Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

08 ஜூன் 2009

Windows 7 & XP/Vista together

Windows 7 கிட்டத்தட்ட VISTA இன் மறுவடிவாக்கம்தான். குறிப்பாக Tablet PC வைத்திருப்பவர்களுக்கு இதன் graphical interface நன்றாக இருக்கும். Touch technology ன் இன்னொரு பரிமாணத்துக்கு உதவக்கூடும். Release Candidate இலவசமாக வெளியிடப்பட்டிருப்பதால், அனைவரும் முயற்சித்துப் பார்க்கலாம்.

அதற்கு முதலில் உங்கள் கணினி தயார் நிலையில் உள்ளதா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதற்கு Windows 7 Upgrade Advisor ஐ உங்கள் கணினியில் நிறுவி பரீட்சித்துப் பார்க்கவும். குறிப்பாக சில மென்பொருட்கள், வன் பொருட்கள் Windows 7 க்கு தயார் நிலையில் இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக இன்னமும் XP பாவிப்பவர்கள் இத்தகைய சிரமங்களை எதிர் கொள்ளலாம். VISTA பாவிப்பவர்களுக்கு எத்தகைய சிக்கல்களும் பெரிதாக இல்லை.

image

(Sample Windows 7 upgrade Advising report)

XP ல் இருந்து Windows 7 க்கு போக விரும்புவர்கள், உங்கள் Hard Disk ஐ back up செய்வது அவசியம். Back Up செய்த பின் Format செய்வது installation ஐ இலகுவாக்கும்.

VISTA ல் இருந்து Windows 7 க்கு போவதில் பெரிதாக சிக்கல் இல்லை. Hard Disk ஐ back up செய்யலாம். ஆனால் தேவையில்லை. நேரடியாகவே system files மாற்றப்படுவதால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.

Windows 7 RC version கிட்டத்தட்ட அடுத்த வருடம் ஜூன் வரை இலவச பயன்பாட்டில் இருக்கும். எனவே அதற்கு மேலும் தொடர்ந்து பாவிக்க முடியாமல், அதனை உத்தியோகபூர்வமாக காசு கொடுத்து வாங்க முடியாத/விரும்பாத அனைவரும் இப்படி நேரடியாக Windows 7 க்கு மாறுவதை தவிர்த்து, பழைய Operating System (Vista/XP) ஐயும் Windows 7 ஐயும் தனி தனி partition ல் வைத்திருக்கலாம். அதற்கு உங்கள் hard disk ல் போதுமான அளவு இட வசதி இருக்க வேண்டும். (Hard Disk கள் இப்போது 1000 + GB (1 TB) ரீதியில் இருப்பதால் பிரச்சினை இல்லை, மாற்ற விரும்பினால் இன்னும் சிலவாரங்களில் வர இருக்கும் IT shows க்களை பயன்படுத்திக்கொள்ளவும்)

இங்கே சென்று உங்கள் Windows 7 RC ஐ தரவிறக்கம் செய்யலாம். அதற்கு முன் உங்கள் கணினி System ஐ சரி பார்த்து நீங்கள் 32 அல்லது 64 bit processor என்பதை தெரிந்து கொண்டு உங்களுக்கான 32 அல்லது 64 bit RC ஐ தரவிறக்கவும். Product Key ஐ மறக்காமல் சேமித்து/எழுதி வைக்கவும்.

தரவிறக்கிய File, .ISO format (image) ல், இருக்கும் இதனை Nero அல்லது வேறு மென்பொருட்களை பாவித்து DVD ல் அடித்துக்கொள்ளவும்.

நேரடியாக Windows 7 க்கு போக விரும்புவர்கள் DVD ஐ run பண்ணி அப்படியே Install, next, என்று போயிட்டே இருங்கோ. எங்கையாவது தப்பு நடந்தா, ஒன்னும் பயப்பட வேண்டாம். Default O/S மீள் இருப்பு (Restore) செய்யப்படும். ஒரு பிரச்சினையும் இல்லை என்றால் 20 நிமிடங்களில் Windows 7 உங்களை வரவேற்கும்.

சரி புதிய partition ல் install செய்ய விரும்புவர்கள், முதலில் ஒரு partition ஐ உருவாக்குங்கள் அல்லது தெரிவு செய்யுங்கள். இதற்கு நீங்கள் Administrator account type இல் log in ஆக வேண்டும். Start –> Run இல் ”diskmgmt.msc” என்று அடித்தால் Disk Management wizard வரும். அதன் மூலம் உங்கள் Hard Disk partition ஐ ஆராயலாம். உங்கள் பழைய system files இருக்கும் drive ஐ தவிர்த்து புதிதாக ஒன்றை தெரிவு செய்யுங்கள் அல்லது உருவாக்குங்கள். (தற்போது C drive இல் system இருந்தால் D drive ல் புதிய paritition ஐ உருவாக்குங்கள்). மூன்றாம் தரப்பு மென்பொருட்களான Partition Magic போன்ற மென்பொருட்களையும் இதற்கு பாவிக்கலாம்.

Partition வெற்றிகரமாக உருவாகிவிட்டதா, சரி இனி நீங்கள் windows 7 ஐ install பண்ண தயாராகலாம்.

DVD ஐ Run பண்ணவும். Install Windows 7 ஐ தெரிவு செய்து, வழக்கமான terms & conditions ஐ ஆதரித்து விட்டு மேலும் தொடர்ந்தால் கீழே உள்ள திரை வரும்.

Custom (Advanced) option ஐ தெரிவு செய்யவும்.

12 things you need to know before installing Windows 7 Release Candidate

இங்க கவனமாக நீங்கள் விரும்பும் partition ஐ தெரிவு செய்யவும், மாறி பழையதை தெரிவு செய்தால் பழைய system files க்கு ஆப்பு தான்.

அப்பப்ப கணினி Restart ஆகி installation தொடரும். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை எடுக்கும்.

எல்லாம் வெற்றி கரமாக முடிந்த பின் கணினையை Restart செய்தால், BIOS screen க்கு பின், Opertaing System தெரிவு செய்யும் திரை வரும். நீங்கள் விரும்பும் system ஐ தெரிவு செய்து உள்ளெ நுழையலாம். (கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் பின் DOS/Windows காலத்துக்கு பின் இப்போது தான் dual O/S பாவனைக்குள் நுழைகிறேன்)

Task bar ல் முன்பு போல் Applications குவியாமல் கட்டுப்பட்டுத்தப்பட்டிருக்கின்றது. IE எத்தனை window open பண்ணினாலும், அல்லது எத்தனை tap open பண்ணினாலும், அழகாக cascade பண்ணுகின்றது. சில சமயங்களில் Apple O/S ஐ ஞாபகப் படுத்துவதை தவிர்க்க முடியவில்லை

image

இனி உங்களுக்கு தேவையான மென் பொருட்களை தரவிறக்கம் செய்யவும். Windows Live மென்பொருட்கள், Google Pack போன்றவற்றில் எந்த பிரச்சினையும் இல்லை. பெரும்பாலான மென்பொருட்கள் Windows 7 ல் பாவிக்ககூடியதாகவே உள்ளது. Vista வில் பாவிக்க முடிந்த பெரும்பாலானவை இங்கேயும் பாவிக்கலாம். இருந்தாலும் தரவிறக்கம் செய்யும் போது அவற்றின் Requirement களை ஒருக்கா பார்த்து விடுவது நலம்.

தகவல்களை சுட்டு நான் பயன் பெற்ற இடம்:TECHSPOT

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com