10 ஜூலை 2009
'சானியாமேனியா': மேலும் ஒருவர் கைது-இன்று நிச்சயதார்த்தம்
பிளாக்கருக்கு இமெயிலில் இருந்து பதிவு போடும் முறை
ஜாக்சன் இறுதிச் சடங்கு செலவு ரூ. 7 கோடி
பிரபுதேவா - நயன்தாரா கள்ளக்காதல்! - கட்டுரை
இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? ஜனக்கடலில் எங்கோ நீந்திக்கொண்டிருக்கும் திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ தப்பு செய்தால் மட்டும் அதை மிகவும் அநாகரிகமாக கள்ளக்காதலன் கைது, கள்ளக்காதலி கொலை என்றெல்லாம் தலைப்பிட துணிபவர்கள், மீடியா வெளிச்சத்தில் உள்ளவர்களைப் பற்றி குறிப்பிடும்போது மிகவும் நாசூக்காக, ‘பிரபுதேவா - நயன்தாரா காதல்’ என்பது போல் குறிப்பிடுவது ஏன்? ஏன் அவருக்கு மட்டும் குடும்பம், குட்டி இல்லையா? நயன்தாரா என்ன கல்யாணத்திற்காக மட்டுமே காத்திருப்பவரா?
இவர்கள் செய்தால் நல்லக் காதல் மற்றவர்கள் செய்தால் கள்ளக் காதலா?
பொதுவாகவே பிரபல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் அந்தரங்க விஷயங்கள் எல்லாம் ஏன் கிசுகிசுக்கப்படுகின்றன. குறிப்பிட்டவர்கள் ஈடுபடும் தொழில் குறித்த செய்திகள் தரும் பிரபல்யத்தைவிட, பரபரப்பைவிட அதிகளவில் அவர்களுடைய அந்தரங்க சமாச்சாரங்கள் தருகின்றன.
உண்மையோ பொய்யோ, என்றாவது ஒருநாள் நடக்கப்போவதோ எதுவாக இருந்தாலும் தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் உள்ள விஷயங்கள்தான் மனித மனதை அதிகம் தூண்டி ரசிக்க வைக்கின்றன.
வலிக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் ஐயோ என்று கத்துவதில் உள்ள அர்த்தத்தைப் போல.
சரி நயனும் பிரபுதேவாவும் கள்ளக்காதல் செய்தாலும், நிஜக்காதல் செய்தாலும் நமக்கென்ன? அப்படி விட்டுவிட முடியுமா என்ன? ‘அட ச்சீ… என்னய்யா பத்திரிகை இது?’ என்று சொல்லிவிடுவார்களோ என்று அச்சம்.
சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கும் தம்பட்டத்தை விட மீடியாக்கள் அடிக்கும் இவர்கள் பற்றிய தம்பட்டம் அதிகம்.
அதைவிட கூத்து என்னவென்றால், நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை தன்னுடைய வலது கையில் பச்சை குத்தியிருக்கிறார் என்றும், இடதுகையில் பச்சை குத்தியிருக்கிறார் என்றும் செய்திகள் மாற்றி மாற்றி வருவது.
இன்னொரு செய்தியில் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திடம், கணவனை பிரிக்க மாட்டேன் என்று நயன்தாரா சத்தியம் செய்திருப்பதாகவும், மற்றொரு செய்தியில் பிரபுதேவா மீதான காதலுக்கு நயனின் பெற்றோர் எதிர்ப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.
உண்மையைச் சொல்லப்போனால் இந்த மாதிரி செய்திகள் கூறப்படுகிறது, சொல்லப்படுகிறது அல்லது நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில் என்கிற ரீதியில் தான் வருகின்றன. சினிமாவில் புலனாய்வு என்கிற சினிமா மீடியா இன்னும் முன்னேறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நிருபர்களின் கணிப்புகளே பெரும்பாலும் கருத்துக்களாக பதியப்படுகின்றன.
75 சதவிகித செய்திகள் பிஆர்ஓக்களை நம்பியும், மேனேஜர்களை நம்பியுமே வெளியிடப்படுகின்றன. ஒரே வட்டாரத்தில் இருந்து அனுப்பப்படும் ஒரே செய்தி பல காதுகளை அடைந்து, அதற்கு வெவ்வேறு உருவங்கள் கொடுக்கப்படுகின்றன.
நயன்தாரா பிரபு தேவா பெயரை இடது கையில் பச்சைக் குத்திக் கொண்டார்(அது அவர் விருப்பம் என்பது வேறுவிஷயம்) என்பது லேட்டஸ்ட் செய்தி. சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆதவன் திரைப்படப் பாடல் ஒன்றில் நயன்தாராவின் இடது கையில் குத்தப்பட்டிருந்த Pரபு என்கிற பெயரை கிராபிக்ஸில் சுத்தப்படுத்தும் வேலை கூட நடப்பதாகத் தகவல்(என்ன செய்வது நாமும் இப்படி எழுத வேண்டியுள்ளது).
வெளியே தெரியும் உடல்பாகங்களில் பச்சைக் குத்திக்கொள்வது அக்கால காதல் பேஷன். சிலர் மார்பில், தொடையில், முதுகில்கூட குத்திக் கொள்வார்கள். ஆனால் பெரும்பாலோர் முட்டியில் இருந்து விரல்கள் தொடங்கும் கையின் ஏதாவது ஒரு பாகத்தில்தான் பச்சைக் குத்திக்கொள்வார்கள். அப்பத்தானே ‘இதோ பார், உனக்காக நான் உருகுகிறேன்’ என்று காதலன் காதலியிடம் காண்பித்துக்கொள்ள முடியும்.
இந்த பழைய ஷோ காட்டும் வித்தையை நவீன நடிகையான நயன்தாரா செய்திருப்பார் என்று நம்ப முடியவில்லை. நமக்குத் தெரிந்து அவருடைய ஒரு காதல் தோல்வியடைந்திருக்கிறது. அதில் நிறைய பாடம் கற்றுக்கொண்ட நயன்தாரா இப்படியொரு மிகவும் சாதாரண காரியத்தை செய்யமாட்டார்.
இன்னொன்று அவர் ஒரு நடிகை. உச்சி முதல் பாதம்வரை (அங்கங்கே மறைத்துதான்) பளபள வென்று திரையில் காட்டவேண்டிய நிலையில் இருப்பவர். அப்படிப்பட்டவர் எப்படி வெளிப்படையாக கையில் பச்சை குத்துவார்? அதுமட்டுமல்ல இந்த சினிமா காதல் என்பதெல்லாம் எப்போ வேண்டுமானாலும் புட்டுக்கும் என்ற நிலை இருக்கும்போது இப்படியெல்லாம் நயன்தாரா அதிகபட்ச ரிஸ்க் எடுப்பாரா என்ன?
ஓரு பெண்ணான நயன்தாராவே காதல் செய்யும் தொல்லை தாங்க முடியாமல், பிரபுதேவாவை மறக்க முடியாமல் அவர் பெயரை பச்சைக்குத்திக் கொண்டார் என்றால், நயன்தாராவுக்காக பிரபுதேவா என்ன செய்திருக்கிறார் என்பதையும் ஆராயலாமே.
நயன்தாராவின் பழைய புகைப்படங்களை காண்கையில், பல படங்களில் அவர் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் டாட்டு எனப்படும் பச்சையைக் குத்தியிருக்கிறார்.
சரி, அவர் பச்சை குத்தட்டும் அல்லது சிவப்பா குத்தட்டும் அதுவா மேட்டர் என்பதுதான் நம்ம மேட்டர். THANKS-கிருஷ்ணாசேகர்
லெப்டினென்ட் கர்னல் ஆக மோகன்லால் நியமனம்!
நமீதாவின் "இந்திர விழா"?
08 ஜூலை 2009
மம்மா மியா: சரத் மகள் அசத்தல் நடனம்!
செக்ஸுக்கு நான் ரெடி - மினிஷா
Floorball - Floor Hockey - Innebandy - சுவீடன் அனுபவங்கள்
ஸ்காண்டிநேவியா நாடுகளில் பிரபலமான இந்த ஃப்ளோர்ஹாக்கி ஆட்டம் அணிக்கு 6 பேர் வீதம் மொத்தம் 60 நிமிடங்களில் மூன்று இடைவெளிகளுடன் ஆடப்படுகிறது. குளிர்காலங்களில் ஐஸ் ஹாக்கிக்கு இணையாக உள்ளரங்குகளில் பெரிய ரசிகர் வட்டாரத்துடன் ரசிக்கப்படும் இந்த ஆட்டம் 70 களுக்குப்பின் புகழ் பெற ஆரம்பித்தது. இலகுவான மட்டைகளுடனும் துளைகள் நிறைந்த பந்துடன் ஆடப்படும் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் கிடையாது. சிறு வயது முதல் நான் ஏதேனும் பெரிய அரங்கங்களில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெற வேண்டும் அதில் வெற்றிக்கு நான் காரணமாக இருக்கவேண்டும் என யோசித்துப்பார்ப்பது உண்டு. சிறுவயதில் தெருக்களில் கிரிக்கெட் விளையாடியதுண்டு. எனது சகோதரர்களின் தயவால் ஒரு 10 பந்துகள் மட்டையடிக்க வாய்ப்புக்கிடைக்கும். உட்கார்ந்து கொண்டு ”லாலிபாப்” போல் அடிக்க ஏதுவாக சுழற்பந்து என்று சொல்லிக்கொண்டு பந்து வீசுவேன். அதன் பின் தியாகராசர் பொறியியற் கல்லூரிக்காலங்களில் வெள்ளொளிப்போட்டியில் ஆடியதுண்டு. அதன் பின் ஏழெட்டு வருடம் எந்த விளையாட்டிலும் கவனம் செலுத்த நேரமில்லாமல் போனது. சுவீடனுக்கு மேற்படிப்பு படிக்க வந்த பின் எனது சமூக வாழ்க்கையை அதிகரிக்க ஏதாவது விளையாடலாம் என எனதுக் கல்லூரியின் மாணவர்களுக்கான கலந்தாய்வாளரை அணுகிய போது அவர் ஃப்ளோர்பால் ஆட்டத்தில் நான் கோல்கீப்பராக இருக்க வாய்ப்பு உண்டு என எனது ஊரில் இருக்கும் ஃப்ளோர்பால் குழுமத்திற்கு அனுப்பினார். ஃப்ளோர்பால் ஆட்டத்தில் கோல்கீப்பராக இருப்பவர் நிற்க வேண்டியது இல்லை என்பதால் எனக்கும் அது வசதியாகப்போயிற்று. இலகுவான பிளாஸ்டிக் பந்து என்றாலும் கோல் கம்பங்களுக்குள் வேகமாக அடிக்கப்படும்போது காயங்களில் இருந்து தப்பிக்க கவசங்களும் வலிதாங்கும் உடைகளும் உண்டு.. மாற்றுத்திறன் உடையவர்களுக்காக மால்மோ என்ற நகரத்தில் நடைபெற்ற மால்மோ-ஓபன் என்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஃப்ளோர்பால் ஆட்டங்களில் எங்களது அணியும் பங்கு பெற்றது. தொடர்ந்து புதன்கிழமைகள் தோறும் நாங்கள் கடும்பயிற்சி எடுத்துக்கொண்டாலும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியைப்போல போகும் இடங்களிலெல்லாம் உள்ளூர் போட்டிகளிலும் நாங்கள் தர்மசாத்து வாங்குவோம். கடைசிவரை போராடுங்கள் தோல்விப்பற்றி கவலை வேண்டாம் என ஓவ்வொரு முறையும் எங்களது பயிற்சியாளர் சொல்லி அனுப்புவார். எதையெல்லாம் தவிர்த்தால் தோல்வி வித்தியாசம் குறையும் என்று சொல்லி அனுப்புவாரோ அந்த அடிப்படைத் தவறுகளைச் சரியாகச் செய்து 15-0, 19-1, 21-1 5-2 10-1 என சுற்று ஆட்டங்களில் படுதோல்வியைத் தழுவி எங்களது பயிற்சியாளர்கள் முன் அசடு வழிந்தோம். கோல்கீப்பர் சேம்-சைட் கோல் போட்ட பெருமையை லுண்ட் என்ற நகர அணியுடன் விளையாடும்போது நான் பெற்றேன். கோல்கீப்பர் பந்தை தடுத்தவுடன் இரு முனைகளிலும் இருக்கும் தனது அணி ஆட்டக்காரரிடம் 5 வினாடிகளுக்குள் எறிய வேண்டும். அவசரத்தில் கைத்தவறி கோல் கம்பங்களுக்குள் எறிந்து எதிர் அணியின் எண்ணிக்கையை 20 ல் இருந்து 21 ஆக்கினேன்.தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னால் அமர்ந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளின் போது “டேய் அல்வா மாதிரி வந்த கேட்சை வுட்டாண்டா, இவனெல்லாம் டீம்ல வச்சுக்கிட்டு இருக்கிறதவிட தூக்கிடலாம்” என்று வர்ணனைக் கொடுத்தது எல்லாம் எளிதான தடுப்புகளை எல்லாம் கோட்டை விட்டபோது நினைவுக்கு வந்து சென்றது. மற்ற அணிகளுக்கு இடையிலானப்போட்டிகளை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தபோது மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றிப்பெற போகின்ற அணியின் கோல் கீப்பர் ஒரு கோலை தடுக்க முடியாமல் போனதால் மிகவருத்தம் அடைந்து தனது தலைக்கவசத்தை விட்டெறிந்தார். ஒரு கோலுக்கே அவர் தலைக்கவசத்தை வீசி எறியும்போது 50 கோலுக்கு மேல் விட்டு அரைசதம் அடித்த நான் எனது சக்கர நாற்காலியை அல்லவா விட்டெறிந்து இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். கடைசி இரண்டு இடங்களுக்கானப் போட்டியில் வெற்றி பெற்றால் 11 வது இடத்தையாவது பெறலாம் என கடைசி ஆட்டத்தில் வெல்ல கடும் பயிற்சி எடுத்துக்கொண்டு 6- 1 என்றக் கணக்கில் வெற்றி பெற்றோம். கிட்டத்தட்ட 10 க்கு மேற்பட்ட கோல்களைத் தடுத்து பயிற்சியாளரின் பாராட்டைப்பெற்ற போது கொஞ்சம் மனநிறைவாக இருந்தது. ஊருக்குத் திரும்பும்பொழுது பயிற்சியாளரிடம் நான் செய்த அடிப்படைத்தவறுகளினால் சில பல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளாமல் படுதோல்வி அடைய நேரிட்டது என வருத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது “விளையாட்டுப்போட்டிகளின் முக்கிய நோக்கமே பங்கேற்பதில் தான் இருக்கின்றது, உன்னுடையப் பங்கேற்பு மற்றவர்களை உற்சாகப்படுத்தியது, அதுதான் நம் அணியின் வெற்றி” என்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஸ்ருதிக்கு ராஜா தந்த ஆசி!
வருங்கால தொழில்நுட்பம் 1 : சிலிக்கான் வேலி & ட்விட்டர்
வருடம் 1986...
தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித் துறை முதல் முறையாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை +1ல் அறிமுகப்படுத்துகிறது. திருநெல்வேலி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் தமிழ் மீடியம் மட்டுமே உள்ள பள்ளியின் நிர்வாகம் ஆர்வத்துடன் கம்ப்யூட்டர் பாடம் ஆரம்பித்தது. எண்ணி ஏழு பேர் அந்தப் பிரிவில் சேர்ந்தோம் (திருச்செந்தூர் அருகிலிருக்கும் மணப்பாடு ஓர் அழகிய கடற்கரை கிராமம். மேலும், விவரங்கள் அறிய www.manavai.com).
அறிமுக வருடம் என்பதால் பாடப் புத்தகம் இல்லை. சொல்லித் தர ஆசிரியர் எவரும் உடனடி யாகக் கிடைக்கவில்லை. செட்டில் இருவர் மாணவியர் என்பதால், ஆசிரியர் இல்லாத வகுப்பு நேரங்கள்... இந்த நாட்களில் மொக்கை என்று அழைக்கப்படும் கடலை வறுத்தல்களில் கழிந்து போனது. 4 மாதங்களுக்குப் பின் சிக்கிய ஒரு ஆசிரியர் எலெக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ படித்தவர். ஒரே ஒரு பிரச்னை, எங்கள் பள்ளியில் கம்ப்யூட்டர் என்ற வஸ்துவே கிடையாது. தீவிர முயற்சிக்குப் பின், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தூத்துக்குடியிலிருந்து Commodore என்ற கம்ப்யூட்டரும், அதை இணைக்கத் தேவையான கறுப்பு-வெள்ளை மானிட்டரும் வாடகைக்கு எடுத்துவரப்பட்டது. 82-ல் வெளியிடப்பட்ட Commodore அந்த நாட்களுக்கு ரொம்பவே அட்வான்ஸ்டு. அதில் அறை குறையாக எழுதி Commodoreயை XXXXXXXXXX என அலறவிட்டதும் பளிச்.
இதையெல்லாம்விட மனதில் அச்சாகப் பதிந்த விஷயம். கம்ப்யூட்டர் துறையில் தமிழ் வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தாத அந்த நாட்களில், 'CPU என்றால் சென்ட்ரல் பிராசஸிங் யூனிட். இது கம்ப்யூட்டரின் மைய செயல்பாட்டைக் கவனிக்கும். இதற்கு மெமரியும் தேவை' என டெக்னோ மணிப்பிரவாள நடையில் எழுதிய தேர்வு பதில்கள்!
22 வருடங்களுக்குப் பிறகு...
சென்ற மாதத்தில் மௌன்டன்வியூவில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில் 'மேகக் கணினியம்' (Cloud Computing) பற்றிய வட்ட மேசை விவாதத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டு இருந்தேன். 20 வருடங்களுக்கு முன் சுஜாதாவின் 'சிலிக்கான் சில்லு புரட்சி' தொடரைப் படிக்க வாரந்தோறும் காத்திருந்த நினைவலைகள் மனதில் மோதியபடி இருக்க, வடக்கு US 101 சாலை யில் சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து சான்ஃபிரான்சிஸ்கோ செல்ல வேண்டும். ஒரு எக்ஸ்பிரஸ் அறிமுகம்....
சிலிக்கான் பள்ளத்தாக்கு அமைந்திருக்கும் கலிஃபோர்னியா மாநிலம், புது தொழில் முனை வோரை 100 வருடங்களுக்கும் மேல் ஈர்த்து வந்துள்ளது. 19-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பித்த தங்கத் தோண்டல் மோகம் ஆயிரக்கணக்கான மக்களை கலிஃபோர்னியா பக்கம் தள்ளிக்கொண்டு வந்தது. இவர்களின் தேவைகளுக்காகக் கட்டப்பட்டதுதான் சான்ஃபிரான்சிஸ்கோ. சிலிக்கான் பள்ளத்தாக்கு உருவானதும் மிகத் தற்செயலாக!
இங்கே இருக்கும் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கு 70-களின் தொடக்கத்தில் எக்கச்சக்க நிதி நெருக்கடி. அதைச் சமாளிக்கத் தனக்குச் சொந்தமான நிலங்களை சில டெக்னாலஜி கம்பெனிகளுக்கு நீண்ட காலக் குத்தகையில் கொடுத்தது. அடுத்த சில வருடங்களில், இன்டெல் சிலிக்கான்கொண்டு செய்த தனது முதல் மைக்ரோ பிராசஸரை வெளியிட, பிறந்தது சிலிக்கான் பள்ளத்தாக்கு.
ஆப்பிள், ஆரக்கிள், ஹெச்பி, சிஸ்கோ, யாகூ, கூகுள் எனக் கடந்த 40-க்கும் மேலான வருடங்களாகத் தொடர்ந்து தரமான நிறுவனங்களை உருவாக்கியபடி இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கு சந்தேகமே இல்லாமல் சர்வதேசத் தொழில்நுட்பத் தலைநகரம். இன்று, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹைடெக் நிறுவனங்கள்; 20 லட்சத்தைத் தொடும் பணியாளர்கள்; உலகம் முழுவதுமுள்ள இன்டர்நெட் டிராஃபிக்கின் நான்கில் ஒரு பகுதியை நுகர்வது சிலிக்கான் பள்ளத்தாக்கு தான்.
சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் வந்து சேரும் இளைஞர்களைப் போலவே, ஹைடெக் தொழில் கனவுகளுடன் சிலிக்கான் பள்ளத்தாக்கு வந்து சேரும் தொழில் முனைவோரை இங்கே ஸ்டார் பக்ஸ், பீட்ஸ் போன்ற காபி ஷாப்களில் பார்க்கலாம். இங்கு தொழிலைத் தொடங்குவதும் எளிதானதே. எங்காவது ஒரு கார் ஷெட் சின்ன வாடகையில் கிடைத்தால் போதும். கம்ப்யூட்டர் சகிதம் குடியேறி, நாளுக்கு 20 மணி நேரம் உழைத்து, அங்கேயே உறங்கி, உணவருந்தி, உழைத்துத் தமது கனவை நிறைவேற்றக் கடுமையாகப் போராடுவார்கள். வெற்றியடைந்தால், தொழில் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று புது நிறுவனம் ஒன்றை நிறுவ வாய்ப்பு. தோல்வியடைந்தால், கவலை இல்லை... கஜினி போல மீண்டும் மீண்டும் முயலலாம். அல்லது செய்த முயற்சியையும் தோல்வி யையும் பெருமையாக ரெஸ்யூமில் சேர்த்து மற்ற ஒரு நிறுவனத்தில் சேரலாம்.
இன்று பிரமாண்டமாக வளர்ந்திருக்கும் ஆப்பிள் தொடங்கி கூகுள் வரை இந்தப் புள்ளிகளில் துவங்கி யவைதான். உதாரணத்துக்கு, ட்விட்டர் (Twitter -பற்றிய தகவல்கள் பெட்டிச் செய்தியாக). 2006-ல் தொடங்கப்பட்ட இந்த நுண்வலைப்பூ தளத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மணி நேரமும் லட்சக்கணக்கானோர் சுருக்க வலைப்பூ எழுதுகிறார்கள். இன்றைய நிலவரத்தில், ட்விட்டர் பணத்தைத் தண்ணீராகச் செலவிட்டபடியே இருக்கிறது. எப்போது, எப்படி லாபகரமாக மாறும் என்பது தெரியவில்லை. உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் முடங்கி நிற்கும் நிலையில், இது போன்ற நிறுவனம் என்றோ மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொழில் முதலீட்டாளர்களுக்கு அது பெரிய பொருட்டு இல்லை. காரணம், ட்விட்டர் என்பது ஷங்கர் படம் போல, ஒரு பிரமாண்ட ஐடியா. எப்படியும் அது வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கை.
'எல்லாம் ஓ.கே. ஆரம்பிக்கும்போது 'மேகக் கணினியம்' அப்படின்னு ஏதோ சொன்னியே, அது இன்னா?' என்ற கேள்வி எழுந்தால், உங்களது நினைவுத்திறனுக்குப் பாராட்டுக்கள்.
'கணினித் திறன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மடங்காகியபடி செல்லும்!' - இன்டெல் நிறுவனரான ராஜர் மூர் 1965-ல் சொல்லியது இன்று வரை உண்மை. இணையம் நம் வாழ்வில் இடம் பிடித்த பிறகு, வலைதளங்களை இயக்கத் தேவையான கணினித் திறனை எளிதாகப் பெறுவது எப்படி என ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருந்தது. 'இணையம் என்பதே பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களின் இணைப்புதானே... அதையே பயன்படுத்தி, தேவைப்படும் கணினித்திறனைப் பெற்றுக்கொண்டால் என்ன?' என்ற சிந்தனையின் வடிவாக்கம்தான் 'மேகக் கணினியம்'. இன்டெர்நெட்டுக்கு அமெரிக்காவில் இன்னொரு பெயர் – Cloud.
'இதனால் சாதாரண பப்ளிக்கான எனக்கென்ன பயன்?' என்று உங்களுக்குத் தோன்றலாம். மிகவும் பயன் இருக்கிறது. அதை அடுத்த க்ளிக்கில் பார்க் கலாம்!
'ஐ.டி. இண்டஸ்ட்ரியே விழுந்திருச்சே... அப்புறம் இன்னாத்துக்கு இதெல்லாம்?' என்கிறீர்களா... அதற்கும் இருக்கு ஒரு ஸ்வீட் ட்விஸ்ட்!
புறாவிடு தூதாகத் தொடங்கிய தகவல் தொடர்பு, கடிதம், தந்தி, ஃபேக்ஸ், இ-மெயில் என முன்னேறி, இப்போது சிட்டுக்குருவியில் வந்து நிற்கிறது. நறுக்கென்று 140 எழுத்துக்களில் 'இப்போது என்ன செய்கிறீர்கள்?' என்பதை ட்விட்டரில் தட்டினால், அதை ஆயிரக்கணக்கானவர்களுக்கு நொடிகளில் கொண்டுசேர்க்கும் இந்த இணைய தொழில்நுட்பத்தைச் சமீபத்தில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றிகண்ட பிரபலம், பராக் ஒபாமா! அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது துணை அதிபர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவது அங்கே மிகப் பெரிய மீடியா நிகழ்வாக இருக்கும். ஆனால், 'செனட்டர் ஜோ ஃபைடனை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கிறேன்!' என ட்விட்டிவிட்டு சில மணி நேரங்களுக்குப் பின்தான் மீடியாவுக்கே அறிவித்தார் ஒபாமா. (ஒபாமாவின் ட்விட்டர் முகவரி: அமெரிக்க அதிபருக்கு மட்டுமல்ல, அண்ணாச்சி ராதாகிருஷ்ணனுக்கும் ட்விட்டரால் பயன் உண்டு. காரணம், ட்விட்டரைத் தனிமனிதர்கள் மட்டுமன்றி நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. தனக்குப் பிடித்த நிறுவனங்களின் ட்விட்டுகளின் தொடர்பாளராக (follower) தன்னைப் பதிவுசெய்துகொண்டால், அந் நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ராதாகிருஷ்ணனுக்கு திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா மிகவும் பிடிக்கும். இருட்டுக் கடைக்காரர்கள் தங்களுக்கென ஒரு ட்விட்டர் முகவரி வைத்திருந்து, ராதாகிருஷ்ணன் அதில் பதிவு செய்துவைத்திருந்தால் சுடச்சுட அல்வா கடைக்கு வரும் நேரத்தை ராதாகிருஷ்ணன் தெரிந்துகொண்டு முதல் ஆளாகக் கடையில் நிற்கலாம். அன்றைய அல்வாவில் கொஞ்சம் இனிப்பு அதிகமாக இருப்பது போலத் தோன்றினால், அதை அவர் தனது ட்விட்டரில் எழுதலாம். உடனே சம்பந்தப்பட்டவர்கள் அதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கலாம். லட்சக்கணக்கான மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகக் கணிக்கும் திறனை இதுவரை வேறு எந்தத் தொழில்நுட்பமும் கொடுத்ததில்லை! |
06 ஜூலை 2009
* Home * Videos * About * Contact Me Blog Search ˜”*°•TamilhackX•°*”˜ எளிய தமிழில் கணணி சம்பந்தமான கட்டுரைகள், மென்பொருள் தரவிறக்கம்,
ஓரினச் சேர்க்கை தீர்ப்புக்கு குஷ்பு வரவேற்பு!
மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைப்பின்னல்
கூகிளின் மிகவும் பிரபலமான Orkut ஒரு சமூக வலைப்பின்னல் தளம் இதில் உங்கள் நண்பர்களுடன் துனுக்குகள் (Scraps), ஒளிபடங்கள் மற்றும் YoTube நிகழ்படங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய சமூக வலைப்பின்னல் (Social Network) தளத்தை தொடங்கியிருக்கிறது இதன் பெயர் “Windows Live Planet“.
இந்த புதிய சமூக வலைப்பின்னலில் உங்கள் Hotmail அல்லது Live பயனர் கணக்கின் மூலமாக உள்ளே நுழைந்து புதிய நண்பர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ளலாம், அரட்டை, துனுக்குள் என சகல வசதிகளுடன் வந்திருக்கிறது.
இதில் முக்கியமான சிறப்பு Live Messenger சேவையை Windows Live Planetல் மைக்ரோசப்ட் நிறுவனம் உள் புகுத்தியுள்ளது, இதனால் உங்கள் நண்பர்களிடம் அல்லது குடும்பத்தினருடன் Live Messenger இல்லாம்லேயே எங்கும் அரட்டை அடிக்கலாம்.
புளோராவின் லிப் லாக்!
உயிரைக் குடிக்குமா ரிமோட்?
நடந்தது என்ன..? இதோ அவரே விளக்கு-கிறார்... ''நான் எப்போதாவது ஒரு முறைதான் காரைப் பயன்படுத்துவேன். மற்ற நேரங்களில் என் வீட்டுக்கு அருகே உள்ள கோயில் முன்பு காரை நிறுத்திவைப்பேன். கடந்த மே 27-ம் தேதி காரில் வெளியே போய் வந்த நான், எப்போதும் போல காரை கோயிலுக்கு அருகே நிறுத்தி, ரிமோட் மூலம் லாக் செய்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன் பிறகு எனக்குப் பல நாட்கள் கார் தேவைப்படவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூன் இரண்டாம் தேதி வெளியே செல்வதற்காக காரை எடுக்கச் சென்-றேன். காரை நோக்கி நடக்கும்போதே, 'காருக்கு அருகே குடலைப் புரட்டும் துர்நாற்றம் எடுக்கிறது' என்று அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். எலி ஏதாவது செத்துக் கிடக்கும் என்று நினைத்தபடி காரின் கதவைத் திறந்தேன்... காருக்குள்ளே நான் கண்ட காட்சி அதிர வைத்தது. பூட்டிய காருக்குள் நிர்வாணமாக ஒரு ஆண் பிணம் கிடந்ததைப் பார்த்து செய்வதறியாது திகைத்துவிட்டேன். அந்தப் பதற்றத்துடனேயே போலீஸ§க்கு போன் செய்தேன். போலீஸார் விசாரணை செய்தார்கள்... நடந்ததைச் சொன்னேன். காரின் உள்ளே இருந்த பிணம், அடையாளம் காண முடியாத அளவுக்குப் புழு பிடித்து சிதைந்து போய்விட்டது... இது எப்படி நிகழ்ந்தது என்றே புரியவில்லை!'' என்றார் பயம் அகலாமல். நாம் பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணனிடம் இது பற்றிக் கேட்டோம். ''காரை நிறுத்தி விட்டுச் செல்லும்போது ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை லாக் செய்திருக்கிறார். லாக் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர் அன்-லாக் பட்டனையேகூட அழுத்தி இருக்கக்கூடும். ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை லாக் செய்யும்போது எழும் சப்தத்துக்கும், அன் - லாக் செய்யும்போது எழும் சப்தத்துக்கும் மெல்லிய வித்தியாசம் உண்டு. என்றாலும், இதைக் கவனமாகக் கேட்டால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதுமட்டுமல்ல, முத்துக்குமாரசாமி கார் போன்று செக்யூரிட்டி சிஸ்டம் பொருத்தப்பட்ட கார்களை கள்ளச் சாவி போட்டுத் திறந்தால்கூட ஒரிஜினல் சாவி இல்லாமல் அதை ஐம்பது மீட்டருக்கு மேல் ஓட்டிக்கொண்டு போக முடியாது. இந்தக் காரணத்தினாலேயேகூட காரின் உரிமையாளரான முத்துக்குமாரசாமி அலட்சியமாக இருந்திருக்கலாம். இறந்து கிடந்தவரின் உடலைப் பரிசோதனை செய்ததில், வயிற்றில் கலப்படமான உணவு சாப்பிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இறந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. சம்பவத்தன்று, காரைத் திறந்து உள்ளே போயிருப்பார், உள்ளே சென்று கதவை மூடியதும் அது லாக் ஆகி இருக்கும். உள்ளே இருந்து கார் கதவைத் திறப்பது எப்படி என்று தெரியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் போராடி இறந்துள்ளார்'' என்றார் கண்ணன். மனிதக் கைகளில் ஆறாவது விரலாக நீண்டுவிட்டது ரிமோட். எலெக்ட்ரானிக் உபகரணங்களில் தவறே நிகழாது என கூற முடியாது. காரை ரிமோட் மூலம் லாக் செய்தவர், அனைத்துக் கதவுகளும் ஒழுங்காகப் பூட்டப்பட்டு இருக்கிறதா என்று காரின் கதவை இழுத்து ஒருமுறை சோதித்துப் பார்த்திருந்தால், ஒரு உயிர் பலியை தவிர்த்திருக்கக் கூடும்!