Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

07 பிப்ரவரி 2009

நயன்தாராவுக்கு எதிரான தடை நீக்கம்...

நயன்தாரா அட்வான்ஸ் தொகையை திருப்பித்தந்துவிட்டார். அதனால் அவரை தமிழில் இனி ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இனி அவரை தமிழில் ஒப்பந்தம் செய்யலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நயனின் கால்ஷீட்டை பெற்றுவிட வேண்டும் என்று ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்று ஓகே வாங்கினார் இயக்குநர் லிங்குசாமி.

பருத்திவீரன் கார்த்திக் உடன் பையா படத்தில் நடிப்பதாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். லிங்குசாமியின் சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ்தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.

நயன்தாராவுக்கு இப்படத்திற்காக அட்வான்சாக ரூ.15 லட்சம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நயனிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளச்சொல்லி நயமாக பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் சுபாஸ்.

நீங்களே கூப்பிட்டு ஒரு கோடி என்று சொல்லிவிட்டு இப்போது ஏன் குறைக்கச்சொல்கிறீர்கள் என்று கேட்க, அப்போது இருந்த நிலைமை வேறு. இப்போதிருக்கும் நிலைமை வேறு. பில்லா படம் நன்றாக ஓடியது. அதனால் உங்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்தது. இப்போது ஏகன், சத்யம், குசேலன் படங்கள் பெரிதாக போகாததால் பெரிதாக மார்க்கெட் இல்லை என்று தயாரிப்பாளர் சொல்லியதாக கூறப்படுகிறது.

இதற்கு நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த சம்பள பிரச்சனையில் கால்ஷீட் தேதிகள் கிழிந்து கொண்டே வந்ததால் நயன்தாரா ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்த கால்ஷீட் தேதிகள் முடிந்து விட்டது. அதனால் இனி நடிக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டார்.

லிங்குசாமி, நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை புக் செய்து ஷூட்டிங் நடத்தி வருகிறார். ஆனாலும், வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தர வேண்டும் என்று சுபாஸ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து கூட்டு கலந்தாய்வு கூட்டத்தை நடத்தின.

அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தப்படி, தயாரிப்பாளரிடம் இருந்து நடிகர்-நடிகைகள் அட்வான்ஸ் பணம் வாங்கிய பிறகு சம்பந்தப்பட்ட படத்தில் ஒரு நாளாவது நடித்து இருந்தால் அந்த பணத்தை தயாரிப்பாளருக்கு திருப்பி தர வேண்டியதில்லை.

ஆனால், ஒரு நாள் கூட நடிக்காத பட்சத்தில் அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி தந்து விட வேண்டும்.

அதன்படி தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், நடிகை நயன்தாரா ஆகிய இருவருக்கும் இடையிலான கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் நயன்தாராவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனினும், அட்வான்ஸ் திரும்ப தர முடியாது என்றும் தான் கொடுத்த தேதிகளை தயாரிப்பாளர் பயன்படுத்தவில்லை என்றும் பத்திரிகைகள் வாயிலாக பேட்டியாக நயன்தாரா தெரிவித்தார். இதையடுத்து இரண்டு சங்கங்களின் கூட்டு கூட்டத்தில் விரிவாக பேசி எடுத்த முடிவின்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுத்துவிடுமாறு நயன்தாராவிடம் கூறப்பட்டது.

இதுவரை அவர் திரும்ப கொடுக்கவில்லை. அது குறித்து கேட்டபோது, `நான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப தர மாட்டேன்` என்று தகவல் அனுப்பி இருக்கிறார். எனவே, மீண்டும் இரண்டு சங்கங்களின் கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, நடிகை நயன்தாராவை இனிமேல் தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்றும் மற்ற மொழி படங்களில் அவரை நடிக்க வைக்க கூடாது என அந்தந்த மொழி தயாரிப்பாளர் சங்கங்களில் பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டுக் கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவினை தயாரிப்பாளர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரச்சனை குறித்து நயன்தாரா, ‘பையா படத்துக்காக அட்வான்ஸ் வாங்கியது உண்மை. அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர முடியாது என்று சொன்னதும் உண்மை.

அதே மாதிரி இந்த படத்துக்காக நான் கொடுத்த கால்ஷீட் தேதிகளை தயாரிப்பாளர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் உண்மை.

பையா படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டதால் அந்த தேதிகளில் மற்ற பட வாய்ப்புகளை மறுத்து விட்டு காத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பை தொடங்கவில்லை. அதனால் எனக்குத்தான் இழப்பு.

இந்த பிரச்சனையில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் இதுவரை என்னை நேரடியாக அழைத்து விசாரிக்கவில்லை. அவர்கள் அழைத்தால் என் தரப்பு நியாயத்தை முறைப்படி தெரிவிப்பேன்’ என்று தனது தரப்பு நியாயத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தயாரிபாளர்களுடனான பேச்சுவார்த்தையில் நயன் அட்வான் தொகையை திருப்பி தந்துவிட்டார். இதனால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுவிட்டது.

06 பிப்ரவரி 2009

Flintoff and Pietersen most expensive buys (IPL auction 2009)

Kevin Pietersen and Andrew Flintoff, the England stars, were sold for US$ 1.55 million each at the IPL auction on Friday, making them the highest-paid cricketers in the Twenty20 league. However, it was Mashrafe Mortaza, the 25-year-old fast bowler from Bangladesh, who stole the show in Goa after attracting a winning bid of US$ 600,000 from the Kolkata Knight Riders that was exactly 12 times his base price of US$ 50,000.

The other stars of the auction were JP Duminy, the South African batsman, who was bagged by Mumbai Indians for US$ 950,000 (base price: US$ 300,000), and most unexpectedly, Tyron Henderson, the Middlesex allrounder, who was bought by Rajasthan Royals for US$ 650,000, which was over six times his base price of US$ 100,000.

The auction also threw up some shocks as international players such as Ramnaresh Sarwan, Stuart Clark, Brad Haddin, Shakib Al Hasan and Samit Patel remaining unsold. It was a bad outing for cricketers from Australia who were on top of the franchises' wishlist last year. Only two Australians - Shaun Tait ($375,000) and Tasmania batsman George Bailey ($50,000) - drew winning bids from a list of 18 Australians.

As expected, however, Pietersen and Flintoff took home a combined purse of US$ 3.1 million. Pietersen was bought by Bangalore Royal Challengers and Flintoff by Chennai Super Kings. The other England players who were picked up at the auction were Ravi Bopara, bought by Kings XI Punjab for US$ 450,000, and Owais Shah and Paul Collingwood, who were bought by Delhi Daredevils for US$ 275,000 each. "They [England players] are big stars and we are looking forward to their participation in the IPL," Lalit Modi, the IPL chairman, said.

In the end though, it was Mortaza's purchase, after a bidding war between Kolkata and Punjab, which sparked a buzz in the auction room. The bidding, initially in segments of US$ 10,000 each, lasted nearly half-an-hour before Punjab threw up their hands. "It makes great sense for Kolkata," Modi said. "Bangladesh falls under the Kolkata's catchment area as per a new proposal we are discussing on letting franchises stage matches overseas. This could work well for the KKR later."

All the 17 slots that were available at the auction were filled from a list of 50.

IPL auction 2009

List of players sold

February 6, 2009

Seventeen slots were filled in over two hours of the 2009 IPL auction in Goa. Here is a list of the players who have been bought at the auction (base price in brackets; all numbers in US$):

Pool A Shaun Tait to Rajasthan Royals 375,000 (250,000) JP Duminy to Mumbai Indians 950,000 (300,000) Andrew Flintoff to Chennai Super Kings 1.55 million (950,000) Kevin Pietersen to Bangalore Royal Challengers 1.55 million (1.35 million)

Pool B Fidel Edwards to Deccan Chargers 150,000 (150,000) Owais Shah to Delhi Daredevils 275,000 (150,000) Paul Collingwood to Delhi 275,000 (250,000)

Stuart Clark, Brad Haddin and Chamara Kapugedara were unsold.

Pool C Tyron Henderson to Rajasthan 650,000 (100,000) Ravi Bopara to Kings XI Punjab 450,000 (150,000) Thilan Thushara to Chennai 140,000 (100,000) Jesse Ryder to Bangalore 160,000 (100,000) Kyle Mills to Mumbai 150,000 (150,000).

Ashwell Prince, Phil Jaques, Andre Nel, Luke Wright and Nuwan Kulasekara were unsold.

Pool D Dwayne Smith to Deccan Chargers 100,000 (100,000) Jerome Taylor to Punjab 150,000 (150,000) Mohammad Ashraful to Mumbai 75,000 (75,000)

Samit Patel, Shakib-al-Hassan, Morne Van Wyk, Stephen Smith, Ashley Noffke, Gulam Bodi and Daren Powell were unsold.

Pool E Tamim Iqbal, Jon Moss, Bryce McGain, James Franklin, Aiden Blizzard, Ramnaresh Sarwan, Michael Klinger, Kaushalya Weeraratne, Prasanna Jayawardene and Dominic Thornley were unsold.

Pool F Mashrafe Mortaza to Kolkata Knight Riders 600,000 (50,000) George Bailey to Chennai 50,000 (50,000)

Yusuf Abdulla, Daniel Harris, Kemar Roach, Aaron Bird, Michael Dighton, Michael Hill and Brett Geeves were unsold.

தமிழில் கிழே

இன்டர்நெட் எக்ஸ்புளோரரை உங்கள் பெயருக்கு மாற்றலாம்...!

இன்டர்நெட் எக்ஸ்புளோரரையே ஹக்கிங் செய்துட்டாங்க... நாங்களும் நம்ம தரத்துக்கு ஏத்த மாதிரி ஏதாவது செஞ்சு பார்க்கலாமே....!

Internet Explorerரைப்பயன்படுத்தி இணையப் பக்கங்களைப் பார்வையிடும்போது இன்டர்நெட்டின் பெயருடன் Microsoft Internet Explorerஎன்ற பெயரும் இணைந்தே வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

தேவைப் படின் Microsoft Internet Explorerஎன்பதை நீக்கிவிட்டு நாம் கொடுக்கும் எந்த பெயரையும் எளிதாக வரவழைக்கலாம்.

செய்ய வேண்டியது இதுதான்!

முதலில் ஸ்டாட் கிளிக் செய்து வின்டோசில் உள்ள ரன் Run பகுதியில் RegEdit என தட்டச்சு செய்து நுழைத்தால் Enter செய்தால் உடனே பதிவேடு Registry உங்கள் திரையில் வரும் அதில் HKEY_CURRENT_USER\Software\Microsoft\InternetExplorer\Mainஎன்ற பகுதிக்கு செல்லவும். வலது புறம் உள்ள பகுதியில் Window Title என இருந்தால் அதில் நாம் விரும்பும் பெயரை வலது பொத்தானை அழுத்தி (Right Click) Modify ஆதாரக்கூறை (Data) என்ற பகுதியை அழுத்தும் பொழுது Edit Strainஎனும் பகுதி தென்படும் அதன் பின்னர் அதில் தென்படும் Value dataஎனும் பகுதியில் உங்கள் பெயரையோ அல்லது நிறுவனத்தில் பெயரையோ கொடுக்கவும்.

Window Titleஎன்ற விருப்பத்தேர்வு (Option) இல்லாதவிடத்து வலது பொத்தானை அழுத்தி (Right Click) New எனும் பகுதிக்குள் Strain Valueஎன்பதனை அழுத்து அதற்கான பெயரை Window Titleஎன பெயரிட்டு அதன் பின்னர் மீண்டும் அதனுள் தென்படும் நீங்கள் உருவாக்கிய Window Titleஎன்பதை வலது பொத்தானை அழுத்தி (Right Click) Modify Data என்ற பகுதியில் தென்படும் Value dataஎனும் பகுதியில் உங்கள் பெயரையோ அல்லது நிறுவனத்தில் பெயரையோ கொடுக்கவும்.

இப்பொழுது உங்கள் Internet exploreரை திறக்கும் பொழுது தெல்லாம் Microsoft Windows Internet Explorer இற்குப் பதிலாக நீங்கள் இட்ட பெயரையே காண்பிக்கும்.

நன்றி -தேன்தமிழ்

தோனியை மிஞ்சிய பிளிண்டாப், பீட்டர்சன்

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இங்கிலாந்து வீரர்கள் பிளிண்டாப் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் விஞ்சியுள்ளனர்.

ஐபிஎல் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளுக்கு வீரர்களை விலைக்கு வாங்கும் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து வீரர் ஆன்ட்ரூ பிளிண்டாப்பை 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதே தொகைக்கு கெவின் பீட்டர்சனை, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வாங்கியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் மிக அதிகபட்சமாக தோனி 6 கோடி ரூபாய்க்கு விலை போனார். தற்போது பிளிண்டாப் அவரை மிஞ்சியுள்ளார்.

இதே போல் மற்றுமொரு இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன்னை பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 7.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 20 ஓவர் கிரிக்கெட் சிறப்பு ஆட்டக்காரர் டைரான் ஹென்டர்சன்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6.5 லட்சம் டாலருக்கு வாங்கியுள்ளது.

பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி நியூசிலாந்தை சேர்ந்த ஜெஸ்ஸி ரைடரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் டாலருக்கும், கைல் மில்சை ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கும் ஏலம் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கையின் திலான் துஷாராவை ஒரு லட்சத்து 40 ஆயிரம் டாலருக்கும், இங்கிலாந்து வீரர் ரவி போபாராவை 4.5 லட்சம் டாலருக்கும் வாங்கியுள்ளது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி மேற்கிந்திய பந்துவீச்சாளர் பிடெல் எட்வர்ட்சை 1.5 லட்சம் டாலருக்கு வாங்கியுள்ளது. டெல்லி டேர் டெவில்ஸ் அணி, இங்கிலாந்து வீரர்கள் ஓவய்ஸ் ஷா மற்றும் பால் காலிங்வுட்டை தலா 2.75 லட்சம் டாலருக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், பந்துவீச்சார் ஸ்டுவர்ட் கிளார்க் மற்றும் இலங்கை வீரர் சமாரா கபுகெடேரா ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

கோவாவில் இன்று ஏலம் தொடங்கியுடன் முதலாவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஷான் டெய்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3.75 லட்சம் டாலருக்கு விலை போனார். 9.5 லட்சம் டாலருக்கு தென்னாப்பிரிக்க வீரர் டுமினியை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

05 பிப்ரவரி 2009

FireFox இன் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க

"யாமறிந்த உலவிகளிலே FireFoxஐப் போல எங்கு கண்டோம்என்று பாரதியேபாடியிருப்பார் - இப்போது உயிருடனிருந்தால். இருப்பினும் நம்மில் பலருக்கு - அதுவும் குறிப்பாக Browsing Center களை அதிகம்நாடுபவர்களுக்குப் பயன்படும் ஒரு தொழில்நுட்பத்தை இங்கே விவரிக்கிறேன். ஒரு சிறிய செயல்முறை விளக்கம். ஏதேனும் ஒரு இணையத்தளத்திற்குள் செல்லும்போது பயனர்கணக்கு, கடவுச்சொல் முதலியவற்றைக் கேட்கிறது. உதாரணம் : GMail வாயிலாகமின்னஞ்சலைப் படிக்க ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் GMail தளத்தினுல் நுழையும்முன்னரே உங்களது User Name, Password போன்றவற்றைக் கொடுத்துவிட்டுத்தான்செல்கிறீர்கள். சில நேரங்களில் அவற்றை Save செய்யவா என FireFox கேட்கும். வழங்கம்போல Yes எனத் தலையாட்டிவிட்டு அதையும் சொடுக்கிவிடுகிறோம். ஆனால் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்படுகிறது - அவசர அவசரமாகஉலவியின் cookies, cache, சேகரிக்கப்பட்ட Password போன்றவற்றை அழிக்கநினைக்கிறீர்கள். அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். ஆனால் ஒருசிறிய Custom Settings ஒன்றை FireFox உலவியில் செய்துவிட்டால், உலவியைமூடும்போதே அனைத்து தனிப்பட்ட ரகசியத்தகவல்களையும் தானாகவேஅழித்துவிடும். எப்போதெல்லாம் நாம் உலவியதூ, நம்முடைய தனிப்பட்ட ரகசியங்களோஅடுத்தவருக்குத் தெரியக்கூடாது - ரகசியம் பரம ரகசியம் - எனக் கருதுகிறீர்களோஅப்போதெல்லாம் இந்த Setting FireFox ல் செய்துவிடுங்கள். சும்மா உலவியைசெய்தாலே அனைத்துத் தகவல்களும் அதுவாகவே அழிக்கப்பட்டுவிடும். 1) முதலில் FireFox திறந்துகொள்ளுங்கள். 2) Tools Menu வில், Options... ல் Click செய்யவும். close 3) இப்போது கிடைக்கும் Dialog boxல் Privacy Tab ஐக் Click செய்யவும் 4) உடன் கண்ணெதிரே தெரியக்கூடிய Private Data பகுதியில் Settings... button அழுத்தவும். 5) உடன் கண்முன்னே தெரியக்கூடிய Dialog box (உரையாடல் பெட்டியில்) இருக்கும் அனைத்து Checkbox களையும் தேர்வுசெய்துவிடுங்கள்.6) OK அழுத்திவிட்டு, Private Data பகுதியில் Always Clear My Private Data when I close FireFox என்கிற Check boxஐயும் தேர்வு செய்துவிடுங்கள். அவ்வளவுதான். இனி ஒவ்வொரு முறையும் FireFox சும்மா close செய்தாலே, அனைத்துத் தகவல்கள் - Secret Passwords - Cookies - அனைத்தும் Automatic ஆக அழிந்துவிடும்.

தென்னிந்திய மொழிகளில் நடிக்க நயன்தாராவுக்கு தடை!!

டிகை நயன்தாராவை இனி எந்தத் தமிழ்ப் படங்களிலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் கூட்டாக அறிவித்துள்ளன.

லிங்குசாமி இயக்கும் புதிய படம் பையா. இதை அவருடைய சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ், திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இதில் நாயகனாக பருத்திவீரன் கார்த்தி நடிக்கிறார். நயன்தாராவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து, அதில் ரூ.15 லட்சம் முன்பணமாகவும் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ்.

இந்நிலையில், தான் கொடுத்த கால்ஷீட் தேதிகளின்படி படப்பிடிப்பைத் தொடங்கவில்லை; அதனால் பையா படத்திலிருந்து விலகுகிறேன் என நயன்தாரா தெரிவித்தார். படத்தில் நடிக்காததால் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கேட்டது தயாரிப்பு தரப்பு. ஆனால் அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்றும், இத்தனை நாட்கள் இழுத்தடித்தற்காகவும், கால்ஷீட்டை வீணடித்தற்காகவும் சரியாகப் போய்விட்டது போய் வாருங்கள் என்று கூறிவிட்டார் நயன்தாரா.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அதன்படி இரண்டு சங்கங்களின் கூட்டமைப்பும்ஆலோசனை நடத்தியது.

ஒரு படத்துக்காக தயாரிப்பாளரிடமிருந்து நடிகர்-நடிகையர் முன் பணம் வாங்கியிருந்து, அதில் ஒரு நாளாவது நடித்திருந்தால் அந்த முன் பணத்தைத் திருப்பித் தரவேண்டியதில்லை என இரு சங்கங்களும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால் நயன்தாரா இந்தப் படத்தில் ஒரு நாள் கூட நடிக்கவில்லை.

இதை மேற்கோள்காட்டி, தான் வாங்கிய முன் பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் திருப்பித் தர வேண்டும் என இரு சங்கங்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே நயன்தாராவிடம் தெரிவித்தன. ஆனால் காலக்கெடு நெருங்கியும் அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர மாட்டேன் என நயன்தாரா தகவல் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து நயன்தாராவை இனி தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது; மேலும் மற்ற மொழிப் படங்களிலும் அவரை நடிக்க வைக்கக் கூடாது என அந்தந்த தயாரிப்பாளர் சங்கங்களில் பேசுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் இணைந்து புதன்கிழமை நடத்திய கூட்டுக் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை அனைத்துத் தயாரிப்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து தென்னிந்திய மொழிகளிலும்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள இந்த முடிவை அனைத்து தென்னிந்திய மொழிப் பட தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ளதாகவும், இதனை அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

என்னிடம் விசாரிக்காமலேயே தீர்ப்பா?- நயன்

இந்தப் பிரச்னை நயன்தாராவிடம் கேட்டோம்:

படத்துக்காக அட்வான்ஸ் தொகையை வாங்கியது உண்மைதான். அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தர மாட்டேன் என்று கூறியதும் உண்மை. நான் மறுக்கவில்லை. இந்தப் படத்துக்காக நான் கொடுத்த கால்ஷீட் தேதிகளைத் தயாரிப்பாளர் பயன்படுத்தவில்லை.

எனக்கு வந்த மற்ற பட வாய்ப்புகளையும் மறுத்துவிட்டு இந்தப் படத்துக்காகக் காத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பையே தொடங்கவில்லை. அதனால் எனக்குத்தான் இழப்பு. இதுகுறித்து பல பத்திரிகைகளில் செய்திகளும் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் பிரச்னையில் நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இதுவரை என்னை நேரடியாக அழைத்து விசாரிக்கவில்லை. என் தரப்பு நியாயத்தை முறைப்படி தெரிவிப்பேன், என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

எதனால் பிரச்சினை?

நயன்தாரா இப்போது தமிழில் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.1 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

பையா படத்தின் உண்மையான பிரச்சினை இந்த அட்வான்ஸ் கிடையாது, சம்பள விவகாரம்தான்.

இந்தப் படத்துக்காக நயன்தாராவுக்குப் பேசப்பட்ட சம்பளம் ரூ.1.10 கோடி என்கிறார்கள். ஆனால் நயன்தாரா நடித்த 3 படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. எனவே பேசிய சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு குறைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர் கேட், நயன் அதற்கு மறுக்க, பிரச்சினை இப்போது ‘ரெட்கார்டில்’ வந்து நிற்கிறது!

04 பிப்ரவரி 2009

புதிய " கெட்டப்பில் " அஜித்

சிவாஜி புரடக்ஸன் தயாரிப்பில் அல்டிமேட் ஸ்டார் 'அஜித்' நடிப்பில் உருவாகும் 'அசல்' திரைப்படத்திற்காக , புதிய 'முறுக்கு-மீசை' வளர்க்கிறார் அஜித். அந்த கெட்-அப்பில் அஜீத்தின் புகைப்படங்கள் கீழே.. ( கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது...) நன்றி - starajith.com

யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி

இந்தப் பதிவில் நம்மூர் காதல் வட்டாரங்களில் புழங்கும் சில கலைச் சொற்களின் அரும் பொருளைத் தரலாம் என்று முடிவு கட்டியிருக்கிறேன். சரி ஒவ்வொன்றாக நினைவில் நிற்பவையைச் சொல்கின்றேன் ;-) விடுபட்டவை பின்னர் வரும்.

1. காய் - பிகரு, பொண்ணு.

2. எறிதல் - சைட் அடித்தல்

3. காய் பார்த்தல் - பிகரை சைட் அடித்தல்

4. சுழட்டல் - பிகர் ஏரியாவில் ரவுண்ட்ஸ்

5. காயிதம் - லவ் லெட்டர்

6. அவர், அத்தான் - காதலனைப் பிரியமாக அழைத்தல்

7. அவ, என்ரை ஆள் - காதலியைப் பிரியமாக அழைத்தல்

8. வில்லன், நம்பியார் - காதலியின் அப்பா, அண்ணன்

9. வில்லி - காதலியின் அக்கா

10. தேவதாஸ், ராஜேந்தர் - காதலில் தோற்றவர்

11. சரக்கு - வடிவான (அழகான) பெண்களை அழைக்கும் பொது வார்த்தை

சந்திக்கும் இடங்கள்

1. டியூசன் முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் வரும் நேரம்.

2. கோயில் திருவிழா காலங்கள்

3. காய் (பிகர்) வீட்டின் வெளிக் குந்தில் (திண்ணையில்) காத்திருக்க,சைக்கிளில் மாம்ஸ் ரவுண்ட் அடிப்பார்.

4. பள்ளிக்கூட விளையாட்டு மைதாணம்

5. கிடுகுவேலி மறைப்புக்கள்

குண அம்சங்கள்

நிறைய மனோ, சித்ரா ஜோடிப்பாடல்கள் கேட்டல் - அண்ணன் சந்தோசமா இருக்கிறார் எண்டு அர்த்தம்

இளையராஜா, டி.ராஜேந்தரின் தனிப்பாடல்கள் கேட்டல் - அவவை (காதலியை) சந்திக்கேல்லை எண்டு அர்த்தம்

நிறைய ஆனைக்கோட்டை நல்லெண்ணை வைத்து தலையை பக்கவாட்டில் இழுத்தால் - "படிப்பு தான் முக்கியம், அப்பா, அம்மா பேசிச் செய்த கல்யாணம் தான் கட்டுவன்" இப்படி வசனம் பேசும் பெடியன்.

தலைக்கு ஜெல் வைத்து மேவி இழுத்தால் - காதல் பூப்பூக்கும் பருவம்.

(நண்பர் ஒருவர் சுமார் எட்டு மதங்களுக்கு முன் பதிந்தவை )

யு.எஸ்.பி பாதுகாப்புக்கான இலவச மென்பொருட்கள்....!

முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் ஃப்ளாப்பி தட்டுகள் வழியே பரவின. பின்புஅவை பரவ கணிணி நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்தன. இப்போதெல்லாம்கணிணி வைரஸ்கள் பெரும்பாலும் தம்ப் டிரைவுகள் அல்லது பென்டிரைவுகள்எனப்படும் USB டிரைவுகள் வழியே பரவுகின்றன.அலுவலக வளாகத்தில் இலவசமாக கீழே கண்டெடுத்த USB டிரைவை அப்படியேக் கொண்டு தைரியமாககணிணியில் செருகக் கூடாது. அதன் Autoplay வசதி உங்கள் கணிணியில்வினையை விதைத்துவிடலாம்.

USB டிரைவுகள் வழியே பரவும் வைரஸ்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இங்கே சில யோசனைகள்:

1. உங்கள் கணிணியில் இலவச USB Firewall ஒன்றை நிறுவிக்கொள்ளலாம். எப்போதெல்லாம் ஒரு பென்டிரைவை உங்கள் கணிணியில் செருகுகின்றீர்களோ அப்போதெல்லாம் அது ஒரு சோதனை செய்து வைரஸ்மாதிரியான கோப்புகள் தென்பட்டால் அது உடனே உங்களை உஷார்படுத்தும்.
USB Firewall Download Link 2. Tweak UI எனும் மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளை பயன்படுத்தி இது போன்ற removable driveகள் உங்கள் கணிணியில் Autoplay ஆவதை தடுக்கலாம். அதனால் தானே ஏகப்பட்ட பிரச்சனைகள். TweakUiPowertoy Download link 3. ClamWin எனப்படும் இலவச Portable ஆன்டிவைரஸ் மென்பொருளை உங்கள் பென்டிரைவில் வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது அவசரத்துக்கு ஸ்கேன் செய்துகொள்ள உதவும். Portable USB Download Link 4. உங்கள் கணிணியின் USB டிரைவை அப்பப்போ enable அல்லது disable செய்துகொள்ள USB Drive Disabler எனும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். USB Drive Disabler Download Link 5. சில பிரபல ஃப்ளாஷ் டிரைவ் வைரஸ்களை,வார்ம்களை ஒழிக்க Flash Disinfector உங்களுக்கு உதவலாம். Flash Disinfector Download Link

நன்றி -தேன்தமிழ்

03 பிப்ரவரி 2009

நடிகர் பிரபு மகள் திருமணம்!

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமணம், சென்னையில் வருகிற 8-ந் தேதி நடக்கிறது. தனது அத்தை தேன்மொழியின் மகனை அவர் மணக்கிறார்.

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனின் இளைய மகன் நடிகர் பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விக்ரம் திருமணம் நடந்தது. இப்போது, ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

மணமகன் பெயர் குணால். இவர், பிரபுவின் தங்கை தேன்மொழியின் மகன். இவர்கள் திருமணம், சிறு வயதிலேயே தாத்தா சிவாஜிகணேசன்-பாட்டி கமலாம்மாவும் முடிவு செய்யப்பட்டதாம். அவர்களின் ஆசைப்படி இந்தத்திருமணம் நடைபெறுகிறது என பிரபு தெரிவித்தார்.

மணமகள் ஐஸ்வர்யா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம். படித்துள்ளார். மணமகன் குணால், எம்.பி.ஏ. பட்டதாரி. அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கிறார்.

வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10-30 மணிக்குள், சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

வரவேற்பு

முன்னதாக, திருமண வரவேற்பு நிகழ்ச்சி 7-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அதே மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அப்போது காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான்கள் ராஜேஷ் வைத்யா-மோகன ராமன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடக்கிறது.

திருமணத்துக்கான ஏற்பாடுகளை சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், அவருடைய மனைவி கண்ணம்மா, பிரபு, அவருடைய மனைவி புனிதவதி மற்றும் குடும்பத்தினர் கவனித்து வருகிறார்கள்.

அழைப்பு:

ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுக்கு நேற்று பிரபு-ராம்குமார் நேரில் சென்று திருமண அழைப்பு கொடுத்தனர்.

நன்றி -Envazli

02 பிப்ரவரி 2009

இந்தோனேசியாவில் ஒபாமா சாயலில் இன்னுமொரு ஒபாமா!!!!

போதை பொருள்: ஒபாமா சகோதரர் கைது

போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சகோதரர் ஜார்ஜ் ஒபாமா கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தந்தை கென்யாவைச் சேர்ந்தவர். அவருக்கு இரண்டு மனைவிகள். இதில், அமெரிக்க மனைவிக்கு பிறந்தவர் அதிபர் பராக் ஒபாமா. கென்யாவில் உள்ள மற்றொரு மனைவிக்கு பிறந்தவர் ஜார்ஜ் ஒபாமா. வசதி வாய்ப்புகளின்றி சாதாரண நிலையில் உள்ள ஜார்ஜ் ஒபாமா, தற்போது நைரோபில் வசித்து வருகிறார். போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கென்யா போலீசார் அவரை கைது செய்தனர். எனினும் தன் மீதான புகாரை ஜார்ஜ் ஒபாமா மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், 'ஒபாமா அதிபராக பதவியேற்கும் முன் அவர் மீது அவதூறு பிரச்சாரம் செய்தனர். தற்போது என்னைக் கைது செய்துள்ளனர்' என்றார்.

01 பிப்ரவரி 2009

நடிகை சங்கீதா-க்ரிஷ் திருமணம்

உயிர், தனம் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை சங்கீதாவுக்கும் பாடகர் க்ரிஷுக்கும் இடையே சில மாதங்களாக காதல் இருந்து வந்தது. இவர்களின் காதலை க்ரிஷின் பெற்றோர்கள் எதிர்த்தனர். எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவுசெய்தனர். அதன் படி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் சந்நிதானத்தில் காலை 8.00 மணியளவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்து முறைப்படி அய்யர் தாலி எடுத்து தர மணமகன் க்ரிஸ் மனமகள் சங்கீதா கழுத்தில் தாலி கட்டினார். நடிகர்கள், நடிகைகள் பலர் திருமணத்திற்க்கு வருகை புரிந்திருந்ததால் போலிஸ் பாதுகாப்புஅதிகமாக போடப்பட்டிருந்தது.

இதில் திரைபிரபலங்களான இயக்குநர் கங்கைஅமரன், தரணி, பாலா, நடிகர்கள் சின்னிஜெயந்த், ஜீவா, பாண்டியராஜன் அவரது மகன்கள், மனைவி, நடிகைகள் ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, மும்தாஜ், ரகசியா, லஷ்மிராய், மகேஸ்வரி, ஜெயஸ்ரீ மற்றும் டி.வி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, டான்ஸர் ராம்ஜி, பாஸ்கி மற்றும் பெரியதிரை, சின்னதிரை பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தினர்.

500க்கும் அதிகமான பொதுமக்கள் இத்திருமணத்தை காண கோயிலில் கூடியிருந்தனர். திருமணம் முடிந்து வெளியே வந்தவர்களை பொதுமக்கள் கூடிநின்று வாழ்த்துச்சொல்லி கை கொடுத்தனர். இன்முகத்தோடு திருமண தம்பதிகள் அதை ஏற்றுக்கொண்டனர்.

தமிழில் வெளிவரும் ஸ்லம்டாக் படத்துக்கு சிம்பு, எஸ்.பி.பி டப்பிங்

ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு சிம்பு, பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் டப்பிங் பேசுகின்றனர்.

ந்தி நடிகர்கள் அனில்கபூர், இர்பான் கான், மற்றும் லண்டனைச் சேர்ந்த தேவ் படேல், ஹாலிவுட்நடிகை பிரீடா பின்டோ உட்பட பலர் நடித்துள்ள ஆங்கில படம் ஸ்லம்டாக் மில்லியனர்.

டேனி பாய்ல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிறப்பாக இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது கிடைத்தது. அவருக்கு ஆஸ்கர் விருதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தை பால்கன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் நடராஜன் தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்கிறார். தமிழில் இந்தப் படத்துக்கு ‘நானும் கோடீஸ்வரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் நடித்துள்ள ஹீரோ தேவ் படேலுக்கு சிம்புவும் அனில் கபூருக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமும், இர்பான்கானுக்கு ராதாரவியும் டப்பிங் பேசியுள்ளனர். டப் செய்யப்பட்ட இந்தப் படம் இம்மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Mirza, Bhupathi win mixed doubles title

Double win: India's Sania Mirza (left) and Mahesh Bhupathi hold the trophy during the awarding ceremony after beating France's Nathalie Dechy and Israel's Andy Ram in the Mixed doubles final match at the Australian Open Tennis Championship in Melbourne, Australia, on Sunday. ndia's Sania Mirza and Mahesh Bhupathi won the Australian Open mixed doubles title on Sunday, Bhupathi's 11th Grand Slam doubles championship. Mirza and Bhupathi beat Nathalie Dechy of France and Andy Ram of Israel 6-3, 6-1 at Rod Laver Arena. Bhupathi and Mark Knowles of the Bahamas lost the men's doubles final Saturday to American twins Bob and Mike Bryan. Seven of the 34-year-old Bhupathi's majors have come in mixed doubles. He won a previous mixed title at the Australian Open in 2006 with Martina Hingis. Bhupathi and 22-year-old Mirza broke Dechy's serve in the opening set, then broke their opponents twice in the second. Bhupathi was dominant at the net throughout the match.

Folder lock :புதிய மென்பொருள்

இது தகவல் பாதுகாப்பிற்கு சிறந்த மென்பொருள் ஆகும் . இதன் மூலம் உங்கள் ஆவணங்களுக்கு Password கொடுத்து பாதுகாக்க முடியும். folder lock ஆனது password கொடுப்பது மட்டும் அல்லாது Data களை மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு hide பண்ணியும் விடுகிறது. அதனால் உங்கள் தகவலுக்கு 100 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. folder lock முலம் உங்கள் கணணியின் Drive களுக்கும் மற்றும் Usb Drive, CD Drive, Floppy drive களுக்கும் Passwordகொடுத்து பாதுகாக்க முடியும். இதன் இன்னொரு சிறப்பு இதை நீங்கள் உங்கள்Usb drive , External hard disk, cd, memory card போன்றவைகளில் வைத்துpotable software ஆக பயன்படுத்தலாம். இது 4 வகையான theme களில்கிடைக்கிறது இதன் options சென்று இதன் பாதுகாப்பு தன்மையை உங்கள் வசதிக்கேற்ப கூடிக்கொள்ளலம்.
Download from here
நன்றி -Tamilhackx
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com