தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் என்று திரையுலகினர் பலரும் திரண்டு வந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.
மங்காத்தாவுக்குப் பின்பு அஜீத் நடித்துள்ள படம் “பில்லா 2”. பார்வதி ஓமணக்குட்டன், புருனா அப்துல்லா, வித்யூத் ஜம்வால், சுதன்ஷு ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 2500 அரங்குகளில் நேற்று வெளியானது.
அஜீத் ரசிகர்களுக்காகவே இயங்கும் இணைய தளமான “ajithfans.com” சார்பில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஃபேம் மல்டிப்ளெக்ஸில் திரையிடப்பட்டது.
இந்தக் காட்சிக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் திரண்டு வந்தனர்.
அஜீத்தின் அடுத்த படத் தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம், இயக்குநர்கள் சற்குணம், மவுனகுரு புகழ் சாந்தகுமார், எங்கேயும் எப்போதும் சரவணன், மெரினா பாண்டிராஜ், தூங்காநகரம் கௌரவ், நடிகர்கள் பிடிச்சிருக்கு அசோக், ரியாஸ்கான், பாண்டு உட்பட பலரும் வந்திருந்தனர்.
படம் சிறப்பாக இருந்ததாகவும், அஜீத் மிகவும் அற்புதமாக நடித்திருப்பதாகவும் அனைவரும் பாராட்டிச் சென்றனர்.
|