Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

17 பிப்ரவரி 2009

கணவர் கொடுத்த தைரியம் - பாடகி குஷ்பு !

தமிழ்ச் சினிமாவில் சுமார் பத்தாண்டுகள் கனவு கன்னியாக இருந்தவர், குஷ்பூ புடவை, குஷ்பூ இட்லி, குஷ்பூ மெட்டி என்று பேசப்பட்டவர்.

இவர் எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கிறாரோ அந்த ஹீரோவின் படங்கள் வெற்றிவாகை சூடும். இவர் ஜோடி சேராத போது அவர்களின் படங்கள் தோல்வியை தழுவும். உதாரணம் பிரபு, ஜெயராம், இந்த அதிர்ஷ்ட தேவதையை கைபிடித்ததும் சுந்தர்.சி உச்ச நட்சத்திரங்களின் இயக்குநரானார் இன்று அவரே மினிமம் கியாரண்டியுள்ள ஒரு ஹீரோவோகிவிட்டார்.

இரண்டு குழந்தைகளின் தாயான குஷ்பு , இப்போது சின்னத்திரையில் நட்சத்திர நாயகியாக, படத் தயாரிப்பாளராக இருக்கிறார். திறமையான அழகான நடிகை, நல்ல மனைவி, நல்ல தாய், நல்ல தயாரிப்பாளர், நல்ல குடும்பத் தலைவி என பலவற்றில் தகுதியுடன் திகழும் குஷ்பூ இதோ இன்னொரு புது அவதாரம் எடுத்திருக்கிறார். ஜெயா டி.வி.யில் ஜாக்பாட் நிகழ்ச்சியை தமது கொஞ்சும் தமிழால் நடத்தி வரும் குஷ்பூ சொந்தக் குரலில் முதல் முறையாக ஒரு தமிழ்படப் பாடலை பாடியிருக்கிறார்.

இந்தியை தாய்மொழியாக கொண்ட குஷ்பூவை, தமிழ் பாடலை பாட வைத்து புண்ணியம் தேடிக்கொண்டவர் இயக்குநர் டி.பி.கஜேந்திரன். அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'மகனே என் மருமகனே' படத்திற்காக ஒரு பாடலை பாடித் தர வேண்டும் என்று கஜேந்திரன் நேரில் சென்று கேட்டுக் கொண்டதும், அவரது அன்பான பேச்சுக்கு மரியாதைக் கொடுத்து பாட சம்மதித்தாராம் குஷ்பூ.

நடிகர் சிம்பு, ஜீவா, சுந்தர்.சி. போன்று பல நட்சத்திரங்களை பாட வைத்த பெருமை பெற்ற தினா இசையில்தான் குஷ்பூ இந்த பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் தினாவை தொடர்பு கொண்ட போது ''இது ரொம்ப சந்தோஷமான விஷயம். பெருமையான விஷயம் என்று பேச்சைத் துவங்கினார். குஷ்பூ, பல்லவி மட்டும் பாடியிருக்கிறாரா அல்லது அனு பல்லவி பாடியிருக்கிறாரா? எத்தனை வரிகள் பாடினார்...?

முழுப்பாடலையும் அவர்தான் பாடியிருக்கிறார்!

எத்தனை மணி நேரம் எடுத்துக் கொண்டார்.... பாடுவதற்கு திணறினாரா?

''கவிஞர் சினேகன் எழுதி கொடுத்த பாடல் பிரதியை கையில் வைத்து கொண்டு கொஞ்சம் முழுக்க படித்தும், முணுமுணுத்தும் மனப்பாடம் செய்தார். அவசரப்படாமல், பதட்டப்படாமல் பொறுமையாக அதே சமயத்தில் நேர்த்தியாக நாலுமணி நேரம் எடுத்து கொண்டு அழகாக பாடி முடித்தார்.''

குஷ்பூவை பாட வைக்க அவசியம் என்ன?

''படத்துல இந்த சுச்சுவேஷன் புதுசு. அதுக்கு தகந்த மாதிரி வாய்ஸ் கூட புதுசா இருந்தால் நல்லாயிருக்கும். அதுமட்டுமல்ல தமிழுக்கும் ஒரு புதுக்குரல் கிடைத்த மாதிரியிருக்கும்னு டைரக்டர் கிட்டே என்னோட சஜஷனை வெச்சேன். அவரும் குஷ்பூ மேடம் கிட்டே பேசி அனுமதி வாங்கிட்டார். இதுல எனக்கு என்ன பெருமை தெரியுமா? மேடத்தோட கணவர் சுந்தர்.சி. முதல்ல பாடியது என்னோட இசையில் தான். ('வாடீ ஏங்கப்ப கிழங்கே ரீமிக்ஸ்’) அந்த பாட்டு ஹிட்டானது. அதேபோல திருமதி குஷ்பூ பாடுற முதல் பாட்டுக்கூட என் இசையில் தான். இதுவும் ஹிட் ஆகும். கணவன், மனைவி இரண்டு பேரும் என்னுடைய இசையில் பாடியது எனக்கு பெருமை. இதைத்தான் ரொம்ப சந்தோஷமான விஷயம்னு சொன்னேன்'' என்கிறார் தினா.

இயக்குநர் பாலசந்தர் இயக்கிய 'ஜாதி மல்லி' படத்தில் ஒரு பாடகியாக நடித்திருந்தார். இப்போதுதான் அவர் நிஜமாகவே ஒரு பாடகியாகி இருக்கிறார்.

சரி இதுபற்றி குஷ்பூ என்ன சொல்கிறார்... அந்த பாடல் வரிகள் என்ன?

''நான் முறைப்படி சங்கீதம் கத்துக்கலை.. முறைப்படி கற்றவர்கள் சுருதி லயத்தோடு நன்றாக பாடுவார்கள். ஏதோ கேள்வி ஞானம் கொஞ்சம் உண்டு. சொந்தக் குரலில் பாடுவது எத்தனை கஷ்டம்னு பாடிய பிறகுதான் தெரிஞ்சுது.

என்னைப் பாடச் சொல்லி டைரக்டர் டி.பி.கஜேந்திரன் கேட்டபோது அய்யோ மாட்டேன்னு மறுத்துட்டேன். அவர் ரொம்ப வற்புறுத்தினார். சுந்தரே பாடகராகிட்டார். ஏன் நம்மாள முடியாதுன்னு நினைச்சு ஓ.கே சொன்னேன். தினா, எப்படி பாடறதுன்னு எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் மாதிரி ஒரு பொறுமையான இசையமைப்பாளர் கிடைச்சதால டென்ஷன் இல்லாம பாடி முடிச்சேன். சினேகனும் பாவம் போனாப் போகுதுன்னு எனக்காக எளிமையான வரிகளை எழுதிக் கொடுத்தார்'' என்று சிரிக்கிறார் பாடகி குஷ்பு!.

குஷ்பு பாடிய பாடல் வரிகள் ...

''நட்சத்திரம் நட்சத்திரம் பூமியில் பாடு... தினம் ராத்திரியில் உன் கனவில் வருவது யாரு... ரசிகரோட கைதட்டுல ஏறுதுபோதை வெள்ளித்திரையில... ஒரு ரகசியத்தை சொல்லட்டுமா நீ கொடு காதை''

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com