31 மே 2009
பவுர்ணமி நாகத்தில் முமைத் கானின் டூ பீஸ் ஆட்டம்!
நீச்சல் உடையில் குத்தாட்டம் போடுவது முமைத் கானுக்கு புதிதில்லை என்றாலும், தெலுங்கு [^] அளவுக்கு தமிழில் அவர் பெரிய அளவு பேசப்படவில்லை. தெலுங்கில் இப்போது முன்னணி நாயகியாக வேறு மாறிவிட்டார். ஆனால் தமிழில் இதுவரை அவர் குத்தாட்டப் பாடல்களோடு தன் கலைச் சேவையை நிறுத்திக் கொண்டிருந்தார்.
இப்போது முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார்.
புன்னமி நாகு என்று தெலுங்கில் ஏற்கெனவே அவர் நடித்து வெளி வந்த படம்தான் இப்போது தமிழில் பவுர்ணமி நாகம் என்ற பெயரில் தயாராகிறது.
இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சி முழுவதிலும் நீச்சலுடையில் வருகிறாராம் முமைத் கான். இந்தப் பாடலுக்கு தெலுங்கில் பயன்படுத்திய அதே பாடலை தமிழிலும் பயன்படுத்தியுள்ளார்களாம்.
பீச்சில் டூ பீஸில் அவர் போட்டுள்ள ஆட்டம் இளசுகளை சூடேற்றும் என்கிறார் இயக்குநர் [^].
புன்னமி நாகுவால் தெலுங்கில் எனக்கு தனி இடம் கிடைத்துவிட்டது. இப்போது அதே படம் [^] பவுர்ணமி நாகமாக தமிழில் வருகிறது. இதுவும் எனக்கு பெரிய திருப்பு முனையைத் தரும் என்கிறார் முமைத் கான் சந்தோஷத்துடன்.