பொது இடங்களிலோ அல்லது வீடுகளிலோ உங்கள் கணனியில்  முக்கியமான ஆவணங்களை நீங்கள் கோப்புறைகளில்(Folders) இட்டு  பாதுகாத்துக்கொள்ளும்போது மற்றவர்கள் உங்கள் ஆவணங்களை பார்வையிடாமல் பாதுகாப்பாக  வைத்துகொள்ளவென பல மென்பொருட்கள் மற்றும் பலவழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில்  இதுவும் ஒன்று.
கோப்புறைகளை(Folders) பாதுகாப்பாக  வைத்துக்கொள்ளவென இலவச மென்பொருள் பற்றிய ஒரு பதிவுதான் இது. FileSecrets எனப்படும்  இந்த மென்பொருளானது கோப்புறைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.  மற்றவர்  உங்கள் கோப்புறைகளை திறக்க முடியாதபடியும் கடவுச்சொல் வழங்கியும் மறைத்தும்  பாதுகாப்பாக கோப்புறைகளை வைத்திருக்க முடியும்.  
கணனியில் FileSecrets எனப்படும்  இந்த மென்பொருளை முதலில்  நிறுவிக்கொள்ளுங்கள்
பின்னர் நிறுவிய  மென்பொருளை திறந்து file or folder என்ற இடத்தில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய  மென்பொருளை browse என்பதில் அழுத்தி (Click) தெரிவுசெய்துகொள்ளுங்கள்.  
பின்னர் Action என்ற இடத்தில் எந்த வகையில் உங்கள்  கோப்புறைகளை பாதுகாக்க போகிறீர்கள் என்பதை தெரிவு செய்துகொள்ளுங்கள்.  
பின்னர் add என்பதை அழுத்தி பாதுகாக்க வேண்டிய கோப்புறையை  இணைத்துக்கொள்ளுங்கள். 
 
 
 
பாதுகாத்த  கோப்புறைகளை திறந்துகொள்ளும்போது  நீங்கள் வழங்கிய Action க்கு ஏற்ப பின்வரும்  எச்சரிக்கைகளை அது காண்பிக்கும்.
1.Deny Access to File or  Folder :
2.Deny Modify to File or  Folder:
3.Password Protection  :
மென்பொருளை தரவிறக்க இணையச்சுட்டி:  FileSecrets
http://www.pogisys.com/downloads/FileSecretsSetup.exe  
நன்றி :-தமிழ்மணம் பரிந்துரை



