Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

10 ஜூலை 2009

நமீதாவின் "இந்திர விழா"?

க்ஷய்குமார்,கரீனாகபூர்,பிரியங்கா சோப்ரா இவங்க நடிப்புல "AITRAAZ" ன்னு ஹிந்தியில வெளிவந்த படம் தான் தமிழ்ல "இந்திரவிழா"வா வந்திருக்கு. நமீதாவோட இந்திர விழான்னு இந்த பதிவுக்கு ஏன் பேர் வெச்சேன்னு இந்த படத்த பாத்தவங்களுக்கு கண்டிப்பா புரியும். ஏன்னா.., நமீதாவோட கவர்ச்சி இல்லேன்னா படமே இல்ல.அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளி தெளிச்சிருக்கிற படம். "டீன் டிவி" யில நிகழ்ச்சி தயாரிச்சி குடுக்குற வேலையில இருக்கும் ஸ்ரீகாந்த் தன்னோட ஒரு டூப்பு நிகழ்ச்சியில இந்த படத்துல அறிமுகமாகி இருக்குற மும்பை நாட்டுக்கட்டை ஹேமாமாலினியை அடிக்கடி சீட் பண்றாரு. அது அவரோட கல்யாணத்தையும் பாதிக்க வருத்தப்படுற ஸ்ரீகாந்த் நானே உன்ன கட்டிக்கிறேன்னு கல்யாணம் பண்ணிக்கிறாரு.(அதுசரி சரியான நாட்டுக்கட்டை கிடச்சா யார் தான் விடுவா...?) ஸ்ரீகாந்தோட திறமையை பாத்து கம்பெனியில புரோமொசன் கெடைக்குது. ஆனாலும் அது கம்பெனியோட நிர்வாகி நாசரோட பொண்டாட்டி நமீதாவோட (கூல்...கூல்..நீங்க நற நறன்னு பல்ல கடிக்கிறது புரியுது.) தலையீட்டால தடுக்கப்படுது. ஸ்ரீகாந்த் நல்ல புத்திசாலியாக இருந்தும் நமீதா ஏன் அவர வெறுக்குறாங்க?அதுக்கு காரணம் என்ன?ஸ்ரீகாந்துக்கும், நமீதாவுக்கும் என்ன தொடர்பு?இப்படி பல கேள்விக்கு படம் முழுக்க ரெட்டை அர்த்த வசனங்களை தாரளமா சேர்த்து குடும்பத்தோட உக்காந்து பாக்க முடியாத ஒரு நல்ல படமா தந்திருக்காங்க. ஹீரோ ஸ்ரீகாந்த், பாவம் உயிர் படத்திலேர்ந்து இவர் டம்மி பீஸாவே ஆயிட்டாரு.., அந்த படத்துல சங்கீதா இந்த படத்துல நமீதா (என்ன கொடும சரவணன்...) ஆனாலும் மனுஷன் ரொம்ப அமைதியான நடிப்ப கனகச்சிதமா குடுத்துருக்காரு. மும்பை அறிமுகம் ஹேமாமாலினி நமீதாவுக்கு தங்கச்சி மாதிரி சும்மா செமத்தியான ஜிம் பாடியை காட்டி படத்த பாக்குற ரசிகர்கள சுடேத்துறார், ஆனாலும் அம்மணிக்கு ரொம்ப சீன்ஸ் கெடையாது. இன்னொரு ஹீரோயின் நம்ம நமீதா.(உட்டா அவங்க அப்பாவ கூட மச்சான்னு கூப்புடுவாங்க போல...) படத்துல இவங்க நடிச்ச சீன்களை விட நீச்சல் குளத்துல குளிச்ச சீன்கள் தான் அதிகம்,அந்தளவுக்கு ஏகப்பட்ட குளியல் சீன்கள் (ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான்.) படத்தோட கதையே இவங்கள சுத்திதான் வருது, ஸ்ரீகாந்துக்கு பொண்டாட்டியாவும், நாசருக்கு மூணாவது பொண்டாட்டியாவும் வர்றாங்க...(என்ன நமீதா மேடம் ரசிகர்கள் உங்களுக்கு கோவில் கட்ட பிளான் பண்ணிருக்காங்க.., ஆனா நீங்க இந்த மாதிரி கேரக்டர்ல எல்லாம் நடிக்கிறீங்களே...) நாசர் அவர இந்த மாதிரி கேரக்டர்ல பாக்குறது செமத்தியான காம(நெ)டி தான். இயக்குனர் கே.ராஜேஸ்வர், டெக்னிக்கலா படம் நல்லா பண்ணிருக்காரு..,காமம், பெண்ணின் காமவெறி, பெண்ணின் விரக தாபங்கள்,இப்படி தன்னோட காம ஆசைகளுக்காக எதுவரைக்கும் போகக்கூடிய ஒரு பெண்ணோட கதையை சொல்ல வந்தாலும் அதுக்காக படத்துல அநியாயத்துக்கு பச்சை பச்சையா... ரெட்டை அர்த்த வசனங்கள். அதை கொஞ்சம் இல்ல நெறையவே தவிர்த்திருக்கலாம். மியூசிக் புது ஆளு யதீஸ், பின்னணி, பாட்டு ரெண்டுமே ஓ.கே, ஆனா வசந்தமாளிகை "மது கிண்ணத்தை ஏந்துகிறேன்" பாட்ட இன்னும் பெட்டரா குடுத்திருக்கலாம். இந்த வருஷம் தமிழ்சினிமா யாரு முகத்துல முழிச்சதுன்னு தெரியல, தொடர் தோல்விகள்.அந்த லிஸ்ட்ல இந்த படமும் சேர்ந்திடக்கூடாதுங்கிறது நம்மளோட எண்ணம். ஆனா என்ன பன்றது நாம நினைக்கிறதெல்லாம் நடக்கவா? செய்யுது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com