Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

07 பிப்ரவரி 2009

நயன்தாராவுக்கு எதிரான தடை நீக்கம்...

நயன்தாரா அட்வான்ஸ் தொகையை திருப்பித்தந்துவிட்டார். அதனால் அவரை தமிழில் இனி ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இனி அவரை தமிழில் ஒப்பந்தம் செய்யலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நயனின் கால்ஷீட்டை பெற்றுவிட வேண்டும் என்று ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்று ஓகே வாங்கினார் இயக்குநர் லிங்குசாமி.

பருத்திவீரன் கார்த்திக் உடன் பையா படத்தில் நடிப்பதாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். லிங்குசாமியின் சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ்தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.

நயன்தாராவுக்கு இப்படத்திற்காக அட்வான்சாக ரூ.15 லட்சம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நயனிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளச்சொல்லி நயமாக பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் சுபாஸ்.

நீங்களே கூப்பிட்டு ஒரு கோடி என்று சொல்லிவிட்டு இப்போது ஏன் குறைக்கச்சொல்கிறீர்கள் என்று கேட்க, அப்போது இருந்த நிலைமை வேறு. இப்போதிருக்கும் நிலைமை வேறு. பில்லா படம் நன்றாக ஓடியது. அதனால் உங்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்தது. இப்போது ஏகன், சத்யம், குசேலன் படங்கள் பெரிதாக போகாததால் பெரிதாக மார்க்கெட் இல்லை என்று தயாரிப்பாளர் சொல்லியதாக கூறப்படுகிறது.

இதற்கு நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த சம்பள பிரச்சனையில் கால்ஷீட் தேதிகள் கிழிந்து கொண்டே வந்ததால் நயன்தாரா ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்த கால்ஷீட் தேதிகள் முடிந்து விட்டது. அதனால் இனி நடிக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டார்.

லிங்குசாமி, நயன்தாராவுக்கு பதிலாக தமன்னாவை புக் செய்து ஷூட்டிங் நடத்தி வருகிறார். ஆனாலும், வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தர வேண்டும் என்று சுபாஸ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து கூட்டு கலந்தாய்வு கூட்டத்தை நடத்தின.

அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தப்படி, தயாரிப்பாளரிடம் இருந்து நடிகர்-நடிகைகள் அட்வான்ஸ் பணம் வாங்கிய பிறகு சம்பந்தப்பட்ட படத்தில் ஒரு நாளாவது நடித்து இருந்தால் அந்த பணத்தை தயாரிப்பாளருக்கு திருப்பி தர வேண்டியதில்லை.

ஆனால், ஒரு நாள் கூட நடிக்காத பட்சத்தில் அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி தந்து விட வேண்டும்.

அதன்படி தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், நடிகை நயன்தாரா ஆகிய இருவருக்கும் இடையிலான கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் நயன்தாராவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனினும், அட்வான்ஸ் திரும்ப தர முடியாது என்றும் தான் கொடுத்த தேதிகளை தயாரிப்பாளர் பயன்படுத்தவில்லை என்றும் பத்திரிகைகள் வாயிலாக பேட்டியாக நயன்தாரா தெரிவித்தார். இதையடுத்து இரண்டு சங்கங்களின் கூட்டு கூட்டத்தில் விரிவாக பேசி எடுத்த முடிவின்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுத்துவிடுமாறு நயன்தாராவிடம் கூறப்பட்டது.

இதுவரை அவர் திரும்ப கொடுக்கவில்லை. அது குறித்து கேட்டபோது, `நான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப தர மாட்டேன்` என்று தகவல் அனுப்பி இருக்கிறார். எனவே, மீண்டும் இரண்டு சங்கங்களின் கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, நடிகை நயன்தாராவை இனிமேல் தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்றும் மற்ற மொழி படங்களில் அவரை நடிக்க வைக்க கூடாது என அந்தந்த மொழி தயாரிப்பாளர் சங்கங்களில் பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டுக் கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவினை தயாரிப்பாளர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரச்சனை குறித்து நயன்தாரா, ‘பையா படத்துக்காக அட்வான்ஸ் வாங்கியது உண்மை. அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர முடியாது என்று சொன்னதும் உண்மை.

அதே மாதிரி இந்த படத்துக்காக நான் கொடுத்த கால்ஷீட் தேதிகளை தயாரிப்பாளர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் உண்மை.

பையா படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டதால் அந்த தேதிகளில் மற்ற பட வாய்ப்புகளை மறுத்து விட்டு காத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பை தொடங்கவில்லை. அதனால் எனக்குத்தான் இழப்பு.

இந்த பிரச்சனையில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் இதுவரை என்னை நேரடியாக அழைத்து விசாரிக்கவில்லை. அவர்கள் அழைத்தால் என் தரப்பு நியாயத்தை முறைப்படி தெரிவிப்பேன்’ என்று தனது தரப்பு நியாயத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தயாரிபாளர்களுடனான பேச்சுவார்த்தையில் நயன் அட்வான் தொகையை திருப்பி தந்துவிட்டார். இதனால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுவிட்டது.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com