ஷில்பா ஷெட்டி மாதிரியே, தமிழர்களின்மனசில் கெட்டியாக ஒட்டிக் கொண்ட இன்னொருபியூட்டி, ஷமீரா ரெட்டி! பாலிவுட்டிலிருந்துகோலிவுட்டுக்கு வர நேரம் காலம் ஆனாலும், வந்த வேகத்திலேயே அடுத்த ரயிலும் தயாராகஇருந்தது அவருக்கு.
வாரணம் ஆயிரத்திற்கு பிறகு ஷமீராவை ஏந்திக் கொள்ள காத்திருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். அசல் படத்தில் தலயோடு ஜோடி சேரப்போவது ஷமீராதானாம். வாரணம் ஆயிரத்திற்கு பிறகு, இவரது இல்லத்தை தட்டிய வேறு சில ஹீரோக்கள், சம்பளத்தை கேட்டு தாறு மாறாக ஓடி வந்தாலும், தைரியமாக நின்றது சிவாஜி புரடக்ஷன்தான். சரணிடம் கதை கேட்ட அடுத்த வினாடியே,"பிடிச்சிருக்கு" என்று பச்சை கொடி காட்டிவிட்டாராம் ஷமீ.
அசலை பொருத்தவரை சொல்ல முடியாத சந்தோஷம் இன்னொன்று. முந்தைய படத்தில் ஷமீராவை விட, சூர்யா கொஞ்சம் உயரம் குறைவு. இதை பேலன்ஸ் செய்வதற்காகவே பல காட்சிகளை மெனக்கட்டு எடுத்தார்களாம். அஜீத்தோடு சேரும்போது உயரம் ஒரு தடையல்ல என்ற சந்தோஷம் ஷமீராவுக்கு. நியாயமாக இந்த சந்தோஷம் கேமிராமேனுக்கல்லவா இருக்க வேண்டும்?