Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

11 ஜூன் 2009

அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS

ஆப்பிள் நிறுவனம் iPhone - இன் புதிய மாடலை வெளியிட்டுள்ளது. இதற்கு iPhone - 3GS என்று பெயரிட்டுள்ளது. இதில் S என்பது வேகத்தைக் குறிக்கிறது. ( Speed ). முந்தைய அலைபேசிகளின் விலையை விட பாதியாக குறைத்துள்ளது. பழைய ஐபோனின் விலையை Rs. 5000 ஆக குறைத்துவிட்டார்கள். இவை 19 ஆம் தேதியிலிருந்து சந்தைக்கு வருகிறது. இதனால் எல்லோரும் வாங்கும் போனாக ஐபோன் மாறுகிறது. விலை : iPhone 3GS 16 Gb - 10,000 iPhone 3GS 32 Gb - 15,000 old iphone 3G 8Gb - 5000 இதன் சிறப்புகள் : * 3 Mega pixel கேமரா * அதிவேக செயல்திறன் * வீடியோ பிடித்தல் , எடிட்டிங் * மேப் காம்பஸ் ( compass in maps ) * Voice Dialling and voice command * எடை - 135 கிராம் * 5 மணி நேர பேசும் திறன் ( talk time ) * Cut, copy & Paste செய்யும் வசதி ( டெக்ஸ்ட் , போட்டோ ) Cellular and Wireless:
  • UMTS/HSDPA (850, 1900, 2100 MHz)
  • GSM/EDGE (850, 900, 1800, 1900 MHz)
  • Wi-Fi (802.11b/g)
  • Bluetooth 2.1 + EDR
Location:
  • Assisted GPS
  • Digital compass
  • Wi-Fi
  • Cellular
மேலும் விபரங்களுக்கு ஆப்பிள் வலைத்தளத்தில் பாருங்கள் http://www.apple.com/iphone/iphone-3g-s/

பனி பள்ளத்தில் விழுந்த லஷ்மி ராய்!

சுவிட்சர்லாந்துக்கு நான் அவனில்லை பாகம் 2ன் படப் பிடிப்புக்குப் போன இடத்தில் பெரிய பனிப் பள்ளத்தில் சிக்கி விழுந்து விட்டார் லஷ்மி ராய். பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். தமிழ் [^] சினிமாவின் முதல் தமிழ் ரீமேக் படம் [^] என்ற பெருமை நான் அவன் இல்லை. அதைத் தொடர்ந்து ஏராளமான தமிழ்ப் பட ரீமேக் படங்கள் வரத் தொடங்கின. இப்போது நான் அவன் இல்லை படத்தின் 2ம் பாகத்தை தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தயாரிக்க, செல்வா இயக்குகிறார். ஹீரோ ஜீவன். ஹீரோயின்கள் மட்டும் புத்தம் புதிய ஐவர். 2ம் பாகத்தின் கதை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடப்பது போல காட்டுகிறார்கள். இதற்காக சுவிட்சர்லாந்து, ஜெனீவா, பிரேசில், துபாய் [^] ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்தினார்கள். ஜீவனுடன் நாயகிகளான சங்கீதா, லஷ்மி ராய், ஸ்வேதா, ஹேமமாலினி, ரச்சரா ஆகியோர் பங்கேற்று நடித்து வருகின்றனர். லஷ்மி ராய் இப்படத்தில் நடிகையாகவே வருகிறார். ஷூட்டிங்குக்காக வெளிநாடு வரும் ராய், ஜீவனின் காதல் [^] வலையில் சிக்கி வீழ்வதாக வருகிறதாம் அவரது கதாபாத்திரம். ஜில் ஜில் சுவிட்சர்லாந்தில், ஜீவன்- ராய் சம்பந்தப்பட்ட சூடான ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். அப்போது அங்கு பனிமழை பொழிந்து கொண்டிருந்தது. கடும் குளிரை சமாளிக்க முடியாமல் திணறியபடி லஷ்மி ராய் நடித்துக் கொண்டிருந்தார். பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பனிப் பள்ளத்தில் (snow gorge) ராய் விழுந்து விட்டார். விழுந்த வேகத்தில் பனிக் கட்டிகள் அவர் மீது விழுந்தன. அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு பனிக் கட்டிகளை விலக்கி கீழே கிடந்த லஷ்மி ராயை பத்திரமாக மீட்டனர். பனிக் கட்டிகள் உடம்பில் விழுந்ததால் உடல் மரத்துப் போய் விட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று லஷ்மி ராய்க்கு சிகிச்சை கொடுத்தனராம். பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீள லஷ்மி ராய்க்கு நெடு நேரமானதாம்.

விண்டோஸ் 7 - திரை மறைவில் கசிந்த ரகசிய பெட்டிகள்

Windows 7 - Leaked Retail Boxes

ndows 7 - Leaked Retail Boxes

Windows 7 Ultimate Windows 7 Home Premium Windows 7 Professional Windows 7 Home Premium Windows 7 Professional Windows 7 Home Premium Windows 7 Ultimate

நவ்யாவின் நிபந்தனையுடன் படமான படுக்கை காட்சி!

பத்திரிகைகளுக்கு படம் தரக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரசிக்கும் சீமானே படத்தின் குளியல் காட்சி மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்தார் நவ்யா நாயர். ஸ்ரீகாந்த்- நவ்யா நாயர் ஜோடியாக நடிக்கும் படம் [^] ரசிக்கும் சீமானே. இந்தப் படத்தை வித்யாதரன் என்பவர் இயக்குகிறார். படத்தின் கதைப்படி முரட்டு தாதாவான ஸ்ரீகாந்த் (?!) நவ்யாவின் அழகில் மயங்கி அவரை மிரட்டி அனுபவிக்க முயற்சிப்பார். கிட்டத்தட்ட கற்பழிப்புக்கு சமமான ஒரு படுக்கையறைக் காட்சி அப்போது இடம்பெறும். இதற்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ள மறுத்தாராம் நவ்யா. ஆனால் இந்தக் காட்சி இல்லாவிட்டால் கதையே நகராது என இயக்குநர் [^] அடம்பிடிக்க, 'பத்திரிகைகளுக்கு மட்டும் படத்தைக் கொடுத்துடாதீங்க' என்ற நிபந்தனையோடு நடித்துக் கொடுத்துள்ளார். இதே படத்தில் ஒரு குளியல் காட்சியும் இடம்பெறுகிறதாம். அதற்கும் முதலில் மறுத்தவர், பின்னர் அதே பழைய நிபந்தனையுடன் நடித்துக் கொடுத்தாராம். நவ்யா கிட்ட வேலை வாங்கத் தெரிஞ்ச இயக்குனர்!.

காதலனும்,காதலியும்

"ஹெல்ல்லோஓஓஓஒ .. கேட்குதா.." "ம்ம்ம்ம்ம்ம்ம்.. எதிர்பார்த்தேன்" "ரெம்ப நேரமாவா?" "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்" "உங்க மாமன் தொல்லை தாங்கலை,காலையிலே இருந்து ரீ-சார்ஜ் பண்ண காசு கொடுக்கலை." "ஓஓஓஒ" "ஹேய்.. உனக்கு தெரியுமா நேத்து என்ன நடந்துன்னு!!!" "என்னா ஆச்சி !!!!!!!!!!!!" "நான் ஒரு கொசுவை அடிச்சிட்டேன் தெரியுமா" "வாஆஆஆ வாவ், என்னாலே நம்பவே முடியலை" "எல்லாம் உன்னை காதலிச்ச அப்புறம் தான் .." "ஸோஓஓஓஒ ச்வீஈட்,ஐ மிஸ் யு ...." "உண்மையாவா வா !!!" "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்" "ஹேய்.. நேத்து முடி வெட்டுனது கை ரெம்ப வலிக்குதா?" "வலிச்சது, ஆனா இப்ப இல்ல" "ஏன்?" "உன்௬ட பேசிகிட்டு இருந்தா நகம் வெட்டினாக்௬ட வலி தெரியாது" "ஸோஓ ஓஓஓ ஸ்வீ ட்டத் , ஐ மிஸ் யு டூ" "சாப்பிட்டயா ?" "ம்ம்ம்..ஹும், பசியில்லை" "ஏன்?" "உன்னை நினைச்சேன்.. சோத்தை மறந்தேன், உன்கிட்ட பேசினேன்.. உலகம் மறந்தேன்" "வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நீ கவிதை எல்லாம் எழுதுவியா.. என்னால நம்பவே முடியலை" "எல்லாம் உன்னாலே தான்..இன்னும் ஒன்னு சொல்லவா ?" "ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்" அன்பே உன் ௬ந்தல் அலச வரும் ஷாம்பூக்கு ௬ட தெரிகிறது குடம் குடமாக கொட்டினாலும் உன் தலைக்கு விமோசனம் கிடைப்பதில்லை என அதனாலே உன் குளியல் அறையிலே தூங்குகிறது கை படாத கன்னியைப் போல ஹா... ஹா...ஹா...ஹா (அஞ்சு நிமிஷம் விடாம சிரிக்கிறாங்க..) "சிரிச்சி முடிச்சிட்டு சொல்லு அப்புறம் நான் பேசுறேன்..ஹேய்.. என்னாச்சி .." "விழுந்து விழுந்து சிரிச்சதிலே.. கிழே விழுந்திட்டேன்" "ஆர் யு ஒகே.. எனக்கு ரெம்ப கவலையா இருக்கு, இனிமேல நான் போன்ல ஜோக் சொல்ல மாட்டேன், இது உன் மேல சத்தியம்.." "ஹேய்.. நான் கிழே விழலை.. பெட்டுல தான் விழுந்தேன். உன்னை நினைச்சி கிட்டே விழுந்த்தாலே காத்தா விழுந்து அலையா எழுந்தேன்" "வொவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீ ௬ட கவிதை சொல்லுற,ப்ளீஸ் இன்னொன்னு சொல்லேன்" "அக்னி வெயிலே தெரியாத உன் முகத்தை அம்மாவாசை இரவில் பார்ப்பதற்கு நான் பாளுங்கிணற்றிலே விழலாம்" ஹா... ஹா...ஹா...ஹா (அஞ்சு நிமிஷம் விடாம சிரிக்கிறாங்க..) "ம்ம்ம்ம்ம்.. எல்லாம் உன்னாலே தான், ஐ வவ் யு" "என்ன சொன்ன..சரியா கேட்கலை" "ஐ வவ் யு" "வவ் யு ?????????" "விழுந்து சிரிச்சதிலே என பல் செட் கிழே விழுந்து விட்டது, அதை எடுத்து மாட்டிக்கிறேன், ஐ லவ் யு ன்னு சொன்னேன்" "மீ டூ.. ஐ வவ் யு" "ஹெல்ல்லோ உன் பல் செட்டும் கிழே விழுந்து இருக்கு" "ஆமா.. இதோ சரி பண்ணுறேன். ஐ லவ் யூ சரியா?" "டங்.. டங்.." ஹலோ.. என்னாச்சி.. ஹும் இன்னைக்கும் பத்து ரூபாய் க்கு தான் ரீ-சார்ஜ் பண்ணி இருக்கான். பொறுப்பு அறிவித்தல் : ம்ம்ம்ம்ம்ம்ம், வொவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஓஓஓ எல்லாம் பின்னூட்டத்திலே தடை பண்ணி இருக்குன்னு சொன்னா கேட்கவா போறீங்க

09 ஜூன் 2009

கூகுலைவிட பிங் சிறந்ததா?

GYEAR6மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா என்பதே?

மைக்ரோசாப்ட் விண்டோஸ் புண்ணியத்தில் சாப்ட்வேர் சந்தையில் வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம்.ஆனால் தேடியந்திர உலகம் அதற்கு அத்தனை ராசியில்லை. கூகுலுக்கு முன்னதாகவே மைக்ரோசாப்ட் சார்பில் தேடியந்திரம் செயல்பட்டுவந்தாலும் முன்னணி தேடியந்திரம் என்னும் அந்தஸ்து அதற்கு கிடைத்ததே இல்லை.

அதிலும் கூகுல் அறிமகமான பிறகு தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.அதோடு கூகுலை மிஞ்சும் தேடியந்தரம் கிடையாது என்னும் எண்ணத்திஅயும் ஏற்படுத்திவிட்டது.

இருந்தும் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு முயற்சித்தே கொண்டிருக்கிறது.முத‌லில் எம் எஸ் என் இருந்த்து. அப்புற‌ம் லைவ் என்ற‌து. எவ‌ற்றாலும் கூகுலை அசைக்க‌முடிய‌வில்லை.

இப்போது பிங் என்னும் பெய‌ரில் புதிய‌ தேடிய‌ந்திர‌த்தை அறிமுக‌ம் செய்துள்ள‌து. பிங்கின் தோற்ற‌மும் ச‌ரி செய‌ல்பாடும் ச‌ரி இத‌ற்கு முந்தைய‌ முய‌ற்சிக‌ளைவிட‌ சிற‌ந்த‌தாக‌வே அமைந்துள்ள‌து.

அனால் கேள்வி அதுவ‌ல்ல‌. கூகுலோடு ஒப்பிடும் போது பிங் எப்ப‌டியிருக்கிற‌து என்ப‌தே விஷ‌ய‌ம். முத‌ல் க‌ட்ட‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் அத்த‌னை மோச‌மில்லை. பிங் அடுத்த‌ சுற்றுக்கு தாக்கு பிடிக்கும் என்ப‌து இத‌ன் மூல‌ம் உறுதியாகி விட்ட‌து.

ச‌ரி அப்ப‌டியென்றால் பிங் கூகுலைவிட‌ சிற‌ந்த‌தாக‌ இருக்கிற‌தா?இந்த‌கேள்விக்கான‌ ப‌திலில் நிப‌ண‌ர்க‌ளும் வேறுப‌டுகின்ற‌ன‌ர். இணைய‌வாசிக‌ளும் வேறுப‌டுகின்ற‌ன‌ர். கூகுலுக்கு நிக‌ரான‌தா என்ப‌தை சொல்ல‌ இன்னும் கால‌ம் தேவைப்ப‌டும் . அதுவ‌ரை பிங் தேடிய‌ந்திர‌ சோத‌னைக‌ளை எதிர்கொண்டாக் வேண்டும்.

நிற்க‌ கூகுல்\பிங் போட்டியில் த‌ற்போது முந்தும் தேடிய‌ந்திர‌ம் எது என்ப‌தை அத்த‌னை சுல‌ப‌த்தில் சொல்லிவிட‌ முடியாது என்ப‌தே உண்மை.

ஆனால் இந்த‌ ப‌திலை அறிய‌ விரும்புகிற‌வ‌ர்க‌ளுக்கு சுல‌ப‌மான‌ சோத‌னை ஒன்று இருக்கிற‌து. அத‌ற்கு குருட்டுத்தேட‌ல் என்றூ பெய‌ர். மைக்கேல் கோர்டாரி என்ப‌வ‌ர் உருவாக்கிய‌ சோத‌னை முறை இது. இதற்காக் பிலைன்ட் சர்ச் என்னும் பெயரில் ஒரு தளத்தையும் அமைத்துள்ளார். இந்த தளத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை டைப் செய்து தேடும் போது தேடல் முடிவுக‌ள் மூன்று கட்டங்களாக பிரித்து காட்டப்படும் . அவற்றை ஒப்பிட்டுப்பார்த்து சிறப்பாக இருப்பதாக கருதும் முடிவுக்கு வாக்களிக்க வேண்டும்.

எந்த‌ தேடிய‌ந்திர‌ம் அதிக‌ வாக்குக‌ள் பெறுகிற‌தோ அதுவோ சிற‌ந்த‌து என‌ கொள்ள‌லாம்.

இதில் என்ன‌ விஷேச‌ம் என‌றால் முடிவுக‌ள் பிரித்துக்காட்ட‌ப்ப‌டும் போது அவை எந்த‌ தேடிய‌ந்திர‌த்துக்கு சொந்தாமான‌வை என்ப‌து தெரியாது. அதாவ‌து தேடிய‌ந்திர‌ லோகோ இல்லாம‌ல் முடிவிக‌ள் ம‌ட்டும் முவைக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

எனவோ சார்பு நிலை இல்லாமல் முடிவுகளின் தன்மை அடிப்படையிலேயே வாக்குக‌ள் அமையும்.

இந்த‌ முறையில் த‌ற்போது கூகுல் ம‌ற்றும் பிங் ஆகிய‌ தேடிய‌ந்திர‌ங்க‌ளை ஒப்பிட்டு வ‌ருகின்ற‌ன‌ர். இது வ‌ரை பிங் அப்ப‌டி ஒன்றும் பின்த‌ங்கிவிட‌வில்லை. கூகுல் ஒன்றும் முந்திவிட‌ வில்லை.

நீங்க‌ளும் சோதித்துப்பார்க்க‌…. — link; http://blindsearch.fejus.com/

Improve your PC's Speed using Defragmenter tools

Increase the speed of your PC using Degragmenter tools
http://www.iobit.com/iobitsmartdefrag.html http://wincontig.mdtzone.it/en/index.htm http://www.auslogics.com/en/software/disk-defrag http://www.diskeeper.com/ http://www.oo-software.com/home/en/products/oodefrag/ http://www.raxco.com/ http://www.kessels.com/JkDefrag/ http://www.defraggler.com/ What is defragmentation? A process for rearranging the clusters on a disk for each file so that they are adjacent rather than scattered all over the disk. Files with adjacent clusters are quicker to read (because this minimises any required movement of the disk heads), than if the clusters are scattered all over the disk (because that requires frequent movement of the disk read heads). For this reason a computer with a defragemented disk (i.e. with all its files defragmented) will run faster than if it had a heavily fragemented disk - but only for disk related operations Please use any one of above link to download defragmentation tool. Install it in your Windows PC, do defragmentation regularly.

பேட்டரியில் ஓடும் கார்: செப்டம்பரில் டாடா அறிமுகம்

லிவு விலைக் கார் நானோவைத் தொடர்ந்து பேட்டரியில் ஓடும் கார்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வகைக் கார்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமாகும் என நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்தார்.

நியூயார்க்கில் கார்னெல் பல்கலைக் கழகத்தில் பேசுகையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். கார்னெல் பல்கலைக் கழகத்தின் அறங்காவலர்களில் டாடாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2008 ம் ஆண்டு நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் பேசுகையில், பேட்டரியில் இயங்கும் கார்களைத் தயாரித்து வருவதாக ரத்தன் டாடா தெரிவித்தார்.

உலகின் மிகக் குறைந்த விலைக் காரான நானோ 2011 ம் ஆண்டு அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் தற்போது பேட்டரியில் ஓடும் கார்களை மெய்னி குழுமத்தைச் சேர்ந்த ரேவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த கார் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

பேட்டரியில் ஓடும் கார் தயாரிப்பில் பிரபல நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுவந்த போதிலும், எவையும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் டாடாவின் பேட்டரி கார்கள் இந்நிறுவனத்தின் பெருமையை மேலும் உயர்த்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

முடிக்காக இழந்த வாய்ப்புகள்!-மந்திரா பேடி

சின்ன இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு வந்திருந்தார் பிரபல பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மந்திரா பேடி. சென்னையில் ஒரு பர்ப்யூம் மற்றும் பெண்கள் ஆடையகத்தைத் திறந்து வைக்க வந்திருந்த மந்திரா, பின்னர் நிருர்களிடம் கூறியதாவது: சின்ன வயதிலிருந்தே எனக்கு பர்ஃப்யூம்ஸ் மற்றும் ஆண்கள் அணியும் உடைகள்தான் பிடிக்கும். இந்த புதிய ஹேர்ஸ்டைல் பற்றி நிறையப் பேர் குறையாகக் கேட்கிறார்கள். இந்த முறை டிஎல்எப் போட்டிக்காக நான் செய்துகொண்ட புதிய ஹோர்ஸ்டைல் இது. செட்மேக்ஸ் ஒப்பந்தத்தில் இதுவும் ஒன்று. இந்த குட்டை முடி காரணமாக நான் சில பட வாய்ப்புகளையும் இழந்துவிட்டேன். அதுதான் கஷ்டமாக உள்ளது. நிச்சயம் என்னுடைய அடுத்த கிரிக்கெட் வர்ணனையின்போது நீண்ட கூந்தலோடு என்னைப் பார்ப்பீர்கள்," என்றவரை... 'அட அதுக்குள்ள அவ்வளவு நீளத்துக்கு முடி வளர்ந்து விடுமா உங்களுக்கு மட்டும்?' என்று நிருபர்கள் மடக்க... 'அரே யார்... விக் இருக்க எனக்கென்ன கவலை!' என ஒரு லுக் விட்டார்... க்ளீன் போல்டு!

நயன் கையில் பிரபு தேவா டாட்டூ!

ஊரே நயன்தாரா - பிரபு தேவா ரகசியம் கல்யாணம் பற்றி பேசிக் (பினாத்தி?!) கொண்டிருக்க, 'அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது... நான்தான் சொல்வேன்', என்று எல்லோர் வாய்க்கும் ஊரடங்கு போட்டுவிட்டு சட்டென்று காணாமல் போய்விட்டார் நயன்தாரா. பிரபு தேவா எங்கிருக்கிறார் என்று தெரியாது என கற்பூரம் அடிக்காத குறையாகச் சொல்கிறார் சுந்தரம் மாஸ்டர்... (விட்டா உங்க கையிலேயேகூட கற்பூரம் கொளுத்திவிடுவார்!). ஆனால் திருமணம் நடந்ததா இல்லையா என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லமாட்டேனென்று அடம் பிடிக்கிறார் மனிதர். இந் நிலையில் ஆதவன் படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு டாட்டூ கலைஞரை வரவழைத்த நயன்தாரா, தனது கையில் 'பிரபு' என டாட்டூ வரைந்து கொண்டாராம். இதில் P என்ற எழுத்து மட்டும் ஆங்கிலத்தில். மற்ற இரு எழுத்துக்களும் தமிழில் வருமாறு வரைந்து கொண்டாராம் (தமிழ் உணர்வாளர்கள் கவனிக்க!). இதற்கு முன்பே ஒருமுறை ஹைதராபாத்தில் டாட்டூ கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நயனிடம், 'டாட்டூ வரைந்து கொள்கிறீர்களா மேடம்' என கடைக்காரர்கள் கேட்க, 'ஓயெஸ்... பிரபுன்னு வரைங்க' என்றே சொன்னாராம். இந்தத் தகவலை சொல்லிக் கொண்டிருந்த நயனுக்கு நெருக்கமான பிஆர்ஓவிடம், சக நிருபர் கடுப்பாக சொன்னது... 'உண்டு இல்லை... நிஜம் பொய் இதுல ஏதாவது ஒண்ணொ சொல்லித் தொலைங்கய்யா... இன்னும் நிறைய இருக்கு எழுத!'

இன்றைய தொண்டன் நாளைய தலைவன்...' கதிகலக்கும் விஜய்!

நடிப்பில் மட்டுமல்ல... அரசியல் பேசுவதிலும் தனக்கு குரு ரஜினிதான் என்று முடிவே செய்துவிட்டார் போலிருக்கிறது விஜய். அரசியலில் தனது அடுத்த கட்டம் என்னவென்பதை ஆலோசிக்கவும், ரசிகர்களின் பணிகள் குறித்து பேசவும் நேற்று ஞாயிற்றுக் கிழமை ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் விஜய். சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான கல்யாண மண்டபங்களில் ஒன்றில்தான் இந்த கூட்டம் நீ...ண்ட நேரம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விஜய் எடுத்த எடுப்பிலேயே பயன்படுத்திய வசனம்... ஸாரிங்ணா பஞ்ச் வசனம் இது: 'நேற்றைய தொண்டன் இன்றைய தலைவன், இன்றைய தொண்டன் நாளைய தலைவன்... இதை மனதில் வச்சிக்கிட்டு செயல்படணும். உங்களால எனக்கு பெருமை கிடைக்கணும்... என்னால உங்களுக்கு பெருமையும் இருக்கும், எதிர்காலத்துக்கு உத்தராவாதமும் இருக்கும்' என ஏகத்துக்கும் ஏற்றிவிட, ஐயனார் கோயிலில் மந்திரித்து விட்டவர்கள் மாதிரி முறுக்கோடு வெளியில் வந்தனர் விஜய்யின் ரசிகர்கள். எதுக்கு இந்த பில்ட் அப்? வருகிற ஜூன் 22-ம் தேதி விஜய்க்கு பிறந்த நாள். அன்றைக்கு என்னென்ன செய்ய வேண்டும், கிட்டத்தட்ட ஒரு மாநாடு போல நடக்கவிருக்கும் இந்த பிறந்த நாள் விழா கூட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ரசிகர்களில் தேர்ந்தெடுத்த ஒரு பிரிவினரை தொண்டர் படை போல மாற்றுவது என பல்வேறு யோசனைகளை விஜய்யும் ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்தாலோசனை செய்தார்களாம். 'வாக்காளர்கள் விரலில் மை வச்சுக்க தயாரா இருக்கும் போது, நாம அதுக்கான சரியான முன்னேற்பாட்டோட தயாரா அவங்க முன்னாடி நிக்கணும்... புரிஞ்சுதா?' என்று கூட்டத்தின் முடிவில் விஜய் கேட்டாராம். இதுக்கு தமிழரோட அகராதில 'வோட்டு அரசியல்' என்று பெயர்... வேற ஏதாவது அர்த்தம் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்ணா!.

08 ஜூன் 2009

பிரபு தேவா-நயனதாரா ரகசிய திருமணம்!

முன்னணி நடன இயக்குநர்-நடிகர் மற்றும் இயக்குநரான பிரபுதேவாவும் நடிகை நயன்தாராவும் ஹைதராபாத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பிரபுதேவா வீட்டில் இந்தத் திருமணம் குறித்து மறுப்பு ஏதும் கூறவில்லை. ஆனால் நடிகை நயன்தாரா இந்தச் செய்தியை மறுத்துள்ளார். 'என் திருமண செய்தியை உரிய நேரம் வரும்போது நானே முறைப்படி அறிவிப்பேன். அதை ஒளிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று அவர் கூறியுள்ளார். இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'ஐயா' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆன நயன்தாரா, அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகி முதல் நிலை நடிகை [^] என்ற அந்தஸ்தை பெற்றார். பின்னர் 'வல்லவன்' படத்தில் சிலம்பரசனுடன் ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. மிக மிக நெருக்கமாத இருவரும் பழகியது அனைவருக்குமே தெரிந்த ரகசியமானது. சில காரணங்களால் சிம்புவுடனான காதல் முறிந்துவிட்டதாக நயன்தாரா அறிவித்தார். தன் இருப்பிடத்தை சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றினார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். குறிப்பாக நாகார்ஜுனாவுடன். இதனால் இருவருக்கும் மிக நெருக்கமான உறவிருப்பதாக பேச்சு கிளம்பியது. பின்னர் ஒருவழியாக மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார். வில்லுவில் 'கவிழ்ந்(த்)த' பிரபுதேவா!... விஜய் [^] கதாநாயகனாக நடித்து, பிரபுதேவா டைரக்டு செய்த 'வில்லு' படத்தில் நயன்தாரா நாயகியானார். அந்த படப்பிடிப்பின்போது பிரபுதேவா - நயன் இடையே மிக நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒரே ஒட்டலில் தங்க ஆரம்பித்தார்கள். இதுபற்றி பரபரப்பாக செய்திகள் [^] வரத் துவங்கின. இதுபற்றி பிரபுதேவாவிடம் நிருபர்கள் கேட்டபோது, "அது என் தனிப்பட்ட விஷயம். அதுபற்றி பேச விரும்பவில்லை" என்று கூறிவிட்டார். நயன்தாராவும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. ரகசிய திருமணம்?: இந் நிலையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்டதாக, ஆந்திர திரையுலகில் பரபரப்பான தகவல் பரவியது. இதுபற்றி பிரபுதேவா குடும்பத் தரப்பில் விசாரித்தபோது அவர்கள் மறுப்பும் சொல்லவில்லை, உறுதிப்படுத்தவும் இல்லை. ஆனால் பிரபுதேவாவின் நண்பர்கள் இந்தத் திருமணம் நடந்தது உறுதி என்றும், பிரபுதேவாவின் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக பிரபு தேவாவின் தந்தை சுந்தரம், நயன்தாராவை பிரபுதேவா தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் முதல் மனைவியை தள்ளி வைத்துவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்க, அதை பிரபுதேவா ஒப்புக் கொண்டார் என்றும் கூறினர். கடந்த ஒரு மாதமாகவே நயன்தாரா-பிரபுதேவா சேர்ந்தே வசிப்பதாகவும் தெரிவித்தனர் அவர்கள். ஒளிக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் நயன்தாரா தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்ல முடியாது என்று கோபமாகத் தெரிவித்தனர். நயன்தாராவோ, 'என் திருமண செய்தி [^]யை உரிய நேரம் வரும்போது நானே முறைப்படி அறிவிப்பேன். அதை ஒளிக்க வேண்டிய அவசியம் இல்லை' என தனது மேனேஜர் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். 1996ம் ஆண்டு தனது நடனக் குழுவிலிருந்த ரம்லத் என்ற பெண்ண காதலித்து திருமணம் [^] செய்து கொண்ட பிரபுதேவா, கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அவரை தலைமறைவாகவே வைத்திருந்தார். இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள். இதில் மூத்த மகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் காலமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Funny "Error" Messages

'வேண்டாம் ஆஸ்திரேலியா!' : பாலிவுட்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் [^] தாக்கப்பட்டதைக் கண்டித்து பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், அமீர்கான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். தனக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வழங்குவதாக இருந்த டாக்டர் பட்டத்தை வேண்டாம் என அமிதாப் மறுத்தது நினைவிருக்கலாம். இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இனவெறிக் கொடுமை நடப்பதாக அமீர் கான் தனது வலைப்பூவில் எழுதியதோடு இதைக் கண்டித்து இந்தியர்கள் [^] குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சீக்கிய இனத்தவர்களைத் தவிர வேறு யாரும் இதுபற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. குறிப்பாக தென்மாநில மக்கள் இந்தப் பிரச்சினை குறித்து சின்ன அசைவைக் கூட காட்டவில்லை. எங்கள் இன மக்களை ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவிக்கப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள் இந்த பாலிவுட் நட்டத்திரங்கள்? என்றே சாமானிய மக்கள் முதல் பிரபலமான நட்சத்திரங்கள் வரை கேட்க ஆரம்பித்துவிட்டனர். எனவே இந்தப் பிரச்சினையை இப்போது தீவிரமாகக் கையிலெடுக்க முடிவு செய்துள்ளது பாலிவுட். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த படப்பிடிப்புகளை ரத்து செய்ததோடு, அங்கு தங்கி பட வேலைகளைக் கவனித்து வந்த தொழில்நுட்ப குழுவினரை முழுமையாகத் திருப்பியழைக்கத் துவங்கியுள்ளனர் மும்பை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். இனி ஆஸ்திரேலியாவுக்கு விடுமுறைக்குக் கூட போகமாட்டேன் என அறிவித்துள்ளார் பிரபல இயக்குநர் [^] டேவிட் தவான். இந்தியர்களுக்கு முழு மரியாதை தரப்படும்வரை ஆஸ்திரேலியாவுக்கே போகமாட்டேன் என அறிவித்துள்ளார் சுபாஷ் கய். மதுர் பண்டார்கர், ரத்தன் ஜெய்ன் போன்றவர்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் இலங்கையில் தமிழர்கள் [^] குண்டுவீசிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்திய கிரிக்கெட் [^] அணியை அங்கு விளையாட அனுப்பியது இந்திய கிரிக்கெட் வாரியம். அதை ரசித்து மகிழ்ந்தவர்கள் இதே நட்சத்திரங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது!.

Alternatives to Windows Laptop Battery Meter

Alternatives to Windows Laptop Battery Meter
After purchasing brand new laptop, its battery may working for long time i.e., 3 to 4 hours non stop. Laptop sales is depends on the frequent electricity power failure in your geographic area. After some day, you will feel bad about battery life for your laptop. It may results more trouble. I Integrated Battery meter in your windows OS is insufficient for many times. It may fail often. For solving this problem, you do not need to buy another battery for one more 100$. Feel free to use any one of the freeware application which are alternatives to windows Battery Meter. Here is the links to download : http://www.osirisdevelopment.com/BatteryBar/index.html http://mattcollinge.wordpress.com/software/power-meter-plus/

சிம்புவை காதலிக்கிறேனா?-த்ரிஷா

கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் சிம்புவுடன் தீவிரமாக லவ்வுவதாக த்ரிஷா குறித்து வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அலை படத்துக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தில்தான் இந்த லவ் ரொம்ப ஸ்ட்ராங்காகிவிட்டதாக சில பத்திரிகைகளில் 'பிட்' ஓடிக் கொண்டிருக்கிறது! இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, "இந்த மாதிரி வதந்திகள் இப்ப எனக்கு பழகிப் போச்சு. ஏன்னா... நான் இன்டஸ்ட்ரிக்கு வந்து 7 வருஷம் ஆகுது. இனிமேலும் இப்படிப்பட்ட செய்திகள் வரலேன்னாதான் ஆச்சரியம். அதைப் பத்தி நான் கவலைப் படறதே இல்லை. ஆமா... இல்லன்னு ஒரு வார்த்தையில பதில் சொல்லக் கூட எனக்குப் பிடிக்கல", எனும் த்ரிஷா தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அது ஏன் தெலுங்கில் மட்டும் ஸ்பெஷல் அக்கறை? தெலுங்கில் நான்தான் ராணி மாதிரி. அந்த அளவு மரியைதையோட என்னை நடத்துறாங்க. எனனோட சமீபத்திய படம் கிங் பெரிய ஹிட் அங்கே. அதனால் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துவதை விரும்புகிறேன். அதுக்காக தமிழைப் புறக்கணிக்கலை. இங்கும் வித்தியாசமான வேடங்களைச் செய்ய விரும்புகிறேன், எனும் த்ரிஷாவுக்கு சென்னையில் மட்டும் 1000 ரசிகர் மன்றங்கள் உள்ளனவாம்! இதில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம். அது சரி... 'தெலுங்கு ராணி' சொன்னா சென்னை ரசிகர்கள் செய்துதானே ஆகணும்!

Windows 7 & XP/Vista together

Windows 7 கிட்டத்தட்ட VISTA இன் மறுவடிவாக்கம்தான். குறிப்பாக Tablet PC வைத்திருப்பவர்களுக்கு இதன் graphical interface நன்றாக இருக்கும். Touch technology ன் இன்னொரு பரிமாணத்துக்கு உதவக்கூடும். Release Candidate இலவசமாக வெளியிடப்பட்டிருப்பதால், அனைவரும் முயற்சித்துப் பார்க்கலாம்.

அதற்கு முதலில் உங்கள் கணினி தயார் நிலையில் உள்ளதா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதற்கு Windows 7 Upgrade Advisor ஐ உங்கள் கணினியில் நிறுவி பரீட்சித்துப் பார்க்கவும். குறிப்பாக சில மென்பொருட்கள், வன் பொருட்கள் Windows 7 க்கு தயார் நிலையில் இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக இன்னமும் XP பாவிப்பவர்கள் இத்தகைய சிரமங்களை எதிர் கொள்ளலாம். VISTA பாவிப்பவர்களுக்கு எத்தகைய சிக்கல்களும் பெரிதாக இல்லை.

image

(Sample Windows 7 upgrade Advising report)

XP ல் இருந்து Windows 7 க்கு போக விரும்புவர்கள், உங்கள் Hard Disk ஐ back up செய்வது அவசியம். Back Up செய்த பின் Format செய்வது installation ஐ இலகுவாக்கும்.

VISTA ல் இருந்து Windows 7 க்கு போவதில் பெரிதாக சிக்கல் இல்லை. Hard Disk ஐ back up செய்யலாம். ஆனால் தேவையில்லை. நேரடியாகவே system files மாற்றப்படுவதால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.

Windows 7 RC version கிட்டத்தட்ட அடுத்த வருடம் ஜூன் வரை இலவச பயன்பாட்டில் இருக்கும். எனவே அதற்கு மேலும் தொடர்ந்து பாவிக்க முடியாமல், அதனை உத்தியோகபூர்வமாக காசு கொடுத்து வாங்க முடியாத/விரும்பாத அனைவரும் இப்படி நேரடியாக Windows 7 க்கு மாறுவதை தவிர்த்து, பழைய Operating System (Vista/XP) ஐயும் Windows 7 ஐயும் தனி தனி partition ல் வைத்திருக்கலாம். அதற்கு உங்கள் hard disk ல் போதுமான அளவு இட வசதி இருக்க வேண்டும். (Hard Disk கள் இப்போது 1000 + GB (1 TB) ரீதியில் இருப்பதால் பிரச்சினை இல்லை, மாற்ற விரும்பினால் இன்னும் சிலவாரங்களில் வர இருக்கும் IT shows க்களை பயன்படுத்திக்கொள்ளவும்)

இங்கே சென்று உங்கள் Windows 7 RC ஐ தரவிறக்கம் செய்யலாம். அதற்கு முன் உங்கள் கணினி System ஐ சரி பார்த்து நீங்கள் 32 அல்லது 64 bit processor என்பதை தெரிந்து கொண்டு உங்களுக்கான 32 அல்லது 64 bit RC ஐ தரவிறக்கவும். Product Key ஐ மறக்காமல் சேமித்து/எழுதி வைக்கவும்.

தரவிறக்கிய File, .ISO format (image) ல், இருக்கும் இதனை Nero அல்லது வேறு மென்பொருட்களை பாவித்து DVD ல் அடித்துக்கொள்ளவும்.

நேரடியாக Windows 7 க்கு போக விரும்புவர்கள் DVD ஐ run பண்ணி அப்படியே Install, next, என்று போயிட்டே இருங்கோ. எங்கையாவது தப்பு நடந்தா, ஒன்னும் பயப்பட வேண்டாம். Default O/S மீள் இருப்பு (Restore) செய்யப்படும். ஒரு பிரச்சினையும் இல்லை என்றால் 20 நிமிடங்களில் Windows 7 உங்களை வரவேற்கும்.

சரி புதிய partition ல் install செய்ய விரும்புவர்கள், முதலில் ஒரு partition ஐ உருவாக்குங்கள் அல்லது தெரிவு செய்யுங்கள். இதற்கு நீங்கள் Administrator account type இல் log in ஆக வேண்டும். Start –> Run இல் ”diskmgmt.msc” என்று அடித்தால் Disk Management wizard வரும். அதன் மூலம் உங்கள் Hard Disk partition ஐ ஆராயலாம். உங்கள் பழைய system files இருக்கும் drive ஐ தவிர்த்து புதிதாக ஒன்றை தெரிவு செய்யுங்கள் அல்லது உருவாக்குங்கள். (தற்போது C drive இல் system இருந்தால் D drive ல் புதிய paritition ஐ உருவாக்குங்கள்). மூன்றாம் தரப்பு மென்பொருட்களான Partition Magic போன்ற மென்பொருட்களையும் இதற்கு பாவிக்கலாம்.

Partition வெற்றிகரமாக உருவாகிவிட்டதா, சரி இனி நீங்கள் windows 7 ஐ install பண்ண தயாராகலாம்.

DVD ஐ Run பண்ணவும். Install Windows 7 ஐ தெரிவு செய்து, வழக்கமான terms & conditions ஐ ஆதரித்து விட்டு மேலும் தொடர்ந்தால் கீழே உள்ள திரை வரும்.

Custom (Advanced) option ஐ தெரிவு செய்யவும்.

12 things you need to know before installing Windows 7 Release Candidate

இங்க கவனமாக நீங்கள் விரும்பும் partition ஐ தெரிவு செய்யவும், மாறி பழையதை தெரிவு செய்தால் பழைய system files க்கு ஆப்பு தான்.

அப்பப்ப கணினி Restart ஆகி installation தொடரும். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை எடுக்கும்.

எல்லாம் வெற்றி கரமாக முடிந்த பின் கணினையை Restart செய்தால், BIOS screen க்கு பின், Opertaing System தெரிவு செய்யும் திரை வரும். நீங்கள் விரும்பும் system ஐ தெரிவு செய்து உள்ளெ நுழையலாம். (கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் பின் DOS/Windows காலத்துக்கு பின் இப்போது தான் dual O/S பாவனைக்குள் நுழைகிறேன்)

Task bar ல் முன்பு போல் Applications குவியாமல் கட்டுப்பட்டுத்தப்பட்டிருக்கின்றது. IE எத்தனை window open பண்ணினாலும், அல்லது எத்தனை tap open பண்ணினாலும், அழகாக cascade பண்ணுகின்றது. சில சமயங்களில் Apple O/S ஐ ஞாபகப் படுத்துவதை தவிர்க்க முடியவில்லை

image

இனி உங்களுக்கு தேவையான மென் பொருட்களை தரவிறக்கம் செய்யவும். Windows Live மென்பொருட்கள், Google Pack போன்றவற்றில் எந்த பிரச்சினையும் இல்லை. பெரும்பாலான மென்பொருட்கள் Windows 7 ல் பாவிக்ககூடியதாகவே உள்ளது. Vista வில் பாவிக்க முடிந்த பெரும்பாலானவை இங்கேயும் பாவிக்கலாம். இருந்தாலும் தரவிறக்கம் செய்யும் போது அவற்றின் Requirement களை ஒருக்கா பார்த்து விடுவது நலம்.

தகவல்களை சுட்டு நான் பயன் பெற்ற இடம்:TECHSPOT

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com