Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

04 பிப்ரவரி 2009

யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி

இந்தப் பதிவில் நம்மூர் காதல் வட்டாரங்களில் புழங்கும் சில கலைச் சொற்களின் அரும் பொருளைத் தரலாம் என்று முடிவு கட்டியிருக்கிறேன். சரி ஒவ்வொன்றாக நினைவில் நிற்பவையைச் சொல்கின்றேன் ;-) விடுபட்டவை பின்னர் வரும்.

1. காய் - பிகரு, பொண்ணு.

2. எறிதல் - சைட் அடித்தல்

3. காய் பார்த்தல் - பிகரை சைட் அடித்தல்

4. சுழட்டல் - பிகர் ஏரியாவில் ரவுண்ட்ஸ்

5. காயிதம் - லவ் லெட்டர்

6. அவர், அத்தான் - காதலனைப் பிரியமாக அழைத்தல்

7. அவ, என்ரை ஆள் - காதலியைப் பிரியமாக அழைத்தல்

8. வில்லன், நம்பியார் - காதலியின் அப்பா, அண்ணன்

9. வில்லி - காதலியின் அக்கா

10. தேவதாஸ், ராஜேந்தர் - காதலில் தோற்றவர்

11. சரக்கு - வடிவான (அழகான) பெண்களை அழைக்கும் பொது வார்த்தை

சந்திக்கும் இடங்கள்

1. டியூசன் முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் வரும் நேரம்.

2. கோயில் திருவிழா காலங்கள்

3. காய் (பிகர்) வீட்டின் வெளிக் குந்தில் (திண்ணையில்) காத்திருக்க,சைக்கிளில் மாம்ஸ் ரவுண்ட் அடிப்பார்.

4. பள்ளிக்கூட விளையாட்டு மைதாணம்

5. கிடுகுவேலி மறைப்புக்கள்

குண அம்சங்கள்

நிறைய மனோ, சித்ரா ஜோடிப்பாடல்கள் கேட்டல் - அண்ணன் சந்தோசமா இருக்கிறார் எண்டு அர்த்தம்

இளையராஜா, டி.ராஜேந்தரின் தனிப்பாடல்கள் கேட்டல் - அவவை (காதலியை) சந்திக்கேல்லை எண்டு அர்த்தம்

நிறைய ஆனைக்கோட்டை நல்லெண்ணை வைத்து தலையை பக்கவாட்டில் இழுத்தால் - "படிப்பு தான் முக்கியம், அப்பா, அம்மா பேசிச் செய்த கல்யாணம் தான் கட்டுவன்" இப்படி வசனம் பேசும் பெடியன்.

தலைக்கு ஜெல் வைத்து மேவி இழுத்தால் - காதல் பூப்பூக்கும் பருவம்.

(நண்பர் ஒருவர் சுமார் எட்டு மதங்களுக்கு முன் பதிந்தவை )

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com