Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

18 பிப்ரவரி 2009

பெருமாள் - விமர்சனம்

'ட்ரக் அடல்டிரேஷன்' என்ற சீரியஸ்சான ஒரு கதைக் கரு. மருந்துகளில் போலி மருந்துகளை கலப்படம் செய்பவர்களையும், தன் சுய லாபத்திற்காக தவறான மருந்துகளால் நோயாளிகளின் உயிரை பறிக்கும் அநியாயக்காரர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருவைத் தான் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் சொல்ல வந்த விஷயத்தை விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லாமல், சுந்தர்.சி வில்லகளின் முகத்தைக் கிழிப்பதிலும் மூக்கை உடைப்பதிலும், நமீதாவின் கவர்ச்சிக் குத்தாட்டங்களிளும் மட்டுமே அதிக கவனம் கொண்டு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வின்சென்ட் செல்வா.

தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால பயணத்திற்கு பிறகும் இது மாதிரியான சித்தரிப்புகளையும் சந்திக்க வேண்டிய விதி ஏற்பட்டிருக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது , தமிழ் படமா? இல்லை தெலுங்கு படமா? ன்னு பெரிய குழப்பமே வருது.

ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ஏதோவொறு பட பிடிப்பு நடந்து கொண்டிருக்க, இங்க சரியா நடிக்கிறதுக்கு ஆள் இல்லையாம் அதான் என்ன கூப்டாங்க என்று போன் பேசும் சுந்தர்.சி தான் படத்துக்கு ஹீரோ. (நான் தான் ஹீரோன்னு அவரே சொல்லிக்கிறாருன்னா பாருங்களேன்). டமால் டுமீல் சத்தங்களுக்கு நடுவில் அல்வா மாதிரி நமீதாவும், மல்லிப்பூ மாதிரி மீனாட்சியும் எப்போதாவது வந்து வந்து போறாங்க.

சாமுராய், குருவி, படிக்காதவன் என பல படங்களை துண்டு துண்டா வெட்டி ஒண்ணு சேத்து 'பெருமாள்' படம் பண்ணி இருக்கிறார் இயக்குநர். ஆந்திரா மாநில மருத்துவமனையில் போலீஸ் அனுமதியோடு நடக்கிறது 'ட்ரக் அடல்டிரேஷன்'. இதை ஜூனியர் டாக்டர் மீனாட்சி தெரிந்துக்கொள்ளாகிறார். விஷயம் அறிந்த மீனாட்சியை வில்லன் கும்பல் கடத்திவிட, அந்த கும்பலிடமிருந்து தப்பித்து சென்னையில் இருக்கும் சுந்தர்.சியிடம் தஞ்சம் அடைகிறார் மீனாட்சி. மீனாட்சியிடம் நடந்ததைக் கேட்டு வில்லன் கும்பலை அடித்து திம்ஸம் செய்து தியாகியாகி விடுகிறார் சுந்தர்.சி. படத்தில் சுந்தர்.சியை விடவும் கத்தி, துப்பாக்கி எல்லாம் ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கு. நமீதாவும் மீனாட்சியும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியாச்சி, வில்லன்களை அடித்து கிழித்து சுந்தர்.சி ஹீரோவாகியாச்சி, இதற்கு பிறகு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் புகைப்படங்களை காண்பித்து நெஞ்சை நக்குவது இயக்குநாருக்கு தேவை இல்லாத வேலை.

விவேக்கிடமிருந்து தெலுங்கு வசனங்கள் எல்லாம் ரொம்ப நல்லாவே வருது, ஆனா காமெடி மட்டும் வரவே மாட்டேங்குதேப்பா!

கோட்டா ஸ்ரீனிவாசராவ் எப்போதும் போலவே தன் காமெடியான வில்லாத் தனங்களோடு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். எப்போவறாங்க எதுக்குவறாங்க என்றுதெரியாமல் திடீர்னு வந்து காமெடி என்கிற பெயரில் சுந்தர்.சியின் அண்ணன்களாக வரும் இளவரசு, தாமு, லக்ஷ்மணன் செய்யும் அளப்பரைகள்... ஐயோ அம்மா தாங்க முடியல!

எப்போதும் போலவே இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இல்லாமைக்கு மீண்டும் பழைய பாடல்களின் மெட்டுகள் கை கொடுத்திருக்கின்றன. 'காதல் வைப்போகமே' ரீமிக்ஸ், நமீதாவின் டான்ஸ்ஸோடு பட்டையை கிளப்புகிறது! பின்னணி இசையில் டமால் டுமீல் சத்தங்கள் மட்டுமே... காது ஜவ்வு கிழியுடா சாமி!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com