'உளியின் ஓசை' படத்துக்குப் பிறகு
முதல்வர் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகும் புதிய
படம் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
நீ இன்றி நான் இல்லை.
உளியின் ஓசை படத்தைத் தயாரித்த நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் ஆறுமுகநேரி முருகேசனே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

உதய்கிரண் நாயகனாகவும் மீராஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்துக்கு தேவா இசையமைக்கிறார். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்
கருணாநிதி ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
எழுதிய 'சுருளி மலை' கதைதான் சில மாறுதல்களுடன் 'நீ இன்றி நான் இல்லை' என்ற படமாக உருவாகிறது.
அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுத, பி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இளவேனில் இயக்குகிறார்.
அடுத்தமாதம்
படப்பிடிப்பு ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
துவங்குகிறது.