Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

21 பிப்ரவரி 2009

கணனியில் உங்களுடைய தடயங்களை அழிக்கலாம்...!

நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ரீசைக்கிள் பின்னில் உள்ள பைல்களை அழித்துவிட்டால் மட்டும் போதுமானது ,நமது பைல்அழிந்துவிட்டது என்று ஆனால அப்படியல்ல கணிணியில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் எங்கேயோ ஓரிடத்தில் பதிவு பண்ணப்படுகிறது என்றால் அது மிகையில்லை. நீங்கள் சமீபத்தில் போன இணையதளமாகட்டும் அல்லது நீங்கள் சமீபத்தில் கேட்ட பாடல், நீங்கள் சமீபத்தில் பார்த்த வீடியோ, திறந்த கோப்புகள், படங்கள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் தடயங்களை விட்டுச் செல்கின்றன.கில்லாடி ஒருவர் கொஞ்சம் தேடினால் உங்கள் கணிணி உங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் பிட்டு பிட்டு வைத்து விடும்.இதை தவிர்க்க அதாவது நீங்கள் உங்கள் கணிணியில் விடும் தடயங்களை அழிக்க இதோ இரு மென்பொருள்கள்.சமீபத்திய உங்கள் அனைத்து செயல்களையும் நொடியில் அழித்து விடும். கணனியில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான தடயங்கள் கீழுள்ள இடங்களிலெல்லாம் சேமிக்கப்பட்டிருக்கும்.
  • Temporary files Cache
  • URL history, cookies
  • Autocomplete form history
  • Hidden index.dat files.
  • Recycle Bin
  • Recent Documents
  • Temporary files and Log files
  • Registry cleaner
  • Last download file location etc.
முதலாவது மென்பொருள் ccleaner
  • இதனுடைய தயாரிப்பு முகவரி : www.ccleaner.com
  • இலவசமாக தரவிறக்கம் செய்ய : ccleaner
75 அடுத்த மென்பொருள் MRUblaster
  • இலவசமாக தரவிறக்கம் செய்ய : MRUblaster

20 பிப்ரவரி 2009

நான் கடவுள் இல்லை: சச்சின் டெண்டுல்கர்

நான் கடவுள் கிடையாது. ரசிகர்கள் எனது காலில் விழுவது எனக்கு பிடிக்காது என்று இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் 35 வயதான சச்சின் தெண்டுல்கர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி

ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதங்கள் எனக்கு ஒரு காலத்தில் வந்தது. ஆனால் இப்போது அது மாதிரியான கடிதங்கள் வருவதில்லை. ரசிகர் ஒருவர் திடீரென உங்களது காலில் விழுந்து கும்பிட்டு நீங்கள் கடவுள் என்று சொல்லும் போது, அது ஒரு வினோதமான உணர்வாக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டார். இதனை நான் விரும்புவது இல்லை. இதனால் எனக்கு மகிழ்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் நம்மை பற்றி உயர்வாக மதித்து இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இதனை தடுக்க முடியாது.

கேள்வி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்?

பதில்: இது ஒரு பெரிய கேள்வி. ஓய்வுக்கு பிறகு என்ன செய்வேன் என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக விளையாட்டுடன் தொடர்பு வைத்துக் கொள்வேன். ஓய்வு பெறும் பொழுது ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு தானாக திறக்கும். கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிறகு, நான் தொழில் தொடங்கலாம்.ஆனால் அது என்ன தொழில் என்பது தெரியாது. அந்த சமயத்தில் அது பற்றி பல்வேறு கோணங்களில் யோசிப்பேன். ஆனால் இப்போது எனது முழு கவனமும் கிரிக்கெட்டில் மட்டுமே இருக்கிறது.

கேள்வி: கடைசியாக உங்கள் மீது வந்த சில விமர்சனங்கள் பற்றி?

பதில்: விமர்சனங்கள் பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை. இதனால் நான் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது பத்திரிகைகளை படிப்பதில்லை. அதில் தேவையில்லாத நிறைய விஷயங்கள் இருக்கும். ஆனால் சிலர் தாங்கள் எழுதும் விமர்சனங்கள் எல்லாமே சரிதான் என்று நினைத்து எழுதுகிறார்கள்.

கேள்வி: உங்கள் வாழ்க்கையில் சந்தித்த ஒரு கஷ்டமான சூழ்நிலை பற்றி சொல்ல முடியுமா?

பதில்: 1994 ம் ஆண்டு நாங்கள் சில கண்காட்சி போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தோம். அப்போது நானும் இன்னும் 2 வீரர்களும் ஓட்டலை விட்டு வெளியே சென்றிருந்தோம். திரும்பி வந்து பார்த்த போது, ஓட்டலில் சக வீரர்கள் யாரும் இல்லை. அவர்கள் அங்கிருந்து ஏற்கனவே விமான நிலையத்திற்கு சென்று விட்டனர். அவர்கள் செல்லும் போது பாஸ்போர்ட், விசா இருந்த எனது பையையும் கொண்டு சென்று விட்டனர். எங்களிடம் செல்போனும் கிடையாது. இதனால் அவர்களிடம் சென்றடைவதற்கு எந்த வழியும் இல்லை. நாங்கள் சிட்னியில் இருந்து மெல்போனுக்கு செல்ல வேண்டும். ஆனால் டிக்கெட், பாஸ்போர்ட் உள்ளிட்ட எதுவும் எங்களிடம் கிடையாது.

இதன் பின்னர் சிட்னி விமான நிலையத்திற்கு சென்று, அங்குள்ள டிக்கெட் கவுண்டரில் எங்களது நிலைமையை எடுத்து சொன்னோம். கவுண்டரில் உள்ள ஒருவர் என்னை அடையாளம் கண்டு விட்டார். எங்களது நிலைமையையும் புரிந்து கொண்டார். பாஸ்போர்ட், டிக்கெட் எதுவும் இல்லாமலேயே சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்வதற்கு மூன்று போர்டிங் பாஸ்' கொடுத்து உதவினார். அப்போது தான் நான் சிறப்புமிக்கவன்' என்பதை உணர்ந்தேன்.

கேள்வி: கடைசியாக எந்த ஒரு விளையாட்டையும் பார்க்காமல் இருந்த நாள் எது?

பதில்: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ந்தேதி. அன்று, கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மிசோரி மலைவாசஸ்தலத்திற்கு எனது குடும்பத்தினருடன் சென்று நேரத்தை செலவிட்டேன். அங்கிருந்து பார்த்த போது, மலை மீது பனி படர்ந்து அழகாக காட்சி அளித்தது. உறைந்த பனிக்கட்டியில் நீண்ட தூரம் நடந்தோம். அது ஒரு இனிமையான அனுபவம். அந்த ஒரு நாள் மட்டும் நான் எந்த ஒரு விளையாட்டையும் பார்க்கவில்லை.

கேள்வி: சமீபத்தில் நீங்கள் பெருமை அடைந்த ஒரு விஷயம்?

பதில்: இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்டின் போது எனது ஆட்டத்தை (சதம் அடித்தார்) நினைத்து உண்மையிலேயே பெருமையாக இருந்தது. அதில் இந்தியா கடைசி நாளில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

கேள்வி: இதை தவிர்த்து இருக்கலாம் என்று நீங்கள் கடைசியாக நினைத்த விஷயம்?

பதில்: மொகாலி டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி இன்னிங்சில் தவறான ஷாட் அடித்து ஆட்டம் இழந்தேன். அப்போது இந்த ஷாட்டை அடித்து இருக்கக்கூடாது; தவிர்த்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு முறை ஆட்டம் இழக்கும் போது இதைத் தான் நினைப்பேன்.

கேள்வி: உங்கள் அணியின் வீரரை ஏமாற்றிய சமீபத்திய சம்பவம்?

பதில்: அணியின் சக வீரர்களை நான் தமாஷாக ஏமாற்றுவது வழக்கம். அண்மையில் நாங்கள் எல்லோரும் ஓட்டலுக்கு சென்று, யுவராஜ்சிங்கை முட்டாளாக்கினோம். இது மிகவும் சுவையான உணவு, நீ கட்டாயம் சாப்பிட வேண்டும்' என்று கூறி அவருக்கு நாங்கள், ரொட்டியுடன் காரத்தை வைத்து கொடுத்தோம். அவரும் சாப்பிட தயாரானார். பின்னர் கடைசி நேரத்தில் வேண்டாம் என்று தடுத்து விட்டோம் என்று டெண்டுல்கர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

19 பிப்ரவரி 2009

அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்......

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். வரும் தேர்தலில் அவர் ஆந்திராவில் இருந்து போட்டியிடுவார் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழந்தவர் அசாருதீன். பீல்டிங்கில் அபாரமாக விளங்கிய அவர், இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

பின்னர் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் மாட்டிக் கொண்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதாக அக்கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளரும் முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

அசாருதீன் கட்சியில் இணைந்ததை இன்று அறிவித்த மொய்லி, அவர் விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க இருப்பதாக கூறினார்.

அசாருதீன் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, எந்த நிபந்தனையும் இன்றி அவர் கட்சியில் இணைந்திருப்பதாக கூறிய மொய்லி, அவர் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

கந்தசாமியில் விவேக் அவுட்; வடிவேலு இன்!!

சுசி கணேசனின் கந்தசாமியிலிருந்து சத்தமில்லாமல் கழட்டிவிடப்பட்டுள்ளார் காமெடியன் விவேக். அவருக்கு பதில் இப்போது வடிவேலு நடிக்கிறார். கவுண்டர் அமைதியாக ஒதுங்கிவிட்ட பிறகு, மதுரை மண்ணின் மைந்தர்களான வடிவேலுவுக்கும் விவேக்குக்கும் தமிழ் நகைச்சுவை நடிகர்களில் முதலிடம் யாருக்கு என்பதில் அறிவிக்கப்படாத ஒரு பனிப்போரே நடந்து வருகிறது. ரிலீசாகிற படங்களுக்கேற்ப சில வேளைகளில் விவேக் கொடி பறப்பதும், பெரும்பாலும் வடிவேலு கை ஓங்குவதுமாக காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. சிவாஜி படத்தில் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்ளும்படி விவேக் சுவாரஸ்யமான வேடங்கள் எதையும் செய்யவில்லை. படிக்காதவன் படத்தில் வடிவேலு நீக்கப்பட்ட, அவருக்கென்றே எழுதப்பட்ட காமெடி போர்ஷனில் விவேக் நடித்தார். ஆனால் அது அந்த அளவு எடுபடவில்லை. இருந்தாலும் வடிவேலு கால்ஷீட் கிடைக்காத கோபம், உச்சத்துக்குப் போய்விட்ட அவரது சம்பளம் காரணமாக, விவேக்குக்கு பல வாய்ப்புகள் கிடைத்துவந்தன. இப்போது நிலைமை அப்படியே தலைகீழ். விவேக்குக்கு பதில் பல படங்களில் வடிவேலுவையே ஒப்பந்தம் செய்கிறார்கள், அதிக பணம் செலவானாலும் பரவாயில்லை என்று. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விக்ரம் நடிக்க, சுசி கணேசன் இயக்கும் கந்தசாமியில் ஆரம்பத்தில் ஒப்பந்தமானவர் விவேக். ஆனால் இப்போது படத்திலிருந்து அவர் கழற்றிவிடப்பட்டுள்ளார். அந்த வேடத்தில் நடிக்கப் போகிறவர் வடிவேலு. விக்ரம்- வடிவேலு காமெடி இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இருக்கும். மற்றபடி விவேக் நடிக்காததற்கு சிறப்புக் காரணங்கள் எதுவுமில்லை என்று பதில் கூறுகிறார் சுசி கணேசன். வடிவேலு புதிதாக ஒப்பந்தமாகியுள்ள இன்னொரு பெரிய படம் ஆதவன். குருவி படத்தைத் தயாரித்த உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்திலும் முதலில் நடிக்கவிருந்தவர் விவேக்தான்.

13 வயதில் தந்தையான இங்கிலாந்து சிறுவன்

இங்கிலாந்தில் 13 வயது சிறுவன் தந்தையாகி இருக்கிறான். இங்கிலாத்தில் வெளியாகும் சன் பத்திரிகை முதல் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டது. இந்த செய்தி லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் வயதுக்கு வந்ததுமே செக்ஸ் உறவில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். லண்டனிலுள்ள ஈஸ்ட்போர்ன் நகரில் ஆல்பி பட்டேன் (Alfie Patten) எனும் 12 வயது சிறுவனும் சேர்ந்தலி(Chantelle Steadman) என்ற 14 வயது சிறுமியும் ரகசிய உறவு வைத்து இருந்தனர். இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை செர்ந்தலிக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது .குழந்தை 3.27 கிலோகிராம் நிறையுடனும் அரோக்கியமாகவும் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குழந்த்தையின் தாய்க்கு இப்போது 15 வயது ஆகிறது. குழந்தைக்கு தந்தையான சிறுவனுக்கு 13 வயதே ஆகிறது. அவர் 4 அடி உயரமே இருக்கிறார். அதற்குள் தந்தையாகி விட்டான். இதுபற்றி குழந்த்தையின் தந்தையான அல்பியிடம் கேட்டபோது , நானும் எனது காதலியும் ஒருநாள் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக்கொண்டோம். சர்ந்தலி கருவை கலைக்க கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டபோது தான் தடுத்துவிட்டதாகவும். குழந்த்தை பிறப்பதை தான் விருப்பியதாகவும், எதிர்காலத்தில் பொருளாதார பிரச்சினைகளை பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் தனது தந்தை ஒருநாளைக்கு 10 ஸ்டேலிங் பவுன்ஸ் தான் பொக்கட் மணியாக தருவார் என்று கூறியுள்ளான். அந்த நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடப்பது சாதாரணமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 15 வயதுக்கு கீழ் உள்ள 35 ஆயிரம் சிறுமிகள் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அதில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் 7 ஆயிரம் பேர். பிரிட்டனில் முதல்முறையாக இளவயதில் தந்தையானவர் என்ற பெருமையை பெட்போர்ட் மாநிலத்தை சேர்ந்த சேன் ஸ்ட்வார்ட்(Sean Stewart) ஆவார் . 1998 ஆம் ஆண்டில் இவருக்கு 12 வயது ஆனபோது பக்கத்துவீட்டு 15 வயது பெண்ணான எம்மாவேப்ச்டேர் (Emma Webster) உடன் உறவு வைத்து குழந்தைக்கு தந்தையானார் .ஆனால் இவர்கள் இருவரும் குழந்தை பிறந்து ஆறு மாதங்களிலேயே பிரித்துவிட்டனர்.

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம்இணைத்திருக்கிறேன். இது எவ்வளவுஜாலியான கம்பனின்னு படங்களைபார்த்தாலே தெரியும். ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப்பெண்மணி. ஒரு பெரிய Justify Fullஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார். இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார். ""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரிஉட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பேசெய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கிவிழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத்தேவை. அவர்கள்தான் நாலு கால்பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!'' இந்த வித்தியாசமான கம்பெனிதான்கூகிள். அதன் வினோதமானமுதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள். லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியைஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறுஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின்மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல். கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறுசைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில் தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கியிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்கஇயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000 செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்கவிலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள்என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.) நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கிஎடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலைசெய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோவாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது? கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்! கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாகமட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில்இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது. கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை. கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?) கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள். கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம். கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது; கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள். பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள். பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.) கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள். உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா -மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது. இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள். எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள். அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள். ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள். சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள். கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!! நன்றி-theentamil
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com