முன்னணி நடன இயக்குநர்-நடிகர் மற்றும் இயக்குநரான பிரபுதேவாவும் நடிகை நயன்தாராவும் ஹைதராபாத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பிரபுதேவா வீட்டில் இந்தத் திருமணம் குறித்து மறுப்பு ஏதும் கூறவில்லை. ஆனால் நடிகை நயன்தாரா இந்தச் செய்தியை மறுத்துள்ளார். 'என் திருமண செய்தியை உரிய நேரம் வரும்போது நானே முறைப்படி அறிவிப்பேன். அதை ஒளிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரப
ரப்பு ஏற்பட்டுள்ளது.

'ஐயா' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆன நயன்தாரா, அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகி முதல் நிலை
நடிகை ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
என்ற அந்தஸ்தை பெற்றார். பின்னர் 'வல்லவன்' படத்தில் சிலம்பரசனுடன் ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. மிக மிக நெருக்கமாத இருவரும் பழகியது அனைவருக்குமே தெரிந்த ரகசியமானது.
சில காரணங்களால் சிம்புவுடனான காதல் முறிந்துவிட்டதாக நயன்தாரா அறிவித்தார்.
தன் இருப்பிடத்தை சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றினார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். குறிப்பாக நாகார்ஜுனாவுடன். இதனால் இருவருக்கும் மிக நெருக்கமான உறவிருப்பதாக பேச்சு கிளம்பியது.
பின்னர் ஒருவழியாக மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.
வில்லுவில் 'கவிழ்ந்(த்)த' பிரபுதேவா!...
விஜய் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
கதாநாயகனாக நடித்து, பிரபுதேவா டைரக்டு செய்த 'வில்லு' படத்தில் நயன்தாரா நாயகியானார்.
அந்த படப்பிடிப்பின்போது பிரபுதேவா - நயன் இடையே மிக நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒரே ஒட்டலில் தங்க ஆரம்பித்தார்கள். இதுபற்றி பரபரப்பாக
செய்திகள் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
வரத் துவங்கின.
இதுபற்றி பிரபுதேவாவிடம் நிருபர்கள் கேட்டபோது, "அது என் தனிப்பட்ட விஷயம். அதுபற்றி பேச விரும்பவில்லை" என்று கூறிவிட்டார். நயன்தாராவும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.
ரகசிய திருமணம்?:
இந் நிலையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் நேற்று ரகசிய திருமணம் செய்துகொண்டதாக, ஆந்திர திரையுலகில் பரபரப்பான தகவல் பரவியது.
இதுபற்றி பிரபுதேவா குடும்பத் தரப்பில் விசாரித்தபோது அவர்கள் மறுப்பும் சொல்லவில்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.
ஆனால் பிரபுதேவாவின் நண்பர்கள் இந்தத் திருமணம் நடந்தது உறுதி என்றும், பிரபுதேவாவின் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
குறிப்பாக பிரபு தேவாவின் தந்தை சுந்தரம், நயன்தாராவை பிரபுதேவா தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் முதல் மனைவியை தள்ளி வைத்துவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்க, அதை பிரபுதேவா ஒப்புக் கொண்டார் என்றும் கூறினர்.
கடந்த ஒரு மாதமாகவே நயன்தாரா-பிரபுதேவா சேர்ந்தே வசிப்பதாகவும் தெரிவித்தனர் அவர்கள்.
ஒளிக்க வேண்டிய அவசியமில்லை!
ஆனால் நயன்தாரா தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்ல முடியாது என்று கோபமாகத் தெரிவித்தனர்.
நயன்தாராவோ, 'என் திருமண
செய்தி ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
யை உரிய நேரம் வரும்போது நானே முறைப்படி அறிவிப்பேன். அதை ஒளிக்க வேண்டிய அவசியம் இல்லை' என தனது மேனேஜர் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.
1996ம் ஆண்டு தனது நடனக் குழுவிலிருந்த ரம்லத் என்ற பெண்ண காதலித்து
திருமணம் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
செய்து கொண்ட பிரபுதேவா, கிட்டத்தட்ட பத்தாண்டுகள் அவரை தலைமறைவாகவே வைத்திருந்தார்.
இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள். இதில் மூத்த மகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் காலமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.