Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

31 மே 2009

தோரணை - செம ரோதனை..

சென்னையில ரெண்டு பெரிய ரவுடிகள். ஒருவர் பிரகாஷ்ராஜ் மற்றொருவர் 'பொல்லாதவன்' கிஷோர். இருவருக்கும் தொழில் முறை போட்டி. இதற்கிடையில் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி போன தன அண்ணனை கண்டுபிடிக்க அலங்காநல்லூர் கிராமத்திலிருந்து சென்னை வரும் 'புரட்சி தளபதி' விஷால். ஒரு கட்டத்தில் ஸ்ரீமானை தன் அண்ணனாக கருதி, ஸ்ரீமானைக் கொல்லவரும் கிஷோரிடம் மோதத்துவங்கி, பின் தன் உண்மையான அண்ணன் கிஷோர்தான் என்பதை கண்டுபிடித்து அவரை திருத்தி, அவரை பழிவாங்க துடிக்கும் பிரகாஷ்ராஜிடம் இருந்து தன் அண்ணனை காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை. இதற்கிடையில் நண்பன் சந்தானத்தோடு காமெடி, ஷ்ரியாவோடு காதல், தாய்பாசம் etc., அலாங்கானல்லூர் கிராமத்தில் இருந்து வரும் விஷால் கார் சேசிங்கில் கலக்குவது, துப்பாக்கிகளை இயக்குவது, பிரகாஷ்ராஜ்-கிஷோர் அனாயாசமாக துப்பாக்கிகளால் Gang War செய்வது, விஷால் அடித்தால் மற்றவர்கள் பல அடிகள் தாண்டிப்போய் விழுவது, அலங்காநல்லூர் கிராமத்தில் இருந்து ஓடிப்போன அண்ணனைத் தேடி, மதுரையோ திருச்சியோ கோயம்பத்தூரோ அல்லது வேறு மாநிலமோ செல்லாமல், சென்னைக்கு வருவது, இன்னும் பற்ப்பல லாஜிக் மீறல்களை, விறுவிறுப்பான திரைக்கதையையும், புதிதான காட்சிகளையும் கொண்டு மறைத்து, "கமர்ஷியல் மசாலா" வெற்றிப்படத்தை கொடுக்க முனைந்திருக்கலாம். ஆனால்........................ விஷால் : டாக்டர் விஜய், ரஜினியின் கமர்சியல் மற்றும் தெலுங்கு மசாலாவை காப்பி செய்து, கமர்சியல் ஹீரோவாகிவிட்டார். விஷால், விஜயை ஜெராக்ஸ் எடுக்கிறார். என்னக் கொடுமை சார் இது. கிராமத் திருவிழாவில் குதித்து வந்து ஓபனிங் சாங். பாடல் முழுதும் பூமாரி பொழியுது. துதி பாடும் வரிகள். படம் முழுதும் காமெடி, பாட்டு, பன்ச் டயலாக், திரும்ப காமெடி, பாட்டு, பன்ச் டயலாக், திரும்ப காமெடி, பாட்டு, பன்ச் டயலாக்- இப்படியாக கமர்சியல் நாயகனாக முயற்சி எடுக்கிறார். ஒண்ணியும் வேலைக்காவல. படத்தில் பட டயலாகுகளில் "தோரணை". தாங்கல. மேலும் செல்லமே, சண்டைக்கோழி விஷால் முகம் மிஸ்ஸிங். குளோஸ்-அப் காட்சிகளில் அவர் முகம் பார்க்கவே பயமா இருக்கு. விஷால், ரொம்ப ஸ்மோக் பண்றீங்களோ??? ஷ்ரியா : படத்தில, ஷ்ரியாவ மட்டும்தான் பார்க்கற மாதிரி இருக்காங்க. அழகு + செக்ஸி. சந்தானம் : விரசமா ரொம்ப இல்லாம, ஓரளவுக்கு நல்லா பண்ணி இருக்கார். சிரிக்க வைக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல். பிராகாஷ்ராஜ் : இந்த மாதிரி படங்களில் எல்லாம் நீங்க நடிக்கணுமா பிராகாஷ்ராஜ்? சரி சரி நடிங்க. இப்படி சம்பாதிக்கும் காசை வச்சுதானே நல்ல படங்களை தயாரிக்கிறீங்க. விஷால், சந்தானம், பறவை முனியம்மா, மயில் சாமி, டி.பி.கஜேந்திரன், இவங்க எல்லாரும் ஒரே காலனிக்காரங்க. இவங்க காமெடி என்ற பெயரில் அடிக்கும் லூட்டி, உலகமகாக் கொடுமை...............முடியல.. பாடல்கள் ஓகே ரகம். "வா செல்லம்" பாடல் நல்லா இருக்கு. எல்லாப்பாடல்களிலும் ஷ்ரியா செக்ஸி. படம் துவங்கும் போது "சண்டைக்காட்சிகள் அபாயகரமானவை. பயிற்சி பெற்ற ஆட்களால் வடிவமைக்கப்பட்டவை. நீங்கள் செய்து பார்க்காதீர்கள்" என்ற அறிவிப்பு வருகிறது. ஆனால் படத்தில சண்டைக்காட்சிகள் அப்படி ஒண்ணும் பெரிசா இல்லை. கடைசியா விஷாலுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்பறேன் : சண்டைக்கோழி, மலைக்கோட்டை படங்களிலிருந்து வெளியே வாங்க. தோரணை : செம ரோதனை :: படம் பார்த்தவர்கள் வேதனை டிஸ்கி : ஆனாலும் ஒரு விஷயம், படம் கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கு. படம் சுமாரான வெற்றியை பெறலாம். விஷாலின் "சத்யம்" போல் பெருத்தத் தோல்வியாக இராது என்று நினைக்கிறேன்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com