Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

03 பிப்ரவரி 2009

நடிகர் பிரபு மகள் திருமணம்!

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமணம், சென்னையில் வருகிற 8-ந் தேதி நடக்கிறது. தனது அத்தை தேன்மொழியின் மகனை அவர் மணக்கிறார்.

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனின் இளைய மகன் நடிகர் பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விக்ரம் திருமணம் நடந்தது. இப்போது, ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

மணமகன் பெயர் குணால். இவர், பிரபுவின் தங்கை தேன்மொழியின் மகன். இவர்கள் திருமணம், சிறு வயதிலேயே தாத்தா சிவாஜிகணேசன்-பாட்டி கமலாம்மாவும் முடிவு செய்யப்பட்டதாம். அவர்களின் ஆசைப்படி இந்தத்திருமணம் நடைபெறுகிறது என பிரபு தெரிவித்தார்.

மணமகள் ஐஸ்வர்யா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம். படித்துள்ளார். மணமகன் குணால், எம்.பி.ஏ. பட்டதாரி. அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கிறார்.

வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10-30 மணிக்குள், சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

வரவேற்பு

முன்னதாக, திருமண வரவேற்பு நிகழ்ச்சி 7-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அதே மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அப்போது காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான்கள் ராஜேஷ் வைத்யா-மோகன ராமன் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடக்கிறது.

திருமணத்துக்கான ஏற்பாடுகளை சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், அவருடைய மனைவி கண்ணம்மா, பிரபு, அவருடைய மனைவி புனிதவதி மற்றும் குடும்பத்தினர் கவனித்து வருகிறார்கள்.

அழைப்பு:

ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுக்கு நேற்று பிரபு-ராம்குமார் நேரில் சென்று திருமண அழைப்பு கொடுத்தனர்.

நன்றி -Envazli

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com