மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா என்பதே?
மைக்ரோசாப்ட் விண்டோஸ் புண்ணியத்தில் சாப்ட்வேர் சந்தையில் வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம்.ஆனால் தேடியந்திர உலகம் அதற்கு அத்தனை ராசியில்லை. கூகுலுக்கு முன்னதாகவே மைக்ரோசாப்ட் சார்பில் தேடியந்திரம் செயல்பட்டுவந்தாலும் முன்னணி தேடியந்திரம் என்னும் அந்தஸ்து அதற்கு கிடைத்ததே இல்லை.
அதிலும் கூகுல் அறிமகமான பிறகு தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.அதோடு கூகுலை மிஞ்சும் தேடியந்தரம் கிடையாது என்னும் எண்ணத்திஅயும் ஏற்படுத்திவிட்டது.
இருந்தும் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு முயற்சித்தே கொண்டிருக்கிறது.முதலில் எம் எஸ் என் இருந்த்து. அப்புறம் லைவ் என்றது. எவற்றாலும் கூகுலை அசைக்கமுடியவில்லை.
இப்போது பிங் என்னும் பெயரில் புதிய தேடியந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. பிங்கின் தோற்றமும் சரி செயல்பாடும் சரி இதற்கு முந்தைய முயற்சிகளைவிட சிறந்ததாகவே அமைந்துள்ளது.
அனால் கேள்வி அதுவல்ல. கூகுலோடு ஒப்பிடும் போது பிங் எப்படியிருக்கிறது என்பதே விஷயம். முதல் கட்ட விமர்சனங்கள் அத்தனை மோசமில்லை. பிங் அடுத்த சுற்றுக்கு தாக்கு பிடிக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகி விட்டது.
சரி அப்படியென்றால் பிங் கூகுலைவிட சிறந்ததாக இருக்கிறதா?இந்தகேள்விக்கான பதிலில் நிபணர்களும் வேறுபடுகின்றனர். இணையவாசிகளும் வேறுபடுகின்றனர். கூகுலுக்கு நிகரானதா என்பதை சொல்ல இன்னும் காலம் தேவைப்படும் . அதுவரை பிங் தேடியந்திர சோதனைகளை எதிர்கொண்டாக் வேண்டும்.
நிற்க கூகுல்\பிங் போட்டியில் தற்போது முந்தும் தேடியந்திரம் எது என்பதை அத்தனை சுலபத்தில் சொல்லிவிட முடியாது என்பதே உண்மை.
ஆனால் இந்த பதிலை அறிய விரும்புகிறவர்களுக்கு சுலபமான சோதனை ஒன்று இருக்கிறது. அதற்கு குருட்டுத்தேடல் என்றூ பெயர். மைக்கேல் கோர்டாரி என்பவர் உருவாக்கிய சோதனை முறை இது. இதற்காக் பிலைன்ட் சர்ச் என்னும் பெயரில் ஒரு தளத்தையும் அமைத்துள்ளார். இந்த தளத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை டைப் செய்து தேடும் போது தேடல் முடிவுகள் மூன்று கட்டங்களாக பிரித்து காட்டப்படும் . அவற்றை ஒப்பிட்டுப்பார்த்து சிறப்பாக இருப்பதாக கருதும் முடிவுக்கு வாக்களிக்க வேண்டும்.
எந்த தேடியந்திரம் அதிக வாக்குகள் பெறுகிறதோ அதுவோ சிறந்தது என கொள்ளலாம்.
இதில் என்ன விஷேசம் எனறால் முடிவுகள் பிரித்துக்காட்டப்படும் போது அவை எந்த தேடியந்திரத்துக்கு சொந்தாமானவை என்பது தெரியாது. அதாவது தேடியந்திர லோகோ இல்லாமல் முடிவிகள் மட்டும் முவைக்கப்பட்டிருக்கும்.
எனவோ சார்பு நிலை இல்லாமல் முடிவுகளின் தன்மை அடிப்படையிலேயே வாக்குகள் அமையும்.
இந்த முறையில் தற்போது கூகுல் மற்றும் பிங் ஆகிய தேடியந்திரங்களை ஒப்பிட்டு வருகின்றனர். இது வரை பிங் அப்படி ஒன்றும் பின்தங்கிவிடவில்லை. கூகுல் ஒன்றும் முந்திவிட வில்லை.
நீங்களும் சோதித்துப்பார்க்க…. — link; http://blindsearch.fejus.com/