இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டில் கலக்கும் தமிழ்ச் சிறுவன்!
உலகின் பெரும்பாலான மக்களை கவர்ந்த விளையாட்டுக்கள் வரிசையில் கிரிக்கெட்டும் ஒன்று.
இலங்கையை சேர்ந்த ஐந்து வயது தமிழ் சிறுவன் ஒருவர் கிறிக்கெற் விளையாட்டில் பால மேதையாக விளங்கி வருகின்றார்.
இவரின் பெயரில் சண்முகநாதன் சாருஜன். 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பிறந்தவர். இவர் 11 மாத குழந்தையாக இருந்தபோதே கிறிக்கெற் ஆட தொடங்கி விட்டார்.
கிறிக்கெற் ஆட்டம் மீதான ஆர்வம், திறமை ஓவ்வோர் ஆண்டிலும் இவர் மத்தியில் பிரமாதமாக வளர்ந்து கொண்டே செல்கின்றது.
இவரது திறமையை அடையாளம் கண்டு கிறிக்கெற் ஜாம்பவான்கள் பலரும் பெரிதும் அதிசயிக்கின்றனர்.
இவரின் திறமையை மழுங்கடிக்காமல் தட்டிக் கொடுத்து வருகின்ற பெற்றோர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவர். சாருஜனுக்கு உத்தியோகபூர்வ இணையத் தளம் ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.