தமிழ்மணம் பரிந்துரை |
05 ஜூன் 2010
இணையத்தை (INTERNET) வேகமாகவும் எளிதாகவும் பயன்படுத்த உதவும் (SHORTCUTS) குறுக்குவழிகள்.
ரம்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் பரிசு
உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இவர் தனது பிறந்த தினத்தை, இன்று (5ம்தேதி) கொண்டாடுகிறார். ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்திரனின் மேஜிக்உட் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தமான ரம்பாவை பார்த்ததும் இந்திரனுக்கு பிடித்து விட்டது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இந்திரன் - ரம்பா திருமணம் திருப்பதியில் கோலாகலமாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு நடிகை ரம்பா கணவருடன் கனடாவுக்கு சென்று விட்டார்.
இப்போது தனது பிறந்த நாளை பெற்றோர், சகோதரர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக சென்னை வந்துள்ளார். எப்போதுமே வித்தியாசத்தை விரும்பும் ரம்பா, பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி தினமலர் டாட் காமுடன் இணைந்து ஒரு வாழ்த்து போட்டியை அறிவித்திருக்கிறார். பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் வாசகர்களில் தனக்கு பிடித்தமாக, அழகான வாழ்த்து கூறும் வாசகர்களுக்கு பரிசு வழங்கப் போகிறார். ‘பிறந்த நாள் வாழ்த்து’ போட்டியில் பங்கேற்கும் வாசகர்களில் வித்தியாசமான வாழ்த்து அனுப்பும் 5 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ரம்பா பரிசு வழங்குவார்.
ரம்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பும் வாசகர்கள் தங்களது வாழ்த்துக்களை இங்கேயே பதிவு செய்யலாம். வெற்றி பெறும் வாசகர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்
தமிழர் பிரச்சினை தீரும் வரை இலங்கைக்கு அவமானம் தொடரும்! – சிங்கள எம்பி ரோஸி
கொழும்பு: வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீளக்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கை தவிர்க்க முடியாது. ஐஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள பெண் எம்பி ரோஸி சேனநாயக்க கூறியுள்ளார்.
மேலும் அமிதாப் பச்சன் இல்லாத ஐஃபா விழா, மணமகன் இல்லாத திருமணத்துக்குச் சமமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற ரோஸி கூறியதாவது:
போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களை மீளக்குடியேற்றி விட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இது அப்பட்டமான பொய்.
உண்மையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையான மக்கள் இன்றும் அகதி முகாம்களில் எதுவிதமான வசதிகளுமின்றி வாழ்கின்றனர். மக்களை மீளக் குடியேற்றியதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அம் மக்கள் இன்றும் தகரக் கொட்டகைகளில் மிருகங்களைப் போல் வாழ்கின்றனர்.
உண்ண உணவில்லை, வாழ்வதற்கு வழியில்லாது, தொழில் இல்லாது பிள்ளைகளுக்கு கல்வி இல்லாது, அடிப்படை வசதிகளின்றி பரிதாபமான நிலையில் உள்ளனர்.
மறுபுறம் யுத்தம் முடிந்து ஒரு வருடம் கழிந்தபோதும் இதுவரையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வு என்னவென்பதை மகிந்த அரசாங்கம் முன்வைக்கவில்லை.
இந்த சூழலில் சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற ஐஃபா திரைப்பட விழா இலங்கையில் நடைபெறுகிறது. இது இலங்கைக்கு கௌரவம்தான்.
ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் தென்னிந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் இவ் விழாவில் நடிகர்கள் கலந்து கொள்ளக்கூடாது என கடும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.
இதன் மூலம் இலங்கைக்கு களங்கமும் அவமானமும் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பும் மகிந்த அரசாங்கத்தையே சேரும்.
ஐஃபா சினிமா விழாவின் தூதுவரும் ஏற்பாட்டாளருமான அமிர்தாப்பச்சன், அபிஷேக் பச்சன், உலகப் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட தென்னிந்திய புகழ் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம் போன்ற முக்கிய பிரமுகர்கள், புகழ் பெற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டும் அதை வாங்கவே மறுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
தென்னிந்தியாவிலும் சர்வதேச ரீதியிலும் இலங்கை அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பு நிலைதான் இதற்குக் காரணம்.
இதன் மூலம் தமிழ் மக்களுக்கு இலங்கை எந்த நியாயத்தையும் வழங்கவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தில் வெற்றி பெற்று பயங்கரவாதத்தை ஒழித்து ஒரு வருடம் கழிந்த போதும் இனப் பிரச்சினைக்கு தீர்வை அரசாங்கம் வழங்கவில்லை.
வெறுமனே அரசியலமைப்பு திருத்தம், ஆசியாவில் ஆச்சர்யமிக்க நாடாக மாற்றுவோம் என அரசு தரப்புில் வாய் கிழிய கூறித் திரிகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதற்கான அறிகுறியே இல்லை.
இப்படியொரு சூழலில் இந்தியாவிலும் உலகிலும் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். இலங்கைக்கு அவமானங்களும் தொடரவே செய்யும்.
ஐஃபா சினிமா விழா என்பது உலகப் புகழ் பெற்றது. ஆசியாவின் ஆஸ்கர் என வர்ணிக்கப்படுவது. சர்வதேச திரைத்துறையில் மூன்றில் இரண்டு பங்குடன் பெரும் ஜாம்பவானாகத் திகழும் இந்திய திரைத்துறை வேறு நாடுகளில் இதனை நடத்துவது அந்த நாட்டுக்கு கௌரவத்தையும் புகழையும் பெற்றுக் கொடுக்கும்.
ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் கௌரவத்துக்குப் பதில் அவமானமே மிஞ்சியுள்ளது.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, அதிகாரப் பரவலாக்கல், இனத்துவ கௌரவத்தை வழங்கும் அரசியல் தீர்வை உடனே அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களை ஓரம் கட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தால் உலக நாடுகளிலிருந்து நாம் தனிமைப்படுத்தப்படுவோம்,” என்றார்.
ரோஸி சேனநாயக்க, 1985-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர், மலேசியாவில் இலங்கைத் தூதராக 2002 முதல் 2004 வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட்டில் ‘வடிவமைக்கப்படும்’ எந்திரன்! – ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்
ரஜினியை திரையில் ரசித்தவர், இப்போது அவர் படத்துக்கே சவுண்ட் டிஸைனராகிறார்! – ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்
சவுண்ட் டிசைனிங் எனப்படும் ஒலி வடிவமைப்பு இன்றைக்கு படங்களில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் ரொம்ப வருடங்களுக்கு முன்பே இந்த தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது. இப்போது பாலிவுட்டிலும் சவுண்ட் டிஸைனிங் இல்லாத படங்கள் இல்லை என்ற நிலை. ஆனால் கோலிவுட்டில், சவுண்ட் டிசைனிங் பற்றிய உணர்வு பெரும்பாலானோருக்கு இல்லை. தமிழில் பக்கா சவுண்ட் டிசைனிங்குடன் வெளியான முதல் படம் அச்சமுண்டு அச்சமுண்டு. செய்தவர் குணால் ராஜன். இவர் வசிப்பது இங்கல்ல… அமெரிக்காவில்!
ஜஸ்ட் 25 வயதில் ஹாலிவுட்டின் முன்னணி சவுண்ட் டிசைனராகக் கலக்குகிறார் (செல்லுமிடமெல்லாம் சிறப்பு சேர்ப்பது தமிழனின் பலமாச்சே…).
புதுச்சேரியைச் சேர்ந்தவர் குணால் ராஜன். அமெரிக்காவில் 20 வயதில் செட்டிலானவர், அடுத்த சில ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்கள், பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் இணையதள படத் தொடர்கள் (அமெரிக்காவில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் இந்த வெப் சீரிஸ்தான்!) என பெரிய சாதனையைச் செய்துள்ளார்.
ஜான் எம் சூ இயக்கிய ஸ்டெப் அப் 1-2-3 எனும் புகழ்பெற்ற பட சீரிஸுக்கு குணால்தான் சவுண்ட் டிசைனர். அடுத்து இதே இயக்குநரின் எல்டிஎக்ஸ் படத்திலும் குணால் பணிபுரிகிறார். சமீபத்தில்தான் வெப்சீரிஸ் ஒன்றுக்கு சவுண்ட் டிசைன் செய்ததற்காக ஹாலிவுட்டில் புகழ் மிக்க ஸ்டீரிமி அவார்டு வாங்கியிருக்கிறார் குணால்.
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பணியாற்றியுள்ளார் குணால். இந்தப் படம்தான் சவுண்ட் டிசைனிங் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம். ஸ்லம்டாக் மில்லியனேர், ப்ளூ படங்களில் ரசூல் பூக்குட்டியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவருக்கு லேட்டஸ்டாகக் கிடைத்துள்ள அஸைன்மெண்ட், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஷங்கரின் ‘எந்திரன்’ சவுண்ட் டிஸைனிங்!
விஷயம் கசிந்ததும், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குணால் ராஜனுடன், இயக்குநர் லேகா ரத்னகுமார் அலுவலகத்திலிருந்து, தொலைபேசியில் பேசினோம்.
அவர் கூறுகையில், “தியேட்டர்ல படம் பாக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போதெல்லாம், தியேட்டரில் ஒலியலைகள் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் பிரிந்து செல்லும் ஜாலத்தை பிரமிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
எனக்கு அந்த டெக்னிக்கை முழுசாக தெரிந்து கொள்ள ஆசை வந்தது. ப்ளஸ்டூ முடித்ததும் ஆடியோ சவுண்ட் பற்றிய கோர்ஸை தேர்ந்தெடுத்தேன். சிங்கப்பூரில்தான் படித்தேன். அமெரிக்காவில் சவுண்ட் டிசைனிங் கோர்ஸ் முடித்தேன். இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். சொந்தமாக ஸ்டுடியோவும் இருக்கிறது. பல ஸ்டுடியோக்களுக்காகவும் பணியாற்றுகிறேன்..” என்றவரிடம், எந்திரன் வாய்ப்பு குறித்து கேட்டோம்.
“எந்திரனுக்கு ரஸூல் பூக்குட்டிதான் சவுண்ட் டிசைன் பண்ணுகிறார். அவரது மும்பை ஸ்டுடியோவில் 40 சதவிகித பணிகளும், இங்கே என்னுடைய ஸ்டுடியோவில் வைத்து 40 சதவிகித பணிகளும் நடக்கின்றன. எந்திரன் ஒரு பிரமாண்ட பொழுதுபோக்குப் படம். அதற்கு சவுண்ட் டிசைனிங் மிக முக்கியம். நிச்சயம் மைல்கல்லாக இருக்கும். படத்தின் மிக சிக்கலான சில காட்சிகளை இங்கு வைத்துதான் சவுண்ட் டிசைன் செய்கிறோம்” என்றார்.
எந்திரன் படக் காட்சிகளைப் பார்த்துவிட்டீர்களா என்றால், ஒரு கணம் அமைதி காத்தவர், “சில காட்சிகளைப் பார்த்தேன். ஆனால் எதையும் நான் வெளியில் சொல்ல முடியாது. ஒரு ட்ரெயின் ஃபைட், மிரட்டலான க்ளைமாக்ஸ் போன்றவற்றைப் பார்த்தபிறகுதான் அந்தப் படத்தின் ரேஞ்ச் தெரிந்தது. தமிழில் இதுபோல ஒரு படம் பார்த்ததில்லை. இது முதல்தரமான ஒரு ஹாலிவுட் படம் என்ற உணர்வுடன்தான் பணியாற்றப் போகிறேன்…”, என்கிறார்.
என்னதான் சிறப்பாக சவுண்ட் டிசைன் செய்தாலும், அதை துல்லியமாக ஒலிக்கத் தேவையான வசதிகளைக் கொண்டதாக திரையரங்குகள் இருக்க வேண்டுமல்லவா…?
இந்தக் கேள்வியை முன் வைத்ததும், “மிகவும் கவலைக்குரிய உண்மை அது,” என்றவர், “இன்றைய சூழலில் 10 சதவிகித திரையரங்குகள் கூட துல்லியமான சவுண்ட் சிஸ்டத்துடன் இல்லாததால், படத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது. இதனை சரி செய்ய வேண்டும். அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கு 7 பாயிண்டுகளில் ஒலிப்பதிவு செய்தோம். ஆனால் இங்குள்ள தியேட்டர்களில் 4 பாயிண்டுகள் கூட கேட்கவில்லை…” என்றார்.
சுவாரஸ்யமான விஷயம்: குணால் ஒரு தீவிர ரஜினி ரசிகர்!
“அதெப்படிங்க இல்லாம இருக்க முடியும்… தமிழ்நாட்டு இளைஞன் ஒருத்தன் ரஜினிக்கு ரசிகனா இல்லாம இருந்தாத்தான் அது நியூஸ். எத்தனை பெரிய லெவல்ல இருந்தாலும், ரஜினி படம்னா, ரசிகர்களுள் ஒருத்தனா மாறிடுவேன். அவர் படத்தை செமஜாலியா பார்த்து ரசிச்ச நான், இப்போ அவர் படத்துக்கே சவுண்ட் டிசைன் பண்றேன். சந்தோஷமா இருக்கு…” என்றார் ஒரு ரசிகனுக்கே உரிய குதூகலத்துடன்…!
நன்றிஎன்வழி
04 ஜூன் 2010
"ஹலால் செக்ஸ்" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?
எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய எல்லா வகையான செய்திகளையும் இப்போதே அனுப்பலாம் .
நம் நண்பருக்கு பிறந்த நாள் என்று வைத்துக்கொள்வோம் சரியாக என்றைக்கு வாழ்த்து செய்தி அவருக்கு கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்துச்செய்தி மட்டுமல்ல எல்லாவகையான செய்திகளையும் டிவிட்டர் , எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் இப்போதே அனுப்பலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
வருகின்ற ஜூலை மாதம் நாம் வாழ்த்து செய்தி அனுப்பவேண்டும் என்றால் இப்போதே அந்த வாழ்த்து செய்தியை அனுப்பலாம் அந்த வாழ்த்துச்செய்தி நாம் குறிப்பிட்ட தேதியில் யாருக்கு செல்ல வேண்டுமோ அந்த தேதியில் அவர் பெறுவார்கள். நாளை என்ற ஒன்று நிச்சயம் இல்லாத இந்த வாழ்க்கையில் நாம் யாருக்கு வேண்டுமானாலும் எந்த செய்தி வேண்டுமானலும் இப்போதே அனுப்பலாம்.
இணையதள முகவரி : http://www.futuremessage.org
இந்த இணையதளத்திற்க்கு சென்று படம் 1-ல் இருப்பது என்ன செய்தி அனுப்ப வேண்டுமோ அதை தட்டச்சு செய்துகொள்ளவும் அடுத்து Date என்பதை அழுத்தி படம் 2 இல் இருப்பது போல் எந்த தேதியில் செய்தி கிடைக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து Text Message என்பதை சொடுக்கி படம் 3-ல் இருப்பது போல் வாழ்த்து பெறுபவரின் போன் நம்பரை கொடுக்கவும்.
அடுத்து Twitter Accout என்பதை சொடுக்கி படம் 4 -ல் இருப்பது போல் நம் டிவிட்டரின் முகவரியையும் கடவுச்சொல்லையும் கொடுக்கவும்.
அடுத்து Email Information என்பதை சொடுக்கி படம் 5-ல் உள்ளது போல் பெறுபவரின் இமெயில் முகவரியை கொடுத்து ” Send Message to the Future ” என்ற பொத்தானை அழுத்தி நம் நாளைய செய்தியை இப்போதே அனுப்பலாம்.
நன்றி :வின்மணி
02 ஜூன் 2010
ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்டியாக சீனா புதிதாக ஐபெட் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது இதைப்ப்ற்றிய சிறப்பு பதிவு.
மடிக்கணினிகளின் விற்பனையை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடம் பிடித்து வரும் ஐபேட் போலவே இப்போது புதிதாக ஐபெட் என்ற ஒன்றை சீன தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். ஐபேட் -ல் என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த ஐபெட்-லும் பயன்படுத்தலாம். பயன்படுத்துவதற்க்கு எளிது மட்டுமல்ல விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வண்ணம் எளிதில் உடையாதவாறு இதன் மேல்பாகம் வடிமமைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண்டிராய்டு அப்ளிகேசன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 128 MB RAM , 16 GB சேமிக்கும் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் விலை $105 டாலர் தான். இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைதுள்ளோம்.
ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளவென ஒரு இலவச மென்பொருள்
வெப்ஸ்டீரிமிங்கை பதிவிறக்கம் செய்வது எப்படி?
இன்று பல இணையங்களில் வீடியோ காட்சிகளை கண்டு மகிழ்கின்றோம் ஆனால் நமக்கு அப்போது தோன்ருவது இந்த வீடியோ காட்சிகளை அப்படியே பதிவிறக்கம் செய்யும் வசதி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைப்போம் அல்லவா? சான்றாக youtube, dailymotion போன்ற தளங்களில் வீடியோ காட்சிகளை பார்க்க்கும் வசதியை மட்டுமே அளித்திருப்பார்கள் இது போன்ற தருனங்களில் நீங்கள் பயர்பாக்ஸ் தொகுப்பை உபயோகப்படுத்தினால் பதிவிறக்கம் சாத்தியமே….கீழ்கண்ட வீடியோ தொகுப்பை பார்க்கவும்…
01 ஜூன் 2010
பட்டய கிளப்பும் சிங்கம்