சினிமா ஆசையில் சென்னைக்கு கிளம்பி வந்து திருதிருவென முழித்துக்கொண்டிருக்கும் ஆசாமிகளுக்கு வரமாக ஷங்கர் இயக்கிய பாய்ஸ் பட விளம்பரம் அமைந்தது.
இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவிருப்பதாகவும் படத்தில் ஐந்து ஷீரோ,ஹீரோயின்கள் என்றும் நடிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
திருதிரு ஆசாமிகள் எல்லாம் விறுவிறுன்னு ஷங்கர் அலுவலகத்துக்கு அப்ளை பண்ணிச்சுங்க. ஆனா, ஒரு கூத்து பாருங்க. இப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு வாய்ப்பு அமையல.
இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநர்(சித்தார்த்), நடிகை தேவயானி தம்பி(நகுலன்) என்று ஷங்கர் டீம் தேர்ந்தெடுத்தது. பரத்,மணிகண்டன் என்று மற்ற பலரும் சினிமா வட்டாரங்களில் பழக்கப்பட்டவர்களின் மூலமாகவே தேர்வானாங்க. நடிகைகளும் அப்படித்தான்.
இதில் ஒரு பெருங்கூத்து என்னன்னா, புதுமுகம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட ஹரிணி, ஏற்கெனவே ‘துஜே மேரி கஸம்’ என்ற இந்திப்படத்தில் அறிமுகமானவர்.
பாய்ஸ் உட்பட ஹரிணி நடித்த சில படங்கள் ப்ளாப் ஆனதால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டார்.
பெயர் ராசிதான் நமக்கு இப்படி ஒரு அவப்பெயரை தந்துவிட்டது என்று முடிவெடுத்த ஹரிணி, தனது பெயரை ஜெனிலியா என்று மாற்றிக்கொண்டு சச்சின் படத்தில் விஜய்யுடன் நடித்தார். இப்படமும் ப்ளாப்.
பரத்துடன் நடித்த சென்னைக்காதலும் ப்ளாப். இதனால் ஜெயம்ரவி நடித்த தீபாவளி உட்பட சில படங்களில் இருந்து ஜெனிலியா நீக்கப்பட்டார்.
இந்த சமயம் பார்த்து பாய்ஸ் படத்தில் ஜோடி போட்ட சித்தார்த்துடன் மறுபடியும் ஜோடி போட்ட மொம்மரிலு தெலுங்குப்படம் செம ஹிட். ப்ளாப்...ப்ளாப்புன்னு போய்க்கொண்டிருந்த ஜெனிலியா லைப்புக்கு செம க்ளாப் கிடைச்சது.
இந்த படம் தமிழில் சந்தோஸ் சுப்ரமணியம் என்று தமிழில் ரீமேக் செய்யப்பட்ட போதும் இவரையே நடிக்க வைத்தனர்.
குறும்பு நடிப்பால் கவர்ந்தார். ஆனாலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை.
பரத்துடன் காதல், ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குநர் ராஜாவுடன் காதல்னு கிசுகிசுக்கள் பரவினதுதான் மிச்சம்.
ஆனா,உண்மையில் ஜெனிலியா தன் முதல் பட நாயகனை லவ்விக்கொண்டிருந்திருக்கிறார்.
துஜே மேரி கஸம் படத்தின் நாயகன் ரிதேஷ்முக் உடன் அவ்வப்போது டேட்டிங் போயிருக்கிறார். இத கண்டுக்கிட்டவங்க கிட்ட நானும் அவரும் ப்ரண்ட்ஸ்..தப்பா நெனக்காதீங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கிறார் ஜெனிலியா.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையின் ஜூஹூ பகுதியில் நடிகர் துஷார்கபூர் தனது பங்களாவில் பார்ட்டி வச்சிருந்திருக்கிறாரு. மிட் நைட் 11 மணிக்கு அந்த பார்ட்டிக்கு ரிதேஷ்முக் ஆஜர். அடுத்து அங்கே ஜெனிலியாவும் ஆஜர்.
மிட்நைட் 1.30மணிக்கு தேஷ்முக் தனது காரில் புறப்பட ஜெனிலியாவும் அவர் காரிலேயே சவாரி செய்திட்டார்.
ஜெனிலியா சவாரிக்கு வந்துட்டதால ரிதேஷின் நண்பர் அங்கேயே அம்போன்னு விடப்பட்டார்.
இந்த வெறுப்பில் தானோ என்னவோ, அந்த நண்பர்.. ‘ரெண்டு பேரும் காதலிக்கிறாங்க..ஜெனிலியா ஆங்கிலோ இந்தியன் என்பதால இந்த காதலுக்கு தேஷ்முக் வீட்டுல எதிர்ப்பு இருக்கு. அதனாலதான் அவுங்க ரசசியமா லவ் பண்ணுறாங்க’ன்னு என்று அங்கிருந்தவங்க கிட்ட போட்டு உடைச்சிட்டாரு.
இத கேள்விப்பட்டதும் முன்னால் மகாராஷ்டிர முதல்வர் விலாஷ்ராவ் தேஷ்முக்குக்கு விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கோபம் தலைக்கு ஏறியிருக்கு. அவருக்கு ஏன் கோபம் தலைக்கு ஏறனும்னு கேட்குறீங்களா. .. அவருதாங்க..ரிதேஷின் அப்பா.