கொலிவுட்டில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வாலு.
இப்படத்தை புதுமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகின்றார். தமன் இசையமைக்கிறார்.

படத்தில் நடிப்பதற்காக ஐம்பது நாள்கள் கால்ஷீட் ஒதுக்கித் தந்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இதற்காக அவருக்கு மொத்தமாக ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
இதனிடையே சந்தானத்தை அணுகிய தயாரிப்பு நிறுவனம், சம்பளத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறது. அதற்கு சினிமாவில் வாய்ப்பளித்த சிம்புக்காகதான் இவ்வளவு குறைவான சம்பளம் என பதிலளித்திருக்கிறார் சந்தானம்.
தற்போதைய நிலவரப்படி ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ.10 லட்சத்திருந்து ரூ.12 லட்சம் வரை பெறுகிறார் சந்தானம். |