இந்தி நடிகர்கள் அனில்கபூர், இர்பான் கான், மற்றும் லண்டனைச் சேர்ந்த தேவ் படேல், ஹாலிவுட்நடிகை பிரீடா பின்டோ உட்பட பலர் நடித்துள்ள ஆங்கில படம் ஸ்லம்டாக் மில்லியனர்.
டேனி பாய்ல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிறப்பாக இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது கிடைத்தது. அவருக்கு ஆஸ்கர் விருதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தை பால்கன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் நடராஜன் தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்கிறார். தமிழில் இந்தப் படத்துக்கு ‘நானும் கோடீஸ்வரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் நடித்துள்ள ஹீரோ தேவ் படேலுக்கு சிம்புவும் அனில் கபூருக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியமும், இர்பான்கானுக்கு ராதாரவியும் டப்பிங் பேசியுள்ளனர். டப் செய்யப்பட்ட இந்தப் படம் இம்மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.