Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

20 பிப்ரவரி 2009

நான் கடவுள் இல்லை: சச்சின் டெண்டுல்கர்

நான் கடவுள் கிடையாது. ரசிகர்கள் எனது காலில் விழுவது எனக்கு பிடிக்காது என்று இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் 35 வயதான சச்சின் தெண்டுல்கர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி

ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதங்கள் எனக்கு ஒரு காலத்தில் வந்தது. ஆனால் இப்போது அது மாதிரியான கடிதங்கள் வருவதில்லை. ரசிகர் ஒருவர் திடீரென உங்களது காலில் விழுந்து கும்பிட்டு நீங்கள் கடவுள் என்று சொல்லும் போது, அது ஒரு வினோதமான உணர்வாக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டார். இதனை நான் விரும்புவது இல்லை. இதனால் எனக்கு மகிழ்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் நம்மை பற்றி உயர்வாக மதித்து இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இதனை தடுக்க முடியாது.

கேள்வி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்?

பதில்: இது ஒரு பெரிய கேள்வி. ஓய்வுக்கு பிறகு என்ன செய்வேன் என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக விளையாட்டுடன் தொடர்பு வைத்துக் கொள்வேன். ஓய்வு பெறும் பொழுது ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு தானாக திறக்கும். கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிறகு, நான் தொழில் தொடங்கலாம்.ஆனால் அது என்ன தொழில் என்பது தெரியாது. அந்த சமயத்தில் அது பற்றி பல்வேறு கோணங்களில் யோசிப்பேன். ஆனால் இப்போது எனது முழு கவனமும் கிரிக்கெட்டில் மட்டுமே இருக்கிறது.

கேள்வி: கடைசியாக உங்கள் மீது வந்த சில விமர்சனங்கள் பற்றி?

பதில்: விமர்சனங்கள் பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை. இதனால் நான் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது பத்திரிகைகளை படிப்பதில்லை. அதில் தேவையில்லாத நிறைய விஷயங்கள் இருக்கும். ஆனால் சிலர் தாங்கள் எழுதும் விமர்சனங்கள் எல்லாமே சரிதான் என்று நினைத்து எழுதுகிறார்கள்.

கேள்வி: உங்கள் வாழ்க்கையில் சந்தித்த ஒரு கஷ்டமான சூழ்நிலை பற்றி சொல்ல முடியுமா?

பதில்: 1994 ம் ஆண்டு நாங்கள் சில கண்காட்சி போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தோம். அப்போது நானும் இன்னும் 2 வீரர்களும் ஓட்டலை விட்டு வெளியே சென்றிருந்தோம். திரும்பி வந்து பார்த்த போது, ஓட்டலில் சக வீரர்கள் யாரும் இல்லை. அவர்கள் அங்கிருந்து ஏற்கனவே விமான நிலையத்திற்கு சென்று விட்டனர். அவர்கள் செல்லும் போது பாஸ்போர்ட், விசா இருந்த எனது பையையும் கொண்டு சென்று விட்டனர். எங்களிடம் செல்போனும் கிடையாது. இதனால் அவர்களிடம் சென்றடைவதற்கு எந்த வழியும் இல்லை. நாங்கள் சிட்னியில் இருந்து மெல்போனுக்கு செல்ல வேண்டும். ஆனால் டிக்கெட், பாஸ்போர்ட் உள்ளிட்ட எதுவும் எங்களிடம் கிடையாது.

இதன் பின்னர் சிட்னி விமான நிலையத்திற்கு சென்று, அங்குள்ள டிக்கெட் கவுண்டரில் எங்களது நிலைமையை எடுத்து சொன்னோம். கவுண்டரில் உள்ள ஒருவர் என்னை அடையாளம் கண்டு விட்டார். எங்களது நிலைமையையும் புரிந்து கொண்டார். பாஸ்போர்ட், டிக்கெட் எதுவும் இல்லாமலேயே சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்வதற்கு மூன்று போர்டிங் பாஸ்' கொடுத்து உதவினார். அப்போது தான் நான் சிறப்புமிக்கவன்' என்பதை உணர்ந்தேன்.

கேள்வி: கடைசியாக எந்த ஒரு விளையாட்டையும் பார்க்காமல் இருந்த நாள் எது?

பதில்: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ந்தேதி. அன்று, கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மிசோரி மலைவாசஸ்தலத்திற்கு எனது குடும்பத்தினருடன் சென்று நேரத்தை செலவிட்டேன். அங்கிருந்து பார்த்த போது, மலை மீது பனி படர்ந்து அழகாக காட்சி அளித்தது. உறைந்த பனிக்கட்டியில் நீண்ட தூரம் நடந்தோம். அது ஒரு இனிமையான அனுபவம். அந்த ஒரு நாள் மட்டும் நான் எந்த ஒரு விளையாட்டையும் பார்க்கவில்லை.

கேள்வி: சமீபத்தில் நீங்கள் பெருமை அடைந்த ஒரு விஷயம்?

பதில்: இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்டின் போது எனது ஆட்டத்தை (சதம் அடித்தார்) நினைத்து உண்மையிலேயே பெருமையாக இருந்தது. அதில் இந்தியா கடைசி நாளில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

கேள்வி: இதை தவிர்த்து இருக்கலாம் என்று நீங்கள் கடைசியாக நினைத்த விஷயம்?

பதில்: மொகாலி டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி இன்னிங்சில் தவறான ஷாட் அடித்து ஆட்டம் இழந்தேன். அப்போது இந்த ஷாட்டை அடித்து இருக்கக்கூடாது; தவிர்த்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு முறை ஆட்டம் இழக்கும் போது இதைத் தான் நினைப்பேன்.

கேள்வி: உங்கள் அணியின் வீரரை ஏமாற்றிய சமீபத்திய சம்பவம்?

பதில்: அணியின் சக வீரர்களை நான் தமாஷாக ஏமாற்றுவது வழக்கம். அண்மையில் நாங்கள் எல்லோரும் ஓட்டலுக்கு சென்று, யுவராஜ்சிங்கை முட்டாளாக்கினோம். இது மிகவும் சுவையான உணவு, நீ கட்டாயம் சாப்பிட வேண்டும்' என்று கூறி அவருக்கு நாங்கள், ரொட்டியுடன் காரத்தை வைத்து கொடுத்தோம். அவரும் சாப்பிட தயாரானார். பின்னர் கடைசி நேரத்தில் வேண்டாம் என்று தடுத்து விட்டோம் என்று டெண்டுல்கர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com