Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

02 ஜூன் 2009

நிருபர்களுடன் ரம்யா வாக்குவாதம்-மோதல்

பெங்களூர் நடந்த பத்திதிரிகையாளர் சந்திப்புக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்த நடிகை ரம்யா, அவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் குத்து படம் மூலம் அறிமுகமானவர் ரம்யா. இவர் பொல்லாதவன், வாரணம்ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த இவர் தற்போது கன்னடத்தில் படு பிசியாக இருக்கிறார். முன்னாள் கர்நாடக முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் நெருங்கிய உறவினரான இவர் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மாண்டியா தொகுதியில் நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் அடிபட்டது. இந்நிலையில் நேற்று பகல் 1 மணிக்கு இவர் நடிகர் பிரேமுடன் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ஜொதெகார என்ற கன்னட படம் தொடர்பான நிருபர்கள் சந்திப்பு பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1 மணிக்கு பத்திரிகையாளர்கள், கதநாயகன் பிரேம், தயாரிப்பாளர் அஸ்வினி ராம்பிரசாத் உள்ளிட்ட படக் குழுவினர் வந்துவிட்டனர். ஆனால் நடிகை குத்து ரம்யா வரவில்லை. அவருக்கு தயாரிப்பாளர் போன் செய்த போது விரைவில் வந்துவிடுவதாக தெரிவித்தார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. மீண்டும் இரு முறை அவரிடம் பேசியபோதும் ஒரே பதிலை தான் தெரிவித்தார். இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து அங்கு வந்தார். வந்த வேகத்தில் அவருக்காக காத்திருந்தவர்களிடம் சிறிய வருத்தம் கூட தெரிவிக்காமல் பேசத் தொடங்கினார். இதையடுத்து கூட்டத்துக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் சிலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ரம்யா,பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கிறது என்பது குறித்து எனக்கு தகவல் கொடுக்கப்படவில்லை. எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம் என நான் அப்போதே தயாரிப்பாளிடம் கூறிவிட்டேன். இன்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நான் என்பதால் இங்கு சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று தான் வந்தேன். நீங்கள் என்னிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை. எது கேட்பதாக இருந்தாலும் அதை தயாரிப்பாளர் ராம்பிரசாத்திடம் தான் கேட்க வேண்டும். நான் யாரிடமும், எதற்கும் வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை. என்னை பற்றி ஒன்றும் எழுத வேண்டிய அவசியமில்லை. விருப்பம் இருந்தால் இங்கே இருங்கள். இல்லையென்றால் புறப்பட்டு செல்லுங்கள் எனறார் ரம்யா. இதையடுத்து நிருபர்கள் அனைவரும் கோபத்துடன் வெளியேறிவிட்டனர். நிருபர்கள் மற்றும் நடிகை ரம்யா இருவரையும் தயாரிப்பாளர் ராம்பிரசாத் சமாதானம் முயன்றார். ஆனால் அதற்கு போதிய கிடைக்கவில்லை. அவர்கள் நடிகை ரம்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதன் பின்னர் வெளியே வந்த நடிகை ரம்யா கூறுகையில், கூட்டத்தில் நிருபர்கள் தான் முதலில் ஆவேசமாக பேசினார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது எனறார் ரம்யா.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com