நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ரீசைக்கிள் பின்னில் உள்ள பைல்களை அழித்துவிட்டால் மட்டும் போதுமானது ,நமது பைல்அழிந்துவிட்டது என்று ஆனால அப்படியல்ல கணிணியில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் எங்கேயோ ஓரிடத்தில் பதிவு பண்ணப்படுகிறது என்றால் அது மிகையில்லை.
நீங்கள் சமீபத்தில் போன இணையதளமாகட்டும் அல்லது நீங்கள் சமீபத்தில் கேட்ட பாடல், நீங்கள் சமீபத்தில் பார்த்த வீடியோ, திறந்த கோப்புகள், படங்கள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் தடயங்களை விட்டுச் செல்கின்றன.கில்லாடி ஒருவர் கொஞ்சம் தேடினால் உங்கள் கணிணி உங்களை பற்றிய அனைத்து விவரங்களையும் பிட்டு பிட்டு வைத்து விடும்.இதை தவிர்க்க அதாவது நீங்கள் உங்கள் கணிணியில் விடும் தடயங்களை அழிக்க இதோ இரு மென்பொருள்கள்.சமீபத்திய உங்கள் அனைத்து செயல்களையும் நொடியில் அழித்து விடும்.
கணனியில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான தடயங்கள் கீழுள்ள இடங்களிலெல்லாம் சேமிக்கப்பட்டிருக்கும்.
- Temporary files Cache
- URL history, cookies
- Autocomplete form history
- Hidden index.dat files.
- Recycle Bin
- Recent Documents
- Temporary files and Log files
- Registry cleaner
- Last download file location etc.
- இதனுடைய தயாரிப்பு முகவரி : www.ccleaner.com
- இலவசமாக தரவிறக்கம் செய்ய : ccleaner
- இதனுடைய தயாரிப்பு முகவரி : www.javacoolsoftware.com
- இலவசமாக தரவிறக்கம் செய்ய : MRUblaster