மந்த்ரா)

சிறந்த நடிகர்: புனீத்ராஜ் குமார் (குடுகாரு)

சிறந்த நடிகை: ரம்யா (சஞ்சு வெட்ஸ் கீதா)

சிறந்த இசை - ஜெசி கிப்ட் (சஞ்சு வெட்ஸ் கீதா)
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com