18 பிப்ரவரி 2009
கிளமராய் நடிப்பதில் தப்பு என்ன ...? லட்சுமிராய்!.
இந்த ஆண்டில் அதிகமான கிசுகிசுக்களில் சிக்கியவர் யார் என்று போட்டி நடத்தினால் முதல் இடத்தை பிடிப்பவராக இருப்பார் லட்சுமிராய்!. அந்த அளவு கிசுகிசுக்களில் அடிபட்டிருக்கிறார்.
அழகா இருக்கீங்க... கிளாமராகவும் நடிக்கிறீங்க... எல்லோருடனும் ஃபிரண்ட்லியா தான் பழகறீங்க... ஆனாலும் தமிழ் சினிமாவில் இன்னும் நிலையான இடமும், உச்ச அந்தஸ்தும் பெற முடியாமல் போகிறதே... என்று ஆரம்பித்த உடனேயே, மூச்சு விடாமல் கொட்டித் தீர்த்துவிட்டார் லட்சு!
''மிஸ் பெல்காம் அழகிப்பட்டம் வென்ற நான் நடிக்க வந்தது ஒரு விபத்துனுதான் சொல்லணும். சினிமாவில் சம்பாதித்து குடும்பம் நடத்தணும் என்ற அவசியம் எனக்கு இல்லை. வசதியான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். சினிமாவில் ஒரு ஸ்டார் நடிகையாக வரணும் என்பதற்காகதான் நடிக்க வந்தேன். என்னுடைய ரோல் மாடல் இந்தி நடிகை ரேகா. அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் என்னோட ஆசை... கனவு... எல்லாம்.
கற்க கசடற படம் மூலம் தமிழில் அறிமுகமானேன். என் முதல்படம் சுமாராகத்தான் போனது. எனக்கு அப்போதெல்லாம் சினிமா பற்றி எதுவும் தெரியாது. அதனால் சிறிய இடைவெளி விழுந்தது. தமிழ்ல மட்டுமில்லாம தெலுங்கிலயும் நடிக்க ஆரம்பிச்சேன். அங்கு நான் நடிச்ச 'காஞ்சனமாலா' வில் கிளாமரா ஆக்ட் பண்ணியிருந்தேன். அந்த படமும் எனக்கு பெரிதாக பேர் வாங்கித் தரலை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று குறுகிய காலத்தில் நான்கு மொழிகளில் நடித்திருக்கிறேன்.
இன்னும் எந்த மொழியிலும் எனக்கு பெரிய திருப்புமுனையான படம் அமையலை என்றாலும் ரசிகர்களிடையே எனக்கென்று ஒரு அலை இருப்பதை பார்க்க முடிகிறது. இளைஞர்களுக்கு நான் ரசிக்கதக்க நடிகையாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியான விஷயம். என்னிடம் அழகும், இளமையான உடற்கட்டும், திறமையும் இருந்தும் என்னால் முதலிடம் பிடிக்கும் தகுதிகள் இருந்தும் பெறமுடியாமல் போக காரணம் இதுவரை சவாலான காதாபாத்திரங்கள் அமையவில்லை என்பதுதான் உண்மை.
நான் ரொம்ப எதிர்பார்த்த 'வெள்ளித்திரை' சரியா போகாதது கொஞ்சம் ஏமாற்றம்தான். நான் கவர்ச்சியாக நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறேன். சிலர் தங்களால் முடியவில்லையே என்ற என்னை பற்றி வேறு மாதிரி பேசுகிறார்கள். என்னிடம் அழகும், இளமையும், அதற்கேற்ற உடல்வாகும் இருக்கு. நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். அந்த கேரக்டருக்கு அவசியம் என்பதால் செய்கிறேன் இதில் என்ன தப்பு?
என்னுடைய வளர்ச்சியை தடுப்பதுக்காகவே என்னை பற்றி தினமும் ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டிருக்கிறது. இதை பரப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. ஒரு நடிகருடன் சிரித்து பேசினால் தப்பு. கைகுலுக்கி நின்றால் தப்பு. புதிதாக கார் வாங்கினாலும் தப்பா நியூஸ் வருது. இப்படி யாரோ கிளப்பி விட்டதை எழுதி என்னோட இமேஜை கெடுத்து வருகிறார்கள். என்னைப் பற்றி என் குடும்பத்துக்கும் என் நண்பர்களுக்கும் தெரியும். இதனால் நான் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
சினிமா வட்டாரத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவர்களுடன் வெளியே செல்வதும் பேசி பழகுவதும் தவிர்க்க முடியாதது. என்னால் மறக்க முடியாத மிக சிறந்த நண்பர் மறைந்த ஜீவா சார். அவரது இழப்பு தாக்க முடியாதது. தமிழ் சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்க இன்னும் தன்னம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். அந்த இடத்தையும் பிடிப்பேன்'' என்று ஒரே மூச்சில் படபடத்தவர் கொஞ்சம் ஜீஸ் குடித்தபிறகுதான் கூலானார்.