இந்திய டெஸ்ட் அணியில் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று சதநாயகன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டிராவிட்டுடன் அணியில் நீண்ட காலமாக விளையாடியவர் சச்சின்.
டிராவிட்டின் பிரிவு தன்னை மிகவும் வருத்தமளிப்பதாக சச்சின் தெரிவித்தார்.
இது குறித்து சச்சின் நேற்று கூறியதாவது, இந்திய அணிக்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த வீரராக ராகுல் டிராவிட் விளங்கினார். அவரது ஓய்வால், டெஸ்ட் அணியில் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது.
அவரது இடத்தை நிரப்ப வேண்டும் என்றால், மிகவும் ஒழுக்கமான அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய திறமையான வீரரால் மட்டுமே அது முடியும் என்றார்.
டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 3வது வீரராக களமிறங்குவது மிகவும் கடினமான காரியம் எனவும் சச்சின் கூறியுள்ளார்.
|