என்ன..டா இது உடல் ஆரோக்கியத்துக்கு தானே உணவு சருமத்துக்கு ஏற்ற உணவா என்று கேட்க தோணுதா?
நம்முடைய வயது அதிகம் ஆவதை முதலில் சொல்வது நமது சருமம் தான். இது உண்மைதானுங்க. ஆகையால் உணவில் மீது அக்கரை கொண்டால் நம் இளைமையினை தக்க வைக்க முடியும்.
ஏற்க்கனவே நாம் முன்று வகையான சருமத்தை பற்றி இதில் பார்த்திருக்கோம். அவர்களுக்கு ஏற்ற உணவுகளை இப்ப பார்ப்போம்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள்
அதிகமாக முகத்தில் திட்டு திட்டாக எண்ணெய் வழியும்.. அவர்களுக்கு பொடுகு, பருக்கள் வர வாய்ப்புள்ளதால் மிகவும் தலையினை சுத்தமாக வைக்கவும்.வாரம் ஒரு முறை முகத்துக்கு ஆவி பிடிக்கவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்கு வெளியாகும். துவரங்கள் அடைப்படும்.
உணவில் அதிகம் பச்சை காய்கறிகள், சாலட்,பழங்கள் அதிகம் சேர்க்கவும். கொழுப்பு நீக்கிய பால்,த்யிர்,மோர் சேர்க்கவும். அடிக்கடி உணவில் முளைகட்டிய பயிறு வகைகள் சேர்க்கலாம்.

உலர்ந்த சருமம் கொண்டவர்கள்:
இவர்களின் சருமம் எப்பொழுதும் டல்லாகவே இருக்கும். இவர்களுக்கு சீக்கரமே முகச்சுருக்கம் வர வாய்ப்புகள் இருக்கு. ஆகையால் இவங்க அதிகமாக உணவில் விட்டமின்கள் நிறைந்த உணவுகளும் மினரல்ஸ் நிறைந்த உணவுகளை சேர்க்கவும்.
விட்டமின்களை நாம் அதிகம் சேர்த்துக்கொண்டால் நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை இது தருகிறது।
மலச்சிக்கல் அதிகம் ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்ளவும்

நார்மல் சருமம் கொண்டவர்கள்:
இவங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க. இவங்களுக்கு பெரும் பாலும் எல்லா வகையான பேக் மற்றும் உணவுகளும் ஏற்றுக்கொள்ளும்..
இப்படியே உங்கள் சருமத்தை பாதுகாத்தால் போதும். அதிகமாக மோர்,தண்ணீர் குடிக்கவும்.ஆயிலி அயிட்டம், நான் - வெஜ் உணவுகளை குறைப்பது அனைவரின் சருமத்துக்கும் நல்லது.
இப்படி நிங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால் உங்கள் உண்மையான வயதை விட 5 வயது கம்மியாக தான் தெரிவிங்க... அப்பறம் என்ன...ம்ம்...ம்ம்