02 பிப்ரவரி 2009
போதை பொருள்: ஒபாமா சகோதரர் கைது
போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சகோதரர் ஜார்ஜ் ஒபாமா கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தந்தை கென்யாவைச் சேர்ந்தவர். அவருக்கு இரண்டு மனைவிகள். இதில், அமெரிக்க மனைவிக்கு பிறந்தவர் அதிபர் பராக் ஒபாமா. கென்யாவில் உள்ள மற்றொரு மனைவிக்கு பிறந்தவர் ஜார்ஜ் ஒபாமா.
வசதி வாய்ப்புகளின்றி சாதாரண நிலையில் உள்ள ஜார்ஜ் ஒபாமா, தற்போது நைரோபில் வசித்து வருகிறார். போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கென்யா போலீசார் அவரை கைது செய்தனர்.
எனினும் தன் மீதான புகாரை ஜார்ஜ் ஒபாமா மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், 'ஒபாமா அதிபராக பதவியேற்கும் முன் அவர் மீது அவதூறு பிரச்சாரம் செய்தனர். தற்போது என்னைக் கைது செய்துள்ளனர்' என்றார்.