Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

05 ஜூன் 2009

அறிமுகமாகிவிட்டது Google Squared - புதிய தேடுபொறி

எனது முன்னய பதிவொன்றில் Google Squared எனும் புதிய தேடுபொறி விரைவில் அறிமுகமாகவிருப்பதாகக் கூறியிருந்தேன். அது இப்போது அறிமுகமாகிவிட்டது. Microsoft இன் Bing அறிமுகமான சிறிது நாட்களிலேயே கூகுல் இதனை அறிமுகப்படுத்தியது, இரண்டுக்குமான போட்டியின் உச்சத்தைக் காட்டுகிறது.

Google Squared ஆனது Microsoft இன் Bing எவ்வாறு தகவல்களைப் பட்டியலிடுகிறதோ, ஏறத்தாள அதேமுறையில் பட்டியலிடுகிறது. அல்லது அதைவிட ஒருபடி மேல் என்றுகூடச் சொல்லலாம். Google Squared ஆனது நாம் தேடும் தகவலினை தொகுத்து, மிகவும் தெளிவாக அதுபற்றிய விளக்கம், சம்பந்தப்பட்ட படம், அதன் செயற்பாடுகள் என அனைத்துத் தேவையான விடயங்களையும் பட்டியலிடுகிறது. அது மட்டுமல்லாது இவ்வாறு பட்டியலிடும் விடயங்கள் நாம் தேடும் விடயத்துக்கேற்ப மாறுபடுகிறது. அந்தந்த விடயங்களில் எது மிக முக்கியமோ, அதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது. எமக்கு வேறு விடயங்களும் அதில் தேவை என்றால் நாமாக இன்னுமொரு வரியைச் சேர்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

உதாரணமாக நான் தேடிய planets என்ற பதத்திற்கு படத்தில் காட்டியதுபோல முடிவுகள் கிடைக்கின்றன. ஒரு வரியில் இருக்கும் முடிவுகள் அனைத்தும் ஒரு தளத்திற்கே சொந்தமானவை அல்ல, அவை பாவனையாளர்களின் முன்னய தெரிவுகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்தே தெரிகின்றன.

உதாரணத்திற்கு நான் தேடிய planets என்பதற்கு வந்த Earth என்ற முடிவில் படம் ஒரு தளத்திலிருந்தும், விளக்கம் இன்னொரு தளத்திலிருந்தும் கிடைக்கின்றது. உங்களுக்கு அந்தப் படம் வேண்டுமானால் படத்தில் கிளிக்கி அந்தப் படம் உள்ள தளத்திற்குச் செல்லலாம். அது வேறொரு Tap இலேயே திறக்கும். விளக்கத்தை இன்னொரு Tap இல் திறந்துகொள்ளலாம். படமும் விளக்கமும் அதிகமானோரால் விரும்பப்பட்டதாக இருப்பதால் உங்களுக்கு சிறந்ததே கிடைக்கும். இங்கே சென்று Google Squared இனை பரிசோதித்துப் பாருங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இது நாம் மிகவும் பழகிய கூகுலின் முறை. கூகுலில் தேடும் முறை எமக்கு பழகியதாகையால் இதிலும் இலகுவாக இருக்கும். அத்துடன் இவ்வாறு தகவல்களை தொகுத்துத் தருவதால் மாணவர்களுக்கு இது மிக உதவியானதொரு முறை. சாதாரணமாக தேடி தேவையானதை எடுப்பதற்கு போதும் போதுமென்றாகிவிடும். இதிலே விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதால் தேவையற்ற தளங்களுக்குள் போய் நேரத்தை வீண்டிப்பது தவிர்க்கப்படும்.

கூகுலின் இந்த அதிரடியால் Microsoft இன் Bing இணையச் சந்தையைப் பிடிப்பதற்கு கடினமாகத்தான் இருக்கப்போகிறது.

ரஜினி,கமல் வாழ்த்து ஜெயம் ரவி ஆர்த்தி திருமண புகைப்படங்கள்

Jeyam ravi aarthi marriage photo gallery wallpapers -2

Please click the photo for wallpaper view 1280 x 1000 px

கருணாநிதியின் கதையில் மீரா!

'உளியின் ஓசை' படத்துக்குப் பிறகு முதல்வர் [^] கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகும் புதிய படம் [^] நீ இன்றி நான் இல்லை. உளியின் ஓசை படத்தைத் தயாரித்த நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் ஆறுமுகநேரி முருகேசனே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். உதய்கிரண் நாயகனாகவும் மீராஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்துக்கு தேவா இசையமைக்கிறார். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி [^] எழுதிய 'சுருளி மலை' கதைதான் சில மாறுதல்களுடன் 'நீ இன்றி நான் இல்லை' என்ற படமாக உருவாகிறது. அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுத, பி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இளவேனில் இயக்குகிறார். அடுத்தமாதம் படப்பிடிப்பு [^] துவங்குகிறது.

கணனியில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா?

கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம். இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா ? திடீரென நம் காலை வாரிவிடுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா? என்று எப்படித் தெரிந்து கொள்வது? PC Wizard என்ற இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். உங்களுடைய கம்ப்யூட்டரின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறிது ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த புரோகிராம் பயன்படுகிறது. அவற்றின் செயல் திறன் பொதுவான இவற்றின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா? என்பதனையும் அறியலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடும். பின் ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில் நுட்ப ரீதியில் தகவல் தரப்படும். எந்த சாதனங்கள் சரியில்லை என்று கண்டறிந்து இவற்றை எல்லாம் மாற்றிவிடுங்கள் என்று அட்வைஸ் தரும். அப்படியா சேதி! என்று இவற்றை எல்லாம் பார்த்த பிறகு அங்குள்ள Benchmarks என்ற பட்டனை அழுத்தவும். இது கீழாக இடது புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கம்ப்யூட்டர் குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ளலாம். பிசி விஸார்ட் புரோகிராமினை இயக்கிப் பார்த்து ரசித்துப் பாருங்கள்.

02 ஜூன் 2009

ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்தது-228 பேர் பலி!

பிரான்ஸ்: பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் இருந்து 228 பயணிகளுடன் பிரான்ஸ் நோக்கி வந்த ஏர்-பிரான்ஸ் நிறுவன விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த விமானத்தைத் தேடும் பணியில் பிரேசில் மற்றும் பிரான்ஸ் விமானப் படை விமானங்களும் கடற்படை கப்பல்களும் ஈடுபட்டுள்ளன. AF 447 என்ற அந்த விமானம் பிரேசிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.10 மணிக்கு பாரிஸை அடைந்திருக்க வேண்டும். ஆனால், நள்ளிரவு 2.33 மணிக்கு அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த நான்கு நிமிடங்களுக்கு விமானத்தின் பல்வேறு முக்கிய மின்சார பாகங்கள் சரியாக செயல்படவில்லை என்று அந்த விமானத்தின் தானியங்கி கம்ப்யூட்டர்கள் பிரான்சில் உள்ள அந்த விமான நிறுவனத்தின் பராமரிப்புப் பிரிவுக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பியபடி இருந்தது. விமானம் மிக மோசமான வானிலையைக் கடந்ததாகவும், மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி மின்சார எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்களை அனுப்பியது. இதனால் அந்த விமானம் 2.33 மணிக்கே கடலில் விழுந்திருக்கலாம் என்றும் அதன் பின்னரே கம்ப்யூட்டர்கள் தகவல்களை அனுப்பியிருக்கலாம் என்றும் ஏர் பிரான்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் மிக நவீனமானது. பிரான்ஸ் வரும் வழியில் ஆப்பிரிக்கா-பிரேசில் இடையே வழக்கமான தீவிர காற்றோட்டம் காரணமாக ஏற்படும் அதிர்வுகளால் (turbulence) விமானத்தை இயக்குவது வழக்கமாகவே சிரமமானது தான் என்ற அவர், ஆனால், அது தான் காரணம் என்று இப்போதே சொல்லிவிட முடியாது என்றார். மேலும் அப் பகுதியில் கடும் மின்னல்-இடியோடு வானிலையும் மோசமாக இருந்துள்ளது. இதனால் மின்னல் தாக்கி விமானத்தின் மின் பாகங்கள் இயங்காமல் போய் விபத்து நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த விமானம் விபத்துக்குள்ளானது உறுதியாகிவிட்ட நிலையில், அதிலிருந்த பயணிகளி்ன் உறவினர்கள், விமானம் வந்திறங்கியிருக்க வேண்டிய சார்லஸ் டி குலே சர்வதேச விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பிரேசிலில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் அமெரிக்க செயற்கைக் கோள்கள் மூலமும் விமான பாகங்களைத் தேடும் பணி நடக்கிறது. விபத்துக்குள்ளானபோது அந்த விமானம் 35,000 அடி உயரத்தில் மணிக்கு 760 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருந்தாகவும் தெரியவந்துள்ளது. தீப் பிழம்பை பார்ப்போம்-பிரேசில் விமானிகள் இதற்கிடையே அந்தப் பகுதியில் பறந்து கொண்டிருந்த TAM என்ற பிரேசில் விமான நிறுவனத்தின் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த பைலட்டுகள், அட்லாண்டிக் கடலில் இரவில் தீப் பிழம்பைப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். விமானத்தில் 126 ஆண்கள், 82 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு பச்சிளம் குழந்தை, 2 விமானிகள் உள்ளிட்ட 12 விமான சிபந்திகள் இருந்தனர் என ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என பிரான்ஸ் அதிபர் சர்கோசி தெரிவித்துள்ளார். மின்னல் தாக்கினாலும் கூட அதை அழகாக வெளியில் கடத்திவிட்டு பாதுகாப்பாக பறக்கும் ரகத்தைச் சேர்ந்தது தான் ஏர்பஸ் A330 விமானம். இது எப்படி மின்னலால் பாதிக்கப்பட்டது என்பது விமானத்துறை வல்லுனர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முழு விசாரணைக்குப் பி்ன்னரே விபத்து குறித்து எந்த முடிவுக்கும் வர முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

நிருபர்களுடன் ரம்யா வாக்குவாதம்-மோதல்

பெங்களூர் நடந்த பத்திதிரிகையாளர் சந்திப்புக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்த நடிகை ரம்யா, அவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் குத்து படம் மூலம் அறிமுகமானவர் ரம்யா. இவர் பொல்லாதவன், வாரணம்ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த இவர் தற்போது கன்னடத்தில் படு பிசியாக இருக்கிறார். முன்னாள் கர்நாடக முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் நெருங்கிய உறவினரான இவர் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மாண்டியா தொகுதியில் நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் அடிபட்டது. இந்நிலையில் நேற்று பகல் 1 மணிக்கு இவர் நடிகர் பிரேமுடன் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ஜொதெகார என்ற கன்னட படம் தொடர்பான நிருபர்கள் சந்திப்பு பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1 மணிக்கு பத்திரிகையாளர்கள், கதநாயகன் பிரேம், தயாரிப்பாளர் அஸ்வினி ராம்பிரசாத் உள்ளிட்ட படக் குழுவினர் வந்துவிட்டனர். ஆனால் நடிகை குத்து ரம்யா வரவில்லை. அவருக்கு தயாரிப்பாளர் போன் செய்த போது விரைவில் வந்துவிடுவதாக தெரிவித்தார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. மீண்டும் இரு முறை அவரிடம் பேசியபோதும் ஒரே பதிலை தான் தெரிவித்தார். இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து அங்கு வந்தார். வந்த வேகத்தில் அவருக்காக காத்திருந்தவர்களிடம் சிறிய வருத்தம் கூட தெரிவிக்காமல் பேசத் தொடங்கினார். இதையடுத்து கூட்டத்துக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் சிலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ரம்யா,பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கிறது என்பது குறித்து எனக்கு தகவல் கொடுக்கப்படவில்லை. எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம் என நான் அப்போதே தயாரிப்பாளிடம் கூறிவிட்டேன். இன்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நான் என்பதால் இங்கு சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று தான் வந்தேன். நீங்கள் என்னிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை. எது கேட்பதாக இருந்தாலும் அதை தயாரிப்பாளர் ராம்பிரசாத்திடம் தான் கேட்க வேண்டும். நான் யாரிடமும், எதற்கும் வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை. என்னை பற்றி ஒன்றும் எழுத வேண்டிய அவசியமில்லை. விருப்பம் இருந்தால் இங்கே இருங்கள். இல்லையென்றால் புறப்பட்டு செல்லுங்கள் எனறார் ரம்யா. இதையடுத்து நிருபர்கள் அனைவரும் கோபத்துடன் வெளியேறிவிட்டனர். நிருபர்கள் மற்றும் நடிகை ரம்யா இருவரையும் தயாரிப்பாளர் ராம்பிரசாத் சமாதானம் முயன்றார். ஆனால் அதற்கு போதிய கிடைக்கவில்லை. அவர்கள் நடிகை ரம்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதன் பின்னர் வெளியே வந்த நடிகை ரம்யா கூறுகையில், கூட்டத்தில் நிருபர்கள் தான் முதலில் ஆவேசமாக பேசினார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது எனறார் ரம்யா.

நான் அழகில்ல!- மம்தா மோகன்தாஸ்

அழகான தென்னிந்திய நடிகைகளுள் ஒருவர் என எல்லாரும் மம்தா மோகன்தாஸைப் பாராட்ட, அவரோ வேறு ஒருவருக்கு அந்த சர்ட்டிபிகேட்டைத் தருகிறார். யார் அந்த அழகி தெரியுமா? விவேக் தானாம்.. 'அட உண்மைதாங்க... சமீபத்தில் நானும் விவேக்கும் குரு என் ஆளு படத்துல ஒரு காட்சியில் சேர்ந்து வருவோம். அந்தக் காட்சியில் பெண் வேடத்தில் வருவார் விவேக். உண்மையில் அந்தக் காட்சியில் அவரது தோற்றம் பார்த்து அசந்துவிட்டேன். எனக்கே நான் அழகா இருக்கேனா இல்லையான்னு சந்தேகம் வந்துடுச்சி. அவர்கிட்ட நான் இப்படிச் சொன்னேன்... 'என்னை விட இப்போ நீங்கதான் அழகா இருக்கீங்க'ன்னு!", என்கிறார் மம்தா. விவேக்கின் காமெடிக்கு பெரிய ரசிகையாம் மம்தா. முதல்முறை அவரைச் சந்தித்தபோது, ஹலோ என்று விவேக் கை நீட்ட, இவர் பதிலுக்கு கை கொடுக்காமல் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே இருந்தாராம்

பென் ட்ரைவ், மெமரி கார்டுகளில் மால்வேர்களை நீக்க..,

நாம் உபயோகிக்கும் பென் ட்ரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் அடிக்கடிதொல்லைத் தருவது, AutoRun.inf, REGSVR, SVCCHOST, Loverahul.vbs, r8.bat, Newfolder.exe போன்ற மால்வேர்கள். இவை நம் கணினியில் லைசன்ஸ்டு ஆண்டிவைரஸ் ப்ரோகிராம் இருந்தால்பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை. சில சமயங்களில் ஒவ்வொரு ஃபோலடர் பெயரிலும் ஒரு EXE file உருவாவது, Exe file கள் அனைத்தும் காணாமல் போவது, Windows Generic 32 error வருவதுபோன்ற பல சிக்கல்களை உருவாக்கும். இது போன்ற மால்வேர்களை அழிக்க என்ன செய்யலாம். http://pcsafety.us என்ற தளத்திலிருந்து Combofix.exe என்ற சிறு கோப்பை தரவிறக்கம் செய்து ரன்செய்யுங்கள். இதை உபயோகிக்கும் பொழுது. 'Do you want to download Windows recovery console?' என்று கேட்கும். அதற்கு No கொடுத்துவிடுங்கள். மேலும் இதை ரன் செய்வதற்கு முன்பாக உங்கள் பென்டிரைவ், மெமரி கார்டுகளை கணினியில் இணைத்துக் கொள்ளுங்கள். இப்படி தரவிறக்கம் செய்யும் Combofix ஒரு வாரத்திற்கு மட்டுமே வேலைசெய்யும். மறுபடியும் வேண்டுமென்றால் திரும்பவும் தரவிறக்கம் செய்யவேண்டியதுதான். மேலும் இது ஏற்கனவே உள்ள மால்வேர்களை அழிக்குமே தவிர புதிதாக வருவதை தடுக்காது.

நடிகை சோனாவிடம் கேட்கப்பட்ட "ஏ" டாகூடமான கேள்விகளும் அவரின் பதில்களும்?

"குசேலன்" புகழ் நடிகை சோனாவின் பிறந்தநாள், அதை முன்னிட்டு ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் ஏடாகூடமான கேள்விகளை கேட்டார்கள்,அவரும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் பதிலளித்தார். கேள்வி : சோனா நீங்க பாக்குறதுக்கு சும்மா "கொத்தும் கொலையுமா,மப்பும் மந்தாரமுமா" இருக்கீங்க? அதுக்கு என்ன சாப்புடுறீங்க? சோனா : ஒண்ணுமே இல்ல சார், உங்கள மாதிரி நானும் சாப்பாடுதான் சாப்புடுறேன். கேள்வி : பல நடிகைகள் நீச்சல் உடையில ஆபாசம் இருக்குன்னு பயந்து போய் நடிக்கிறதுக்கு தயங்குறப்போ நீங்க மட்டும் எப்படி தாராளமா நடிக்கீறீங்க ? சோனா : சார், நம்ம நிஜ வாழ்க்கையில எல்லோரும் நீச்சல் குளத்துல நீச்சல் டிரஸ் போட்டு குளிக்கிறோம்,அத யாரும் ஆபாசம்னு சொல்றதில்ல, அதுவே சினிமாவுல போட்டு நடிக்கிறப்போ அத ஆபாசம்ன்னு சொல்றாங்க,இ தெல்லாம் சும்மா அவகள நல்லவங்களா காட்டிக்க போட்டுக்குற முகமூடி தான். கேள்வி : பெண்களுக்குன்னு "யுனிக்" ன்னு ஒரு கடை தொறந்திருக்கீங்க? அதே மாதிரி ஆம்பளைங்களுக்கு ஏதாவது தொறப்பீங்களா? சோனா : அந்த கடையில ஆம்பளைங்களுக்கான அயிட்டங்களும் இருக்கு சார்,ஆனா எதிர்காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு சரக்கடிக்கிற "பப்" ஓப்பன் பண்ணலாம்முன்னு இருக்கேன்.அப்போ உங்க எல்லாருக்கும் ப்ரீயா சரக்கு தருவேன் கேள்வி : ரசிகர்கள் தொல்லைகள் இருக்கா? யாராவது உங்கள நேர்ல பாக்க வந்தாங்களா? சோனா : ஆமாம், அப்படித்தான் திருத்தணியில இருந்து ஒரு ரசிகர் போன் பண்ணினார்,மேடம் நான் உங்கள பாக்கனும்னு ஒரே தொல்லை, சரி நானும் வாங்கன்னு என்னோட ஆபீஸ் அட்ரஸ கொடுத்தேன்,ஆழ பாத்ததும் ஸாக்காயிட்டேன், என்ன வந்தது ஒரு அம்பது வயசு ஆளு. எனக்கு சேலை,சுவீட்டு,பஞ்சாமிர்தம் எல்லாம் வாங்கிட்டு வந்தாரு. கேள்வி : சரி, உங்க கல்யாணம் எப்போ? சோனா : என்ன யார் சார் கட்டிப்பாங்க.., வேணுமுன்னா நீங்க மாப்புள்ள பாத்து குடுங்க நிருபர் : சோனாவுக்கு கிடைக்காத மாப்பிள்ளையா? வந்து வரிசையில நிப்பாங்களே? சோனா : எங்க சார் எல்லாரும் "வேலைக்கு ஆகாத" ஆட்களா இருக்காங்க.

உங்கள் கணினி "குதிரைவேகம்" எடுக்க வேண்டுமா?

நம் கணினி வேகம் குறைவா இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் உள்ளன. 1. நம் கணினியில் உள்ள ஹார்டுவேர்களை அப்டேட் செய்யாமல் இருப்பது.., 2. நம் கணினியில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களை அப்டேட் செய்யாமல் இருப்பது.., இந்த இரண்டையும் நாம் சம்பந்தப்பட்ட நிருவனங்கள் தரும் புதிய அப்டட்டுகளை நாம் பதிந்து கொண்டாலே போதும்। நம் கணினியின் வேகம் குதிரை வேகம் தான்। இந்த இரண்டு வேலைகளையும் செய்யும் மென்பொருட்களை நீங்கள் இங்கே இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் வைத்து ஓடச்செய்தால் அவைகள் புதுப்பிக்க வேண்டியவைகளை காடிகொடுத்து அதை தரவிறக்கமும் செய்ய வழிவகை செய்து விடும். சரி இவங்க நமக்கு இலசமா தர்ரதுனால்இலவசமா தர்ரதுனால அவங்களுக்கு என்ன பிரயோசனம்னு நீங்க கேட்கலாம், அவங்க மென்பொருளை நாம ஓடச்செய்யும் போது இடைஇடையே விளம்பரங்களை காண்பிப்பார்கள் அவைகளை "கிளிக்" செய்ததால் போது, அவங்களுக்கு வருமானம் லாபம், நமக்கு இலவச தரவிறக்கம் லாபம். ஹார்டுவேர்களை அப்டேட் செய்ய : http://www.radarsync.com/installers/radarsync.exe மென்பொருட்களை அப்டேட் செய்ய : http://filehippo.com/updatechecker/FHSetup.exe 552 Views

31 மே 2009

அசத்தப்போவது யாரு’ புகழ் கோவை ரமேஷ் விபத்தில் பலி

கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார் (30). சன் டி.வி.யில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகிவரும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். பெண் வேடத்தில் ரசிகர்களை கவர்ந்திழுப்பார். இந்த நிகழ்ச்சியால் பிரபலமான ரமேஷ், தனியாக கலை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார். இவரும், இவரது நண்பர் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பவரும் நேற்றிரவு திருவாரூரில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு, காரில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டினார். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் காங்கயம் - திருச்சி ரோடு கொடுமுடி பிரிவு என்ற இடத்தில் வரும்போது கோவையில் இருந்து மணல் எடுக்க கரூர் சென்ற லாரியும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியாயினர். இதுபற்றி தகவலறிந்ததும் காங்கயம் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் போராடி காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அம்மாதுரை, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

உங்கள் சருமத்துக்கு ஏற்ற உணவுகள்:

என்ன..டா இது உடல் ஆரோக்கியத்துக்கு தானே உணவு சருமத்துக்கு ஏற்ற உணவா என்று கேட்க தோணுதா? நம்முடைய வயது அதிகம் ஆவதை முதலில் சொல்வது நமது சருமம் தான். இது உண்மைதானுங்க. ஆகையால் உணவில் மீது அக்கரை கொண்டால் நம் இளைமையினை தக்க வைக்க முடியும். ஏற்க்கனவே நாம் முன்று வகையான சருமத்தை பற்றி இதில் பார்த்திருக்கோம். அவர்களுக்கு ஏற்ற உணவுகளை இப்ப பார்ப்போம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அதிகமாக முகத்தில் திட்டு திட்டாக எண்ணெய் வழியும்.. அவர்களுக்கு பொடுகு, பருக்கள் வர வாய்ப்புள்ளதால் மிகவும் தலையினை சுத்தமாக வைக்கவும்.வாரம் ஒரு முறை முகத்துக்கு ஆவி பிடிக்கவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்கு வெளியாகும். துவரங்கள் அடைப்படும். உணவில் அதிகம் பச்சை காய்கறிகள், சாலட்,பழங்கள் அதிகம் சேர்க்கவும். கொழுப்பு நீக்கிய பால்,த்யிர்,மோர் சேர்க்கவும். அடிக்கடி உணவில் முளைகட்டிய பயிறு வகைகள் சேர்க்கலாம். உலர்ந்த சருமம் கொண்டவர்கள்: இவர்களின் சருமம் எப்பொழுதும் டல்லாகவே இருக்கும். இவர்களுக்கு சீக்கரமே முகச்சுருக்கம் வர வாய்ப்புகள் இருக்கு. ஆகையால் இவங்க அதிகமாக உணவில் விட்டமின்கள் நிறைந்த உணவுகளும் மினரல்ஸ் நிறைந்த உணவுகளை சேர்க்கவும். விட்டமின்களை நாம் அதிகம் சேர்த்துக்கொண்டால் நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை இது தருகிறது। மலச்சிக்கல் அதிகம் ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்ளவும் நார்மல் சருமம் கொண்டவர்கள்: இவங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க. இவங்களுக்கு பெரும் பாலும் எல்லா வகையான பேக் மற்றும் உணவுகளும் ஏற்றுக்கொள்ளும்.. இப்படியே உங்கள் சருமத்தை பாதுகாத்தால் போதும். அதிகமாக மோர்,தண்ணீர் குடிக்கவும்.ஆயிலி அயிட்டம், நான் - வெஜ் உணவுகளை குறைப்பது அனைவரின் சருமத்துக்கும் நல்லது. இப்படி நிங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால் உங்கள் உண்மையான வயதை விட 5 வயது கம்மியாக தான் தெரிவிங்க... அப்பறம் என்ன...ம்ம்...ம்ம்

தோரணை - செம ரோதனை..

சென்னையில ரெண்டு பெரிய ரவுடிகள். ஒருவர் பிரகாஷ்ராஜ் மற்றொருவர் 'பொல்லாதவன்' கிஷோர். இருவருக்கும் தொழில் முறை போட்டி. இதற்கிடையில் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி போன தன அண்ணனை கண்டுபிடிக்க அலங்காநல்லூர் கிராமத்திலிருந்து சென்னை வரும் 'புரட்சி தளபதி' விஷால். ஒரு கட்டத்தில் ஸ்ரீமானை தன் அண்ணனாக கருதி, ஸ்ரீமானைக் கொல்லவரும் கிஷோரிடம் மோதத்துவங்கி, பின் தன் உண்மையான அண்ணன் கிஷோர்தான் என்பதை கண்டுபிடித்து அவரை திருத்தி, அவரை பழிவாங்க துடிக்கும் பிரகாஷ்ராஜிடம் இருந்து தன் அண்ணனை காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை. இதற்கிடையில் நண்பன் சந்தானத்தோடு காமெடி, ஷ்ரியாவோடு காதல், தாய்பாசம் etc., அலாங்கானல்லூர் கிராமத்தில் இருந்து வரும் விஷால் கார் சேசிங்கில் கலக்குவது, துப்பாக்கிகளை இயக்குவது, பிரகாஷ்ராஜ்-கிஷோர் அனாயாசமாக துப்பாக்கிகளால் Gang War செய்வது, விஷால் அடித்தால் மற்றவர்கள் பல அடிகள் தாண்டிப்போய் விழுவது, அலங்காநல்லூர் கிராமத்தில் இருந்து ஓடிப்போன அண்ணனைத் தேடி, மதுரையோ திருச்சியோ கோயம்பத்தூரோ அல்லது வேறு மாநிலமோ செல்லாமல், சென்னைக்கு வருவது, இன்னும் பற்ப்பல லாஜிக் மீறல்களை, விறுவிறுப்பான திரைக்கதையையும், புதிதான காட்சிகளையும் கொண்டு மறைத்து, "கமர்ஷியல் மசாலா" வெற்றிப்படத்தை கொடுக்க முனைந்திருக்கலாம். ஆனால்........................ விஷால் : டாக்டர் விஜய், ரஜினியின் கமர்சியல் மற்றும் தெலுங்கு மசாலாவை காப்பி செய்து, கமர்சியல் ஹீரோவாகிவிட்டார். விஷால், விஜயை ஜெராக்ஸ் எடுக்கிறார். என்னக் கொடுமை சார் இது. கிராமத் திருவிழாவில் குதித்து வந்து ஓபனிங் சாங். பாடல் முழுதும் பூமாரி பொழியுது. துதி பாடும் வரிகள். படம் முழுதும் காமெடி, பாட்டு, பன்ச் டயலாக், திரும்ப காமெடி, பாட்டு, பன்ச் டயலாக், திரும்ப காமெடி, பாட்டு, பன்ச் டயலாக்- இப்படியாக கமர்சியல் நாயகனாக முயற்சி எடுக்கிறார். ஒண்ணியும் வேலைக்காவல. படத்தில் பட டயலாகுகளில் "தோரணை". தாங்கல. மேலும் செல்லமே, சண்டைக்கோழி விஷால் முகம் மிஸ்ஸிங். குளோஸ்-அப் காட்சிகளில் அவர் முகம் பார்க்கவே பயமா இருக்கு. விஷால், ரொம்ப ஸ்மோக் பண்றீங்களோ??? ஷ்ரியா : படத்தில, ஷ்ரியாவ மட்டும்தான் பார்க்கற மாதிரி இருக்காங்க. அழகு + செக்ஸி. சந்தானம் : விரசமா ரொம்ப இல்லாம, ஓரளவுக்கு நல்லா பண்ணி இருக்கார். சிரிக்க வைக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல். பிராகாஷ்ராஜ் : இந்த மாதிரி படங்களில் எல்லாம் நீங்க நடிக்கணுமா பிராகாஷ்ராஜ்? சரி சரி நடிங்க. இப்படி சம்பாதிக்கும் காசை வச்சுதானே நல்ல படங்களை தயாரிக்கிறீங்க. விஷால், சந்தானம், பறவை முனியம்மா, மயில் சாமி, டி.பி.கஜேந்திரன், இவங்க எல்லாரும் ஒரே காலனிக்காரங்க. இவங்க காமெடி என்ற பெயரில் அடிக்கும் லூட்டி, உலகமகாக் கொடுமை...............முடியல.. பாடல்கள் ஓகே ரகம். "வா செல்லம்" பாடல் நல்லா இருக்கு. எல்லாப்பாடல்களிலும் ஷ்ரியா செக்ஸி. படம் துவங்கும் போது "சண்டைக்காட்சிகள் அபாயகரமானவை. பயிற்சி பெற்ற ஆட்களால் வடிவமைக்கப்பட்டவை. நீங்கள் செய்து பார்க்காதீர்கள்" என்ற அறிவிப்பு வருகிறது. ஆனால் படத்தில சண்டைக்காட்சிகள் அப்படி ஒண்ணும் பெரிசா இல்லை. கடைசியா விஷாலுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்பறேன் : சண்டைக்கோழி, மலைக்கோட்டை படங்களிலிருந்து வெளியே வாங்க. தோரணை : செம ரோதனை :: படம் பார்த்தவர்கள் வேதனை டிஸ்கி : ஆனாலும் ஒரு விஷயம், படம் கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கு. படம் சுமாரான வெற்றியை பெறலாம். விஷாலின் "சத்யம்" போல் பெருத்தத் தோல்வியாக இராது என்று நினைக்கிறேன்.

பவுர்ணமி நாகத்தில் முமைத் கானின் டூ பீஸ் ஆட்டம்!

நீச்சல் உடையில் குத்தாட்டம் போடுவது முமைத் கானுக்கு புதிதில்லை என்றாலும், தெலுங்கு [^] அளவுக்கு தமிழில் அவர் பெரிய அளவு பேசப்படவில்லை. தெலுங்கில் இப்போது முன்னணி நாயகியாக வேறு மாறிவிட்டார். ஆனால் தமிழில் இதுவரை அவர் குத்தாட்டப் பாடல்களோடு தன் கலைச் சேவையை நிறுத்திக் கொண்டிருந்தார். இப்போது முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். புன்னமி நாகு என்று தெலுங்கில் ஏற்கெனவே அவர் நடித்து வெளி வந்த படம்தான் இப்போது தமிழில் பவுர்ணமி நாகம் என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சி முழுவதிலும் நீச்சலுடையில் வருகிறாராம் முமைத் கான். இந்தப் பாடலுக்கு தெலுங்கில் பயன்படுத்திய அதே பாடலை தமிழிலும் பயன்படுத்தியுள்ளார்களாம். பீச்சில் டூ பீஸில் அவர் போட்டுள்ள ஆட்டம் இளசுகளை சூடேற்றும் என்கிறார் இயக்குநர் [^]. புன்னமி நாகுவால் தெலுங்கில் எனக்கு தனி இடம் கிடைத்துவிட்டது. இப்போது அதே படம் [^] பவுர்ணமி நாகமாக தமிழில் வருகிறது. இதுவும் எனக்கு பெரிய திருப்பு முனையைத் தரும் என்கிறார் முமைத் கான் சந்தோஷத்துடன்.

லாரன்ஸ் கட்டிய கோவிலை ரஜினி திறந்து வைக்கிறார்

தமிழ் பட உலகில், டான்ஸ் மாஸ்டர்' ஆக இருந்து கதாநாயகன் ஆகியிருப்பவர், லாரன்ஸ். இவர், ராகவேந்திர சாமிகளின் தீவிர பக்தர். ராகவேந்திர சாமிகளின் தீவிர பக்தரான இவர், தனது பெயரை ராகவேந்திரா லாரன்ஸ் என்று மாற்றிக்கொண்டதுடன், சென்னை அம்பத்தூரில் ராகவேந்திர சாமிகளுக்கு சொந்த செலவில் கோவில் கட்டி வந்தார். அந்த கோவிலின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தன. கோவில் திறப்பு விழா, வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் விழாவில் கலந்துகொண்டு, கோவிலை திறந்து வைக்கிறார் என்று ராகவேந்திரா லாரன்ஸ் நிருபர்களிடம் தெரிவித்தார். இவர் ஏற்கனவே ஆதரவற்றவர்கள், முதியோர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்காக சென்னையில் இல்லம் நடத்தி வருகிறார். இந்த சேவை மனப்பான்மை உங்களுக்குள் எப்படி வந்தது? என்ற கேள்விக்கு, நான் 7 வயது சிறுவனாக இருந்தபோது, மூளையில் கட்டி ஏற்பட்டு, அதன் காரணமாக என் கை கால் விழுந்து விட்டது. அதில் இருந்து குணம் அடைந்து, மீண்டு வந்தது தெய்வச்செயல். அப்போது முடிவெடுத்தேன். இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தேன். அதன் விளைவுதான், ஆதரவற்றோர் இல்லம் என்றார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com