02 டிசம்பர் 2009
பின்னழகை எடுப்பாக்க ஆபரேஷன் - உயிரிழந்த அர்ஜென்டினா அழகி
பியூனஸ் அயர்ஸ்: பின்னழகை அழகாக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் மிஸ் அர்ஜென்டினா அழகி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது பெயர் சோலங்கே மக்னானோ. 37 வயதாகும் இவர் 2 குழந்தைகளுக்குத் தாயாவார். கடந்த 1994ம் ஆண்டு மிஸ் அர்ஜென்டினா அழகிப் பட்டம் வென்றவர்.
இவர் தனது பின்னழகை எடுப்பாக காட்ட அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் இது பலமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. இதன் காரணமாக அவருக்கு நுரையீரலில் அவருக்கு அடைப்பு ஏற்பட்டு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனால் உயிரிழந்து போனார்.
பின்னழகை எடுப்பாக்க நடந்த அறுவைச் சிகிச்சையின்போது மக்னானோவுக்கு போடப்பட்ட ஊசி மருந்துகள், நேரடியாக அவரது மூளையையும், நுரையீரலையும் தாக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டாக்டர் கான்சாலோ கார்ட்ஸ் என்பவர் தனது பின்னழகை சற்றே எடுப்பாக மாற்றிக் கொள்வதற்காக செய்து கொண்ட சிகிச்சையால் தற்போது தனது உயிரை பரிதாபமாக இழந்துள்ளார் மக்னானோ என்றார் வருத்தத்துடன்.
மக்னானோவின் இறுதிச் சடங்கை அர்ஜென்டினா டிவி நேரடியாக ஒளிபரப்பியது.
கூகிளில் படத்தை (Image) எவ்வாறு விரும்பிய நிறத்தில் தேடுவது
இன்றைய இணைய உலகில் எங்களின் உற்ற நண்பனாகிவிட்ட கூகிள் தேடும் பொறியில் (Google search engine), எமக்கு தேவையான படத்தை (Image) எவ்வாறு நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் குறிப்பிடுகின்றேன். இது பற்றி பலருக்கு தெரிந்திருக்கும் என்றாலும் சிலருக்காவது என் பதிவு உதவும் என நினைக்கிறேன். நீங்கள் அழகிய மஞ்சள் நிற ரோஜா பூவைத் (Yellow colour Rose) தேட வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்... அதாவது கூகிள் பட தேடலின் (URL- Address Bar)இல் கடைசியில் &imgcolor=yellow என்று சேர்த்தால் போதும். அதாவது http://images.google.com/images?q=rose&imgcolor=yellow படத்தை பாருங்க.....
   
மிகச் சிறிய MP3 பிளேயர்
உலகிலேயே மிகச் சிறிய MP3 பிளேயரை (Player) Japan நிறுவனமொன்று அறிமுகம் செய்துள்ளது.  இதன் அளவு Blue-tooth handset ஜ விட சிறியது. கவலை தரும் விடயம் என்னவென்றால் ஜப்பானில் மட்டுமே தற்போது வாங்க முடியும் (only available in Japan).
ஏனைய MP3 பிளேயர்களைப் போலவே,  இந்த சிறிய MP3 பிளேயரும் எல்லா
வசதிகளையும் கொண்டுள்ளது....
- 4 GB சேமிப்பகம் (memory)
 - USB ஊடாக பாடல்கள் மாற்றக்கூடிய, சார்ஜ் செய்யக்கூடிய வசதி
 - மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய Li battery வசதி
 - Stereo ஒலி
 - மேலதிக மென்பொருள் இல்லாமல் PC இல் இருந்து பாடல்களை எந்த Operating System இல் இருந்தும் மாற்றலாம்.
 
பொறுத்திருங்கள் நண்பர்களே, நம்மட நாட்டு சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.
ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன்-அமீர்
என் நாய்க்கு ஷாரூக் என்று பெயர் வைத்திருப்பது ஷாருக்கானின் குழந்தைகளைப் பாதித்திருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் ஷாரூக்கிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதேநேரம் இனி என் நாயை ஷாரூக் என்று அழைக்கவும் மாட்டேன்" என்று கூறியுள்ளார் அமீர்கான்.
பாலிவுட் முன்னணி நடிகர்களான அமீர்கான், ஷாருக்கானுக்கு இடையே பனிப்போர் நடந்துவருகிறது. அமீர்கான் சமீபத்தில் தன்னுடைய பிளாக்கில் எழுதும் போது, தன் வீட்டில் ஒரு நாய் இருப்பதாகவும், அதை ஷாரூக் என்று அழைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஷாருக் மீதான பொறாமை காரணமாகவே, அமீர்கான் இவ்வாறு எழுதியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், மும்பையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் இதுபற்றி பேசிய அமீர்கான், 'ஷாருக்கின் குழந்தைகள் என் பிளாக்கை கடந்த ஒரு வருடமாக படித்து வருகிறார்கள்.
நான் என்னுடைய நாய் குறித்து எழுதியது அவர்களை காயப்படுத்தி இருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஷாருக்கின் குழந்தைகளிடம்தான் மன்னிப்பு கேட்கிறேன். ஷாருக்கானிடம் அல்ல. எனெனில் ஷாருக்கிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லையே.
எனினும், நான் எனது நாயை இனி ஷாருக் என அழைக்கப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்' என்றார்.
இது சீரியஸான மேட்டரில்லை!-ஆக்கர் ஸ்டுடியோ
திரைத்துறையில் ஏற்படும் சாதாரண விஷயம்தான் இது. ஆக்கர் ஸ்டுடியோ இதை பார்த்துக் கொள்ளும். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். கோவா பட ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஆக்கர் ஸ்டுடியோ.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் முதல் படம் கோவா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பாடல் வெளியீ்ட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படம் முதலில் ரஜினியின் பிறந்த நாளன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படத்தின் ஆடியோவை ரஜினி பிறந்த நாளன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இரண்டுமே இப்போது நடக்குமா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
காரணம், கோவா படத்துக்கு பைனான்ஸ் செய்த வருண் என்பவர் கோர்ட்டுக்குப் போய் டிசம்பர் 11 வரை படம் வெளியாகக் கூடாது என தடை உத்தரவு வாங்கியுள்ளார்.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினியின் ரியாக்ஷன் குறித்து அறிய ஆக்கர்ஸ் ஸ்டுடியோவைத் தொடர்பு கொண்டோம்.
சௌந்தர்யா சார்பில் பேசிய அவரது உதவியாளர், "இது ஒரு சீரியான மேட்டரே இல்லை. சினிமாவில் இது சாதாரண விஷயம். படத்துக்கு பைனான்ஸ் வாங்கியது உண்மை. அதில் சிறிய தாமதம் ஏற்பட்டுவிட்டது. இனி இந்த விவகாரத்தை ஆக்கர்ஸ் ஸ்டுடியோ பார்த்துக் கொள்ளும். திட்டமிட்டபடி படம் வெளியாகும்" என்றார்.
ஆசினுடன் வேகமாக நெருங்கும் சல்மான்
விண்டோஸ் 7 : ஒரே சொடுக்கில் கோப்புகளைத் திறக்க
How to Open Files with a Single-Click in Windows 7
How to Open Files with a Single-Click in Windows 7?
We need to twice click to open any file / shortcut / folder in Windows 7 by default.
Do you want to make single click to open any item in windows 7?
Do the following steps:
Open My Computer
In your keyboard, Please do press ALT key.
Now you can able to see File, Edit Menu on top.
Please select Folder options in Tools Menu
Click on Single click to open an item (point to select)
Press OK.
Make mouse clicking easy - change from double click to single click
Make mouse clicking easy - change from double click to single click. Click once on a floder to open it or even underline it when you hover over it.
கிளாமரில் கலக்கும் சங்கீதா
| ‘பிதாமகன்’ மூலம் இரண்டாவது என்ட்ரி கொடுத்த சங்கீதா அதன் பிறகு ‘உயிர்’, ‘தனம்’ போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்தார். அதன்பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் சாரமாரியாக வந்து கொட்ட ஆரம்பித்தன. | 
 இதற்கிடையில் திருமணம் செய்து கொண்டாலும் சங்கீதா தொடர்ந்து கலைச் சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் நடிப்பில் இப்போது வெளிவந்துள்ள படம் ‘நான் அவன் இல்லை 2’. இதில் இவர் அவ்வளவாக கவர்ச்சியாக நடிக்காவிட்டாலும், நடிப்பில் கலக்கியிருக்கிறாராம். இப்போது தெலுங்கில் சங்கீதா நடித்து வரும் ‘ஸ்ரீமதி கல்யாணம்’, ‘குட்டிப் பிசாசு’ ஆகிய இரு படங்களிலும் குடும்பப்பாங்கான வேடங்கள்தான். ‘தனம் மாதிரியான பார்த்தாலே பத்திக் கொள்ளும் படங்களில் இவர் இப்போது நடிப்பதில்லை’ என்று யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டுவிட்டதில் கடுப்பாகி இருக்கும் சங்கீதா, ‘எனக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வர்றதைப் பார்த்துத் தாங்கிக்காத யாரோ தான் இது மாதிரி எல்லாம் புரளியைக் கிளப்புகிறார்கள். தனம் மாதிரியான படங்களில் நடிக்கமாட்டேன் என்று நான் ஏன் சொல்லவேண்டும்...? நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். இது போன்ற படங்களில் நடிப்பதற்கு..’ என்கிறார்.
தயாரிப்பாளர்களே... கேட்டுக்கோங்கோ...!!!!!!!! | 
| முன்செல்ல | 
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




இதற்கிடையில் திருமணம் செய்து கொண்டாலும் சங்கீதா தொடர்ந்து கலைச் சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் நடிப்பில் இப்போது வெளிவந்துள்ள படம் ‘நான் அவன் இல்லை 2’. இதில் இவர் அவ்வளவாக கவர்ச்சியாக நடிக்காவிட்டாலும், நடிப்பில் கலக்கியிருக்கிறாராம். இப்போது தெலுங்கில் சங்கீதா நடித்து வரும் ‘ஸ்ரீமதி கல்யாணம்’, ‘குட்டிப் பிசாசு’ ஆகிய இரு படங்களிலும் குடும்பப்பாங்கான வேடங்கள்தான். ‘தனம் மாதிரியான பார்த்தாலே பத்திக் கொள்ளும் படங்களில் இவர் இப்போது நடிப்பதில்லை’ என்று யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டுவிட்டதில் கடுப்பாகி இருக்கும் சங்கீதா, ‘எனக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வர்றதைப் பார்த்துத் தாங்கிக்காத யாரோ தான் இது மாதிரி எல்லாம் புரளியைக் கிளப்புகிறார்கள். தனம் மாதிரியான படங்களில் நடிக்கமாட்டேன் என்று நான் ஏன் சொல்லவேண்டும்...? நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். இது போன்ற படங்களில் நடிப்பதற்கு..’ என்கிறார்.
தயாரிப்பாளர்களே... கேட்டுக்கோங்கோ...!!!!!!!!