Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

12 ஜூலை 2012

கோப்பை வென்றது இங்கிலாந்து * ஆஸி., மீண்டும் சொதப்பல்

மான்செஸ்டர்:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பை வென்றது.
இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை வகித்தது. மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், "பீல்டிங்' தேர்வு செய்தார்.




மழை காரணமாக தாமதமாக துவங்கிய இப்போட்டியில், இரு அணிக்கும் தலா 32 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பெய்லி ஆறுதல்:
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (32) நல்ல துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த பீட்டர் பாரஸ்ட் (3), கேப்டன் மைக்கேல் கிளார்க் (1) சொற்ப ரன்களில் வெளியேறினர். மற்றொரு துவக்க வீரர் மாத்யூ வேட் (12) ஏமாற்றினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஸ்டீவன் ஸ்மித் (21) நிலைக்கவில்லை. டேவிட் ஹசி (9)சொதப்பினார். பொறுப்பாக ஆடிய ஜார்ஜ் பெய்லி (46*) ஆறுதல் தந்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 32 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. 
போபரா அசத்தல்:
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு இயான் பெல் (4), டிராட்(10) ஏமாற்றினர். பின் அலெஸ்டர் குக், ரவி போபரா ஜோடி அசத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்த போது குக் (58) அவுட்டானார்.
இங்கிலாந்து அணி 27.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போபரா (52) அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 4-0 என தொடரை வென்றது. ஆட்டநாயகனாக இங்கிலாந்தின் போபரா, தொடர் நாயகனாக இயான் பெல் தேர்வு செய்யப்பட்டனர்.
---
மோசமான தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய (0-4) அணி, கடந்த 40 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தோல்வியை பெற்றது. கடந்த 1997ல் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 0-3 என இழந்தது. அதன்பின் 2008ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 1-4 என கோட்டைவிட்டது. ஆனால் தொடர்ச்சியாக நான்கு போட்டியில் தோல்வி அடைந்து தொடரை இழப்பது இதுவே முதன்முறை.
---
தொடர்ந்து முதலிடம்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி மோசமாக இழந்த போதிலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் 119 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் தலா 118 புள்ளிகளுடன் முறையே 2வது, 3வது இடத்தில் உள்ளன. மூன்றாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், இங்கிலாந்து அணியின் "நம்பர்-1' வாய்ப்பு பறிபோனது.
---
பத்தாவது வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி, ஒருநாள் அரங்கில் தொடர்ந்து 10வது வெற்றியை பதிவு செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக 4 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் (2), ஆஸ்திரேலியா (4) அணிகளை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
---
தோல்விக்கு என்ன காரணம்
"நம்பர்-1' அந்தஸ்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியின் மோசமான தோல்விக்கு அனுபவ வீரர்கள் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் கேப்டன் மைக்கேல் கிளார்க் 217, டேவிட் ஹசி 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர். மற்ற அனைத்து வீரர்களும் 36 போட்டிகளுக்கு குறைவாகவே ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளனர்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஆண்டர்சன் (159 போட்டி), இயான் பெல் (119), ஸ்டூவர்ட் பிராட் (93), இயான் மார்கன் (81), ரவி போபரா (78), அலெஸ்டர் குக் (51), டிராட் (50) என அனுபவ வீரர்கள் அதிகம் உள்ளனர். தவிர சொந்த மண்ணில் விளையாடியது இங்கிலாந்துக்கு கூடுதல் பலம் அளித்திருக்கும்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com